ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142780 topics in this forum
-
தெற்கில் ஒரு சட்டம்; வடக்கு, கிழக்கில் ஒரு சட்டம் என்றால் பிரித்து தனிநாடு தரவேண்டும் - கோ. கருணாகரன் 01 FEB, 2024 | 05:07 PM சட்டம் இல்லாத நாட்டில் ஒரு சட்டத்துக்கான அமைச்சர் தேவையில்லை. தெற்கில் ஒரு சட்டம்; வடக்கு, கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவீர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கை பிரித்து தனிநாடாக தர வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களுக்காக எவ்விதம் அச்சுறுத்தப்பட்டாலும், எத்தனை பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டாலும், தொடர்ச்சியாக நினைவேந்தல்களை செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப…
-
- 3 replies
- 340 views
- 1 follower
-
-
வடக்கினில் நிலவிவரும் அண்மைய குழப்பகரமான சூழல் தொடர்பினில் மேற்குலகு கூடிய அக்கறை கொண்டுள்ளது.அவ்வகையினில் இலங்கைக்கான லண்டன் உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டயுரிஸ் யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் பின்னர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறிப்பாக இலங்கையின் நீதித்துறை மற்றும் காவல்துறை தொடர்பினில் மக்கள் மனமாற்றம் கொண்டுள்ளனராவென்பதை கண்டறிய அவர் முற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. http://www.pathivu.com/news/40428/57//d,article_full.aspx
-
- 6 replies
- 727 views
-
-
குருநகரிலிருந்து பொம்மைவெளி வரை முட்கம்பி வேலி Written by Pandaravanniyan - Aug 18, 2007 at 10:16 AM விடுதலைப்புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கெனக் கூறி யாழ். நகரக் கரையோரப்பகுதிகளில் குருநகரிலிருந்து பொம்மைவெளி வரை சிறிலங்காப் படையினர்முட்கம்பியிலான வேலிகளை அமைத்துவருகின்றனர். இதனைப் பொன்னாலை வரை அமைக்கத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குருநகர் கரையோரத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்தப் பாதுகாப்பு வேலி யாழ். கோட்டை, பண்ணைக்கரை யோராமூடாக கொட்டடி, நாவாந்ததுறை, காக்கைதீவு, பொம்மைவெளிவரை சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்திற்குச் செல்கிறது. தென்னை மற்றும் பனங்குற்றிகளைப் பத்து அடிதூரத்திற்கு ஒன்றென நாட்டி சுமார் எட்டு முதல் பத்து முட்கம்பிகள் வரி…
-
- 2 replies
- 1.6k views
-
-
February 19, 2019 “காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைபபு எவ்வாறு ஐநாவிடம் இலங்கை விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்குமாறு கோர முடியும் அதற்கு இவர்கள் யார்?” என மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று (19.02.19) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், “எங்களது போராட்டம் ஆரம்பித்து இரண்டு வருடங்களை நிறைவுப் பெற்றுள்ளது. இதுவரைக்கும் காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை. கிளிநொச்சி தமிழ…
-
- 0 replies
- 295 views
-
-
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் எங்களது பகுதிகள் பலவாறு புறக்கணிக்கப்பட்டன. - சீ.யோகேஸ்வரன் [Friday 2015-06-12 22:00] நீண்ட காலமாக எதுவித அபிவிருத்திகளும் அற்ற நிலையில் இருக்கும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமது உறவுகள் எந்த நோக்கத்திற்காக இந்த மண்ணில் அவர்களி;ன் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறும் வரை அதற்கான அடித்தளம் அமைக்கப்படும் வரை நாம் மத்திய அரசில் எவ்வித அமைச்சப் பதவிகளையும் ஏற்பதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் சுயதொழிலுக்கான வாழ்வாதாரக் கடன் வழங்கும் திட்டத்தில்…
-
- 0 replies
- 3.3k views
-
-
‘மலையகத் தமிழர்கள் ஒன்றும் தீண்டத்தகாத இனத்தவரல்லர்’ எமது மலையக மக்கள், இந்த நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள் எனத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, அவர்களின் வாழ்வாதாரத்துடன் இணைந்த ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டத்தில், தமிழர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டுமென அழைப்பு விடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மலையக மக்கள், ஒரு தேசிய இனம். தவிர, அவர்கள் ஒன்றும் தீண்டத்தகாத இனமல்ல என்றும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி, அவர்களை வாழவைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந…
-
- 0 replies
- 676 views
-
-
யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பொருட்களை நாகப்பட்டனம் கொண்டு சென்று அங்கிருந்து படகு மூலம் தானே யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். யாழ் தீபகற்பத்தையும், இலங்கையின் இதர பகுதிகளையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடி விட்டது. இதனால் யாழ் தீபகற்பத்திற்கு உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை செல்வது தடைபட்டது. இதனால் யாழ்ப்பாணத்தில் செயற்கையான உணவுப் பஞ்சம் உருவாக்கப்பட்டது. சரியான முறையில் உணவு, மருந்து கிடைக்காமல், ஏராளமான தமிழர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. கிடைத்த உணவு…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல். தமிழக மீனவர்கள் மீது இராமேஸ்வரம் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்களில் ஒரு பகுதியினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் நான்கு பேர் இருந்த படகுடன் தங்களது படகை மோத விட்டனர். இதில் அந்தப் படகு சேதமடைந்தது.பின்னர் கடுமையாக எச்சரித்து விட்டு இலங்கைக் கடற்படையினர் சென்று விட்டனர். படகு சேதமடைந்து அதில் இருந்த நான்கு மீனவர்களும் தடுமாறினர். இதையடுத்து அவர்களை அருகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றி தங்களது படகில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்…
-
- 2 replies
- 753 views
-
-
அரசாங்கத்தினால் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்ப்பதாக சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் அறிவித்துள்ளன. தன்தோன்றித்தனமாக, அவசரமாக வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் எனவும் அந்தக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அவ்வாறு வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறாவிட்டால் மக்களை வீதியில் இறக்கி போராடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன், இந்த அரசாங்கம் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளை அழித்துவிட்டு பெரும்பான்மைக் கட்சிகளை மட்டும் நீடிக்கச் செய்யும் முயற்சியாகவே இது அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணிய…
-
- 0 replies
- 374 views
-
-
மகிந்த அணியில் இருந்து வெளியேறுவோம் – விமல் வீரவன்ச எச்சரிக்கை நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் ஐதேக- ஜேவிபி திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து விலகிக் கொள்ளாவிட்டால், மகிந்த ராஜபக்ச அணியில் இருந்து வெளியேறப் போவதாக விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியிலும், மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி பங்காளிக் கட்சியாக இருந்து வருகிறது. அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச, கூட்டு எதிரணியின் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும், விமல் வீரவன்ச, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறை ஒழிக்கப்படுவதற்கும் …
-
- 0 replies
- 258 views
-
-
இப்தார் நிகழ்வில் காசா மக்களுக்கு உதவித்தொகையை கையளித்த கல்முனை கல்வி வலயம் ! இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால், மனிதாபிமான அடிப்படையில் 3 இலட்சம் ரூபாய் உதவித்தொகை கையளிக்கப்பட்டுள்ளது. வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே இந்த உதவித் தொகை கையளிக்கப்பட்டது. இதன்போது, வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் முதற்கட்ட காசோலையினை வழங்கி வைத்தார். வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய, கணக்காளரின் நெறிப்படுத்தலில், வலயக் கல்வி அலுவலக கல்விசார், …
-
- 2 replies
- 507 views
-
-
ஊடக உறவுகளே வணக்கம்! தமிழீழ மக்களினது மாத்திரமன்றி, உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரினதும் பொதுநாளான மாவீரர் நாளை இந்த ஆண்டும் சிறப்பாகவும் உணர்வெழுச்சியுடனும் கடைப்பிடிக்க உலகத் தமிழ் இனம் தயாராகிவிட்டது. இம்முறை, மாவீரர் நாளை சிறப்புற நடத்த பொதுக்கட்டமைப்புக்களை ஏற்படுத்தி, மக்கள் பிரதிநிதிகள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என, அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கி, எல்லோருடைய பங்குபற்றுதலுடன், பொதுமையாக அதனை நடாத்துவதென இணக்கம் காணப்பட்டது. அதன் அடிப்படையில், பிரான்சில் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு, மாவீரர்நாளை சிறப்புற நடாத்துவதற்கான வேலைத்திட்டங்களை அது முன்னெடுத்துவருகின்றது. பிரான்சில், தாயகத்தில…
-
- 2 replies
