Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாலசந்திரனின் வாழ்க்கையை மையபடுத்தி எடுத்ததாக கூறப்படும் புலிப்பார்வை திரைப்படம் படம் முழுக்க பாலச்சந்திரனோடு,பல குழந்தைகள் சிறார் போராளிகளாகவே காட்டப்பட்டுள்ளனர். என்று அய்யா.நெடுமாறன் உட்பட பல அமைப்புகள் மாணவர்கள் எதிரிப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் புலிப்பார்வை இசை வெளியீடு சென்னை சத்தியம் திரையரங்கில் நடை பெறுகிறது . இதனை அறிந்த மாணவர்கள் அங்கு சென்று அதனை எதிர்த்து முற்றுகையிட தயார் நிலையில் உள்ளனர். புலிப்பார்வை இசை வெளியீடு விழாவில் கலந்துகொள்ள நெடுமாறன் அய்யா மற்றும் வைகோ மறுப்பு தெரிவித்த வேளையில் மேடையில் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். http://www.pathivu.com/news/33187/57//d,article_full.aspx

    • 2 replies
    • 609 views
  2. தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சாத்தியப்படும் வழிகளை ஆராய கூட்டமைப்பு தயார்!- சுமந்திரன் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எந்த வழியில் சாத்தியப்படுமோ அந்த வழிகளை நாடுவதற்கு கூட்டமைப்பு எப்போதும் தயாராகவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வெளியாகும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பத்திரிகையான புதிய சுதந்திரனில் எழுதியுள்ள பத்தியிலேயே அவர் இந்தக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பத்தி முழுமையாக இங்கு தரப்படுகின்றது. “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் கடந்த மாதம…

  3. மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு! வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வடக்கு அந்தமான் தீவு…

  4. இலங்கையில் உள்ள இந்திய ஒயில் நிறுவனம் இன்றிரவு எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இதுவரை 98ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒருலீற்றர் பெற்றோலின் விலை 105 ரூபாவாக அதிகரிக்க வுள்ளது 66 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் டீசல் இன்று இரவு முதல் 71 ரூபாவாக அதிகரிக்க உள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரித்துள்ளதால் விலைகளை அதிகரிக்க நேர்ந்ததாக இந்தியாவின் ஒயில் நிறுவனமான ஐ.ஓ.சி குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 5 ரூபாவினால் எரிபொருள் விலையை அதிகரிக்க உள்ளது. இதனடிப்படையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு லீற்றர் பெற்றோல் 10…

  5. அல்பம் பார்த்துத்துப் பார்த்து திருடிய அதிசயத் திருடர்கள் - ஆறுகால் மடத்தடி அதிசயம் 2010-12-16 22:50:20 வீட்டில் இருந்தவர்களின் அல்பத்தைக் கேட்டு அதனைப் பார்த்து அதில் போட்டிருக்கும் அனைத்து நகைகளையும் முன்னால் வை என்று அச்சுறுத்தி கொள்ளையிட்ட கொள்ளையர்களால் ஆறுகால் மடமே நடுங்கியுள்ளது. நள்ளிரவில் இரண்டு ஆட்டோக்களில் வந்த பத்துப் பேருக்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த திருடர் குழுவினர் யாழ் புறநகர்ப் பகுதியான ஆறுகால் மடத்தடியில் உள்ள வீட்டினை உடைத்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி ஒரு அறையில் அடைத்ததாகத் தெரியவருகின்றது. பின்னர் ஒருவரை வெளியே அழைத்து அவர்களின் அல்பத்தை எடுத்து அதில் உள்ளவர்கள் அணிந்திருந்த அனைத்து நகைளையும் முன்னால் வை என அச்சுறுத்தி வீ…

  6. வடக்கு மாகாண சபையின் 14 வது அமர்வு இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையல், இந்த அமர்வில் பங்கேற்க, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சைக்கிளில் வந்தார். தான் கோரிக்கை விடுத்தும் தனக்காக பாதுகாப்பு மற்றும் வாகன வசதி என்பன இதுவரை ஏற்படுத்தித் தரவில்லையென்பதால், மாகாண சபையின் கவனத்தை ஈர்பதற்காகவே அவர் இன்று சைக்கிளில் வந்தார் என்று தெரிய வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=115360&category=TamilNews&language=tamil

