ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
ஈழத் தமிழ் அகதிகள் தகவல் விடுதலைப் புலிகளை இலக்குவைத்துகத் தாக்குதல் நடத்தத் திராணியற்ற இலங்கை இராணுவம் அப்பாவிப் பொதுமக்கள் மீதே தாக்குதல் நடத்திவருகின்றனர் என ஈழத்தமிழ் அகதிகள் தகவல் தெரிவிக்கின்றனர். வவுனியாவைச் சேர்ந்த இரு பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 9 அகதிகள் தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக் கடற்பரப்பை வந்தடைந்தனர். இந்தியக் கடற்படையினராலும், 'கியூ' பிரிவுப் பொலிஸாராலும் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கபட்ட அவர்கள் அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தனர். "இலங்கை இராணுவத்தினரின் அத்துமீறல்கள் அதிகரித்துவிட்டன.…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஈழநாதம் யாழ் நிருபர் செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 22, 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான தேசத்தின் பேரன்னை பார்வதிப் பிள்ளையின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றன. வல்வெட்டித்துறை இந்து மயானத்தில் அம்மாவின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இராணுவத்தின் நெருக்கடிகளிற்கு மத்தியில் நன்கு ஒழுங்கமைக்கப்படதன்படி அம்மாவின் திருவுடல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று காலை 10.30 அளவில் வல்வெட்டித்துறை ஆலடி ஒழுங்கையில் உள்ள பேரன்னையின் புதல்வியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் இன்றுமாலை 2.30 அளவில் திருவுடல் அங்கிருந்து வல்வெட்டித்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச…
-
- 2 replies
- 2.1k views
-
-
By RAVI NESSMAN,Associated Press Writer AP - 29 minutes ago COLOMBO, Sri Lanka - People in the poor, mainly Tamil neighborhood in Colombo described it as a harrowing day. ADVERTISEMENT It was 5 a.m. on a Wednesday when police started knocking on doors. They searched hundreds of homes, then forced thousands of men, women and children to get dressed and walk through the narrow streets lined with soldiers to a nearby sports field. Over the next six hours, authorities questioned, photographed and videotaped the neighborhood's inhabitants. Still, few of those rounded up expressed surprise at the intrusion. Members of Sri Lanka's minority Tamil communi…
-
- 1 reply
- 2.1k views
-
-
அத்துமீறி குடியேறியவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் ; சுமண ரத்தினதேரர் பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் 10 தினங்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின் காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இன்ற…
-
- 23 replies
- 2.1k views
-
-
. சென்ற வருடம் ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது....... டெல்லிக்கு செல்ல முடியாமல், சக்கர நாற்காலியில் இருந்தபடி தந்தியும், கடிதமும் எழுதிய கருணாநிதி இப்போது எழுந்து..... மலர் தூவுகின்றார். கருணாநிதி போல் எழுந்து மலர் தூவ...., ரைகர் பாம் பாவியுங்க..... .
-
- 8 replies
- 2.1k views
-
-
விடுதலைப்புலிகள் – சர்வதேசம்: யார் வலையில் யார்? இவ் விடயம் 14. 09. 2009, (செவ்வாய்), தமிழீழ நேரம் 17:36க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்திமுப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. விடுதலைப்புலிகள் இராணுவ ரீதி…
-
- 8 replies
- 2.1k views
-
-
இலங்கையில் போரை நிறுத்துமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் வலியுறுத்துவதற்காக இந்தியாவுக்கு வருகை தரவுள்ள த.தே.கூட்டமைப்பின் 22 பா.உக்களும் இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு தனி ஈழமே இறுதித் தீர்வு என்ற பிரகடனத்தை இந்திய மண்ணில் வைத்து அவர்கள் வெளியிடக் கூடுமென தமிழகத்தின் முன்னணி நாளேடான 'தினமணி' நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது குறித்து யாழ். பா.உ சிவாஜிலிங்கம் 'தினமணி' நிருபரிடம் கூறியதாவது : இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலை தொடர்கிறது. போர் நிறுத்தம் கோரி பல்வேறு தரப்பிலி எழுந்த கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இந்நிலையில், போரை நிறுத்துமாறு இலங்கைக்ககு இந்தியா அழுத்தம் கொடுக்;க வேண்டும் என் இந்தியப் ப…
