ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142597 topics in this forum
-
40 பேர் அடங்கிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவைச் சென்றடைந்துள்ளது. நேற்று முன்தினம் (29) செவ்வாயன்று இந்தப் படகு கோகோஸ் தீவைச் சென்றடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்தில் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ள இரண்டாவது இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் குழு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து 3000 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கோகோஸ் தீவில் ஆட்கள் இல்லாத 27 சிறு சிறு தீவுகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்ற படகில் இணைய மற்றும் ஜிபிஆர்எஸ் வசதிகள் இருந்ததாகவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய பொலிஸார் மற்றும் சுங்க அதிகாரிகளால் பிடிக்கப்பட்டதாகவும்…
-
- 0 replies
- 506 views
-
-
டெலோவிலிருந்து சிறிகாந்தா அதிரடியாக நீக்கம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ரெலோவின் தலைமைக் குழு கூடி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்த நிலையில் ரெலோவின் ஒருபிரிவினரிடத்தில் இவ்விடயம் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிகாந்தாவும் அவருடன் நெருக்கமாக செயற்படும் ரெலோ உறுப்பினர்களும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்து அவருக்கு ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுவந்தனர். இவ்விடயம் தொடர்பில் ரெலோவின் ஒருபகுதியினர் சிறிகாந்தவினதும் அவர் சார்பானவர்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து வந்தனர் இந்நிலையில் வவுனியாவில் அவசரமாக கூடிய பதினொரு பேர் கொண்ட ரெலோவின் உயர்மட்ட குழு கட்சியின் செயலாளர் பதவியிலிருந்தும…
-
- 7 replies
- 960 views
-
-
வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு! வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, வடக்கிலுள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்தவகையில், வடமாகாண மீனவர்கள் தன்னை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர்கள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றித்தருமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைத்தாகவும் சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஆளுநரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் விவசாயம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி…
-
- 0 replies
- 112 views
-
-
கிழக்குத் தேர்தல்களில் வெற்றி பெற்றுக்கொள்ளவே அரசாங்கம் முகமாலையில் திடீர் இராணுவ முன்நகர்வுகளை மேற்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் கிழக்குத் தேர்தல்களை வெற்றிகொள்ள அமைத்த வியூகமாகவே இந்த யுத்த நடவடிக்கை நோக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிழக்குத் தேர்தல்களில் அரசாங்கம் தோல்வியடைவது உறுதி என இரகசிய தகவல்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதனால் இராணுவ வீரர்களை பலிக்கடாக்களாக்கி தேர்தலை வெற்றி கொள்ள அராசங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கத்தின் …
-
- 0 replies
- 1.1k views
-
-
எலிஸபெத் மகாராணி முடி சூடி 60 ஆண்டுகள் பூர்த்தி விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன், பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மாவுடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புக்களின் போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirr...6-09-02-47.html
-
- 0 replies
- 1.6k views
-
-
(ஆர்.யசி) வடக்கு கிழக்கை இணைக்கும் நாட்டினை துண்டாடும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நபர்களுக்கு நாம் ஒருபோதும் அங்கீகாரம் கொடுக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தல் தோல்வியுடன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை கொண்டு நடத்த தகுதியில்லாதவர்கள் என்பது உறுதியாகவிட்டது. வெகு விரைவில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்போம். அதற்கான முயற்சிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார். பல தரப்புடன் அவர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் வருகின்றார். எவ்வாறு இருப்பினும் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் பாராளுமன்றத்தில் கலைக்க முடியாத சட்ட சிக்…
-
- 0 replies
- 359 views
-
-
19 Feb, 2025 | 05:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியதை போன்று தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக மக்கள் விடுதலை முன்னணி மன்னிப்புக் கோர வேண்டும். 75 ஆண்டுகால சாபத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக் கூற வேண்டும். 75 ஆண்டு கால அரசாங்கத்தை சாபம் என்று இனியும் குறிப்பிட்டு மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தாதீர்கள். சாயம் வெளுத்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டா…
-
- 0 replies
- 211 views
-
-
உலகில் ஏற்பட்டு வரும் மோசமான உணவு நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றும் முன்னேற்பாட்டுத் திட்டமோ, செயற்பாடோ அரசாங்கத்திடம் இல்லையென கடுமையாக சாடியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), அரசாங்கத்தை பதவி நீக்குவதற்கான வேலைத்திட்டத்தை மே முதல் (இன்று) முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருக்கிறது. உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படப் போகின்ற நிலையில், நாட்டு மக்களை இதிலிருந்து பாதுகாப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லையென குற்றம் சாட்டியிருக்கும் ஜே.வி.பி., அரசைக் கலைப்பதற்கான வேலைத்திட்டத்தை மே மாதம் முதல் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை இலங்கை மன்ற கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் ஜே.வி.பி.யின் செயலாளர்…