- 1.3k views
-
-
20ஆவது திருத்தம் கூட்டமைப்புக்குப்புப் பாதிப்பில்லை! - ஏனைய கட்சிகளைப் பாதிக்கும் என்பதால் எதிர்ப்பு [Thursday 2015-06-25 07:00] புதிய தேர்தல் முறைமையுடனான 20 ஆவது திருத்தமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாதகமாக அமையாவிட்டாலும் கூட ஏனைய சிறிய, சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாதகமாக அமைவதாலேயே புதிய தேர்தல் முறையை நாம் எதிர்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.சுமந்திரன் எம்.பி. இங்கு மேலும் க…
-
- 4 replies
- 365 views
-
-
Share [ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 07:07.09 AM GMT ] ‘கடந்த வாரம் கனடிய அரசு அறிவித்துள்ள “சுப்பர் விசா” திட்டமானது ஏற்கெனவே தேங்கிக் கிடக்கும் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கே ஆகும். இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று கனடிய தமிழ் பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னி தெரிவித்தார். இந்த புதிய முறையை நாம் அறிமுகம் செய்யாவிட்டால் இன்னும் சில வருடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்களை “ஸ்பொன்சர்” செய்யும் விண்ணப்பங்கள் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக தேங்கிக் கிடக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார். ஒட்டாவா மாநகரிலிருந்து தொலைபேசி மூலமாக குடிவரவு அமைச்சர் திரு ஜெய்ச…
-
- 5 replies
- 1.3k views
-
-
கிழக்கில், மறத்தமிழர் கட்சி உதயம்! மட்டக்களப்பில் புதிய கட்சியொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுணதீவில் நடைபெற்றது. வவுணதீவு நாவற்காடு பிரதேசத்தில் மறத்தமிழர் கட்சி என்னும் பெயருடன் இந்த புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் ஆலோசகர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது தேசியக் கொடி, கட்சி கொடியேற்றப்பட்டு தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரினால் கட்சி அங்குரார்ப்பண பிரகடனம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து ஊடக சந்திப்பில் தலைமை ஒருங்கிணைப்பாள…
-
- 0 replies
- 960 views
-
-
வெள்ளைக் கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைக் குற்றவாளியாகக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனையை இன்று விதித்தது.மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவெல சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற மேற்படி வழக்கின் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டது. வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விச…
-
- 1 reply
- 1.2k views
-
-
March 24, 2019 இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் கொத்மலை எல்படை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 98 தனிவீடுகள் அடங்கிய ‘பகத் சிங் புரம்’ புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் இன்று (24) நடைபெற்றுள்ளது இடம்பெற்றது. அமைச்சர் பழனி திகாம்பரமின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர், காணி மற்றும் பா…
-
- 0 replies
- 271 views
-
-
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஈபிடிபி 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தையும் வெற்றிபெற்றிருந்தன. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் வெற்றிகொள்ள முடியாவிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கவேண்டிய வாக்குகளையே அது பெற்றிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அத்தேர்தலில் போட்டியிடாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 6 ஆசனங்களும் தேசியப்பட்டியலில் 2 ஆசனங்களும் ஈபிடிபிக்கு ஒரு ஆசனமுமே கிடைத்திருக்கும். ஆனால் அடுத்து இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும், மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடாத நிலையில் எதிர்க்கட்சிகளே இல்…
-
- 1 reply
- 319 views
-
-
அழுத்தங்களைத் தவிருங்கள் - சிறீலங்கா அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் கடிதம் மக்களின் துயர் துடைக்கும் மனிதாபிமான பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐ.நாவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் விஜயத்தின் போது அவரது நிகழ்ச்சி நிரலுக்கு அழுத்தங்களைக் கொடுக்காது, அவரை காணாமல் போனோரின் உறவினர்கள் தத்தமது ஆதங்கங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்து, இன்னமும் வெளிச்சத்திற்கு வராத மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தப்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச. சந்திரநேரு இலங்கையின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்…
