ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
வீரகேசரி நாளேடு 8/31/2008 7:29:38 PM - சென்னை, காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெடுஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதி தான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி. அதற்கு விளக்கம் அளிப்பதாக குறிப்பிட்டு நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முத ல்வர் கருணாநிதி அடுத்தமுறை, தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற…
-
- 13 replies
- 2.3k views
-
-
இலங்கை டெய்லிநியூஸ் பத்திரிக்கைக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொட்டபாய ராஜபக்ச '' I think the most sensible thing is that we must end this Ceasefire Agreement by officially declaring there is no Ceasefire Agreement. Why should we hoodwink the people by saying there is a Ceasefire Agreement?,” என்றார். அவரது இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு முழு அளவில் அரசு போரை முன்னெடுக்கவுள்ளதையே காட்டுகிறது. புலிகள் மீதான தடையை அரசு அறிவிக்குமானால் இலங்கையில் இருக்கும் உள்ளூர், சர்வதேச ஊடகவியளாளர்கள் புலிகளை நேரடியாக இலங்கையில் இருந்து தொடர்புகொள்ளமுடியாத நிலையேற்படும். இது ஈழப்போர்-4 குறித்த உண்மை நிலவரம் வெளிவருவதை தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும். டெய்லிந…
-
- 7 replies
- 2.3k views
-
-
''பிரபாகரனை போர்க்களத்தில் அழிக்கவில்லை..'' விக்கிலீக்ஸை ஆதாரம் காட்டும் வைகோ தேர்தல் பரபரப்பில் முக்கியக் கட்சிகள் எல்லாம் முழு வீச்சில் தமிழக மெங்கும் சுழன்றுகொண்டு இருக்க, முக்கடலும் சங்கமிக்கும் குமரிக் கடற்கரையில் ம.தி.மு.க. தொண்டர்களும் தமிழ் ஆர்வலர்களும் கடந்த மார்ச் 31-ம் தேதி கனத்த இதயத்துடன் குழுமி நின்றார்கள். பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தி கரைப்பு நடக்க இருந்தது. 'மாலையில்தான் ஊர்வலம் நடக்கும்’ என அறிவித்து இருந்தாலும், காலை நேரத்திலேயே கட்டுக்கடங்காத கூட்டம். பிரபாகரன், வைகோ படங்களைக்கொண்ட அட்டைகளும் ம.தி.மு.க கொடிகளும் அதிகம் தென்பட்டன. ஏனோ போலீஸ் தலைகள் குறைவாகவே இருந்தன. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க…
-
- 4 replies
- 2.3k views
-
-
சிலாவத்தையில் நேற்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பெரும் இழப்புக்களை சிறிலங்காப் படையினர் சந்தித்த நிலையில் அப்பகுதி மீது இன்று சிறீலங்கா நடத்திய கொடூர வான் தாக்குதலில் கட்டங்கள் பல சேதமடைந்துள்ளன. பாடசாலைகள் மற்றும் தனியார் வீடுகள் என்பன கடுமையான சேதங்கள் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/sila...2009-01-14.html
-
- 0 replies
- 2.3k views
-
-
கடந்த செவ்வாய் இரவு 9.00 மணிக்கு வான்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள திருமலைத் துறைமுகம். தமிழீழத்தின் தலைநகரும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாகத் திகழும் திருக்கோணமலையின் கடற்படைத்தளம், துறைமுகம் மீது வான் தாக்குதலைத் தொடுத்தனர் விடுதலைப் புலிகள். வழமைபோல், சேத விபரங்களை குறைத்துக் கூறும் அரச படைத்துறைப் பேச்சாளரின் கஞ்சத்தனம், மறுபடியும் வெளிப்பட்டது. இந்த வருடம் மே மாதமும், கடற்புலிக் கொமாண்டோக்களால், திருமலைத் துறைமுகத்தில் அழித்துதொழிப்புத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது, நினைவிருக்கலாம். எம்.வி.இன்வின்சிபிள் என்கிற `வெல்ல முடியாத' (Invicible) துருப்புக்காவி சரக்குக் கப்பல், துறைமுகத்தில் தரித்து நின்றவே…
-
- 5 replies
- 2.3k views
-
-
கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் சிறீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மும்முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இத் தாக்குதலின் போது 41 படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 102 படையினர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கியும் பன்னங்கண்டி நோக்கியும் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியிலிருந்து இரணைமடு நோக்கியும் சிறிலங்காப் படையினர் மும்முனை முன்நகர்வுத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பெருமெடுப்பிலான எறிகணைச் வீச்சுகள் மற்றும் கனரக சுடுகலன்களின் சூட்டாதரவுத் தாக்குதல்களின் பின்பலத்துடன் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர். இந்த முன்னகர்வுகளுக்கு எதிராக தமிழீழ …
