ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
-
- 13 replies
- 4.4k views
-
-
பிரிட்டனில் உள்ள கார்டிப்பில் நடந்து வரும் சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (ICC Champions Trophy 2013) இலங்கைக்கு எதிரான 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகின்றது. போட்டியின் இறுதி ஓவரில் புலிக்கொடியோடு தமிழர்கள் மைதானத்தில் புகுந்து வலம் வந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் புலிகொடியோடு மைதானத்தில் வலம் வந்த வீரர்கள் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ப்பட்டுள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16180:pulikkotikal-tamils-%E2%80%8B%E2%80%8Bwith-the-law-on-the-grounds-of-london-images&catid=36:tamilnadu&Itemid=102
-
- 6 replies
- 1.7k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 24, மே 2009 (12:36 IST) முல்லைத்தீவு, கிளிநொச்சியில் ராணுவ முகாம்: இலங்கை அரசு திட்டம் முல்லைத்தீவு, கிளிநொச்சியில் ராணுவ தலைமை முகாம்களை இலங்கை அரசு அமைக்கிறது. இலங்கையில் கிளி நொச்சி முல்லைத்தீவு மாவட் டங்களில் இருந்து தமிழர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த மக்களை சொந்த ஊருக்கு அனுப்ப ராணுவம் மறுத்து வருகிறது. மீண்டும் அங்கு விடுதலைப்புலிகள் தலை தூக்கி விடக்கூடாது என்பதற்காக அந்த இடங்களில் ராணுவ தலைமை முகாம்களை அமைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மக்களை அங்கு குடியமர்த்துவதற்கு முன்பாகவே முகாம்களை வேக வேகமாக அமைக்க இருக்கின்றனர். முல்லைத்தீவு, கிளிநொச்சியில் ராணுவ தலைமை முகாமும், இரண…
-
- 0 replies
- 804 views
-
-
சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரியை தாக்க முடியுமா? நபரொருவர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவரினால் காரணமின்றி தாக்குதலோ அல்லது அதிகாரத்தை பயன்படுத்தும் செயற்பாடோ இடம்பெற்றால் அது தொடர்பில் குறித்த நபருக்கு பொலிஸில், பொலிஸ் தலைமையகத்தில் அல்லது பொலிஸ் உயரதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அதேபோல், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவும் அல்லது உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கொன்றை தாக்கல் செய்யவும் முடியும் என அவர் குறிப்பிட்டார். அவ்வாறு இன்றி சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரிக்கு எதிராக செயற்பட முடியாது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். சமூக…
-
- 3 replies
- 937 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சில பிரிவுகள் தற்போதும் இயங்கி வருகின்றன. அவர்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தலாம் என சிறிலங்காவின் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் சில பிரிவுகள் தற்போதும் இயங்கி வருகின்றன. அவர்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தலாம். ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகளின் அணிகளும் உறங்குநிலையில் உள்ளன. எனினும் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களும் 10 மாதங்களும் எடுத்த படை நடவடிக்கையில் இராணுவம் பெருமளவிலான ஆட்பல அதிகரிப்புக்களை மேற்கொண்டிருந்தது என்றார் அவர். …
-
- 6 replies
- 1.5k views
-
-
யாழில் கொள்ளை கும்பல் அட்டகாசம்: வயோதிப தம்பதிக்கு கொடுத்த சித்திரவதையில் வயோதிபர் உயிரிழப்பு யாழ்ப்பாணம்- தென்மராட்சி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல், வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதில் வயோதிபர் சிவராசா (வயது72) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு, குறித்த வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல், அங்கிருந்த வயோதிபர் தம்பதிகளை கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளனர். இதன்போது நகை மற்றும் பணம் ஆகியவற்றினை எங்கு வைத்துள்ளீர்கள் என கேட்டு, வயோதிபரின் கழுத்தை அவர்கள் நெரித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நகைகள் மற்றும் ஒன்றரை இலட்சம் பணத்தை கொள்ளையிட்டுக…
