ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி சிரேஷ்ட கேர்ணல் சூ ஜியான்வெல் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இம் மாதம் 10 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையிலான உறவு முறையை மேம்படுத்தும் விடயம் தொடர்பாகவும், பயிற்சி நெறிகள் தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடிக் கொண்டார்கள். இராணுவ தளபதி சீன பாதுகாப்பு இணைப்பதிகாரியினால் முன் வைக்கப்பட்ட புரிந்துணர்விற்கும், ஒத்துழைப்பிற்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டு சீன இராணுவத்துடன் உறவு முறையை மேம்படுத்துவதற்கான தனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார். இறுதியில் இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இவர்கள் இருவருக்கும் …
-
- 1 reply
- 306 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.. இதேவேளை, தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு V8 மற்றும் Montero போன்ற சொகுசு வாகனங்களை வழங்குவதில்லை எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான உண்மைகளை மீளாய்வு செய்த பின்னரே, இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.க்களுக்கு துப்பாக்கி மற்ற…
-
- 1 reply
- 512 views
-
-
உயிர்நீத்த சிவநேசன் அவர்களின் வெற்றிடத்திற்கு சொலமன் எஸ். சிறில் நியமிக்கப்படவுள்ளார். க்ளைமோக் குண்டுத்தாக்கலில் உயிர்நீத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் அவர்களின் வெற்றிடத்திற்கு சொலமன் எஸ். சிறில் நியமிக்கப்படவுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிவநேசனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளை சொலமன் எஸ்.சிறில் பெற்றுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் 31,177 விருப்பு வாக்குகளைப் பெற்ற சொலமன், மறைந்த சிவநேசனது மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை சிவநேசன் அவர்களது இறுதி கிரியைகள் நாளைய தினம் கிளிநொச்சியில் இடம் பெறவுள்ளன. இதற்காக தமிழ்…
-
- 0 replies
- 2.2k views
-
-
யெனீவாவில் ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தங்கியிருந்து புலம்பெயர் தமிழர் சார்பில் பரப்புரைச் செயற்பாடுகளை ஒருங்கமைக்கும் பணியில் ஈடுபட்ட செல்வி. வாணி செல்வராசா தனது நேரடி அனுபவங்களை இந் நேர்காணலிற் பதிவு செய்கிறார். http://youtu.be/SvTGVvJzO1s பல தடைகளுக்கும் இடையூறுகளுக்குமிடையில் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் சிறி லங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதன் முறையாக சிறி லங்காவுக்கு எதிராகப் பல நாடுகள் வாக்களித்தமைக்குப் பின்னணியில் உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்திருந்த செயற்பாட்டாளர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். கனடியத் தமிழர் பேரவையின் சார்பில் கரி ஆனந்தசங்கரி அவர்களும் செல்வி வாணி செல்வராசா அவர்களும் சட்டவல…
-
- 0 replies
- 632 views
-
-
Friday, September 20, 2019 - 11:15am 100வருடங்களுக்கு மேற்பட்ட பழைய விகாரைகளை புண்ணிய பூமிகளாக பிரகடனப்படுத்தி, அவ்விகாரைகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தவுள்ளது. அத்துடன் புத்த சாசனத்தை பாதுகாத்துக் கொண்டு ஏனைய சமயங்களையும் பாதுகாப்பதே எமது அரசின் நோக்கமாகும் என புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். வெலிகம நகர மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், …
-
- 0 replies
- 324 views
-
-
பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை. அத்துடன் இது விடயத்தில் கடந்த கால ஜனாதிபதிகள் இது பற்றி முஸ்லிம் தரப்புகளுடன் பேசாமல் எத்தகைய தீர்வுக்கும் வரமுடியாது என்றே கூறியுள்ளனர்.கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக அதற்குரிய அமைச்சின் செயலாளருடன் தான் பேசுவதாக ஜனாதிபதி அநுரகுமாரஇ சாணக்கியன் எம்பி உட்பட்ட தமிழ் கூட்டமைப்பு எம்பீக்களிடம் உறுதி தெரிவித்ததாக சாணக்கிய கூறியுள்ளமை பற்றி ஜனாதிபதி தரப்பு தெளிவு படுத்த வேண்டும் என உலமா கட்சித் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னரே சாணக்க…
-
- 3 replies
- 242 views
-
-
இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்த வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி இவ்வாரம் விடுத்திருக்கும் கோரிக்கை தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் சிலுசிலுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை நிலைவரங்களை நேரில் பார்வையிடுவதற்காக இந்தியப் பாராளுமன்றத்தின் லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவியாக இருக்கும் திருமதி சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழுவொன்று இங்கு வந்திருக்கும் வேளையில் இத்தகைய கோரிக்கையை கலைஞர் முன்வைத்திருக்கிறார். தனது வாழ்வில் நிறைவேறாமல் இதுவரையில் இருக்கக்கூடிய ஒரு ஆசையென்றால் அத…
-
- 1 reply
- 905 views
-
-
குப்பைக்குள் போனாலும் தான் குண்டுமணியே என்கிறார் ஆனந்தசங்கரி! [Wednesday 2015-12-09 08:00] குப்பைக்குள் போனாலும் குண்டுமணி குண்டு மணிதான். மக்கள் வீசியது குண்டுமணியை. ஆனால் நீங்கள் கையில் வைத்திருப்பதோ குப்பையைத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். குப்பைக்குள் போனாலும் குண்டுமணி குண்டு மணிதான். மக்கள் வீசியது குண்டுமணியை. ஆனால் நீங்கள் கையில் வைத்திருப்பதோ குப்பையைத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறித…
