Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 530 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம், 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ளது - எஸ்.நிதர்ஷன் வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு அமைச்சரவைப்; பத்திரங்களை தமது அமைச்சு தயாரித்து வருவதாக மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மீளக் குடியேறிய கடற்தொழிலாளர்களுக்கு உதவித் திட்டங்கள் இன்று (05) வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேல…

  2. இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக தற்போது வெளியான வீடியோவில் இருக்கும் பெண்ணை விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியில் பணிபுரிந்த இசைப் பிரியா என்று தாம் அடையாளம் கண்டுள்ளதாக ஹூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியிருந்தது. இவர் கொல்லப்பட்டதற்கு இலங்கை இராணுவத்தின் 53 ஆவது டிவிஷன்தான் பொறுப்பு என்று எச் ஆர் டபிள்யூ குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பாக ஹூமன் ரைட்ஸ் வாட்சின் சட்ட இயக்குனர் ஜிம் ராஸ் அவர்கள் தமிழோசையிடம் கூறும் போது, 'இலங்கை பாதுகாப்பு அமைச்சு 53 ஆவது டிவிஷன் மே 18 ஆம் தேதியன்று கொல்லப்பட்டதாக கூறியிருந்த நபர்தான் இந்த வீடியோவில் கொல்லப்பட்டதாகத் தோன்றும் நபராக இருப்பதாக கருதுகிறோம். அரசு இவரது மரணத்துக்கு 53 ஆவது டிவிஷன்தான் காரணம் என்று …

  3. 54 இளம் பெண்கள் வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து பூசாவுக்கு மாற்றம் திகதி: 25.02.2010 // தமிழீழம் சிறீலங்காபடைப் புலனாய்வுப்பிரிவினரால் பலாத்காரமாக மேலும் 54 இளம் பெண் யுவதிகள் வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து பூசா வதை முகாமுக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. முறையே யாழ், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 12, 16, 09 பெண்களுடன் ஏனையவர்கள் மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா திருமலையைச் சேர்ந்த பெண்கள் எனத் தெரியவருகின்றது. கடந்த 14ம் திகதி இவ்வாறே 49 இளம் பெண் யுவதிகள் பூசாவிற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=37…

  4. 54 நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் - சிங்கள ஊடகம்! [sunday, 2013-05-12 08:08:40] 54 நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த அரச தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 15, 16ம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. பிரிட்டனின் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் பிரதமர் டேவிட் கமரூனின் இலங்கை விஜயத்தை தடை செய்ய தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் கடும் முயற்சி எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://seithy.com/breifNews.php?news…

  5. 54 நாடுகளில் 21 நாட்டுத் தலைவர்களே இலங்கை சென்றனர்: ஒருவருக்கு தலா 70 கோடி செலவு:- விரைவில் வரியில் திணறுவர் மக்கள் - திஸ்ஸ அத்தநாயக்க பொதுநலவாய மாநாட்டு கொழும்பு பிரகடனம் மூலம் மனித உரிமை தொடர்பான சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கையை அழைத்துச் செல்லும் திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ரோம் பிரகடனத்தில் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட மறுத்ததன் காரணமாக இலங்கையை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்ற போதும் மஹிந்த ராஜபக்ஷ அரசு அதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (18.11.13) இடம்பெற்ற ஊடகவியலா…

  6. யாழ்.மாட்­டத்தில் சுமார் 5 ஆயி­ரத்து 400 ஏக்கர் காணிகள் படை­யினர் வசம் உள்­ள­தாக யாழ்.மாவட்ட அர­சாங்க அதிபர் நா.வேத­நா­யகன் தெரி­வித்தார். யாழ்.மாவட்­டத்தில் முப்­ப­டை­யினர் வசம் உள்ள காணி­களை விடு­விப்­பது தொடர்­பான இரண்டாம் கட்ட கலந்­து­ரை­யாடல் மாவட்ட செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், பாது­காப்பு அமைச்சின் ஏற்­பாட்டில் கடந்த மாதம் யாழ்.மாவட்ட செய­ல­கத்தில் முதல் கூட்டம் நடை­பெற்­றது. அதன் தொடர்ச்­சி­யாக இன்­றைய கூட்டம் நடை­பெற்­றது. குறிப்­பாக உயர் பாது­காப்பு வல­யங்­க­ளாக உள்ள பகு­தி­களை விடு­விப்…