-
- 0 replies
- 498 views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கான முகாம்களில் இருந்து 13 ஆயிரத்து 130 பேரைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 445 views
-
-
கண்டி மல்வத்து, அஸ்கிரி பீடாதிபதிகள் உள்ளிட்ட பௌத்த பிக்குகளும், பொதுபல சேனா உள்ளிட்ட கடும்போக்குடைய அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் சூதாட்டமையம் அமைப்பதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், http://tamilworldtoday.com/archives/21085
-
- 0 replies
- 302 views
-
-
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து இலங்கையர்கள் இந்தியாவில் கைது கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார் 340 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையிலேயே சுமார் 340 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள், சிவப்பு நிற ஈரானிய படகில் இருந்து இலங்கை படகுக்கு மாற்றப்பட்டதாக சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போ…
-
- 0 replies
- 213 views
-
-
வன்னியில் பெருமளவில் ராணுவம் குவிப்பு-விடுதலைப் புலிகளை தேடுகின்றனர் on 07-06-2009 18:56 Published in : செய்திகள், இலங்கை போர் முடிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில், ராணுவம் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் 28வது பட்டாலியன் இதில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வன்னிப் பகுதியின் பாதுகாப்புகளை பலப்படுத்துவதில் இலங்கை ராணுவம் பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதிகளில் படைத் தலைமையகங்களை நிறுவியுள்ள இலங்கை அரசு மேஜர் ஜெனரல் நந்தன உடுவத்த, மேஜர் ஜெனரல் சானா குணதிலக ஆகியோரை அதிகாரிகளாக நி…
-
- 3 replies
- 1.7k views
-
-
மஹிந்த அமரவீர பதவியிலிருந்து நீக்கப்படுவார் : ஜனாதிபதி திடீர் அறிவிப்பு.! கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர பதவியிலிருந்து நீக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். காணிகளை திருப்பி கையளிப்பதில் நியாயம் பேணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உறையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் அம்பாந்தோட்டை பிரதேசத்துக்கு மூன்று மீன் வளத்துறை அமைச்சர்கள் பதவி வகிப்பதால் பிரச்சிணைகள் தலைத்தூக்கியுள்ளதாக பலர் என்னிடம் முறைப்பாடு தெரிவித்தனர். இது தொடர்பில் கவனம் செழுத்திய நான் கடற்றொழில் நீ…
-
- 0 replies
- 306 views
-
-
சிறீலங்காவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பெயர்களுடைய அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட ஓர் இன சமூகத்தையோ அல்லது வேறு நாட்டை பிளவுபடுத்தக் கூடிய வகையிலான பெயர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த கட்சிகளின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. செயற்படாத அரசியல் கட்சிகளை ரத்து செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் சுமார் 40 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்த போதிலும் 10 அரசியல் கட்சிகளே செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. புதிய சட்டத்தின் பி…
-
- 13 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம் ஆரியகுளத்துக்குள் 3 வயது தென்பகுதிச் சிறுவன் ஒருவர் இன்று திங்கள் கிழமை காலையில் தவறி வீழ்ந்துள்ளார். தேடுதல் மேற்கொண்டு மீட்ப்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.குறித்த சிறுவன் மயக்கமுற்ற நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். அருகில் உள்ள நாகவிகாரையில் புரண பர்ணமி தினமான இன்றுதென்பகுதியிலிருந்து வழிபாட்டை மேற்கொள்ள வந்த சுற்றுலாப் பயணி ஒருவரின் பிள்ளையே தவறி வீழ்ந்துள்ளது காப்பற்றப்பட்ட சிறுவன் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். http://ttnnews.com/othernews/593-2013-07-22-12-02-00
-
- 2 replies
- 659 views
-
-