-
- 5 replies
- 2.1k views
-
-
விடுதலைப் புலிகளின் படையணியில் நாற்பதாயிரம்(40000)படை வீரர்கள்? விடுதலைப் புலிகளின் படையணியில் சுமார் (40000) நாற்பதாயிரம் படை வீரர்கள் இருப்பதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக நிலவன் அவர்கள் கனடிய வானொலி ஒன்றுக்கு இன்று பேட்டி ஒன்றின்போது கூறினார் இது எவ்வளவு தூரம் உண்மை? இதுபற்றி ஏதாவது பத்திரிகைகளில் செய்தி வற்துள்ளதா? புலிகளிடம் 2000 3000 வீரர்கள்தான் உண்டு என்று சொல்லிவந்த அரசு தற்பொழுது இப்படி கூறக்காரணம் என்ன?ஏதாவது சதித்திட்டமாக இருக்குமோ? அல்லது சில வருடங்களுக்கு முன் நான்கேள்விப்பட்ட செய்தியின்படி இது உண்மையாக இருக்குமா? அதாவது புலிகளிடத்தில் சுமார் 50000 வீரர்கள் இருப்பதாகவும் சண்டையென்று தொடங்கும் பட்சத்தில் ஒருவா…
-
- 8 replies
- 2.1k views
-
-
சோமவன்ச தலைமையில் லண்டனில் ஜே.வி.பி. தியாகிகள் நினைவு தினம் அனுஷ்டிப்பு மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டங்களில் உயிரிழந்த உறுப்பினர்களை நினைவு கூரும் முகமாக வருடாந்தம் அந்தக் கட்சியினரால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் மாவீரர்கள் தினம் லண்டனில் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி அங்குள்ள மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பிரதம பங்கு வகித்ததுடன் லண்டனில் வசிக்கும் ம.வி.மு. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். லண்டன் மாநகரில் அமைந்துள்ள கட்பர் நகர மண்டபத்தில் மேற்படி ஜே.வி.பி. மாவீரர் தினம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டதாகவும் விழாவின் பிரதான …
-
- 10 replies
- 2.1k views
-
-
புலத்திலுள்ள தமிழர்களின் மனதை சிதைக்க ஒட்டுக்குழுவினரின் ஆயுதமாக பாலியல் ஆபாச இணையதளங்கள் தமிழீழம்தாயகத்தில் தமிழர்களின் பண்பாட்டை அழித்து சமூகச்சீர்கேடுகளை ஏற்படுத்திவரும் ஒட்டுக்குழுவினர் புலத்திலுள்ள தமிழர்களின் மனதை சிதைக்க பாலியல் செய்திகளை முதன்மைப்படுத்தி இணைய ஊடகங்களை ஆயுதமாக பயன்படுத்திவருகின்றனர். மேலும் தமிழ் பேசும் உறவுகளான ஈழத்தமிழர்கள், தமிழகத்தமிழர்கள் மற்றும் இசுலாமிய தமிழர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். வெண்ணெய்த்திருடனின் (கண்ணன்) பெயரைக்கொண்ட 2 நபர் புலத்தில் இத்தகைய செயல்பாட்டில் செயல்பட்டுவருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஈழ ஆதரவு இணையதளங்களோடு தொடர்புகொண்டு நட்புடன் பழகி அவ் இணையங்களு…
-
- 1 reply
- 2.1k views
-
-
இராணுவப் படைத்தளபதி சரத் பொன்சேகாவை பதவி கவிழ்க்க இராணுவ மேஜர் ஒருவர் சூழ்ச்சி செய்வதாக ஜே.வி.பி.யினால் வெளியிடப்படும் பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இராணுவ முன்நகர்வுகளைச் செயலிழக்கச் செய்து இராணுவப் படைத்தளபதி லெப்டிணன் ஜெனரல் சரத் பொன்சேகாவை பதவி நீக்குவதற்கு இரகசிய சூழ்ச்சித் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக.............................................. தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6615.html
-
- 0 replies
- 2.1k views
-
-
ஈழத் தமிழரின் துயரை அன்ரன் பாலசிங்கம் மறைவுக்குப் பின்னர் உலகுக்குத் தெரிவித்து வந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யபட்டுள்ளார் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.1k views
-
-
பிரித்தானிய வெளியுறவு அமைச்சிலிருந்து எனக்கு வந்த பதில். அண்மைக்காலமாக வன்னியில் நடக்கும் எம்மக்கள் மீதான இனக்கொலை சம்பந்தமான படங்களையும், ஒளிப்பதிவுகளையும் சேகரித்து அவற்றில் சிலவற்றைத் தெரிந்தெடுத்து கடிதங்களுடன் இணைத்து பலருக்கும் அனுப்பியிருந்தேன். அவுஸ்த்திரேலிய, பிரித்தானிய, அமெரிக்க வெளியுறவுத்துறைகள், சர்வதேச மன்னிபுச்சபை, சர்வதேச செஞ்சிலுவை, ஆசிய மனிதவுரிமைகளுக்கான அமைப்பு என்று பலருக்கும் இப்பிரதிகளை அனுப்பியிருந்தே. எவரும் பதில் எழுதவோ அல்லது உங்கள் பிரச்சனைகளை விளங்கிக் கொள்கிறோம் என்றோ ஒரு வார்த்தையேனும் தெரிவிக்கவில்லை. பலரிடமிருந்து தானியங்கிப் பதில்கள் வந்திருந்தனவே ஒழிய உண்மையான பதில் வரவில்லை. ரெண்டு மூன்று நாளைக்கு முன்னர் பிரித்தானிய வெளியுறவ…