-
- 6 replies
- 2.3k views
-
-
தமிழர் படுகொலை வீடியோ: இந்தியா விசாரிக்கும்!- எஸ்எம் கிருஷ்ணா வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27, 2009, 15:49 [iST] டெல்லி: இலங்கையில் தமிழ் இளைஞர்கள் கைகள்- கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த போரில் சுமார் 3 லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். விடுதலைப் புலிகளை இனம் பிரிக்கிறோம் என்று கூறி அவர்களை தடுப்பு முகாம்களில் தங்க வைத்து சிங்கள அரசு கொடுமைப்படுத்தி வருகிறது. முகாம்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவருமே விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கும் சிங்…
-
- 21 replies
- 2.3k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு மாமா வேலை செய்யும் தமது வழக்கத்தை கைவிட வேண்டும். கல்முனை விடயத்தில் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து காலஅவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கிறார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன். கனடா “வாணிபம்” வியாபார தகவல் கையேட்டு நிறுவனத்தினரின் நிதி அனுசரணையில் மக்கள் நலன் காப்பகத்தின் அன்பகம் என்ற மூதாளர் மாதாந்த உதவித்திட்டம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. 35 பேருக்கு இன்று உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இப்படி காட்டமாக தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களை உள்நாட்டு யுத்தம் என…
-
- 14 replies
- 2.3k views
-
-
காங்கேசன் துறை கடற்பரப்பில் கடற்புலிகளின் கரும்புலிகளால் தாக்கியழிக்கப்பட்ட இரு கப்பல்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஹர்த்தால் அனுஸ்டிக்கக் கோரி அழைப்பு விடுத்து துரோகக் கும்பல் ஈ.பி.டி.பி நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. யாழுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் கப்பல் மூலமாகவே அனுப்பப்படுகின்றன. யாழ் குடாவிற்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும், விலையுயர்வு ஏற்பட்டு வருகின்றது எனவும் வெறும் வாய்ப்பிரசாரம் செய்தவர்க்ள மக்களின் அவலங்களை எப்போதும் வேடிக்கi பார்த்ததே வரலாறு. ஈ.பி.டி.பியாகிய நாம் வேடிக்கை பாhக்காமல் மக்களின் துயரங்களைப் போக்கும் ஆக்கபூர்வமான முயற்சிகளை அயராது எடுத்ததன் பயனாக பொருட்களின் தட்டுப்ப…
-
- 9 replies
- 2.3k views
-
-
லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், விரைவில் கொழும்பு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் “தி கார்டியன்“ நாளேடு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் 55ஆவது டிவிசனுக்கும், 59ஆவது டிவிசனுக்கும் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, பெருமளவு பொதுமக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். மருத்துவமனைகள்,. மற்றும் பாதுகாப்பு வலயங்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு தமிழ்மக்களைப் படுகொலை செய்து போர்க்க…
-
- 8 replies
- 2.3k views
-
-
Nov 6, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்ற ஆதாரங்களில் சில இணைப்பு வடிவில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனைக்குழுவை அமைத்துள்ள நிலையில் போர்க்குற்ற ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளியாகிய காணொளிகளில் சில இங்கு தரப்பட்டுள்ளன. கூட்டமாக கொல்ப்பட்ட தமிழ் மக்கள். சீருடைதரித்த சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் நீதிக்குப்புறம்பான படுகொலைகள். இது பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆதாரம். …
-
- 0 replies
- 2.3k views
-
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது வழக்கு எண் 6314/23 இன் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் கொலைக்குச் சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அன்செல்ம் டி சில்வா ம…
-
-
- 51 replies
- 2.3k views
- 1 follower
-
-
