ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறந்த பின்னர் அவரின் உடல் பதப்படுத்தப்பட்ட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச, 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டுவந்த ஒரு கொண்டாடப்பட வேண்டிய தலைவர் என அஜித் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். பதப்படுத்துவதற்கான தேவை எனவே, எதிர்கால சந்ததியினர் மகிந்தவின் உடலை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அவர், இறந்த ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்னாமின் புரட்சிப் போராளி ஹோ சின் மின்ஹ் ஆகியோரின் பதப்படுத்த உடல்களை உதாரணமாக தெரிவித்துள்ளார். மகிந்தவின் உடல் பதப்படுத…
-
-
- 8 replies
- 17.8k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த்மீது மர்மநபர்கள் என்ற போர்வையில் இராணுவத்தினர் கூரிய இரும்பு ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். பலத்த காயங்களுக்கும் இரத்தம் சிந்தலுக்கும் அவர் முகம் கொடுத்திருக்கிறார். யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் பேசும் சமூகத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகவே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வரலாறு முழுவதும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக தமிழ்ச் சமூகம் சார்பில் போராட்டங்களை நடத்துபவர்கள். அவ்வாறான எழுச்சியையும் குரலையும் பார்க்கப் பொறுக்காத நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தபடப்ட்டிருக்கிறது. அன்று மே18. தமிழ் மக்களின் நெஞ்சில் முள்ளிவாய்க்கால் படுகொலை…
-
- 7 replies
- 1.3k views
-
-
மடு மாதா திருச்சொரூபத்தை மீண்டும் மடு தேவாலயத்திற்கு எடுத்து வரவேண்டும் என கோரப்பட்டுள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ஹேமந்த வர்ணக்குலசூரிய, இது தொடர்பிலான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இத்தாலி நகரில் நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்திய அவர,; இந்த கோரிக்கையை பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பரிடம் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டாh.;; நேற்றைய தினம் மன்னாரிலும் சர்வமதங்களையும் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மடு தேவாலையப் பகுதி சமாதான வலையமாகப் பிரகடணப்படுத்தப்பட வேண்டும் எனவும், நாட்டிற்கு சாந்தி சமாதானம் ஏற்படவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டு இருந்தது. ஏற்கனவே மடு தேவலையப் பகுதி குறித்த மஜர் ஒன்று விடுதலைப்புலிகளிடமும், அரசாங்கத…
-
- 8 replies
- 1.8k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான வாக்கெண்ணும் நிலையத்தின் பணிகளுக்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த அரச ஊழியர்கள் 51 பேர் உணவு விஷமானதால் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்து ஏற்பட்ட நிலைமையின் பின்னர் குறித்த 51 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 4 சிவில் பாதுகாப்பு படையினரும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் கூறினர். இந் நிலையில் இந்த உணவு விஷமான விவகாரம் சதி நடவடிக்கையா அல்லது அதற்கான வேறு காரணிகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் விஷேட விசாரணைகளின் பொறுப்பு சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிர…
-
- 1 reply
- 340 views
-
-
கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை adminFebruary 11, 2025 விகாரையை இடிக்க வாரீர்’ என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவொன்று தொடர்பில் விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, மக்களின் தனியார் காணிகளை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றி மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட…
-
- 1 reply
- 365 views
- 1 follower
-
-
கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 5 யானைகள் உயிரிழப்பு! கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இன்று (20) அதிகாகாலை யானைக் கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பரிதாபகரமாக ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த புலத்திசை ரயில் சேவையையயும் இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்…
-
- 4 replies
- 404 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதனையடுத்து இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங்; கூட இதே வகையான கருத்தை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அந்த நிலையிலேயே பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்தக் கருத்தும் வெளிவநிதுள்ளது. இது குறித்து பீ.பீ.சீயிடம் கருத்து வெளியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் ‘இலங்கை இனப்பிரச்சனை…
-
- 3 replies
- 1.5k views
-
-
திருகோணமலையிலுள்ள இந்தியாவின் குத்தகை எண்ணெய்க் குதங்களை இலங்கை அரசு மீளப்பெறவுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கோண்டு எதிர்வரும் 29ம் திகதி இலங்கை செல்லவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் இதர அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர் மேனன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளதாக அறியப்படுகின்றது. சிவ்சங்கர் மேனனின் கொழும்பு விஜயமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதொன்றல்ல என்றும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய பேச்சுகளை நடத்தவே அவர் அவசரமாக இலங்கை செல்கிறார் எனவும் அறியமுடிகின்றது. முன்னதாக, திருகோணமலையில் இந்திய எண்ணெய் நிறுவனத்த…
-
- 0 replies