    • 2 replies
    • 375 views
  7. 55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு மாதகால சாதாரண சிறை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 5 வருட காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார். ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நில…

    • 0 replies
    • 260 views
  8. நாட்டின் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, கடந்த 26 ஆம் திகதி முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 ஆம் திகதி வரை இந்த…

  9. 55 வது அகவை காணும் எங்கள் இனத்தின் ஒளி விளக்கே பல்லாண்டு காலம் வாழ்க. வானம் என்றும் குடை சாய்ந்ததில்லை - எங்கள் தானைத் தலைவன் என்றும் வீழ்ந்ததில்லை. தேசம் மீட்க படை கட்டிய வீரன் திக்குகள் எங்கும் தமிழர்க்கு முகவரி தந்தவன். முப்படை அமைத்து முத்தமிழ் காத்தவன் எப்படை வந்திடினும் எதிர்கொள்ளும் மாவீரன். காலம் பிரசவித்த எங்கள் காவலன் கரிகாலன் பெயர்கொண்ட வானவன். வானம் என்றும் குடை சாய்ந்ததில்லை - எங்கள் தானைத் தலைவன் என்றும் வீழ்ந்ததில்லை.

    • 37 replies
    • 4.5k views
  10. Posted by சோபிதா on 23/06/2011 in செய்தி கடந்த வருடம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய 555 பேருக்கு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுள்ள பிரித்தானிய எல்லை முகவரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2010 வருடம் முன்னைய வருடங்களைக் காட்டிலும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. அத்துடன் முன்னைய வருடங்களை விட கடந்த வருடம் அரசியல் தஞ்சம் கோரியவர்களில் அனேகமானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் 1360 இலங்கையர்கள் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களில் 805 பேருக்கு மட்டுமே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எல்லை முகவரகம் குறிப்பிட்டுள்ளது. அ…

  11. 558 தடவைகள் ஏ.ரி.எம்.மில் பணத்தை எடுத்த போது வேடிக்கை பார்த்த சம்பத் வங்கி! - 17.5 மில்லியன் ரூபா பறிபோன பின்னரே விழித்தது. [Wednesday 2014-07-30 18:00] சம்பத் வங்கியில் 17.8 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்ததாக, 17 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். கொழும்பு கோட்டே நீதிமன்றில் குறித்த இளைஞர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். பொலனறுவையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த இளைஞர் கடந்த ஜனவரி மாதம் ஜாஎல பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றில் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார். 163,000 ரூபா வைப்பிலிட்டு இந்த கணக்கை ஆரம்பித்துள்ளார். குறித்த வங்கியின் கணனி மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 17.5 மில்லியன் ரூபா பணம், இளை…

  12. 55ஆவது நாளாக தொடரும் மன்னார் அகழ்வுப் பணிகள்: 90 மனித எச்சங்கள் மீட்பு மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 90 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் அகழ்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் நுழைவாயில் பகுதியில் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்டட நிர்மாணப் பணிகளின்போது அப்பகுதியில் மனித எச்சங்கள் சில கண்டுப்பிடிக்கப்பட்டன. அதற்கமைய நீதிமன்ற உத்தரவிற்கமைய மே மாதம் 28ஆம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் இன்று 55ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் கூறினார். அகழ்வு பணிகள் இ…

  13.  55பேரை ஏமாற்றிய பெண் கைது -செல்வநாயகம் கபிலன் வங்கியில் கடன் பெற்றத்தருவதாகக் கூறி, 55 பேரிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த ஊரெழு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை (12) இரவு கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மற்றும் சிறுப்பிட்டி பகுதியிலுள்ள அரச வங்கியொன்றில், 5 இலட்சம் ரூபாய் கடன் பெற்றுத்தருவதாகக் கூறிய மேற்படி பெண், கடன் பெற விரும்பிய 55பேரிடம், தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்துள்ளார். இருப்பினும், உரிய கடனைப் பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றுவதை உணர்ந்த பணம் கொடுத்தவர்கள், அச்சுவேலி பொலிஸ் நிலை…

  14. மியன்மாரில் பயங்கரவாதிகளினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அந்நாட்டு உள்துறை அமைச்சர் இணக்கம் வௌியிட்டுள்ளார். இந்த விடயத்தை மியன்மாருக்கான இலங்கை தூதுவர் உறுதி செய்துள்ளார். மியன்மாரின் தாய்லாந்து எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவொன்றின் சைபர் அடிமைகளாக இலங்கை இளைஞர்கள் சிலர் பலவந்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வௌியாகின. குறித்த பிரதேசம் கூகுள் வரைபடத்தில் “Cyber Criminal Area” எனப்படும் சைபர் குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மியன்மாரின் மியாவெட்டி (Myawaddy) நகரில் இருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதி முழுமையாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் காணப்ப…