யாழ் குடாநாட்டில் பெண் உளவாளிகளின் நடமாட்டம் அதிகரிப்பு. யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் அசாதாரண சூழ் நிலையைத் தொடர்ந்து பெண் உளவாளிகளின் நடமாட்டங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக இந்தப் பெண்கள் ஈ.பி.டி.பி ஒட்டுப்படையுடன் இனணந்து செயல்பட்டு வருகின்றார்கள் என்பது அண்மைக் காலத்தில் பொது மக்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் மூன்று பெண் உளவாளிகள் பொங்கியெழும் மக்கள் படை மற்றும் எல்லாளன் படையினால் சுடப்பட்டு உரிமை கோரப்பட்டுள்ளார்கள். தென்மராட்சிப் பகுதியில் சமுர்த்தி அலுவலராக கடமையாற்றியவரும் கோப்பாயில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரும் மற்றும் அண்மையில் பல்கலைக்கழக அயலில் உதயகுமார் றஜீதா என…
-
- 3 replies
- 2.3k views
-
-
இது திருகோணமலை கன்னியா வெண்ணீர் கிணற்றுக்கு செல்லும் நுழைவு சீட்டாகும். இது சிவ பூமி எனவும் இலங்கையை ஆண்ட இராவணன் தனது தாயின் கிரியைகளுக்காக உருவாக்கிய ஏழு கிணறுகளும் தற்போது இவ் நுழைவு சீட்டில் அனுராதபுர கால பெளத்தர்களுக்கு சொந்தமானது என்று உள்ளது . எது உண்மை. தொல்லியல் தினைக்களத்தில் ஒரு தமிழர் கூடவா வேலை செய்யவில்லை. http://tamilleader.com/
-
- 22 replies
- 2.3k views
-
-
'சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் மைய நகரமாகவும், அவர்களின் தற்போதைய தள நகரமாகவுமுள்ள கிளிநொச்சியை நான்கு மாதத்திற்குள் கைப்பற்றிவிடுவர் எனத்தான் முழுமையாக நம்புகிறேன்" சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் இந்நம்பிக்கையானது அவரின் தனிப்பட்ட மதிப்பீடாகவோ அன்றி ஊகமாகவோ கொள்வதற்கில்லை. சிறிலங்கா இராணுவத் தலைமைப்பீடத்தின் மதிப்பீடும் அது என்றே கொள்ளமுடியும். அண்மையில் இதனைச் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவும் உறுதிப்படுத்தியிருந்தார். அண்மையில் அவர் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில் 'விடுதலைப் புலிகள் அடுத்த மாவீரர் தினத்தைப் பதுங்கு குழிகளிலேயே கொண்டாடுவர்" என்றார். இதற்கு அவர் …
-
- 5 replies
- 2.3k views
-
-
”பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை” என இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாக வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்தும் தெரிவித்துவருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டச் சமரின் போது எமது தலைவரும் மற்றும் போராளிகளும் வீரச்சாவு அடைந்தார்கள்” எனவும் செல்வராஜா பத்மநாதன் குறிப்பிட்டார…
-
- 5 replies
- 2.3k views
-
-
ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் பாதிரி இந்திய, இலங்கை அரசுகளின் உளவாளியாகப் பயன்பட்டுள்ளார் என்று ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தி வினவிலும் புதிய கலாச்சாரத்திலும் சில கட்டுரைகள் வந்துள்ளன. புலிகள் இருந்த போது புலிகளை வைத்து கல்லாக் கட்டியவர் புலிகளுக்குப் பின்னர் புலத்து தமிழர்களை குறி வைத்தார். வினவு அம்பலப்படுத்தியதும் பல ஈழ ஆதரவாளர்கள் இந்த உளவாளியை விட்டு ஒதுங்கினார். புலத்து மக்களின் பாக்கெட்டுகளை குறி வைத்த ஜெகத் கஸ்பருக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லாமல் போக இப்போது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த பேரினவாத ராஜபக்சேவிடமே மீள் கட்டுமான ப்ராஜெக்டைப் போட ரெடியாகிவிட்டார்….. உளவாளிகள் எப்போதும் தங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதில்லை. என்றாலும் சூழலும் காலமும் …
-
- 8 replies
- 2.3k views
-
-
இராணுவத்தினரின் வெற்றிக்கான பிரதான காரணம் அனைத்து அதிகாரங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமையே – கருணா: http://www.globaltamilnews.net/tamil_news....=2296&cat=1 இராணுவத்தினரின் வெற்றிக்கான பிரதான காரணம், அனைத்து அதிகாரங்களுக்கும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையே என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் படையினர் அரசியல்வாதிகளுக்கு ஏற்ப செயற்பட்டு வந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார். பூநகரி கைப்பற்றப்பட்ட பின்னர், பிரபாகரன் எதிர்நோக்கியுள்ள நிலைமைகளை அனைவரும் உணர்ந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, பிரபாகரன் தன்னை மன்னர் என நினைத்து கொண்டு, எவருடைய ஆலோசனைகளையும் ஏற்று…
