ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
வட மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்! வட மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தற்போது கடமையாற்றும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலிருந்து மாகாணத்துக்குள் வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்திலிருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்கவால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருடன் தமிழ் பொலிஸ் …
-
- 6 replies
- 1.2k views
-
-
உள்ளூராட்சித் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை - மணிவண்ணன் குற்றச்சாட்டு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டே, உள்ளூராட்சித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தவுள்ளது என்று சட்டத்தரணியும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் மேயருமான வி.மணிவண்ணன் விமர்சித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மீதான, மேன்முறையீடு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, சட்டத்தரணி வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதில் யாழ், மாநகரசபை உள்ளிட்ட நான்கு உள்ளூராட்சி சபைகளு…
-
- 0 replies
- 115 views
-
-
03 MAY, 2025 | 07:32 PM “உழலை ஒழிக்கிறோம்” என நண்பர் அனுர கூறுவதை, நான் வரவேற்கிறேன். இது எனது கொள்கையும் ஆகும். ஆனால், இதை மட்டும் சொல்லி, நாள்தோறும் புது, புது பொய்களையும் சொல்லி, இனியும் நாட்டை நடத்த முடியாது. நாட்டின் முதல் முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு வழங்கப்பட்டே ஆகவேண்டும். இல்லா விட்டால் வர்த்தகம், தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்குளியில் வெள்ளிக்கிழமை (02) நிகழ்ந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடும். பண புழக்கம் கணிசமாக குறையும். இந்திய பொருளாரத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, விசேட வர்த்தக சலுகைகளை கோரி பெற…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
இதுவரை பெறாத வெற்றி வாய்ப்பினை அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ளது - எழிலன் Saturday, 14 June 2008 09.57 hrs (Swiss Time) இதுவரை பெறாத வெற்றி வாய்ப்பினை இன்று அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ளது. எமது பலம் முன்பிருந்ததைப் போல் அல்லாது தற்போது மேலோங்கி காணப்படுகிறது என்று விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி. எழிலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரந்தனில் நேற்று முன்தினம் நடைபெற்ற வீரமுரசு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். யாழ்ப்பாணத்தில் தற்போது விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடுத்து தரையிறங்குவார்கள் என்ற அச்ச உணர்வில் யாழ் குடா கடல்தொழிலாளர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. அத்துடன் ஊர…
-
- 2 replies
- 2k views
-
-
கல்முனை பிரதேசத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமான முறையில் பசுக்களை அறுத்த குற்றச்சாட்டில் 6 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக கல்முனை காவல்துறையினர் தெரிவித்தனர். சில பசுக்களை தாம் மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து கல்முனை பிரதேசத்தில் இன்று மேற்கொண்ட முற்றுகையொன்றின்போது, மேற்படி 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெட்டப்பட்ட நிலையில் மூன்று மாடுகளை கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். http://www.pathivu.c...ticle_full.aspx பி.கு: கக்கீம் தான் காட்டிக்கொடுத்திருப்பாரா?
-
- 0 replies
- 596 views
-
-
Published By: DIGITAL DESK 2 16 MAY, 2025 | 03:04 PM இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர் சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து துறைகளிலும் இந்திய அரசாங்கம் அனைத்து வகையான ஆதரவையும் தொடர்ந்தும் வழங்கத் தயாராக உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகரான சந்தோஷ் ஜா வியாழக்கிழமை (15) மத்திய மாகாணத்திற்கு தனது விஜயத்தினை மேற்கொண்டார். இவ் விஜயத்தின் போது, இரு வேறு நிகழ்வுகளின் மூலம் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான பல்வேறு உதவிகளை வழங்கினார். கண்டி பேராதெனிய இந்துக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், கல்லூரியின் கோரிக்கையின் பேரில் மாணவர்களுக்கு கணினிகள், இசைக்கருவிகள், நூலகத்துக்கு நூல்கள் மற்…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடம்பெற்ற மோதல்களில் 4,335 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுபாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் 399 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(ஜூன்19) வடக்கில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு படையினரும், 26க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு அமைச்சு புதிய புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. நன்றி : www.lankadissent.com
-
- 12 replies
- 1.7k views
-
-
