ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சென்ற வாகனத்தின் மீது செருப்பு தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற வேளையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்த நிலையில் இரா.சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் தமது பாதுகா…
-
- 53 replies
- 5.2k views
- 1 follower
-
-
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்! கொழும்பு துறைமுக பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 28 ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த புதைக் குழியிலிருந்து இதுவரை 3 மனித எச்சங்களும் 4 மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒக்டோபர் மாதத்தில் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டபோதிலும் போதுமான நிதிவசதிகள் இல்லாத காரணத்தினால் இந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அகழ்வுப்…
-
- 0 replies
- 196 views
-
-
இனஅழிப்பு குற்றவாளியை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்காதே!- கவனயீர்ப்புப் போராட்டம் ரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவது வருட நிறைவுவிழாவே களங்கம் சூழப்போகிறது. அந்த விழாவுக்கு சிங்களதேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதை அனுமதிக்க வேண்டாம். இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து தமிழர் பிரதேசங்களில் இன்றும் இராணுவ ஆட்சியை நடாத்திவரும் மகிந்த ராஜபக்ச இந்த விழாவில் கலந்து கொள்வது உலக மானுட பண்புகளுக்கும் மனித உரிமைகளுக்கும் பெருத்த அவமானம் ஆகும். அத்துடன் பாரம்பரியம் மிக்க பிரித்தானிய முடியாட்சிக்கும் இது மிகப்பெரும் களங்கத்தையும் வரலாற்று அவமானத்தையும் தந்துவிடும். மனிதஉரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும…
-
- 0 replies
- 595 views
-
-
பிரித்தானியாவில் அரசியல் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் சிறீலங்காவின் தேசிய புலனாய்வுத் தகவல் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை படைபுலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் 36 பேர் இன்று காலை பிரித்தானியாவில் இருந்து கொழும்பை சென்றடைந்துள்ளார்கள். அவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று பின்னர் புலனாய்வு விசாரணக்குகொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-36-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை நேரம் காலை 08:00 இன் போது: சஜித் பிரேமதாச 9,99,720 (48.69%) கோட்டாபய 9,12,534 (44.44%) அனுரகுமார 66,054 (3.22%) சிவாஜிலிங்கம் 8,566 (0.42%) ஏனையவை 66,467 (3.24%)
-
- 18 replies
- 2.3k views
- 1 follower
-
-
இன விடுதலைக்கான போராட்டம் எப்பொழுதும் தொடரும் மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த போராட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக ஆரம்பமாகியிருந்தது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் 2023 ஆகஸ்ட் மாதம் வேழன் சுவாமிகள், MK சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸாரால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடர…
-
- 0 replies
- 178 views
-
-
முகமாலையில் சிக்கிய படையினர் [27 - April - 2008] விதுரன் வட போர்முனையில் படையினர் மீண்டுமொரு முறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தொடர்பாக இராணுவ தலைமைப்பீடம் தொடர்ந்தும் தவறான கணிப்பைக் கொண்டிருக்கிறதென்பதை முகமாலை சமர் மீண்டும் நிரூபித்துள்ளதுடன், இந்தப் பின்னடைவானது வடபோர் முனையில் அடுத்துவரும் படை நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்து விடப்போகின்றதென்பதையும் காட்டுகிறது. வன்னியில் வவுனியா, மன்னார், மணலாறு களமுனை நகர்வுகள் மிகவும் நீண்டு செல்கிறது. குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அங்கு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற படையினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எட்டு கி.மீ. தூரத்திலிருந்த மடுவைச் சென்றடைய படையினருக்கு ஒரு வருடத்த…
-
- 0 replies
- 2.2k views
-
-
கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது சிரேஷ்ட மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாம் வினவிய போது பதிலளித்த பல்கலைக்கழக மாணவர் சங்க சிரேஷ்ட உறுப்பினர் பிரேமகுமார டி சில்வா, இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்க வேண்டி வரும் எனவும் அவர் கூறினார் இதேவேளை, இது குறித்து நாம் ஆராய்ந்த போது மேலும் சில மாணவிகளும் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், அ…
-
- 0 replies