-
- 10 replies
- 2.3k views
-
-
மகிந்த இழைத்த அநீதிகளுக்காக கடவுளிடமிருந்து தப்ப முடியாது: மேவின் சில்வா:- 15 ஜூலை 2015 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ராஜபக்ஸ குடும்பத்தின் சதித்திட்டங்களுக்கு உள்ளாகியுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தற்போது கட்சியின் தலைவர் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே மீட்டெடுக்க முடியும் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியை உயர்த்தி வைப்பதற்கு செயற்பட்ட சிலரும் பசில் ராஜபக்ஸவும் வேட்பு மனு வழங்கும் செயற்பாட்டை தமது பொறுப்பில் எடுத்து செயற்பட்டமையினால் தனக…
-
- 3 replies
- 2.3k views
-
-
London நகரில் நடைபெறும் போராட்டம் http://ibctamil.fm/raddio.html
-
- 5 replies
- 2.3k views
-
-
என் அன்பார்ந்தசகோதரசகோதரிகளே, நான் வெளிநாடுகள் சென்றசமயத்தில்த் தான் பொதுத் தேர்தல் நியமிக்கப்பட்டது. நான் தற்பொழுதுதிரும்பிவந்துள்ளேன். தேர்தலில் உங்கள் பங்களிப்புஎன்னஎன்றுபலரும் என்னைக் கேட்கின்றார்கள். யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்துபத்துப் பேர் ஏழு ஆசனங்களுக்காகவும் வன்னியில் ஒன்பதுபேர் ஆறுஆசனங்களுக்காகவும் போட்டியிடுகின்றனர். தற்போதையதேர்தல் முறைமையின் கீழ் ஒரேகட்சிக்குள்ளேயேவிருப்புவாக்குகளைப் பெறபோட்டியாளர்களிடையேமுரண்பாடுகள் எழுவதுஎதிர் பார்க்கப்படுவதொன்றே. வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக 2013ம் ஆண்டில் பொதுவேட்பாளராகநான் நிறுத்தப்பட்டேன். நான் பதவிக்குவந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்அங்கத்துவக்கட்சிகள் பலநான் பக்கச்…
-
- 34 replies
- 2.3k views
-
-
TN film industry promotes unity in Lanka By Stanley Samarasinghe South Indian film actress R. Radhikaa Sarath Kumar, who has acted in more than 300 films, is married to the President of the South Indian Film Artistes’ Guild. Radhikaa is the daughter of very famous villain in South Indian films, M.R. Radha, who married a Sinhalese girl from Vennappuwa; Geetha Fernando, Radikaa’s mother. Radhikaa owns Radaan Mediaworks Company in Chennai. She was educated in Sri Lanka, at the Holy Family Convent in Bambalapitiya. The Nation had a brief conversation with the actress to learn first hand information on the recently held protest campaign in Chen…
-
- 1 reply
- 2.3k views
-
-
வினாயகமூத்தி முரளீதரன் என்ற கருணாவுக்கு இலங்கை அரசு புதிய அடையாள அட்டை - விக்னேஸ்வரன் மதன்குமார் என்ற பெயரில் கொழும்பில் பிறந்ததாகவும்; பதுளையில் வசிப்பதாகவும் பதிவு. http://www.nitharsanam.com/?art=15580
-
- 3 replies
- 2.3k views
-
-
வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்றி கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் கருணா கட்சியும் போட்டியிடும். வாகரைப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதே அரசின் இப்போதைய முன்னுரிமைத் திட்டம் என்றும் அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக "றொய்ட்டர்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடைபெறும்போது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று இராணுவத்துடன் இணைந்து இயங்கும் கருணா குழுவின் அரசியல் கட்சியும் போட்டியிடும் என்றும் ஆய்வாளர் கருதுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கும் வாகர…
-
- 5 replies
- 2.3k views
-
-
சுமந்திரன் -கஜேந்திரகுமார் இன்று நேருக்கு நேர் கருத்து மோதல் "புதிய அரசியல் யாப்பு எந்த தீர்வையும் தரப்போவதில்லை" என தெரிவிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் "புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையும்" என கூறும் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடலை, நமது வசந்தம் TVல் நாளை(27.12.2017) இரவு 10.00 மணிக்கு http://www.samakalam.com/செய்திகள்/சுமந்திரன்-கஜேந்திரகும/ இன்று இரவு முழுமையாக இணைக்கபடும்
-
- 23 replies
- 2.3k views
-