-
- 2 replies
- 844 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதியை சஜித் அடையவில்லை – ராஜித எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதியை முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச இன்னும் அடையவில்லை என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள் நிலவிய முரண்பாடு தோல்விக்கு காரணமாக அமைந்ததாக குறிப்பிட்டார். ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நிறுவனங்கள் மேலும் அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிக சிரத்தையுடனும…
-
- 1 reply
- 360 views
-
-
Published By: DIGITAL DESK 2 27 FEB, 2025 | 10:10 AM நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையிலுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். வரவு - செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (27) அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதிய உணவுவேளை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துடன், போராட்டத்தால் வைத…
-
- 3 replies
- 221 views
- 1 follower
-
-
மடுதேவாலயம் முன்னர் பௌத்த விகாரையாகவும பின்னர் இந்து ஆலயமாகவும இருந்தது ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலேயே இங்கு மாதா சொரூபம் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாந்தை பகுதி மக்கள் கத்தோலிக்கர்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர் என எல்லாவெல மோனந்த தேரோ தெரிவித்தார். மடு திருச் சொரூபத்தினை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயர் நிபந்தனை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. என்றும் அவர் கூறினார். மடு தேவாலயத்தையும் அண்டிய பகுதியையும் புலிகள் தாக்குதல் மத்திய நிலையமாகவே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையிலே முப்படையினர் மடுதேவாலயத்தை மீட்டெடுத்தனர். ஆனால் மடுமாத திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயா தலைமையிலான 30 மதகுருமார்கள் குழு நிபந்தனையை முன்வைத்துள்ளது. இதன…
-
- 5 replies
- 1.8k views
-
-
[size=4]படகில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கடத்தும் முயற்சியொன்றை முற்றுகையிடன் சென்ற பொலிஸ் சிப்பாய் இருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]இவர்கள் சிலாபம் பொலிஸ் நிலையில் பணியாற்றியவராவர். சிலாபம், கருக்குபனை பிரதேசத்தில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது. இந்த முற்றுகையின் பின்னர் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களும் பணிக்குத் திரும்பவில்லை எனவும், இதனால் இவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆட்கடத்தல்காரர்கள் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களுக்கும் அனர்த்தம் எதனையும் ஏற்படுத்தியிருக்கலாம் என ஒரு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், ஆட்கடத்தல் …
-
- 0 replies
- 1.2k views
-
-
கடந்த கால படிப்பினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட யாரோ அவரை பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக கடந்த காலங்களில் தலைமைப்போட்டி காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தேவையில்லாத விமர்சனங்களை சுமந்திரன் மீது முன்வைத்து வந்தார். சுமந்திரன் பின்கதவால் வந்தவர் என அவரை சீண்டி வந்தார். இதன் விளைவாக சுமந்திரன் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதன் விளைவு சுமந்திரன் வென்றார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தோற்றார். எனவே நாவடக்கம் இல்லாததன்மைதான் இந்த பிரச்சினைக்கு காரணம். தேசிய பட்டியலை பின்கதவு என கேலி செய்த சுரேஷ் பிரேமச்சந்திர…
-
- 0 replies
- 433 views
-
-
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழர் தரப்பு அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சரா ஹூல்ரன் கேட்டறிந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை பிரித்தானியத் தூதுவர் சந்தித்து பேசினார். தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தேர்தலின் பின்னரான அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பிலும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் சுமந்திரன் இந்த சந்திப்பின்போது விளக்…
-
- 1 reply
- 344 views
-
-
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரமுகரான மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 36 replies
- 6.4k views
-
-
கிழக்கின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரியா மஹாநாயக்க தேரர்களை இன்று பிற்பகல் 2.00 மணியளவில் (வைகாசி 18) சந்தித்து, ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலதா மாளிகைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, அபிவிருத்தியை ஆரம்பிக்க போவதாக பிள்ளையான் நாயக்க தேரர்களிடம் தெரிவித்துள்ளார். பின் மலையகத் தலைநகரில் இருந்து நீங்க முன் கிஷ்வுல்லாவிற்கு தொலைபேசியளைப்பை மேற்கொண்டு தன்னுடனும் ஜனாதிபதியுடனும் இணைந்து கிழக்கை அபிவிரித்து செய்ய ஒத்துளைப்பை வளங்குமாறும் கேட்டுக்கொண்டார்!!! …
-
- 4 replies
- 2.3k views
-
-
