ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
வடபகுதி தமிழர்களுக்கு சொந்த காணி பகிர்ந்தளித்தமை தவறில்லை என தெரிவிக்கும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடக பேச்சாளரும் பேராசிரியருமான வசந்த பண்டார அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி விட்டு அவ்விடத்தினை பகிர்ந்தளிப்பது தொடர்பில் தமக்கு உடன்பாடு இல்லையெனவும் தெரிவித்தார். கொழும்பு பொரளை தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடபகுதி தமிழ் மக்களுக்கு காணி வழங்குவதற்கு எதிரான கருத்துக்களை நாம் ஒருபோதும் வெளியிடமாட்டோம். அந்த மக்களுக்கு காணி வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது என்ற கருத்திலும் நாம் உறுதியாகவுள்ளோம். ஆனால் அதற்காக வடக்கில் பல வி…
-
- 1 reply
- 589 views
-
-
தென் இந்தியா என்று அழைக்க படும் தமிழ் நாடு, கேரளம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பேசப்படும் மொழிகளியே திராவிட மொழிகள் என்று மொழியாளர்கள் அழைக்கிறார்கள். திராவிட என்ற சொல்லே தமிழில் இருந்தே வந்தது என்று சில மொழியாளர்கள் சொல்கிறார்கள். தமிழ் என்ற சொல்லே பின் காலங்களில் Demila, Dramida, Dravida என்று மருவியது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இந்த மொழிகளை தவிர பேச்சு வழக்கில் மட்டும் இருக்கும் மற்ற முக்கிய மொழி துளு. துளு பேச்சாளர்கள் கர்நாடகாவில் உள்ள மங்களூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் வசிக்கிறார்கள். சரி இந்த மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்ன?. கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு பேசுபவர்களால் எப்படி தமிழை வி…
-
- 2 replies
- 1.5k views
-
-
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் உள்ளிட்ட பாரிய உலோகஙகள் காணப்படுவதனால் அந்த நீரை அருந்த மக்கள் அச்சம் தெரிவித்து வருவதுடன் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இந் நிலையில் அண்மையில் வடக்கு மாகாண சபையால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அந்த நீரில் மனிதர்களுக்கு தீ்ங்கு விளைவிக்கும் நஞ்சு மாசுக்கள் எதுவும் இல்லை என்று அறிவித்திருந்தது. இந் நிலையில் நீர் வடிகாலமைப்பு சபையின் அறிக்கையில் அந்த நீரில் மனித உயிருக்கு கேடுவிளைவிக்கும் எண்ணெய் மற்றும் உலோகப் பொருட்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்கள் தொடர்பில் மீண்டும் போராட்டங்க…
-
- 0 replies
- 304 views
-
-
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை மாவட்டச் செயலகத்தில் வைத்து சந்திக்கவுள்ள பிரதமர், அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த யாழ். விஜயத்தில் அமைச்சர்களான டீ.எம்.சுவாமிநாதன், ரோசி சேனாநாயக்க, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த விஜயத்தின் போது முதலில் நாகவிகாரைக்கு செல்லவுள்ள பிரதமர், பின்னர் வீரசிங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வெற்றிலை சின்னத்தில் பாராளுமன்றத்துக்கு தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் யானைச்சின்னத்தில் பாராளுமன்றத்துக்கு தெரிவான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருக்கின்ற நிலையில் இந்நாட்டின் எதிர்க்கட்சி எது என்றும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்றும் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியால் சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சபாநாயகரிடம் நாடு ஒப்படைக்கப்படவில்லை என்றும் பாராளு மன்றமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய ஜனநாயக தேசிய கூட்டணி எம்.பி.யும்,ஜே.வி.பி. தலைவருமான அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தின் தற்போதைய நிலைமை…
-
- 4 replies
- 1.2k views
-
-
வீடுகள்,கோயில்கள்,பாடசாலைகள்,மருத்துவமனைகள் தரைமட்டமாக்கப்பட்டதை சிங்களத்தலைவர்கள் முன்னிலையில் கூறும் விக்கினேஸ்வரன்.