ACTC – ITAK பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகளுக்கு DTNA ஆதரவு! adminMay 26, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகள் பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று (25.05.25) இடம்பெற்ற பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபைகள் தொடர்பாக ஆராய்நதோம். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்று…
-
- 1 reply
- 246 views
- 1 follower
-
-
பாட்டலியின் சாரதியிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமாரவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அவரின் சாரதி துசித திலும் குமார கொழும்பு நீதவான் முன்னிலையில் இரகசிக வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். அதன்படி, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நேரஞ்சனா டி சில்வாவின் உத்தியோகபூர்வ அறையில் இந்த இரகசிய வாக்குமூலம் பெறப்பட…
-
- 2 replies
- 817 views
-
-
வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னணி, சுயநல அரசியல் லாபங்களை மட்டுமே மையப்படுத்தி, சுமந்திரன் எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்துள…
-
- 1 reply
- 219 views
-
-
சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சென்ற அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் இவான் பெய்கன்பாம், சிறிலங்கா அரச தலைவர் உட்பட அரசின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 499 views
-
-
[size=3] [size=4]பயங்கரவாதம் நிறுத்தப்பட்ட போதும் நமது செயல்பாடுகள் நிறுத்தப்பட முடியாதது. வட்டுக்கோட்டைத் தனிநாடு கோரிக்கைக்குப் பலம் சேர்க்கும் நடவடிக்கைகள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.[/size] [size=4]நாட்டின் பாதுகாப்புக்கும் செயற்பாட்டுக்கும் நாம் செய்ய வேண்டியது பெருமளவு உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி தனி இராச்சியத்துக்குப் பலம் சேர்க்க முயல்வோர் விடயத்தில் படையினர் மட்டுமன்றி முழு நாட்டு மக்களும் தெளிவுடன் செயற்பட வேண்டியுள்ளதெனவும் வலியுறுத்தினார்.[/size] [size=4]அண்மையில் நடந்த ஈழக் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் மாநாடு பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி; அந்த மாநாட்டின் பின்னணி தனியான ஈழ இராச்சியக் கொள்கையே எனவும் …
-
- 3 replies
- 463 views
-
-
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் உரிமைகள் தொடர்பான விடயங்களில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என கோரி அக்கரப்பத்தனையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது. நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் பல பாகங்களில் பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இந்திய வம்சாவளி என கூறப்படும் இவர்கள் 72 வருடங்கள் நாடு சுதந்திரம் பெற்றிருந்தாலும் இம்மக்கள் இன்னும் அடிமையுடன் இருப்பதோடு, தோட்ட தேயிலை மலையில் தொழில் செய்யும் இவர்கள் நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெழும்பாக இருப்பதுடன், உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை அரசாங்கம் வழங்காமல் சுதந்திரம்…
-
- 0 replies
- 409 views
-
-
தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு! Vhg ஜூன் 17, 2025 முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் வைத்திய கலாநிதி சிவமோகனால், தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ்.மேன் முறையீட்டு நீதிமன்றில் முறையிடப்பட்ட வழக்கானது இன்றையதினம் (17.06.2025) எடுத்துக்கு கொள்ளப்படவுள்ள நிலையில் சுமுகமான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வைத்திய கலாநிதி சிவமோகன் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று வவுனியாவில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெற்றிருந்தது. சமூக செயற்பாட்டாளரும், மூன்று முன்னாள் போராளியின் சகோதரனுமான முல்லை ஈசனின் வேண்டுகோளுக்கிணங்க வழக்குகள் நீக்கப்பட வேண்டும்…
-
-
- 1 reply
- 174 views
-
-
பிரபாகரனை வீழ்த்த மகிந்த செய்த நரபலி வேள்விகள்! ஜோதிடர் அதிர்ச்சி தகவல்! இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். அதன் பிரதிபலனாக ஆட்சி அதிகாரங்களை இழந்திருந்தார். இந்நிலையில் மகிந்த ஜோதிடம் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவர் செய்த பரிகாரங்கள்இ பூஜைகளை சோதிடர் டப்ல்யூ.டீ.ஆரியரத்ன அம்பலப்படுத்தியுள்ளார். நாட்டில் நிலவிய போரை நிறைவு செய்து கொடுக்குமாறு கூறி தனது இரண்டு மாடி வீட்டில் மேற்கொண்ட காளி பூஜை மற்றும் இதுவரையிலான காலப்பகுதியில் மேற்கொண்டுள்ள பூஜை வழிபாடுகள் தொடர்பிலான முழுமையான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். பத்ரகாளி மற்றும் கல்லரை காளி அம்மா இருவரையும் வணங்கி கொண்டு தான் நான் இந்த பூஜையை ஆரம்பித்தேன். விட…
-
- 1 reply
- 545 views
-
-
யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது- சுரேஷ் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கல்முனையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில், “ஐக்கிய நாடுகள் சபையில் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, இலங்கையில் யுத்தம் நடைபெற்ற நிலையில் அப்போது இடம்பெற்ற மனித உரிமை விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜெனிவா…