- 705 views
-
-
ஏலத்தில் விடப்படவுள்ள அரச வாகனங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு! அதிக பராமரிப்பு செலவுகளைக் கொண்ட அமைச்சுகளுக்குச் சொந்தமான வாகனங்களை அடுத்த மார்ச் மாதத்தில் ஏலத்தில் விடத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது பொது சேவை செலவுகளைக் குறைக்க அனைத்து அரசு அலுவலகங்களையும் அரசு கட்டிடங்களுக்குள் கொண்டு வருவதன் அவசியம், பயன்படுத்தப்படாத அலுவலக உபகரணங்களை அகற்றுதல், மூடப்பட வேண்டிய, ஒன்றிணைக்கப்பட வேண்டிய மற்றும் தனியார் உரிமைக்கு மாற்றப்பட வேண்டிய நிறுவனங்களை அடையாளம் கண்டு,…
-
- 1 reply
- 330 views
-
-
கஜநாயக்கவின் மீது கருணா குழுவின் உதவியுடன் தமிழர்களை கடத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது [ புதன்கிழமை, 07 மே 2008, 05:49.13 AM GMT +05:30 ] இலங்கை வான் படையின் முன்னாள் உயர் அதிகாரியொருவர் தமிழ் வர்த்தகரை கடத்திய சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கொழும்பில் 7 இல் வசிக்கும் சீனி இறக்குமதியாளரான யோகராஜ் ஸ்ரீஸ்கந்தராஜ் மற்றும் அவரது வாகன சாரதியான ராமையா ஜெயராஜ் ஆகியோரை 2006 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி கருணா குழுவின் உதவியுடன் கடத்திச்சென்று பொலநறுவை வெலிக்கந்தையில் தடுத்து வைத்து 6 மில்லியன் ரூபாவை கப்பமாக பெற்றமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்…
-
- 0 replies
- 819 views
-
-
திருகோணமலை துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த விநியோகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பெட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள், பயங்கரவாத்திற்கு ஊக்குவிப்பதாக உள்ளதென, ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா ஒப்பாரிவைத்துள்ளது. நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைச் சபையின் 20வது கூட்டத் தொடரில், இலங்கைத்தவீன் போருக்கு முந்திய - பிந்திய காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமைச் சபை சிறப்பு வல்லுனர்கள் குழுவினரால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு, சிறிலங்கா உரிய பதிலினை வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐ.நா சிறப்பு வல்லுனர் குழுவின் அறிக்கை தொடர்பிலான விவாதத்தின் போது, தன்னுடைய மனித உரிமை மீறல்களை, இனஅழிப்பு மற்றும் போர் குற்றங்களை, பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கை எனும், தனது வழமையான பல்லவிய…
-
- 2 replies
- 309 views
-
-
15 Mar, 2025 | 05:30 PM மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் இந்த நியமனத்தை வழங்கினார். மடு திருப்பதியில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானத்தின் நிறைவில் வெள்ளிக்கிழமை (14) இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. ஒரு மறைமாவட்டத்தில் குரு முதல்வர் பதவி என்பது மறைமாவட்ட ஆயருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர் பதவியாகும். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் மன்னார் மாவட்டத்தின் முருங்கன் கிராமத்தில் காலம்சென்ற சந்தான் பாவிலு தம்பதியருக்கு பதினொர…
-
- 0 replies
- 179 views
-
-
இலங்கைக்குக் கடிதம் ஐ.நா. கண்காணிப்புக் குழுவை அனுப்புக! எஸ்.எம்.ஜி. இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்ற குரல் மீண்டும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலு மிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இலங்கையின் சிங்கள ஆதிக்க சக்திகள் எந்தக் காலத்திலேயுமே இனப்பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கு விரும்பியதில்லை. தந்தை செல்வநாயகம் தலைமையில் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற ஜனநாயக வழியில் தமிழ் பேசும் மக்கள் உரிமையுடன் வாழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பெரும்பான்மை ஜனநாயகத்தினரால் ஒடுக்கப்பட்டன. தமிழ் அரசுக் கட்சிக்கு முன்னர் இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் இலங்கையில் நாடாளுமன்ற நாயகம் நாட்டில் செயல்படுவதற்கு முயற்…
-
- 0 replies
- 563 views
-
-
கெஹலிய ரம்புக்வெல்ல யாழ். நீதிமன்றில் ஆஜர் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் காணாமல் போனமை குறித்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று யாழ் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் லலித், குகன் காணாமல் போயிருந்தனர். லலித் மற்றும் குகன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மகிந்த அரசாங்கத்தின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இருவரும் அரசாங்கத்தின் தடுப்பில் இ…
-
- 1 reply
- 356 views
-
-
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ் சென்றமையை கண்டித்து ஆர்பாட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கபட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போர் குற்றவாளி கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார். இது அவர்களின் தமிழ் இனப்படுகொலையை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்ற வாசகம் பொறிக்கபட்ட பதாகையை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாட்டினது கொடிகளையும் கையில் ஏந்தியிருந்தனர். இவர்களது போராட்டம்…
-
- 2 replies
- 479 views
-
-