-
- 2 replies
- 828 views
-
-
நீதிமன்ற உத்தரவு மெதமுலயில் ஒப்படைப்பு! நாடு திரும்பப்போவதாக பஸில் அறிவிப்பு திவிநெகும திணைக்களத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் கோடிக்கணக்கான நிதி மோசடி தொடர்பில் வாக்குமூல மொன்றை அளித்து வழக்கில் ஆஜராகுமாறு கடுவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருக்கு பிறப்பித்துள்ள உத்தரவை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் ஊடாக மெதமுலன இல்லத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளையில், தான் நாடு திரும்பவுள்ளதாகவும் எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயாராகவுள்ளதாவும் பசில் ராஜபக்ஷ அறிவித்திருக்கின்றார். நிதி மோசடி தொடர்பில் முன் னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு நிதி மோசடி பிரிவினால் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக…
-
- 0 replies
- 406 views
-
-
இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள ''எதிர்க்கட்சித் தலைவர் யார்'' என்ற பிரச்சினையானது இலங்கை ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இருப்பதை காண்பிக்கிறது என்று மூத்த ஊடகவியலாளரான என். வித்தியாதரன் விமர்சித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு, ''ஆட்சியமைப்பதற்கான அருகதை யாருக்கு உள்ளது'' என்பதை உறுதிப்படுத்துமாறு கோராது, ஜனாதிபதி, குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை அரசமைக்க அழைத்ததே காரணம் என்றும் அவர் கூறுகிறார். அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களில், அமைச்சரவையில் இணைந்துள்ளவர்கள் போக ஏனையோரை எதிர்க்கட்சியாக செயற்பட அனுமதித்தால், அது நாடாளுமன்றத்தில் மு…
-
- 0 replies
- 524 views
-
-
மைத்திரி இன்று சீனா பயணம்! சீனாவுக்கான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங் உட்பட பல சீன அரச பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளார். அத்தோடு, வர்த்தக ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளன. இதனிடையே, சீன அரசினால் இலங்கையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இருநாட்டின் தலைவர்களும் கூடிய கவனம் செலுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகின்றது. http://4tamilmedia.com/newses/srilanka/29834-2015-03-25-05-05-39
-
- 8 replies
- 910 views
-
-
மீன் பிடி சம்பந்தமாக இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏதும் இல்லை என மறுத்துளது இலங்கை மீன்வள அமைச்சு. http://www.dailymirror.lk/67393/t-on-83-days-of-fish
-
- 0 replies
- 606 views
-
-
சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் பதவி வழங்கப்பட்டமையானது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு இராணுவமய நடவடிக்கை என்று கல்வியியலாளரும் சமூக ஆர்வலருமான நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது இடம்பெற்ற அநீதிகளுக்கு சரத் பொன்சேகாவும் ஒரு காரணமாக இருந்தார். எனினும் அவருக்கு நேர்ந்த அநீதிக்காக இந்த பீல்ட் மார்சல் பதவி நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளமையானது கேள்விக்குரியது. ராஜபக்சவின் ஆட்சியில் அநீதிக்கு உட்பட்டவர்களுக்கு நட்டஈடுகள் இந்த வகையில் வழங்கப்படுவது கூடாது. எனவே சரத் பொன்சேகாவுக்கான பதவி வழங்கல் ஒரு இராணுவமயத்திட்டமே. சரத் பொன்சேகா என்பவர் இன்று அரசியலில் முக்கியமான ஒருவராக உள்ளார். இந்தநிலையில் தமிழ் சமூ…
-
- 0 replies
- 404 views
-
-
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரபல சட்டவுரைஞர் கொமின் தயாசிரி, பிவிதுரு ஹெல உறுமய செயலாளர் உதய கம்பன்பில மற்றும் நுகேகொடையைச்சேர்ந்த எல்.பி.ஐ பெரேரா ஆகியோரை இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதியின் அதிகாரங்கள், அரசாங்கத்தின் அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள் என்பன திருத்தப்படவுள்ள இந்த 19ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பின் அங்கிகாரமும் தேவையென மனுதாரர்கள் தங்களுடைய மனுவில் கூறியுள்ளனர். மனுவின் பிரிதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார். http://seithy.com/br…
-
- 0 replies
- 401 views
-
-