[size=4]சிறிலங்காவுக்குப் பயணம் மெற்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேன்னிடம், சிறிலங்கா அதிபரும் அவரது சகோதரர்களும், குறிப்பிட்ட காலவரம்புக்குள் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த அவர்களின் எதிர்காலத் திட்டம் குறித்த தெளிவான கருத்தைப் பெறாமலே நாடு திரும்பியுள்ளதாக புதுடெல்லியில் இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிவ்சங்கர் மேன்னுடன் கொழும்பு சென்றிருந்த அதிகாரி ஒருவரே, கடந்த வெள்ளிக்கிழமை பின்னிரவு புதுடெல்லி திரும்பிய பின்னர் நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இனப்போர் கொடூரமாக நசுக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும், உண்மையான அரசியல் நல்லிணக்கத்தை அடைவதற்கு கொழும்பு இன்னமும் ஏற்புடைய திட்டம் ஒன்றைக் கொண்டிரு…
-
- 2 replies
- 763 views
-
-
03 APR, 2025 | 04:16 PM பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையின் போது நாமல் ராஜபக்ஷ மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்ட கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள…
-
- 0 replies
- 73 views
- 1 follower
-
-
இலங்கை உட்பட பல நாடுகளில் நடைபெற்று வரும் போரில் மக்கள் அதிகளவில் கொல்லப்படுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தனது கவலையை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 680 views
-
-
திமுக இன்று வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கை : ’’இலங்கை விமானப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் உங்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறாரே?” ’’முதலமைச்சர் கொடநாட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கின்ற நேரத்திலும், என்னைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் எப்படித்தான் இருக்குமோ? ஜெயலலிதா தமிழகத்தின் முதல் அமைச்சர். இலங்கை விமானப் படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டியது மத்திய அரசு. எனவே தமிழக முதல் அமைச்சர் கேட்க வேண்டியது மத்திய அரசை! அதை விட்டுவிட்டு, “தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொண்டு, தமிழினத்தை இலங்கை அரசு அழிக்கக் காரணமாக இருந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி” என்று தேவையில்லாமல் என்ம…
-
- 1 reply
- 855 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் பின் நிலவும் மர்ம மௌனம்? [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016, 04:48.48 AM GMT ] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் பின் மர்ம மௌனம் ஒன்று நிலவி வருவதாக திவயின பத்திரிகை செய்தி விமர்சனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இதுவரை கடும் போக்கையே கடைப்பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக இளவரசர் செய்யித் ஹுசைன் ஆணையாளராக பதவியேற்றது முதல் இலங்கை தொடர்பில் கடுமையான கருத்துக்களையே வெளியிட்டு வந்துள்ளார். …
-
- 0 replies
- 408 views
-
-
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் (Batticalao Campus (PVT) Ltd) தொடர்பாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு தயாரித்திருந்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. அத்துடன் மீண்டும் ஒருமுறை அமைச்சரவைக்கும் அனுப்பிவைப்பதற்கு துறைசார் மேற்பார்வைக்குழு தீர்மானித்துள்ளது. கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற குழு அறையில் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்த போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்து துறைசார் மேற்பார்வைக்குழு 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை …
-
- 5 replies
- 691 views
-
-
12 APR, 2025 | 09:05 AM (லியோ நிரோஷ தர்ஷன்) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வினவியுள்ளார். இதற்கு பதிலளித்த ச…
-
-
- 3 replies
- 311 views
- 1 follower
-
-
தள்ளாடி இராணுவ முகாமில் இருந்தே மன்னார் நீதிவான் நீதிமன்றம் மீதான தாக்குதலை அமைச்சர் றிசாத் பதியூதீன் வழிநடத்தியதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 16ஆம் மன்னார் விடத்தல்தீவில் உள்ள தமிழ் மீனவர்களின் வீடுகள் மீது திகதி கற்களை வீசியதான குற்றச்சாட்டில், றிசாத் பதியூதீனின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மறுநாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். விடத்தல்தீவில் உள்ள வீடு ஒன்றின் உரிமை தொடர்பாக எழுந்த பிரச்சினையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கவனிக்க தான் உடனடியாக மன்னாருக்கு செல்ல வேண்டும் என்று றிசாத் பதியூதீன், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் உலங்குவானூர்தி ஒன்றைக் கோரியிருந்தார். பாது…
-
- 0 replies
- 337 views
-
-
ஜனாதிபதியின் ஆஸ்திரிய விஜயத்தின் முதல் நாள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆஸ்திரியா நாட்டிற்கான விஜயத்தின் முதல் நாள் இன்றாகும். ஜேர்மனிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அந்த விஜயத்தை நேற்று நிறைவு செய்துகொண்டு ஆஸ்திரியா நோக்கி சென்றார். ஜனாதிபதி ஜேர்மனிக்கான தனது விஜயத்தின் போது அந்தநாட்டு சென்சியூலர் ஏஞ்சலா மேர்கல் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்திருந்ததுடன், பல்வேறு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டது. இவேளை தனது ஆஸ்திரியா விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி ஹெய்ன் பிஷ்கர் உட்பட அதிகாரிகள் பலரை ஜனாதிபதி சந்திக்க உள்ளார். ஸ்த்திரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் ஜனாதிபதி இவ்வி…
-
- 1 reply
- 376 views
-