  7. பாடசாலை மாணவர்கள் உட்பட 342 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் By NANTHINI 27 OCT, 2022 | 05:38 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் எச்.ஐ.வி. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முதலிரு காலாண்டுகளுக்குள் 148 எயிட்ஸ் நோயாளர்களே இனங்காணப்பட்ட நிலையில், இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 342 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வருடத்த…

  8. 'யாழ்ப்பாணத்துக்கான உணவுக் கப்பலுக்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்க வேண்டும்' யாழ் ஆயர் யாழ் குடாநாட்டு மக்களுக்கு இன்னும் 5 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை ஏற்றிச் செல்லவுள்ள கப்பலுக்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று யாழ் கத்தோலிக்க ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்னமும் 5 நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறுவதாகத் தெரிவித்துள்ள ஆயர், அங்கு கொழும்பில் இருந்து உணவுக் கப்பல் செல்வதற்கு ஐ.சி.ஆர்.சியின் வழித்துணை தேவை என்றும், அதற்கு விடு…

  9. வௌ்ளவத்தை பிரதான வீதியில் மீண்டும் நிலம் கீழிறங்கியுள்ளது [ பிரசுரித்த திகதி : 2010-12-22 01:45:13 PM GMT ] வௌ்ளவத்தை ரொக்ஸி திரையரங்கு முன் அண்மையில் புனரமைக்கப்பட்ட வீதி சற்று முன் கீழிறங்கியுள்ளது. ஏற்கனவே கீழறங்கி காணப்பட்ட இவ்வீதி அரசாங்கத்தினால் அண்மைகாலத்தில் புனரமைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இவ்வீதி இன்று கீழறங்கியுள்ளது tamilulakam.com

  10. அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வல்ல : பந்துல சூளுரை (இராஜதுரை ஹஷான் ) பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இனத்தின் அபிலாசைகளை அறிந்து செயற்பட வேண்டும். பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கில் கடந்த மூன்று வருடகாலமாக நிலையான அபிவிருத்திகள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன நாட்டை பிரித்து இனங்களுக்கிடையில் மீண்டும் விரோதங்களை ஏற்படுத்தும் அரசியலமைப்பினை உருவாக்கும் விடயத்திற்கு மாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியத்துவம் கொடுக்காமல் தமது இனமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் கவனம் செலுத்துவதே அம்மக்களுக்கான அரசி…

  11. ஃபைசர் காலாவதியாகியதால் மற்றொரு தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – GMOA நாட்டுக்கு மற்றொரு தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை குறித்து கொரோனா தொழில்நுட்ப வல்லுநர் குழு அரசாங்கத்திடம் பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை பூஸ்டர் தடுப்பூசிகளாகப் பயன்படுத்த முடியாது என்பதால், மற்றொரு தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பாக தொழில்நுட்பக் குழு ஆராய்ந்து மற…

  12. நாகர்கோவிலில் படையினரின் ரோந்து அணி மீது தாக்குதல் இருவர் பலி! இருவர் காயம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறீலங்காப் படையினரின் ரோந்து அணி ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியது. இன்று அதிகாலை 1 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறீலங்காப் படையினர் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை நேற்றிரவு 9.15 மணியளவில் வடபோர்முனையில் சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியினர் நடத்திய அச்சொட்டான எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் நிலைகள் சேதங்களுக்கு உள்ளாகியது. இதன் போது சிறீலங்காப் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் பட…

