Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட பிரதான வேட்பாளரான எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹின் தலைமையில் வெற்றிப்பெற்ற மூன்று உறுப்பினர்களும் தனித்து இயங்கப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் இந்த நிலையில் தமது ஆதரவு இல்லாமல் கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மையை பெறமுடியாது என சுட்டிக்காட்டியுள்ளனா. அதனால் முதலமைச்சர் தெரிவுக்குறித்து தம்முடன் கலந்தாலோசிக்கவேண்டும் என அந்தக்கடிதத்தில் அவர்கள் கோரியுள்ளனர். கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவின் தலைமையில் ஜவாஹிர் மொஹமட் அலி மற்றும் எம் எஸ் சுபைர் ஆகியோர் போட்டி…

    • 12 replies
    • 2.6k views
  2. ஒரே நாள் இரவில் குபீரென தமிழ் உணர்வாளர்கள் இதயத்தில் குடியேறிவிட்டார்கள் இயக்குநர்கள் சீமானும் அமீரும். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட இவர்கள், ஏழு நாள் சிறைவாசத்துக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார்கள். விடுதலையாகி வெளியே வந்த இவர்களை தமிழ் இயக்குநர்கள் பட்டாசு கொளுத்தி, மலர்க் கிரீடம் சூட்டி வரவேற்று மகிழ்ந்து போனார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள். சிறை சென்று திரும்பிய அவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவர்களின் பேச்சில் முன்பிருந்ததை விட வீரியம் கூடியிருந்ததை உணர முடிந்தது. "நாங்கள் பேசியதில் தவறில்லை'' என்பதை அவர்கள் தொனியில் கேட்கமுடிந்தது. மதுரையில் ஒரு விடுதியில் தங்கிய…

  3. நேற்று இடம் பெற்ற டைம் 100 என்ற பிரபல்யங்களின் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியை மாயா என்கின்ற மாதங்கி அருட்பிரகாசம் சந்தித்துள்ளார். ஆஸ்கார் விருது வென்ற சிலம் டோக் மில்லியனர் படத்தில் பாடல்களை பாடியுள்ளவரும், உலக அளவில் ராப் பாடல்களை பாடி மிக பிரபல்யமாக இருக்கும் இலங்கைத் தமிழரான இவர் உலகில் உள்ள 100 மிக முக்கியமான நபர்களில் ஒருவராக கவுரவிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்சியை அமெரிக்க முதல் பெண்மணியும் பாரக் ஒபாமாவின் மனைவியுமான மிசேல் ஒபாமா தொடக்கிவைத்தார். இந்த நிகழ்வில் மிசேல் ஒபாமாவைச் சந்தித்து இலங்கை நிலைபற்றி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மிசேல் ஒபாமா மிக ஆர்வமாக மாயாவின் கருத்துக்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தான் இலங்கையில் இருந்து பிரித்…

  4. கொழும்பு மாவட்டம் வெல்லம்பிட்டியப் பகுதியில் நேற்றிரவு தன்னியக்க கருவியில் இயங்கும் சிறிய உலங்குவானூர்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 2.6k views
  5. வியாழன் 28-02-2008 02:40 மணி தமிழீழம் [மயூரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து , ஒன்பது மாவீரர்கள் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர். லெப. கேணல் தணிகைநிலவன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி சுரேஸ்குமார், 2ஆம் லெப்ரினன்ட் வேழினி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சந்தியாம்பிள்ளை தேவஜெனிற்றா ஆகிய இரு போராளிகளும், இராகவன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சிவசுந்தரம் இராகவன் என்ற போருதவிப் படை வீரரும், கடந்த 25ஆம் நாள் திங்கட்கிழமையன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். லெப்ரினன்ட் குயிலன் என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பேரம்பலம் யோசப், லெப்ரினன்ட் வெற்றிமகன் …