-
- 0 replies
- 738 views
-
-
ஞானசாரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பினை ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் – ஜே.வி.பி! பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு தொடர்பாக, ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அண்மையில் முல்லைத்தீவில் ஞானசார தேரரின் அடாவடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த அடவடித்தனத்தின் ஊடாக எங்களுக்கு சொல்லப்படுகின்ற ஒரு செய்தி என்னவென்றால் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளை தன்வசப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான…
-
- 0 replies
- 662 views
-
-
தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசித் தொகையில் பாவனைக்கு பொருத்தமற்ற 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், …
-
-
- 8 replies
- 759 views
- 1 follower
-
-
கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் ஈழத்து காந்தி தந்தை செல்வாவின் நினைவு தினம் இன்று கிழக்கு மாகாணத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது ஈழத்தமிழர்களுக்காக அகிம்சை ரீதியாக போராடிய ஈழத்து காந்தி என்ற புகழ் நாமம் கொண்ட தந்தை செல்வா(செல்வநாயகம்) அவர்கள் கடந்த 26.04.1977ம் ஆண்டு இறைபாதம் அடைந்தார் அன்னாரின் 35வது நினைவு தினம் கடந்த 30வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இம்முறை எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பில் நாவக்குடா இந்துக் கலாசார மண்டபத்தில் இன்று காலை 10.00 மணிக்கு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் மட்டு, …
-
- 0 replies
- 309 views
-
-
தாஜூடீன் கொலையாளிகளுக்கு முக்கிய சக்தியொன்றின் பாதுகாப்பு தொடர்கிறது.. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையாளிகளுக்கு முக்கிய சக்தியொன்றினால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை குறித்த விசாரணைகளை மலினப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை தொடர்பிலான விசாரணைகளை நடத்தி வரும் காவல்துறையினருக்கு பல்வேறு தரப்பினரும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவி;க்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் உயர் பதவிகளை வகித்து வருவதனால் இவ்வாறான விசாரணைகளை நடத்திச் செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக…
-
- 0 replies
- 535 views
-
-
சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது-செல்வம் அடைக்கலநாதன் Oct 07, 20190 தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளரான சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்திற்கு அப்பால், கட்சியுடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது ஜனாபதி தேர்தலிலே போட்டி இடுவதற்கு தீர்மானித்துள்ளார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்யகூடாது என்று நாம் கோரி வருகிறோம். அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என்று தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும்.மேலும் எமது கட்சி ஒழுக்கமான கட்டுகோப்புள்ள ஒரு கட்சி, ஜனநாயாக ரீதியாக செயற்படும் கட்சி. அதில் முக்கிய பதவியை வகிக்கும் சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக செயற்படுவது ஏற்றுக்கொள்ள மு…
-
- 0 replies
- 291 views
-
-
மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்துக்காக சிலர் அணுகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அருண் ஹேமச்சந்திர Published By: Digital Desk 2 22 Dec, 2024 | 03:16 PM (துரைநாயகம் சஞ்சீவன்) மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்துக்காக சிலர் அணுகி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் கேமச்சந்திர தெரிவித்தார். ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்…
-
- 1 reply
- 219 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டை இராணுவ ஆட்சிக்கு இட்டுச்செல்லும் அபாயம் தோன்றியுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க கொழும்பில் இருந்து வெளிவரும் வார இறுதி சிங்கள ஏடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.3k views
-
-
முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரனின் கொலை தொடர்பில் அவரது 5 சகோதரர்களிடமும் விசாரணைகள் மேற்கொண்டால் யார் கொலையைச் செய்தார்கள் என்ற உண்மை வெளிப்படும். சகோதரர்களுடன் நான் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதால் இந்தவிடயம் தனக்குத் தெரியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், மகேஸ்வரனின் சகோதரர்களுக்கும் அவரது மனைவி விஜயகலாவுக்கும் மகேஸ்வரனை யார் கொலை செய்தார் என்பது தெரியும். தமது வியாபார நோக்கத்துக்காகவும் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அவர்கள்…
-
- 10 replies
- 1.3k views
-
-
அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்! நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக காலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10ஆம் திகதி, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், பதினொரு பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1415826