  13. தொடர்ந்தும் மன நோயாளிகளால் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் - சிறிதரன் எம்.பி. காட்டம்[ காலத்திற்கு காலம் மனநோயாளிகளாலும் கசாவிற்காக துப்பாக்கி கொடுப்பவர்களாலும் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.ஆனால் இதற்கெல்லாம் எந்த விதமான நடவடிக்கைகளும்இன்றுவரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை. இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.நாளைக்கும் தொடரும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். உரும்பிராயில் சுட்டுக் கொல்லப்பட்ட வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் பூதவுடல் ஆயிரக் கணக்கான மக்கள் மற்றும் அதிகாரிகள் சூழ தகனம் செய்யப்பட்டது. இவரது இறுதிக் கிரியைகள் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது ஆ…

  14. ரணிலைக் காப்பாற்ற வேண்டாம்- சம்பந்தனுக்கு ரத்தன தேரர் அவசர கடிதம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தனுக்கு அத்துரலிய ரத்தன தேரர் கடிதம் அனுப்பியுள்ளார். இதில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று எதிர்பார்ப்பதாகவும், அவர் கூறியுள்ளார். ”நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவர் என்பது வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம், உரியதன்று. எல்லா இலங்கையர்களினது…

  15. தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பிரசாரத்தை தவிர்க்குமாறு மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அறிவிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அதன் உறுப்பினர்கள் மீதான எந்தவொரு பிரசாரத்தையும் தவிர்க்குமாறு பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் வடக்கில் மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை மீறும் எந்தவொரு நபரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். வடக்கில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26ஆம் திகதி மாவீரர் தினம் நினைவுகூரப்படுகிறது. வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற…

    • 2 replies
    • 432 views
  16. அரசியலமைப்பு பணிகளை துரிதப்படுத்துங்கள் – சுமந்திரன் கோரிக்கை புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, துரிதப்படுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். இறுதிப்போரில் பங்கேற்ற விடுதலைப்புலிகளில் 12000பேரை மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் விடமுடியுமானால் ஏன் அரசியற் கைதிகளை விடுதலைசெய்வதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினால் முடியாது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்த…

  17. மின்னல் தாக்கி ஒருவர் பலி : இருவர் காயம் : நவகத்தேகம பகுதியில் சம்பவம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 12:25 PM (எம்.வை.எம்.சியாம்) புத்தளம், நவகத்தேகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் மின்னல் தாக்கி மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நவகத்தேகம - கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளது. இதன் போது காயமடைந்த மூவரும் அம்புலன்ஸ் மூலம் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார…

  18. சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நாட்டில் சட்டத்தரணியாக இருப்பது மிகவும் அவமானத்துக்கு உரிய விடயம். வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் உள்ளோம். சட்டமில்லாத நாட்டில் சட்டத்தரணி இவர் என்று கூறக்கூடிய நிலையில் நான் உங்கள் முன் நிற்கின்றேன். காணாமல் போனவர்கள் என்ற பிரச்சினை கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் இருக்கவில்லை. ஆனால் இன்று நவீனகாலத்தில் தான் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆட்சியாளர்களே அவர்களைப் பிடித்து தடுத்து வைத்து அல்ல…

  19. முல்லைத்தீவுக் கடலில் ஏற்படும் திடீர் மாற்றம்!! முல்லைத்தீவுக் கடலில் ஏற்படும் திடீர் மாற்றம்!! முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கக் குழு ஒன்று முல்லைத்தீவுக்கு வருகை தந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருந்து முல்லைத்தீவு கடல் தன்மையில் மாற்றம் உள்ளதாகவும், நீர் மட்டம் 5 அடி அதிகரித்ததாகவும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். …

    • 1 reply
    • 414 views
  20. மீண்டுமொரு ஜயசிக்குறு?; அதனிலும் பார்க்க அதிக அரசியல் பாதிப்புகளுடன் -(பீஷ்மர்) [15 - October - 2006] [Font Size - A - A - A] சம்பூர் நடவடிக்கை முதல் தென்னிலங்கையில் ஒரு `மறுதலிக்க முடியாத அண்மைக்கால உண்மை' எனப் போற்றப்பட்டு வந்த ஒரு அபிப்பிராயம் கிளாலி முகமாலைப் போரின் முடிவின் பின்னர் சுக்குநூறாகியுள்ளது. விடுதலைப் புலிகள் தங்கள் படைத்திட்டத்திறனிலும் யுத்த நடத்துகைத் திறனிலும் தமக்குரிய இடத்தை வலுவாக நிறுவிக் கொண்டுள்ளது மாத்திரமல்லாமல் இப்பொழுது ஓர் அரசியல் முதிர்வினையும் காட்டிக் கொண்டுள்ளார்கள். முகமாலை, கிளாலி யுத்தத்துடன் இந்த நீண்ட நெடும் போர் நின்றுவிடப் போவதில்லை. ஆனால், அதன் பின்னர் இலங்கை அரசும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள விரும்…