-
- 11 replies
- 2.1k views
-
-
இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ராஷ்ரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் கிளைகள் சிறிலங்காவிலும் செயற்படுவதாக, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின், திருமண வரவேற்பு நிகழ்வு கடந்த 17ஆம் நாள் கொழும்பில் இடம்பெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த சுப்ரமணியன் சுவாமி, ஊடகங்களுடன் பேசும் போதே, சிறிலங்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 17 கிளைகள் இயங்குவதாக தெரிவித்துள்ளார். எனினும், எந்தெந்த அமைப்புகள் ஆர்எஸ்எஸ் பின்னணியுடன், அதன் கிளைகளாக இயங்குகின்றன என்ற விபரத்தை சுப்ரமணியன் ச…
-
- 17 replies
- 2.1k views
-
-
தொடரும் ராணுவ அடக்குமுறை மற்றும் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் மக்களின் நிலை சம்பந்தமாக யாழ் மக்கள் தமது கருத்துக்களை WSWS உடன் பகிர்ந்துள்ளனர். யாழ் மக்களில் பெரும்பாலானவர்களின் உறவினர்கள் தற்போது வன்னி முகாம்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பலரது உறவினர்கள் சண்டையில் இறந்துள்ள வேளையிலும் அவர்களுக்கான சமயச் சடங்குகளையோ இரங்கல்களையோ கூட ராணுவத்தினருக்குப் பயந்து வெளிக்காட்டாமல் உள்ளனர். ஏனெனில் இங்கு யாழில் உள்ள மக்களும் புலிகளுடன் தொடர்பு என ராணுவத்தினரால் கைது செய்யப்படலாம். வெளியிடப்படாத ஐ.நா அறிக்கையொன்றின் பிரகாரம், இறுதி நாட்கள் சண்டையின்போது ராணுவ ஷெல் வீச்சுக்களால் கிட்டத்தட்ட 7,000 பேர் கொல்லப்பட்டும், 10,00…
-
- 0 replies
- 2.1k views
-
-
தென் பிராந்தியத்தில் கவனத்தை திருப்பும் இந்தியா [04 - January - 2008] விடுதலைப் புலிகளின் தரைவழி, வான்மார்க்க தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய ஆயுதப் படைகள் தென்பிராந்தியக் குடாவில் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. இந்த வருட முற்பகுதியில் இந்தப் பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக யூ.பி.ஐ. செய்தி சேவை நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. `இலங்கைப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தரைவழியிலும் வான்மார்க்கமாகவும் தாக்குதல்களை முன்னெடுத்ததால் அச்சுறுத்தல் உணர்வு இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது. அதனால் அடுத்தவருட முற்பகுதியில் தெற்குக் குடாவில் தொடர்ச்சியாக கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்தியா…
-
- 8 replies
- 2.1k views
-
-
Posted on : Tue Jun 12 8:16:30 EEST 2007 கொழும்பு விடுதிகளில் தங்கும் தமிழர்கள் எதிர்காலத்தில் வெளியேற்றப்படமாட்டார்கள் அமைச்சர் டக்ளஸுக்கு ஜனாதிபதி உறுதி மொழி கொழும்பில் வாழும் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்காலத்தில் வெளி யேற்றப்படாமல் இருப்பதற்கு கவனம் செலுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தாவுக்கு ஜனாதிபதி உறுதி அளித் துள்ளார் என ஈ.பி.டி.பி. விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது கொழும்பு விடுதிகளில் தங்கியி ருந்த வடக்கு, கிழக்கு மக்களை விடுதி களில் இருந்து வெளியேற்றி வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு அனுப்பி யிருந்த பாரதூரமான நடவடிக்கை குறித்து செயலாளர் நாயகம் ஜனாதி பதியிடம் நேரில் எடுத்து விளக…
-
- 6 replies
- 2.1k views
-
-
கிழக்கில் பூரண ஹர்த்தால் : மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்) கிழக்கு மாகாணத்தில் இன்று (27) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுன்றது.இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளன. தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில…
-
- 8 replies
- 2.1k views
-
-
-
- 2 replies
- 2.1k views
-
-