  15. வாழ்வாதார உதவிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 56 தமிழ் பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெற்ற தமிழ் தேசியக் சுட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினருக்கெதிராக நடவடிக்கை எடுக்க தமழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பின்னிற்பதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. http://www.lankadeepa.lk/index.php/top_story/330146 මුලතිව් තුනුක්කායි ප්‍රාදේශීය සභාවේ දෙමළ ජාතික සන්ධාන මන්ත්‍රීවරයකු බව කියන පුද්ගලයකු දුප්පත් කතුන් 56 දෙනකු සමඟ ගත් අසභ්‍ය වීඩියෝ රුපියල් 200 ගණනේ විකුණා ඇතැයි පොලිසියට පැමිණිලි කර ඇත. ඔහු එම කතුන් සමඟ සහවාසයේ යෙදී එම පින්තූර ගෙන ඇතැයි ද, රජයේ සුළු සුළු ආධාර දී ඔවුන් ඊට පොළොඹවාගෙන ඇතැයි ද එවැනි වීඩියෝවක් වන්නියේ සැමියකු හා පුතකු දැකීමෙන් පසු තුන් ද…

    • 4 replies
    • 437 views
  16. ஈழநாதத்திற்காக வன்னியில் இருந்து சீராளன் கார்த்திகை மலராய் பூத்தாய் கண்ணென எம்மைக் காத்தாய் போர்த்திறன் பொழியச் செய்தாய் பொய்கையாய் குளிரச்செய்தாய் நேத்தியாய் யாவும் செய்த நெஞ்கனே உன்னை கண்ணால் பார்த்திடும் நாளே பொன் நாள் பார்த்திடக் காண்பேன் அந் நாள்! இருண்டதாய் வானம் என்றும் இருந்ததே இல்லை: ஒன்று திரணடெழும் முகில்கள் மழையாய் பெய்வதே உண்மை கொஞ்சம் பொறுத்திடும் காலம்.. பொறுப்போம் பொறுமையும் மீறும் போதில் இருக்கிறான் தலைவன்: அவனை எதிர்த்திட எவனும் இருக்கான்! சித்திரை நிலவே: எங்கள் சித்திர வடிவே! மண்ணில் எத்திசை நோக்கி உன்னை எப்படி அடைவோம்? ஜயோ1 புத்தரின் சீடா; தம்மால் பொசுங்குவதே பூமி பாராய்: பத்தரை மாற்…

  17. Published By: NANTHINI 14 JUN, 2023 | 04:52 PM யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையிலான 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்தே சென்று சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர் இன்று வவுனியாவை வந்தடைந்தனர். பொகவந்தலாவை, கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர் இன்று (14) அதிகாலை 4 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்து, 9 மணித்தியாலங்களில், பிற்பகல் 1 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்தோடு, மீண்டும் தமது பயணத்தினை தொடர்ந்தனர். இரட்டையரான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்ற…

  18. 56ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஜனாதிபதி Vhg நவம்பர் 24, 2024 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார். அநுர குமார தனது பாடசாலைக் கல்வியை தம்புத்தேகமை காமினி மகா வித்தியாலயத்திலும், தம்புத்தேகமை மத்திய கல்லூரியிலும் கற்றார். தனது பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலாவது மாணவராக விளங்கிய இவர் பாடசாலை நாட்களில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்ததோடு, அக்கட்சியில் 1987இல் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் …

  19. சிறிலங்காப் படையின் 57 ஆவது டிவிசன் படையணி மீது பாரிய தாக்குதலினை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சிறப்பு படையணிகளை கிளிநொச்சியில் குவித்திருப்பதாக படைத்துறை ஆய்வு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்காப் படையின் சகல படையிணிகள் மீதும் தாக்குதல் நடத்த முடியாவிட்டாலும், வலிந்த தாக்குதலை மேற்கொண்டு வரும் முக்கிய படையணியான 57 ஆவது டிவிசன் மீது பாரிய தாக்குதலினை நடத்தி, சிறிலங்காப் படையணிகளின் மத்தியில் தற்போது அதிகரித்துள்ள மன உறுதியை உடைக்கும் வகையில் விடுதலைப் புலிகள் தமது காய்களை நகர்த்தி வருகின்றனர். இதற்காக, மணலாறு பகுதியிலிருந்து தமது மோட்டார் படையணியை கிளிநொச்சிக்கு கொண்டு…