23/06/2009, 16:49 [செய்தியாளர் தாயகன்] சிறீலங்காவின் பொருணமிய வீழ்ச்சி – புலம்பெயர்ந்த தமிழர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் சிறீலங்கா அரசு பாரிய பொருண்மிய நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள அமெரிக்க, பிரித்தானிய அரசுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் பன்னாட்டு நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைத் தடுத்த…
-
- 2 replies
- 879 views
-
-
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் தேர்தல் விதிமுறைகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், யாழ்ப்பாணத்தின் முதன்மை வேட்பாளரும் வடமாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளருமான சீ.வி. விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் த. குருகுலராஜா, ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை கரைச்சிப் பிரதேச சபை உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=…
-
- 1 reply
- 646 views
-
-
வவுனியா முகாம்களில் 2.5 இலட்சம் மக்களுக்கு வைத்தியர்கள் 50 பேர் மட்டுமே இலங்கையில் நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வைத்தியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் உபுல் குணசேகரா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி ராஜபட்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா மற்றும் செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் உள்ள 2.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க 50 வைத்தியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் இரவு பகலாகப் பணியாற்ற வேண்டியுள்ளது. 300 தாதிகள் பணியாற்ற வேண்டிய நிலையில் 10 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், வைத்த…
-
- 0 replies
- 550 views
-
-
சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்டவர்களுக்கு கீரிமலையில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்தோரிற்கான ஆத்ம சாந்திவேண்டி பிராத்தனைகள் நாளை செவ்வாய்க்கிழமை இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. கீரிமலையில் நாளை இடம்பெறும் இப்பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வுகளின் உறவினர்களினால் வன்னியில் மரணித்தவா்களுக்கான பிதிர்கடன் மற்றும் ஈமைக்கிரியைகள் செலுத்ததாவர்களுக்குமாக இந்த ஆத்மசாந்திப்பிராத்தனை நடைபெறவுள்ளது. இந்த ஆத்மாசாந்திப் பிரார்த்தனைக்காக இதுவரையில் யாழ்ப்பாணம் தென்மராட்சியில் “இடம்பெயர்ந்து” வந்து தங்கியுள்ளவர்களிடம் இருந்து 127 பேரின் பெயர்கள் விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்து …
-
- 0 replies
- 584 views
-
-
-எஸ்.கே.பிரசாத் இருபத்தி மூன்று வருடங்களிற்குப் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் வருகை தந்துள்ளன. யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புகையிரதப்பாதை புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய தினம் இரண்டு புகையிரதங்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன. http://tamil.dailymirror.lk/--main/78429-2013-08-11-08-58-26.html
-
- 33 replies
- 2.2k views
-
-
ஒருவாரமாக குப்பை அகற்றப்படாமையினால் வீதிகளில் துர்நாற்றம் ; மக்கள் கடும் விசனம் எம்.எம்.மின்ஹாஜ் மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் நடந்த பின்னர் ஒருவாரமாக கொழும்பு நகரிலுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. குப்பை அகற்றல் நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன்காரணமாக நகர வீதியோரங்களில் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளன. இதனால் நோய் பரவும் அபாயமும் தோன்றியுள்ளன. கொழும்பு நகரின் குப்பைகள் பிலியந்தல கரதியான பகுதியில் கொட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அப்பிரதேச மக்களின் எதிர்ப்பின் காரணமாக குறித்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. கொழும்பு நகர குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளமையினால் மக்கள் கடுமையான விசனங்களை தெரி…