    • 1 reply
    • 1.6k views
  21. மரணம் 32 – 12 பேர் மாயம் – முகாம்கள் 584 – தஞ்சம் 329,200 – 3,737 வீடுகள் சேதம் * Saturday, January 15, 2011, 7:36 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகமாக 14 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் சீரற்ற காலநிலையால் 49 பேர் காயமடைந்துள்ளதுடன், 12 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தினால் 282,953 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் நிர்க்கதியாகியுள்ள 87,899 குடும்பங்களைச் சேர்ந்த 329,200 பேர் 584 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் 3,737 வீட…

  22. -யோ.வித்தியா யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, முட்டை பொரியலுக்குள் கஞ்சாவை மறைத்து கொடுத்த மனைவியை, திங்கட்கிழமை (15) கைது செய்ததாக, யாழ்ப்பாண பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர். சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, திங்கட்கிழமை (15) மாலை உணவு கொடுப்பதற்காக அவரது மனைவி வந்திருந்தார். குறித்த பெண் கொண்டு வந்த உணவை சோதித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர், முட்டைப் பொரியலுக்குள் கஞ்சா இருப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து, அப் பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மேற்படி பெண்ணை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-1…

  23. இலங்கை இராணுவத்திற்கு UN பிறப்பித்த உத்தரவை, வேறு எங்கும் பிறப்பிக்கவில்லை… உலகில் எந்த நாட்டு இராணுவத்திற்கும் பிறப்பிக்காத உத்தரவை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை இராணுவத்திற்கு பிறப்பித்துள்ளது. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதியை பெற வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும் எனவும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் தகவல்கள் இதனை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ,நா அமைதிகாக்கும் பணிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் முன்னர் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு அறிவித்துள்ளது. …

  24. கடும் நெருக்கடியான வெற்றியை பெற்று தனித்து ஆட்சி அமைக்கிறது ஐ.ம.சு.மு ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நெருக்கடியான வெற்றியைப் பெற்று தனித்து ஆட்சி ஆட்சியமைக்கிறது. ஊவா மாகாண சபைக்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன் முடிவுகள் முழுமையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பதுளை மாவட்டத்தில் 9 ஆசனங்களும், மொனறாகல மாவட்டத்தில் 8 ஆசனங்களுமாக 17 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அத்துடன் 2 'போனஸ்' ஆசனங்களுடன் மொத்தமாக 19 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பதுளை மாவட்டத்தில் கடும் நெருக்கடியைக் கொடுத்து 8 ஆசனங்களையும், மொனறாகல மாவட்டத்தில் 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. இத…

  25. சென்னை: தமிழர்களை அழித்து வரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் அட்டூழியத்தை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சொந்த நாட்டு மக்களையே வதைக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு முற்றுகையிட்டு நெடுஞ்சாலையை மூடியுள்ளது வேதனைக்குரியது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்கள் உணவு, மருந்து கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தமிழர் பகுதிகளில் முப்படைத் தாக்குதலை நடத்தி வருகிறது இலங்கை அரசு. இதனால் உணவுப் பொருட்களை செல்ல விடாமல் தடுப்பதாலும், இலங்கை அரசு தமிழ் இனப் படுகொலையை செய்து வருகிறது. இச் சூழ்நிலையில் ராஜபக்ஷே இந்தியா வருகிறார். பிரதமரை அவர் சந்திக்கும்போது இலங்கை அரசு செ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.