    • 11 replies
    • 2.6k views
  6. இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களின் விபரங்களை இராணுவம் ஒப்படைக்க வேண்டும்! முல்லை நீதிமன்றம்!! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை இராணுவத்தின் 58ஆவது படையணி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று முல்லை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதியுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் 58ஆவது படையணியின் முகாமில் இருப்பதாகவும் இதன் காரணமாகவே இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று அரசு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் சரணடைந்தவர்கள் குறித்து எந்தவொரு தகவலும் வெளிவராத நிலைமை காணப்படுகின்றது. …

  7. இலங்கையில் ஈழத்தமிழருக்கான வாழ்வுரிமை என்பது கேள்விக்குறியாகவுள்ள நிலையில், புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையில் நடந்துவரும் உக்கிர மோதல்கள் குறித்தும், இதன் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும், இதர அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், இந்திய அரசு தனது உன்னிப்பான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியோருவர் தெரிவித்துள்ளார் என தமிழக நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்: தமிழர் தாயகப் பகுதிகள் மீது இராணுவம் தொடுத்துள்ள கடுமையான உக்கிரமான தாக்குதல்கள் மற்றும் இருதரப்புகளுக்குமிடையிலான மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இந்திய அரசுக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்pகன்றன. வன்னியில் ஐ.நா நிறுவனம் மற்றும…

  8. 2ஆம் இணைப்பு: முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதிக்குள் படையினர் நுளைவு? இருதரப்புக்கும் கடும் மோதல் சுயாதீன தகவல்கள் வெளியாகவில்லை கொழும்பிலும் அனுராதபுரத்திலும் அம்புலன்ஸ் வண்டிகள் தொடராக ஓடுகின்றன காயப்பட்ட படையினர் பெருமளவில் தெற்கு நோக்கி:பெருமளவு மக்கள் கொல்ப்பட்டு இருக்கலாம் என அச்சம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடைசி சூனியப் பிரதேசமான வட்டுவாகல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மோதல்கள்; இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நேற்று மாலை படைத்தரப்பு பெரும் முயற்சியின் மத்தியில் படைத்தரப்பு வட்டுவாகல் பகுதியைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் இன்று அதிகாலை 3மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக…

    • 0 replies
    • 2.6k views
  9. அதிவேக தரையிறங்கு கலத்தை விற்க கடற்படை முடிவு பிரித்தானியாவிடம் இருந்து 1998 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட அதிவேக ஹவர்கிராப்ற் ரக தாக்குதல் தரையிறங்கு கலத்தை விற்பனை செய்வதற்கு சிறிலங்கா கடற்படை கேள்விப்பத்திரங்களை கோரியுள்ளது. 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த கலமானது பல வருடங்களாக பாவனையற்று இருந்ததாககவும் இதற்கான கேள்விப்பத்திரங்களின் முடிவு நாள் ஜூன் 17 என்றும் பத்திரிகை விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 நொட்ஸ் வேகமுடைய இந்த தரையிறங்கு கலம் 10 தொன் நிறைகளை காவுவதுடன் 600 கி.மீ தூரம் வரையும் பயணிக்கக்கூடியது. நடுத்தர நிறையை காவும் எம்-10 ரக ஹவர்கிராப்ற் வொஸ்பெர் தொர்நிகுறொப்ற் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டதாகும். இது 56 துருப்புக்களை அல்…

    • 9 replies
    • 2.6k views
  10. மகிந்த தன் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாக பிபிசி அறிவித்துள்ளது Sri Lanka's Rajapaksa 'admits defeat' in election Sri Lanka's long-time leader Mahinda Rajapaksa has admitted defeat in the presidential election, his office says. President Rajapaksa has dominated politics for a decade, but faced an unexpected challenge from his health minister Maithripala Sirisena. The statement said Mr Rajapaksa would "ensure a smooth transition of power bowing to the wishes of the people". Mr Rajapaksa, who was seeking a third term in office, is credited by many with ending the civil war in 2009. Troops routed the Tamil Tigers after more than two decades of fighting. But righ…