-
- 5 replies
- 661 views
-
-
சிங்களக்கைக்கூலி இந்து ராமே தமிழகத்தைவிட்டு ஓடு – புஇமு பரப்புரை சிங்களர்களுக்கு கைக்கூலியாக இந்தியாவில் பொய் பரப்புரையில் ஈடுபட்டு வரும் இந்து ராமை கண்டித்து தமிழகத்திலுள்ள புரட்சிகர இளைஞர் முன்னணியினர் பரப்புரையை மேற்கொண்டுள்ளனர். சிங்கள இனவெறியன் பாசிசக்கொடுங்கோலன் ராசபக்சே அரசு, இந்திய, சீன, பாக்கிஸ்தான், மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் உதவிகளைப்பெற்று ஈழத்தமிழர்களை கூண்டோடு அழித்து தாயகநிலத்தை பறித்து, ஈழத்தமிழர்களை ராசபக்சேவின் வதை முகாம்களில் சித்திரவதை,படுகொலை செய்துவருகின்றனர். முள்கம்பி வேலிகளில் விலங்குகள்போல் அடைத்தும் உண்ண உணவின்றி, குடிநீரின்றி, ‘ஆட்டுமந்தை’போல் கட்டாந்தரையில் தமிழீழமக்கள் அல்லல் படுகின்றனர், இதை உலக ஏகாதிபத்திய நாடுகள் கைகட்டி …
-
- 9 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளர் அ.நிக்ஸன் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அரசியலமைப்பில் இருக்கின்ற அதிகாரங்களும் பிடிங்கி எடுக்கப்பட்டு வரும் நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக சிந்திக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை என இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் அ.நிக்ஸன் தெரிவித்தார். சட்ட ஆட்சி, ஜனநாயகம் இல்லாத ஒரு சூழலில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பேசுவது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமெரிக்க மூத்த ஊடகவியலாளரும் தகவல் அறியும் சட்டத்தை உருவாக்கும் நிபுணரும் சட்டத்தரணியுமான கேவின் குலோட்பேக் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக இராஜதந்திரிகளுடன் இன்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில்…
-
- 1 reply
- 343 views
-
-
இரா.சம்பந்தனுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்( James Dauris ) க்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம், இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம…
-
- 2 replies
- 487 views
-
-
முடியாட்சி மன்னர் காலம் முதல் பொற் கிளி பெறுவதற்காக மன்னர் புகழ்பாடிய அரச அவைக் கவிஞர்களின் கதை தமிழர் சரித்திரத்தில் தொடர்கதையாக இருக்கிறது.அண்டிப் பிழைப்பவர்கள் என்றும் அதிகாரம் சார்ந்தே இயங்குவர்.தமிழர்கள் பூரண விடுதலை பெறும் நோக்கில் சமரசம் அற்று தனது உடல்,பொருள்,ஆவி என அனைத்தையும் கொடுத்து ,வாழ் நாள் முழுவதும் போராடிய ஒரு மாமனிதனை ,தேவன் ஆக்கி 'பப்பாவில்' ஏற்றிய துதிபாடிகள் இன்று அட்டைகளைப் போலக் களர ஆரம்பித்துவிட்டனர்.இந்த சந்தர்ப்பவாதிகள் இதற்குக் கறுப்பு,வெள்ளை,சாம்பல் என்று நியாயாம் வேறு கற்பிக்கின்றனர்.இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். தலைவன் என்பதும் முன்னணிப் போராட்டச் சக்தி என்பதும் போராட்ட அரசியலைக் குவிமையப்படுதுவதற்கான யுக்தியாக அன்றி அதை ஒரு தனிமனித…
-
- 20 replies
- 3.2k views
-
-
தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி சிரிந்தோரன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடைந்தார். (படஙகள் : தீப அதிகாரி) http://tamil.dailymirror.lk/--main/79315-2013-08-19-04-34-26.html
-
- 12 replies
- 1.6k views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்பு; நழுவிச் சென்ற அநுரகுமார வடக்கு-கிழக்கு இணைப்புத் தொடர்பில் கருத்துக் கேட்டதும், ‘‘அது தொடர்பில் கருத்துக் கூறமுடியாது’’ என்று தெரிவித்து நழுவிச் சென்றார் மக்கள் விடு தலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்றுமாலை இடம்பெற்ற மேதின நிகழ்வில் இடம் பெற்றது. ‘‘வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?’’ என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதன்போது “இந்த விடயம் தொடர்பாக இப்போது எவ்வித கருத்துக்களையும் என்னால் கூற முடியாது. நான் இன்றைய கூட்டத் தில் பேசியதை மட்டும் நீங்கள் கவனத்தில் எடுங் கள்” என்று கூறிய…
-
- 1 reply
- 536 views
-