[size=4]கிறீக் அரசாங்கப் பிணைகளில் சிறிலங்கா மத்திய வங்கி கடந்த ஆண்டில் முதலீடு செய்த 347 கோடி ரூபாவையும் சிறிலங்கா அரசாங்கம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிறீக்கில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினாலேயே இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறிலங்கா மத்திய வங்கி 22,163,500 யூரோவை (3,472,576,045 ரூபா) கிறீக் அரசாங்கப் பிணைகளில் முதலீடு செய்திருந்தது. இதன் தற்போதைய பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. கிறீக்கில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்த நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இதனால் சிறிலங்கா அரச…
-
- 3 replies
- 858 views
-
-
கடந்த ஆட்சியில் முன்னெடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்தாது முன்னெடுக்க வேண்டும் ;இராதாகிருஸ்ணன் Published by T Yuwaraj on 2019-12-18 16:34:03 கடந்த ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்தாது அப்பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு தற்போதைய புதிய ஜகாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருகின்றமை வரவேட்கதக்க விடயம். என பாராளுமன்று உறுப்பினர் இராதாகிருஸ்ணன் மஸ்கெலியா கவரவில தோட்டத்தில் இடம் பெற்ற அடிக்கல் நிகழ்வின் போது தெரிவித்தார். இதன் போது மேலும் கூறுகையில், ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னரும் இப்பாலத்திற்கான பணிகளை முன்னெடுக்க கிடைத்தமையையொட்டி மகிழ்ச்சியாகவுள்ளது. இப்பாலத…
-
- 0 replies
- 320 views
-
-
ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான இலங்கை பிரதிநிதிகளுக்கும்,மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை க்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் ஆஜர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது மன்னாரில் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையி
-
- 0 replies
- 960 views
-
-
சிறிலங்க கடற்படை துப்பாக்கிச் சூடு : இராமேஸ்வரம் மீனவர் பலி! பதற்றம்! செவ்வாய், 3 ஜூன் 2008( 13:52 IST ) 45 நாள் தடைக்குப் பிறகு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இராமேஸ்வரம் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார். சிறலங்க கடற்படைத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்! ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 714 விசைப் படகுகளில் நேற்று காலை மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த சிறிலங்க கடற்படையினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். அப்பகுத…
-
- 2 replies
- 868 views
-
-
[size=4]"கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைளை எடுத்தலே உண்மையான மீளிணக்கப்பாடு. 'சுயநிர்ணயம்' என்பது பெரும்பான்மை இனத்தின் உரிமைகளுக்கு கெடுதல் விளைவித்தல் எனப் பொருள்படாது". இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாகக்கொண்ட Lakbima News இணையத்தளத்திற்காக Sulochana Ramiah Mohan கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கேள்வி: அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற ‘Platform for Freedom’ என்கின்ற நிகழ்வில் நீங்கள் கலந்துகொண்டு உரையாற்றினீர்கள். அதில் இதுவ…
-
- 2 replies
- 504 views
-
-
கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் இளைஞன் ஒருவர் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இவ்வாறு யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் கிரிஸ்டியன் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கனடா செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தார். இருப்பினும் நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதிக்கு அருகில் உள்ள காணியில், மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. htt…
-
- 4 replies
- 505 views
-
-
மண்டபம் அகதிகளை சந்தித்தார் வைகோ [08 - June - 2008] இராமேஸ்வரம்: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று சனிக்கிழமை இராமேஸ்வரம் சென்றார். இராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள அகதிகள் முகாமுக்கு சென்று அகதிகளிடம் பேசி அவர்களின் நலன் குறித்து விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; "" இலங்கை அகதிகள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் உயர்கல்வி கற்க உரிய வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளிலிருந்து அகதிகள் புனர்வாழ்வுக்காக அனுப்பப்படும் நிதி முறையாகக் கையாளப்படுவதில்லை. அகதிளாக வந்திருக்கும் இவர்க…
-
- 1 reply
- 796 views
-
-
அரசியல் எம்மை பிரிக்கிறது! வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டு! அரசியலானது எங்களை பிரித்து என்ன குறிக்கோளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறக்க வைத்திருக்கிறது. எங்களுடைய தனித்துவமான அரசியல் கட்சி ரீதியான ஏதோ எண்ணங்கள் எம்மை பிரித்து வைத்திருக்கிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் எந்தக் கட்சியில் இருந்தாலும் நோக்கம் வடமாகாணத்தை விருத்தி செய்வது என்று இருக்கும் போது அதற்கு இடமளிக்காது கட்சி ரீதியிலான பிர…
-
- 2 replies
- 362 views
-
-
(ரொபட் அன்டனி) தேசிய இனப்பிரச்சினை க்கு அரசியல் தீர்வு வேண்டுமாயின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே தமிழ் கூட்டமைப்பு கடந்த காலங்களைப் போன்று சண்டித்தனம் காட்டா மல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதே பொருத்தமானதாக அமையும் என்று ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். அரசாங்கத்தை தீர்மானிக்க முடியும் என்ற கூட்டமைப்பின் எண்ணம் இம்முறை பிழைத்துவிட்டது. எனவே அந்த யதார்த்தைப் புரிந்துகொண்டு கூட்டமைப்பு செயற்பட வேண்டும். மாறாக கடந்த காலங்களைப் போன்று சண்டித்தனம் காட்ட முற்படுவது சானக்கியமாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய…
-
- 2 replies
- 757 views
-