-
- 3 replies
- 465 views
-
-
வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை! வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தை கடுமையான விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் உரையாற்றிய அவர், மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் கடிதங்களை (LCs) திறந்துள்ளது. இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டி…
-
- 1 reply
- 179 views
-
-
பாதுகாப்புச் செயலாளரும் மஹிந்தவின் சகோதரனுமான கோதபாயவை பாரளுமன்றிற்கு உள்வாங்க முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேசியப் பட்டியல் மூலமாக கோதபயாவை பாரளுமன்றில் நியமிக்கவுள்ளதாக தெரியவருகின்றது. இதற்கிடையில் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க பாரளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதன் காரணமாக ஏற்பட்டுள்ள அவ் வெற்றிடத்திற்கு மஹிந்தவின் சகோதரன் கோத்தபயாவை நியமிக்கும்படி ஹெல உறுமைய அமைச்சர் சம்பிக்கவும் தே.வி.மு.யின் விமல் வீரவன்சவும் நிதிபதியான தயாசிறி உட்பட்ட குழுவொன்று மஹிந்தவை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியவருகின்றது. யுத்தம் தீர்மானமானதோரு வெற்றியை நோக்கி செல்வதாலும், யுத்தத்தை வெற்றியின் இலக்கை நோக்கி வழிநடத்திக…
-
- 2 replies
- 1.3k views
-
-
நவாலியில் இளைஞன் சுட்டுக்கொலை [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 07:00 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். நவாலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 557 views
-
-
வட மாகாணசபை அமைச்சர்கள் அனைவரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரும் மனுவில், இதுவரை 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் 4 அமைச்சர்கள் நீங்கலாக மொத்தம் 24 உறுப்பினர்கள் இதில் கையெழுத்திடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைப் பொருளாளரும், வடமாகாண சபை பிரதி அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வட மாகாண சபைக்கான தேர்தல் முதன்முறையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தெரிவான உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதோடு, அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். அம…
-
- 4 replies
- 776 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் February 27, 2020 நாங்கள் தொலைத்தது ஆடுகளையோ அல்லது மாடுகளையோ இல்லை. தொலைத்தது எங்களுடைய உயிர்களையும், பிள்ளைகளையுமே. எங்களுக்கான ஒரு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் என்பதனை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை (27) மதியம் மன்னாரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் நீதிமன…
-
- 2 replies
- 676 views
-
-
27 JUL, 2025 | 01:19 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் ஏக காலத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மருத்துவ பீடத்தின் ஓட்டுண்ணியல் துறை, சத்திர சிகிச்சையியல் துறை மற்றும் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரை பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை நேற்று சனிக்கிழமை (26) ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த ஓட்டுண்ணியல் துறை சிரேஷ…
-
-
- 3 replies
- 286 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3240 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1448 முஸ்லிம் காங்கிரஸ் 463 ஐக்கிய தேசிய கட்சி 58 http://www.virakesari.lk/article/provincialelection2012.php?vid=76
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி ; மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது [ Wednesday,13 April 2016, 05:01:30 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மீட்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் வவுனியா பூவசரங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது. இவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நகுலன் என்ற குறித்த நபர் முன்னாள் போராளி என்று தெரி…
-
- 10 replies
- 946 views
-
-
சார் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில், பிராந்திய நாடுகளின் தலைவர்களிற்கு; இடையே காணப்பட்ட இணக்கத்தினை எதிர்க்க விடுதலைப்புலிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர் என பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் புலிகளை தோற்கடிக்க சார்க் நாடுகள் கூட்டு புலனாய்வு நடவடிக்கையை மேற்கொள்ள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சார்க் நாடுகள் தற்போது வழங்கி வரும் புலனாய்வு ஒத்துழைப்புகளை மேலும் வினைதிறன்மிக்க வகையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவற்றின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் விடுதலைப்புலிகள் நடவடிக்கைகளை அந்த நாடுகளில் தடுத்தல், அவர்களின் திட்டங்களை அறிந்து கொள்ள இலங்கைக்கு நவீன வசதிகளை பெற்றுக்கொடுத்தல் என்பவற்றை ம…
-
- 0 replies
- 955 views
-