-
- 9 replies
- 420 views
- 1 follower
-
-
அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அரசியல் விவகாரம் பேசியதால் வருகை தந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்து அமைதியின்மை ஏற்பட்டது. கோப்பாய் தொகுதியில் அபிவிருத்தி குறித்து அதற்குட்பட்ட பொது நிறுவனங்களுடனான கலந்துரையாடல் இன்று வலி-கிழக்கு பிரதேச சபை தலைமையக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, அபிவிருத்தி சம்பந்தமான தங்களது கோரிக்கைகளை இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முன்வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள் கூட்டத்தில் அபிவிருத்தி நட…
-
- 0 replies
- 396 views
-
-
பாகிஸ்தானிடம் சிறிலங்கா பெருமளவிலான ஆயுதங்களை உடனடியாக அளிக்கக் கோரியுள்ளது என்று இந்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 992 views
-
-
இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாகரிக பெரும் பரப்பில் ஸ்பாட்டகஸ் எனும் வீரத்தின் பேரரசு இருந்தது. வரலாற்றுக் காலங்களில் அறிவியலினதும் வீரத்தினதும் அடையாளமாகிவிட்ட ஸ்பாட்டகஸ் மனித இனத் தொன்மங்களின் பிறப்பிடமாகவும் இருக்கின்றது. வீரம் பற்றிய ஐதீக ஊற்றின் தொடக்கமாக அந்தத் தேசம் இன்றும் பார்க்கப்படுகிறது. இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாகரிக பெரும் பரப்பில் ஸ்பாட்டகஸ் எனும் வீரத்தின் பேரரசு இருந்தது. வரலாற்றுக் காலங்களில் அறிவியலினதும் வீரத்தினதும் அடையாளமாகிவிட்ட ஸ்பாட்டகஸ் மனித இனத் தொன்மங்களின் பிறப்பிடமாகவும் இருக்கின்றது. வீரம் பற்றிய ஐதீக ஊற்றின் தொடக்கமாக அந்தத் தேசம் இன்றும் பார்க்கப்படுகிறது. உலகில் நாகரிகங்கள் உருக்கொள்ளத் தொடங்…
-
- 0 replies
- 2.3k views
-
-
(ஆர்.யசி) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் ஆரோக்கியமானதும் திருப்திகரமான, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விதத்திலான தேர்தல் விஞ்ஞாபனத்தை புதிய ஜனநாயக முன்னணி முன்வைத்துளதென கருதுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. தாம் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த கோரிக்கைகள் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிலைபாட்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாவும் கூறுகின்றது. புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பிரதான இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கொண்டு தம…
-
- 6 replies
- 881 views
-
-
முல்லைத்தீவு மீனவரின் படகின் மீது இந்திய இழுவைப் படகு மோதியது' சம்பவத்தை அடுத்து அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவைப் படகு ஒன்றை அதில் இருந்த 8 இந்திய மீனவர்களுடன் உள்ளூர் மீனவர்கள் கூட்டிவந்தனர் முல்லைத்தீவு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சேகர் ரஞ்சித் என்ற உள்ளுர் மீனவரின் படகை கூட்டமாக அந்தப் பகுதிக்குள் வந்த இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளில் ஒன்று மோதியதில் படகு சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. படகு சேதமடைந்ததையடுத்து கடலில் வீழ்ந்த தன்னையும் தன்னுடன் இருந்த இன்னொரு மீனவ தொழிலாளியையும் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த உள்ளுர் மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கூட்டி வ…
-
- 0 replies
- 569 views
-
-
இழுவைமடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படும் இந்த மீன்பிடி முறைமையை நிறுத்த வேண்டும் எனக் கூறிய இலங்கையின் கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்> கடலுக்கு அடியில் வலைகளைப் பயன்படுத்தும் இழுவைமடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படுவது இந்திய கூலித்தொழிலாளர்களே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த படகுகளின் உரிமை இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்கு சொந்தமானது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 'அந்த செயற்பாடு என்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அந்த இழுவைமடியில் இழுவைப் படகுகளில் வருகின்றவர்கள் மீன் பிடிக்க வருகின்றவர்கள்…
-
- 0 replies
- 145 views
-
-
ஈழத் தமிழர்களைக் காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 19ஆம் நாள் முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்குச் சென்று, ரஜீவ் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினியைச் தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3362.html
-
- 0 replies
- 765 views
-
-
தேவையான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க பின்நிற்க மாட்டேன் வாழ்க்கையில் தான் அதிகமாக சந்தோஷப்பட்ட நாள் எதுவென்று யாராவது என்னிடம் கேட்டால், அது கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி அப்போதைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தினமாகும். ஜனநாயக அரச நிவாகத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நீங்கள் காணாத உங்களுக்கு விளங்காதவற்றை தெளிவுபடுத்துவதற்கே நாங்கள் முயற்சிக்கின்றோம். கடந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருந்தது. ஜனவரி மாதம் தேர்தல் இடம்பெற்றது. ஆகஸ்ட் மாதம் இட…
-
- 0 replies
- 472 views
-