- 973 views
-
-
ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அண்மையில் உள்ள படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கை அப்பகுதியை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது நிகழ்வு நடக்கும் பகுதியை படைமுகாங்கள் அற்ற பகுதியாக காட்டுவதற்கு எடுக்கப்படும் இரகசிய முயற்சியா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி கண்ணார் வயல் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலையத்தில் தேசிய பொங்கல் விழாவினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்றம் மற்றும் …
-
- 2 replies
- 377 views
-
-
(ஆர்.யசி) எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை பாராளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது. இது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டிய உட்கட்சி விவகாரம், இதனை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பேச அவசியமில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ள கட்சியில் பாராளுமன்றக் குழுத் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்படுவார் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. அடுத்த பாராளுமன்ற அமர்வுகளை கூட்டும் காலம், அடுத்ததாக ஆளும் மற்றும் எதிர் கட்சிகளின் ஆசன ஒதுக்கீடுகள் குறித்து…
-
- 1 reply
- 588 views
-
-
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் கலை பண்பாட்டுக்கழகத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் "சங்கநாதம்" ஒளிப்பேழை 2 ஆம் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 767 views
-
-
சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் – கருணா சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனரென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்து ஆய்வு செய்யும் மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷ வெற்றியடைவார் எனவே வெல்லும் அணியுடன் நாங்கள் பயணிப்போம் அதில் பயணிக்கின்ற போதுதான் நாங்கள் வாதிட்டு எமது உரிமை கேட்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே வாக்களிக்குமாறு மக்களிடம் கே…
-
- 37 replies
- 3.7k views
- 2 followers
-
-
மட்டக்களப்பு தேத்தாதீவில் பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குடும்பப்பெண் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 749 views
-
-
இலங்கையில் சிங்களமும், பௌத்தமுமே முதன்மை என்கிறது மஹாவம்சம். ஆதலால் சிங்களம் ஆட்சிப்பிடம் ஏற வேண்டும் என்றும், பௌத்தம் அரச அங்கீகாரம் பெற்ற மதமாக என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்கிறது அது. இதனால் தான் இன்றுவரை புத்தத்தின் பெயரால் இரத்தம் சிந்தப்படுகின்றது இலங்கையில். இலங்கைக்கு புத்தர் இரண்டு முறை வந்து சென்றதாகவும் இன்னொரு வரலாற்றைக் கூறுகின்றார்கள் இவர்கள். அதாவது, இது இலங்கை என்பது சிங்கள பௌத்த பீடபூமி என்னும் சித்தாந்தத்தை காலாகாலமாக நிலை நிறுத்துவதற்கு, அடுத்த தலைமுறையிடமும், கடும்போக்கான இனவாத, மதவாத சிந்தனைகளை தூண்டி, இலங்கையில் ஏனைய இனங்களையும் மதங்களையும் இல்லாமல் செய்வதற்கான அடிப்படையான திட்டமிட்ட செயற்பாடு என்பதில் இருவேறு கருத்துக்கள…
-
- 0 replies
- 247 views
-
-
க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த பரீட்சைகள் 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இம்முறை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ளனர். பரீட்சை நாளாந்தம் காலை 8.30க்கு ஆரம்பமாகவுள்ளதுடன் பரீட்சார்த்திகள் அரை மணி நேரத்திற்கு முன்னராக பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத் தரா தர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள ம…
-
- 1 reply
- 332 views
-
-
மன்னார் முருங்கனைச் சேர்ந்த இருவர் காணாமல் போய் உள்ளதாக அவர்களின் உறவிர்கள் மன்னார் சுகவாழ்வு மன்றத்திலும், மன்னார் குடிமக்கள் குழுவிலும் முறையிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 903 views
-
-
பொலிஸார் தேடும் தேரர், திங்கட்கிழமை சரணடைவாராம்? ஹோமாகம நீதிமன்றத்தின் முன்னால் கலகம் விளைவிக்கும் வகையில் பிரசன்னமாகியிருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை காலை, பொலிஸாரிடம் சரணடையவுள்ளதாக வண.மாகல்கந்த சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். சகோதர மொழி வானொலிக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நாட்களில் சமய கடமைகள் சில இருப்பதன் காரணமாக திங்கட்கிழமை பொலிஸாரிடம் சரணடைவதாக அவர் கூறியுள்ளார். பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, குழப்பம் விளைவிக்கும் வகையில், நீதிமன்றத்துக்கு முன்னால் குறித்த தேரர் உட்பட சிலர் குழ…