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் EPDPயின் ஊடக பேச்சாளர் பசுபதி சீவரத்தினத்தின் சகோதரர்:- ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய குடிநீர் தாங்கியில் கடந்த 18ம் திகதி விஷம் கலக்கப்பட்டது. விஷம் கலக்கப்பட்ட குடிநீரை பருகிய 27 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். விஷம் கலந்தமை தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் பணிப்பின் பேரில் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான விசேட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் துரித கெதியில் மேற்கொள்ளபட்டு வந்தன. அந்த விசாரணைகளில் பிரகாரம் அப் பாடசாலையின் இரவு நேர காவலாளிகள் இருவரை கடந்த திங்கள் கிழமை பொலிசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் விசாரணைகளுக்கு அழைக்கும் போதெல்லாம் பொலிஸ் நிலையம் வர வேண்டும்…
-
- 5 replies
- 701 views
-
-
ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமை நேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தில் இன்று (23) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், பாடசாலையின் காவலாளிகள் இருவரையும் இன்றையதினம் (23) அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்துள்ளனர். கைதான இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வரும் பொலிஸார், இச் சம்பவம் அரசியல் உள்நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். மேலும், பாடசாலையில் நஞ்சுத்திரவம் ஊற்றப…
-
- 2 replies
- 383 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று பதவிஉயர்த்தப்பட்டார். இன்று பாதுகாப்பு அமைச்சின் தலைமை அலுவலக மைதானத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவியேற்றார். இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஶ்ரீபவன் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படைத் தளபதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கெளரவ பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வகிப்பவர், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் தலையிடுபவராக இருக்கமாட்டார். பீல்ட் மார்ஷல் என்ற பதவியை வகிப்பவர் இராணுவ சட்டத்தின்கீழ் பணியாற்றுபவர் அல்லர். பீல்ட் மார்ஷல் ஒருவர் நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் க…
-
- 27 replies
- 1.7k views
-
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தலைமை காரியாலயம், தம்பிலுவில்-02 பிரதான வீதியில் நாளை 26ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வு மாவட்ட செயலாளர் எஸ்.நகுலனின் தலைமையில் இடம்பெவுள்ளதுடன் இவ் அலுவலகத்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார். மேலும் விருந்தினர்களாக கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் மற்றும்; கட்சியின் உப தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கல…
-
- 2 replies
- 531 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்றின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா கடமையாற்றி வருகின்றார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிமால் சிறிபால டி சில்வா பிரதிநிதித்துவம் செய்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து நிமால் சி…
-
- 3 replies
- 468 views
-
-
கோத்தா முகாம், திருமலையில் நடைபெற்ற முன்னைய படுகொலைகள் தெஹிவளையிலிருந்து கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள மாணவர் விவகாரம் ஆகியவற்றின் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படவேண்டுமாயின் புதிய அரசாங்கமானது இவற்றை மீள் பரிசீலனை செய்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். திருகோணமலை இரகசிய கடற்படை முகாம் சம்பந்தமாகவும் முன்னைய படுகொலைகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்து குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: “திருகோணமலை கடற்படைத்தளத்தில் இயங்கி வந்ததாகக் க…
-
- 10 replies
- 978 views
-
-