-
- 0 replies
- 591 views
-
-
மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பு கோத்தாவிடம் ஒப்படைப்புJUL 19, 2015 | 10:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட தேர்தல் பரப்புரைகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்தநிலையிலேயே அவரது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைத் தலைவராக மகிந்த ராஜபக்ச கடந்தவாரம் நியமிக்கப்பட்டது கு…
-
- 0 replies
- 363 views
-
-
அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பஸ் நிலைய வியாபாரிகள் யாழ்ப்பாணம் மாநகர மத்திய பஸ் நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அமைதிவழிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை முன்றலில் அவர்கள் இந்தப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் மாநகர மத்திய பஸ் நிலையத்தை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தப்படவுள்ளது. அதனால் அதன் பணிகளை ஆரம்பிக்க உள்ள நிலையில் பஸ் நிலையத்தைச் சூழ பழக்கடைகள் உள்ளிட்ட வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் 63 வியாபாரிகளை வரும் 30ஆம் திகதியுடன் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை…
-
- 0 replies
- 718 views
-
-
பேருந்தில் கைவிடப்பட்ட பணம் அடங்கிய பை; பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டு! வெளிநாட்டவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளர் - குவியும் பாராட்டுக்கள் வெளிநாட்டவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் இன்று ஈடுபட்டிருந்தார். குறித்த பேருந்தில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட பாஸ்போர்ட், ஒரு லட்சத்து இருபதாயிரத்து எண்ணூற்றுநாற்பது இலங்கை ரூபா பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை இன்று (07) சாலையில் …
-
- 3 replies
- 391 views
-
-
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் வீரகேசரி நாளேடு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 3 மீனவர்கள் படுகாயமடைந்தனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவர் காலனியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (வயது 42), கிருஷ்ணப்பா (வயது 38), மதியழகன் (வயது 40) ஆகியோர் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் மீன்பிடிக்க படகில் கடலுக்குள் சென்றனர். 13ஆம் திகதி இரவு மீனவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் சிறிய கப்பலில் அப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் படகில் இருந்த 3 தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்…
-
- 0 replies
- 785 views
-
-
17 MAY, 2024 | 09:53 PM (நா.தனுஜா) உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளைக் கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தியிருக்கும் சர்வதேச சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள், உள்ளகப் பொறிமுறையின் ஊடாக உண்மை மற்றும் நீதியை அடைந்துகொள்ளமுடியாது என பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு செவிசாய்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் நேர்மைத்தன்மை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்வேறு விமர்சனங்கள…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
ஓமந்தையில் இராணுவத்தினரால் கடத்தபட்ட நோர்வே பிரஜையை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு. - இன்ரப்போலின் தேடப்படுவோர் பட்டியலில் நோர்வே தமிழன். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 21 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ ஓமந்தையில் இராணுவ உளவுத்துறையால் கடத்தபட்டு பின்னர் காணாமல் போன நோர்வே பிரஜையைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு மாவட்ட நீதவான் எம்.இளஞசெழியன் உத்தரவு பிறப்பித்துள்ளர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழரான நோர்வே குடியுரிமை பெற்ற ஒருவர் கொழும்பு வந்து கிளிநொச்சிக்குச் சென்றிருந்தார். இவர் ஓமந்தை வழியாக கிளிநொச்சிக்குச் சென்றிருந்தார். இவர் ஓமந்தை வழியாக கிளிநொச்சிக்குச் சென்று சில தினங்களின் பின்னர் அதே வழியில் திரும்பியுள்ளார். ஆனால் இவர் காணாமல் போயிருப்பதாக சர்…
-
- 0 replies
- 2.4k views
-