-
- 1 reply
- 321 views
-
-
வெளிநாட்டு மதபோதகர்கள் வெளியேற்றம் இலங்கைக்குள் பிரார்த்தனைகளுக்காக வெளிநாட்டு மத போதகர்கள் உரிய மத விசாக்கள் இல்லாமல் நுழைவது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (DIE) கடுமையான உத்தரவுக்கு மத்தியில், அதிகாரிகள் வார இறுதியில் நுவரெலியாவில் உள்ள மற்றொரு சபையை சோதனை செய்து, இரண்டு வெளிநாட்டு போதகர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டதாக டெய்லிமிரர் செய்தித்தாளுக்குத் தெரிய வருகிறது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (DIE) எந்த அனுமதியும் இல்லாமல் இரண்டு வெளிநாட்டு போதகர்கள் மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொழும்பிலிருந்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் பறக்கும் படை வெள்ளிக்கிழமை …
-
-
- 1 reply
- 239 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சட்டவிரோதமாக பணம் கொடுத்து பயண ஆவணங்களைப் பெறும் தமிழர்களை மிரட்டியும் கடத்தியும் கப்பம் பெற்று வந்த இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள் சிறப்பு காவல்துறைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 420 views
-
-
கிழக்கிலங்கையில் முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத் மீண்டும் தலைதூக்கி உள்ளதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்ததாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 859 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் அடிப்படையில் நாட்டின் எந்த மாகாணங்களையும் ஒன்றிணைக்க முடியும். இதன்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். வடக்கு பிரச்சினைக்கு ஈழ இராச்சிய தீர்வுத் திட்டம் பொருந்தாது என்பது கட்சியின் நிலைப்பாடாகும். ஈழ இராச்சியமோ அல்லது தனி நாட்டுக் கோரிக்கைக்காவோ கூட்டமைப்பு குரல் கொடுக்காது. வடக்கு கிழக்கு மீள இணைக்கப்படுவதன் மூலம் ஈழ இராச்சியத்தை உருவாக்க முயற்சிப…
-
- 2 replies
- 713 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மகத்தான வரவேற்பினை வழங்கியிருந்தது. தனக்கான வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக இந்திய பிரதமர் தனது சமூக வலைத்தளமான எக்ஸில் குறிப்பிட்டிருந்தார். மகத்தான வரவேற்பு இந்நிலையில் கொழும்பை வந்தடைந்த இந்திய பிரதமருக்கு இலங்கை வாழ் இந்தியர்கள் மகத்தான வரவேற்பினை வழங்கியிருந்தனர். இந்திய மாநிலம் ஒன்றுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளும் போது, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுவதை போன்று, பிரதமர் கொழும்பில் தனது செயற்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தார். அந்தக் காட்சிகளை பார்க்கும் போது இந்தியா…
-
- 0 replies
- 191 views
-
-
யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியில் சிறிலங்கா கடற்படைத்தளத்தை அழித்து கடற்புலிகளின் கொமாண்டோக்கள் கைப்பற்றிய கடற்படையினரின் 3 உடலங்கள் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
யோஷிதவுக்கு ஆதரவு: நான்கு வீரர்கள் இடைநிறுத்தம் டயலொக் றக்பி லீக் போட்டியின் போது, 'Y007' என எழுதப்பட்டிருந்த பட்டியை கைகளில் அணிந்திருந்த, கடற்படை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர்கள் நால்வரை இடைநிறுத்தியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார். தியகமயில், ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெற்ற போட்டியின் போதே, கடற்படை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் யோஷித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குறித்த வீரர்கள் பட்டிகளை அணிந்திருந்தனர். இதற்கமையவே, குறித்த வீரர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் எனவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 386 views
-
-
இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் உயர்நீதிமன்றில் 332 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.2012 ஜனவரி தொடக்கம் ஜுன் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சாதாரணமாக ஒரு நாளைக்கு இரண்டு என்ற அடிப்படையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான மனுக்களை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு அதிக செலவு ஏற்படும் என்பதால் அதிக நிதி செலவிட தகுதியுள்ளவர்களே மனுக்களை தாக்கல் செய்வர். அதனால் நீதிமன்றில் முறையிடப்படாத அடிப்படை உரிமை மீறல் இதை விட அதிகம் என தெரியவந்துள்ளது.தற்போதைய ராஜபக்ஷ அரசுக்கு முன்னர…
-
- 0 replies
- 388 views
-