வஸீம் தாஜூதீனின் மரணத்துக்கும் எனது மகன் மாலக்க சில்வாவின் கடத்தலுக்கும் யோசித்த ராஜபக் ஷவே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு எதிராக சுதந்திரமாக எழுதுபவர்கள் கடத்தப்பட்டு மின்னேரியா முகாமில் இடப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், மஹிந்த ராஜபக் ஷ இன்று எதுவுமே தெரியாதது போல் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறார். ஹிட்லரின் ஆட்சியை புத்தகத்தில் படித்துள்ளோம். மஹிந்த அவரது சகோதரர்களான கோத்தபாய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ ஆகியோர் ஒரு புறத்தில் திருடினார்கள்.…
-
- 3 replies
- 2.1k views
-
-
இந்திய அரசுக்கு இந்த அவமானம் தேவைதானா? * இலங்கையில் நடப்பது ஓர் உள்நாட்டுப் போர். எந்த பகை நாடும் இலங்கையுடன் போர் தொடுக்கவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான வரலாற்று ரீதியான இனஒடுக்குமுறையின் இன்றைய வடிவமே, இந்த உள்நாட்டுப் போர். பயங்கரவாதத்தின் பெயரால் இந்தப் போரை நடத்துதல் ஆட்சியாளருக்கு வசதியாக அமைந்துவிட்டது. யுத்தத்தின் முழுச் சுமையையும் சுமந்திருப்பவர்கள் யார் என்பதை மட்டும் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். சி.மகேந்திரன் போர் நடத்திதான் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கமுடியும் என்பதை அறிவித்து செயற்படும் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றுதான் ஜனதா விமுக்தி பெரமுன. இன்று இலங்கையில் நடைபெறும் ஆட்சிமுறை ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்…
-
- 3 replies
- 2.1k views
-
-
வடக்கில் போர்க்களம் அரசோ அல்லது படையினரோ எதிர்பார்த்தது போலில்லை. பாரிய தாக்குதல்கள் மூலம் வடபகுதிக்குள் நுழைந்து விடலாம் என எதிர்பார்த்த படையினரால் இன்று சிறுசிறு தாக்குதல்கள் மூலம கூட எதையும் சாதிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதால், வடக்கில் போர் உத்திகளை அடிக்கடி மாற்றவேண்டிய நிலயேற்பட்டுள்ளது.கனரக ஆயுதங்களை ஒன்றுதிரட்டி புலிகளின் நிலைகள் மீது தொடர்ச்சியாகவும் மிகக் கடுமையாகவும் தாக்குதல் நடத்தி பெருமெடுப்பில் படையணிகளை புலிகளின் பகுதிகளுக்குள் முன் நகர்த்தி அவர்கள் வசமிருக்;கும் பிரதேசங்களைக் கைபற்றி விடலாமென்று அரசும் படையினரும் போடடட திட்டங்கள் பலிக்கவில்லை. இந்தத் தாக்குதல் உத்தி பலனளிக்காததால் வடக்கேள்ள கள முனைகளில் பாரிய படைநகர்வுகளைத் தவிர்த்து சிறு சிறு பட…
-
- 2 replies
- 2.1k views
-
-
TNAயின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் வடமாகாணசபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.. கொழும்பின் முக்கிய பிரமுகர் கனிகீஸ்வரனின் ஏற்பாட்டில் கொழும்பு இசுப்பத்தானை மாவத்தையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127230/language/ta-IN/article.aspx
-
- 33 replies
- 2.1k views
- 2 followers
-
-
யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு , பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபர் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் , வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று , வெளிநாட்டு பணத்தினை உள்ளூர் பெறுமதிக்கு மாற்ற வங்கியில் கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் காணொளி பதிவிட்டு, வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்க…
-
-
- 45 replies
- 2.1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் அமைந்திருக்கும் கொத்துரொட்டிக் கடை ஒன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட வலம்புரி நாளேடு முஸ்லிம்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. இன்று யாழ்;ப்பாணத்தில் வெளிவந்த வலம்புரி நாளேட்டில், ஐந்து சந்தியில் இயங்கி வரும் முஸ்லிம் கொத்துரொட்டிக் கடையொன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக பரபரப்பான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து யாழ் நகர்ப் பகுதியில் திரண்ட நூறு வரையான முஸ்லிம் வணிகர்கள், வலம்புரி நாளிதழிற்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அதன் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இது தொடர்பாக முகமதியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளால் இன்று அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு…
-
- 16 replies
- 2.1k views
-