எதிர்க்கட்சித்தலைவர் பதவி கூட்டமைப்புக்கு தராவிடின், நாடாளுமன்றத்தை புறக்கணிக்க வேண்டும்! - வினோ நோகராதலிங்கம் எம்.பி. [Tuesday 2015-03-24 19:00] தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எதிர்க்கட்சி என்ற தகுதியையும் அந்தஸ்தையும் இழந்துள்ளது. அதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி அக்கட்சிக்கு உரித்தானது இல்லை என தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான நிமல் சிறிபாலடி சில்வா, கௌரவமான முறையில் பதவி விலகி, பிரதான எதிர்க்கட்சியான தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு அப்பதவியை வழங்க வேண்டும். இதுவே ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்குமான அடை…
-
- 2 replies
- 767 views
-
-
எமது நாட்டில் ஒற்றையாட்சி முறைநீக்கப்பட்டு கூட் டாட்சி முறை கொண்டு வரப்பட வேண்டும். பலவாறான கட்டமைப்புக் குறைபாடுகளினிடையே தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கை இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இப்பேர்ப்பட்ட கட்டமைப்புக் குறைபாடுகள் எமது தமிழ்ப் பேசும் மக்களுக்கு விமோசனத்தை அளிக்காது நல்லாட்சியை உறுதிப்படுத்தாது, என்பதே எனது வாதம். என்று வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதன் கீழ் அநியாயமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் பொது மன்னிப்பில் வௌிவர வேண்டும். அடுத்து அரசியல் யாப்பு இந் நாட்டை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டும். சமஷ்டி அடிப்படைய…
-
- 2 replies
- 967 views
-
-
கொழும்பு துறைமுக நகரின் பணிகள் மீண்டும் ஆரம்பம் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு பணிகளில் ஒரு பகுதியின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திட்டத்தின் விசேட பிரதி முகாமையாளர் சந்தன குணவர்தன தெரிவித்துள்ளார். பருவக்காலம் என்பதால், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிர்மாணிப்புகளுக்கு சேதம் ஏற்படலாம் என்பதால், மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சு கடந்த 18 ஆம் திகதி இது குறித்து எழுத்து மூலம் அறிவித்திருந்தது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அரசாங்கம் கடந்த 5 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 765 views
-
-
யாழ்.பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு 7.10 மணியளவில் பாதுகாப்பற்ற வீதிக் கடவையைக் கடக்க முற்பட்ட சமயம் ரயில் மோதியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பயனின்றி நேற்று கொழும்பில் உயிரிழந்தார். யாழ்.இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கற்கும் கோப்பாயைச் சேர்ந்த குகப்பிரியன் (வயது-18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது http://www.malarum.com/article/tam/2015/03/24/9281/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE…
-
- 80 replies
- 3.9k views
-
-
மைத்திரி ஆட்சியில் மகிந்தவின் கையெழுத்துடன் காணி உறுதிகள்! - யாழ்ப்பாணத்தில் சம்பவம். [Tuesday 2015-03-24 18:00] யாழ். மாவட்டத்தில் அரச காணிகளில் குடியிருந்த 191 பேருக்கு இன்று காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட காணி உறுதிப் பத்திரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படம் மற்றும் கையெழுத்து பொறிக்கப்பட்டிருந்ததாக பத்திரங்களைப் பெற்ற பயனாளிகள் தெரிவித்தனர். இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளில் உள்ள 191 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதற்கமைய கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 50 பேருக்கும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 40 பேருக்கும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவ…
-
- 6 replies
- 581 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து வெளிநாடு சென்ற அவரது சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நீதிமன்றத்தின் உதவியை தாம் நாடியிருப்பதாக இலங்கை பொலிஸார் இன்று தெரிவித்துள்ளார்கள். அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் அவரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே பசில் ராஜபக்ஷ தேவைப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் ரூவான் குணசேகர இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். பசில் ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷ குடும்பத்தவர்கள் பலர் மீதும் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின்படி தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவ…
-
- 0 replies
- 899 views
-