    • 26 replies
    • 2.6k views
  11. 30 வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக்கின்றோம் - யாழ் ஆயர் யாழ் நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 4, 2010 முப்பது வருட காலமாக நடந்த போரின் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக் கின்றோம். இராணுவக் கெடுபிடிகள் ஓய்ந்து மக்கள் சுதந்திரமாக நடமாட, பயணம் செய்ய முடிகின்றது. தெற்கில் இருந்தும் எண்ணற்ற மக்கள் நாள்தோறும் யாழ்ப்பாணப் பிரதேசத்தை தரிசித்து மீண்டும் தமது உறவுகளைப் புதுப்பித்து கொள்கிறார்கள். இன்னும் நான்கு நாள்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தமிழர்களின் விடிவை நிர்ணயிக்க உள்ளது. ஆகையால் ஏனோ தானோ என்று இருக்காமல் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சிந்தித் துக் கவனத்துடன் வாக்களியுங்கள். அதன் மூலம் எமது எதிர்காலத்தை…

  12. "ஏனைய தமிழ்க் குழுக்களால் நாம் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது" ராஜபக்ச விளக்கமளித்திருந்தார். "அதாவது டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் கருணா குழு ஆகிய தமிழ்க் குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதால் அவர்களால் நாம் ஆபத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது" என ராஜபக்ச தெரிவித்திருந்த கூற்றை சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், வோசிங்ரனுக்கு முன்னர் தெரியப்படுத்தியிருந்தது. இதனுடன் தொடர்புபட்ட இரகசியக் குறிப்பை, 'கொழும்பு ரெலிகிராப்' [Colombo Telegraph] என்னும் ஆங்கில ஊடகம் விக்கிலீக்சின் தரவுத்தளத்திலிருந்து கண்டறிந்துள்ளது. ஒக்ரோபர் 04,2006 அன்று சிறிலங்கா அதிபரின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்சவுடன் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் மேற்கொண்ட சந…

  13. 1661 இல் காலி துறைமுகத்தில் புதையுண்ட ஏழு கிரேக்க வர்த்தக கப்பல்கள் கண்டுபிடிப்பு [01 - December - 2007] காலிதுறைமுகத்தில் 1661 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதையுண்ட 7 சிறிய கப்பல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வேலைகள் தற்போது நடைபெற்று வருவதால் துறைமுகத்தின் கடல்பகுதியில் சில இடங்களில் ஆழமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்போது, இந்த ஏழு கப்பல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை புதைபொருள் ஆராய்ச்சி பிரிவினர் பரிசீலித்தபோது அவை 300 ஆண்டுகளுக்கு முன்னர் புதையுண்டதாகத் தெரிவித்தனர். அக்காலத்தில் வர்த்தக நடவடிக்கைக்காக கிரேக்க நாட்டில் இருந்து வந்த கப்பல்களே இவையென நிபுணர் ரசிக்க முத்துக்குமாரண தெரிவி…

  14. இன்னும் இரு வாரங்களுக்குள் முல்லைத்தீவு முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றுவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தான். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றைய எம(ன)து மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிகரான எந்தவொரு அரசியல் தலைவர்களும் இலங்கையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நேற்று நுவரெலியா புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த 1983 ஜூலை 2…

    • 7 replies
    • 2.6k views
  15. செவ்வாய் 24-07-2007 23:25 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] அனைத்துவித போரியல் யுத்திகளையும் தளபாடங்களையும் பயன்படுத்துவோம் - இளந்திரையன் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து வித போரியல் யுத்திகளையும் படைத்துறைத் தளபாடங்களையும் பயன்படுதப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று அமெரிக்காவில் வெளிவரும் '' புளும் பேர்க் ''' செய்தி நிறுவனத்திற்கு வழங்கி செவ்வியில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இதனைத் தெரிவித்துள்ளார். தென் தமிழீழத்தை சிறீலங்காப் படைகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கும் கருத்துக்கள் முற்றிலும் அரசியல் நலன் சார்ந்தது எனச் சுட்டிக்காட்டினார். குடும்பிமலையை சிறீலங்காப் படைகள் ஆக்கிரமித்த போதும் தென…