  20. 57 ஆவது படைப்பிரிவின் கழிவு நீரால் பாதிப்பு பல தடவைகள் முறைப்பாடு செய்தும் பயனில்லை:- கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு பின்புறமாக திருநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 57 ஆவது படைப்பிரிவின் நிர்வாக தலைமையகத்தின் கழிவு நீரால் சூழலுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்;டுள்ளது. குறித்த முகாமிலிருந்து தொடர்ச்சியாக கழிவு நீர் திருநகர் பிரதான வீதி வழியாக மஞ்சுளா பேக்கரி சந்திக்கு ஊடாக கணேசபுரம் விவசாய வாய்காலுக்குள் விடப்படுகிறது. மேற்படி கழிவு நீர் செல்லும் பிரதேசம் அதிகளவு மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும் அத்தோடு குறித்த வீதியும் நாளாந்தம் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்ற பிரதான வ…

  21. [ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2007, 04:43 ஈழம்] [அ.அருணாசலம்] ஓமந்தை, மணலாறு, மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகளில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படையினரால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தாக்குதல்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியைச் சேர்ந்த சிறப்பு காலாட் படையின் பட்டலியன் துருப்புக்களும் இராணுவத்தினரின் சிறப்பு அணியினரும் ஈடுபட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இப்படையணிக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அதன் முதலாவது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது 4 சிறப்பு படையினர் கொல்லப்பட்டதாகவும் 23…

    • 17 replies
    • 3.6k views
  22. 57வது படைப்பிரிவினால் இரணைமடு குளத்தில் ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன April 12, 2019 57வது படைப்பிரிவினால் இரணைமடு குளத்தில் ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. குறித்த நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது. 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஜானக ரணசிங்க அவர்களின்தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு காலை 9 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது இரணைமடு குளத்தில் குறித்த மீன்குஞ்சுகள் விடப்பட்டன. குறித்த நிகழ்வில் நன்னீர்மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/2019/118187/

    • 1 reply
    • 854 views
  23. 57வது படைப்பிரிவின் CDO பிரிவால் எரி குண்டு வீசி கொல்ல பட்ட போராளிகள் புதிய போர்குற்ற ஆதாரம் (Photo in) Thursday, September 1, 2011, 10:44 சிங்கள பேரினவாதம் தமிழர் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன்பாரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது .இதன் போது இறுதி பாதுகாப்பு வலயம் என அழைக்க பட்ட பகுதிகளிற்குள் தங்கி இருந்த மக்களையும் போராளிகளையும் கைது செய்து கொன்று குவித்தது . இவ்வாறாக போராளிகள் குழு ஒரு கொட்டகைக்குள் பாதுகாப்பு தேடி வாழ்ந்த வேளை அவர்கள் மீது நச்சு எறிகுண்டுகளை வீசி கொன்று அழித்துள்ளது. இந்த குண்டு வீழ்ந்து வெடித்த ஐநூறு மீட்டருக்கு உட்பட்ட பகுதிகள் எங்கும் புகை மண்டலமாய் காட்சி அளிப்பதுடன் அதற்குள் தங்கி இருந்தவர்கள் அனைவரும் மூச்…

  24. 1958 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல- இலங்கைத் தீவின் வரலாறுகளில் தொடரும் முரண்பாடு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கம் அளித்துள்ளார். "58 இனவெறிக்கு அகவை 50" நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்பு உரை தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக இந்த விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய காரணியாக இருக்கின்ற- இருந்து வருகின்ற 1958 ஆம் ஆண்டு இனவெறித் தாக்குதல்கள் தொடர்பான இந்த அரங்க நிகழ்வுகள் உண்மையாக எல்லோரது மனங்களிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. எல்லோரினது உள்ளங்களிலும் இன உணர்வு தூண்டப்பெற்று விடுதலைக்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்ற விடுதலை உணர்வில்…

    • 0 replies
    • 743 views
  25. தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் தாக்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எதிர்வரும் 23 ஆம் நாளில் எமது இனத்தின் உள்ளங்களில் விதைக்க வேண்டும் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 574 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.