  16. ஜெனீவா எதிரொலி: எமது கொள்கையில் மாற்றம் இல்லை, சிங்கள தேசம் இன்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்து சில சிங்கள அரச அதிகாரிகள் வெளியிட்ட உடனடி கருத்தில் தமது கொள்கையில் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என அறிவித்தனர். Sri Lanka Unfazed by U.N. Rights Resolution As expected, Sri Lankan leaders rejected the resolution. Minister Mahinda Samarasinghe, head of the Sri Lankan delegation in Geneva, termed it as misconceived, unwarranted and ill timed. "Shouldn’t we be given more time and space?" "As far as Sri Lanka is concerned, our policy in respect of all matters will continue to be guided by the vital intere…

    • 23 replies
    • 2.6k views
  17. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தலிற்கான பெண் வேட்பாளரும் விடுதலைப்புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்து காணாமல் போயுள்ள எழிலனினது மனைவியுமான அனந்தி தாக்குதல் முயற்சி ஒன்றிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார். வழமை போன்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு சுழிபுரத்திலுள்ள தனது வதிவிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே யாழ்.நகரின் ஜந்து சந்தியில் வைத்து இன்றிரவு அவர் தாக்கப்பட்டுள்ளார். தமது வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த படையினரது பாதுகாப்பு வாகனமொன்று தங்களது வாகத்தினை தாண்டிச்சென்ற சில நொடிகளில் அதனை பின்தொடர்ந்து சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளிலிருந்தே கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்ப…

  18. 'இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்'; வீட்டிற்கு தீவைப்பு! அச்சத்தில் வாழும் தமிழ் குடும்பம்!! அம்பாறை மாவட்டத்தின் வலத்தாப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில் புரம் சுனாமி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் குடும்பம் ஒன்றை இஸ்லாம் மதத்திற்கு வருமாறு அச்சுறுத்தி அவ‌ர்களது வீடு மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (31) அதிகாலை அம்பாறை வலத்தாப்பட்டி ஸ்மையில் புரத்தில் உள்ள சோதிநாதன் சந்திரசேகர் வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழு ஒன்று தங்களது வீட்டுக்கு தீவைத்…

  19. வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை 50 வீதத்தினால் குறைக்கப்படும், உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும்" தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இரகசிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பொதுவாக சில ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ள மைத்திரிபால சில தரப்பினருடன் தனித் தனியாக இரகசிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் செய்து கொள்ளப்பட்ட ஆவணமொன்று தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 1ம் திகதி இவ்வாறான ஒப்பந்தமொன்று ரணில் விக்ர…

    • 5 replies
    • 2.6k views
  20. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது ஆலோசனைக் குழுவின் அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப்போவதாக பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார். மாத்தறை போதிருக்கிராராமயவின் விகாராதிபதி வண. எத்ததஸ்ஸி இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டமொன்றையடுத்து இவ்வாறு எச்சரித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றினர். வண எத்ததஸ்ஸி தேரர் உட்பட பலர் மனுவொன்றில் கையெழுத்திட்டனர். அறிக்கையை பான் கீ மூன் வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக வண எத்ததஸ்ஸி தேரர் எச்சரித்தார் என மாத்தறையைச் சேர்ந்த ஆளும்கட்சி அரசியல்வாதியான அருண குணரட்ன தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-48-15/20549-2011-0…

  21. இலங்கை: “அமெரிக்காவுடன் டீல் பண்ணுறதை விட, ஆபிரிக்கா போகலாமுங்க!” திங்கட்கிழமை, 13 மே 2013 13:15 “இலங்கை, அமெரிக்கா பிரிட்டன் போன்ற மேலை நாடுகளுடன் டீல் பண்ணுவதைவிட ஆபிரிக்க நாடுகளுடன் டீல் பண்ணினால், அதிக பலன் கிடைக்கும்” இலங்கையின் வெளியுறவு அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்கா பிரிட்டன் போன்ற மேலை நாடுகள் தொடர்ந்து இலங்கைக்கு அழுத்தங்களையே கொடுத்து வருகிறன. இந்த நாடுகளுடன் உறவினை வைத்துக் கொள்வதால் இலங்கைக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆனால், ஆபிரிக்க நாடுகள் இலங்கையின் நலனில் அக்கறை கொண்டுள்ளன. ஆபிரிக்க நாடுகளுடன் உறவினை நீடிப்பதன் ஊடாகமூலம் இலங்கை சிறந்த அனுகூலங்களை பெற்றுக் …

  22. ஐரோப்பியம் ஒன்றிய தடை விதித்தால் அமைதி முயற்சிகளுக்கு கடுமையான ஆபத்து ஏற்படும்: பாலசிங்கம் எச்சரிக்கை சர்வதேசத்தின் மேலதிக எந்த ஒரு தடை நடவடிக்கையும் அது ஏற்கனவே பலவீனமடைந்துள்ள அமைதி முயற்சிகளை மிகக் கடுமையாக எதிர்மறையாக பாதிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எச்சரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கக் கூடும் என்ற செய்திகள் தொடர்பாக தமிழ்நெட் இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: சர்வதேச சமூகத்திடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தும் வகையிலான தென்னிலங்கை கடும்போக்காளர்களின் இந்த கோரிக்கையானது ஆயுத வழித்தீர்வை கைக்கொள்வதற்கான ஒரு முன்னோட்டமாகும். தமிழீழ விடுதல…

    • 13 replies
    • 2.6k views
  23. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதுடன் படகு இயந்திரத்தையும் செயலிழக்கச் செய்துள்ளனர். வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த அப்புலிங்கம் போதன் (வயது-49) என்ற மீனவர் தனியே தன்னுடைய படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என்றும் அவ்வேளை படகில் வந்த இந்திய மீனவர்கள் போதன் மீது சரமாரிய தாக்குதல் நடத்தியதுடன், அவருடைய படகு இயந்திரத்தின் இணைப்புக்களைத் துண்டித்து அதனைத் தூக்கிச் செல்ல முயன்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர், தனியே வந்ததால் விட்டுச் செல்கிறோம், வேறு நபர்களும் வந்திருந்தால் கொலை செய்த…

    • 25 replies
    • 2.6k views
  24. Started by nirmalan,

    கே.பி.யின் பேட்டியை திரிவுபடுத்தி வெளியிட்டதுடன், அந்தப் பேட்டியினை வெளியிட்ட ஊடகத்தினையும் இருட்டடிப்புச் செய்து- தமிழ் இணையத்தளம் ஒன்று வெளியிட்ட பேட்டியினை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க... இணைப்பு: KP: Past is the Past

    • 18 replies
    • 2.6k views
  25. April 20, 2013 இலங்கையின் சில முக்கியமான பகுதியில் எதிர்பாராத தாக்குதல்கள் நிகழ்த்தப்படலாம் என்ற வதந்திகள் வெளிவந்த நிலையில், தமிழீழத்தின் ஆனையிறவுப் பகுதியில் மீண்டும் வாகனப் பதிவுகளைப் படையினர் கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஏ-9 வீதி ஊடாகக்குடாநாட்டுக்கு வெளியே செல்லும் பயணிகள் பேரூந்துகள், உல்லாசப் பயணிகளின் வாகனங்கள் உட்படச் சகல வாகனங்களும் ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனை செய்யப்படுகின்றன. கடந்த வாரம் முதல் இந்த நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக அனையிறவுப் பகுதியில் வாகனப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது, இதனால் வாகனங்கள் சிரமமின்றியும்இ தாமதமின்றியும் பயணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. இதேவேளை, கடந்த…

    • 24 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.