ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 24வது நாளில் தனது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். பரிஸ் நகரில் இருந்து 468 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 92 கிலோமீற்றர்களே இருக்கின்றன. லண்டனில் இருந்து பரிஸ் நகர் ஊடாக இதுவரை 897 கிலோமீற்றர்கள் நடந்துள்ள சிவந்தனுடன், இன்றும் சிலர் இணைந்து நடப்பதுடன், ஏனைய பலர் ஊர்திகளில் பின்தொடர்ந்து செல்லுகின்றனர். இன்று மூன்றாவது நாளாக கடும் மழை பெய்து வருவதாலும், சிறிய வீதிகள் ஊடாக சிவந்தன் நடந்து செல்வதாலும், பலர் இணைந்து நடக்க முடியாது ஒரு சிலர் மட்டுமே இணைந்து நடந்து செல்ல ஏனையவர்கள் ஊர்திகளில் பின்தொட…
-
- 0 replies
- 529 views
-
-
பரமேஸ்வரனின் வழக்கில் ஏற்பட்ட வெற்றியைக் கருத்தில் கொண்டு கேட்கின்றேன். புலம்பெயர் தமிழ்மக்களைப் பயங்கரவாதிகள் என்ற வகையில் எழுதுகின்ற ஊடகங்கள், அரசியல்வாதிகள், தொடர்பாக அந்தந்த நாடுகளில் வழக்குப் பதிய முடியாதா? ஆதாரமற்ற வகையில் கண்டமேனிக்கு எழுதுகின்ற இவர்களின் வாயைப் பூட்ட நாம் ஏதாவது செய்தாக வேண்டும். முக்கியமாக தமிழ்மக்களை ஏற்றிய கப்பல் ஒன்று வருவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி, அவர்களின் வருகைக்குப் பின்னர் முக்கியத்துவமாக மாறக்கூடும். அந்த நிலையில் எம் இனத்தைப் பற்றி அவதூறாக நிச்சயம் எழுதுவார்கள். அந்த நிலையைத் தடுத்து அவர்களுக்கு எம் கோபத்தை வெளிக்காட்டச் சந்தர்ப்பம் அவசியமாகும். இந்த வழக்கில் தோற்பது வெல்லுவது என்பது 2ம் பட்சம். ஆனால் நாங்கள் இவர்களின் நடவடிக…
-
- 19 replies
- 2k views
-
-
இது செஞ்சோலை படுகொலை நடந்த நான்காவது ஆண்டின் நினைவு வாரமாகும். இந்த நினைவு வாரத்தில்;,பல்வேறு நாடுகளில் நாங்கள் நினைவு நிகழ்வுகளை நடத்துகிறோம். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நினைவுக் குறிப்புகள் நினைவு மீட்டல்களை பதிவேற்றுகிறோம். ஆனால் இதுவரை புலத்திலுள்ள நாங்கள் அதாவது தனிநபர்களாகவோ அல்லது அமைப்புக்களோ கடந்த வருடம் நடந்து முடிந்த கொடிய யுத்தத்தின் பின்னர் இந்த செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலை சிறார்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்களை யார் பராமரிக்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ந்து அவர்களுக்கு எப்படி உதவுவது என்பது தொடர்பாக உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். இதன் விளைவுதான் ஜெயந்தி அல…
-
- 10 replies
- 1.7k views
-
-
நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்குச் சமீபமாக நேற்று நள்ளிரவு வீடு புகுந்து நகைகள், பணம் கொள்ளை! பெண்களுக்கு வாள் வெட்டு: திகதி:15.08.2010, நல்லூர், வைமன் வீதியில் நேற்று நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் வீடு புகுந்த ஆயுதக்குழு ஒன்று அங்கிருந்த பெண்களை வாளால் வெட்டிவிட்டு நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளது. இந்தத் திகிலூட்டும் கொள்ளைச் சம்பவம் மக்கள் மிகுதியாக நெருக்கமாக வாழும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் கையில் படுகாயமடைந்த நிலையில் கே.பரமேஸ்வரி (வயது 60) என்பவரும் மற்றும் எஸ்.சுரேணுகா (வயது 24) ஆகிய இருவரும் நேற்று அதிகாலை யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டனர். இந்தச்சம்பவம் பற்றிக் கூறப்படுவதாவது : வாள்கள…
-
- 12 replies
- 1.4k views
-
-
ஜிஎஸ்பி+ வரிச்சலுகை விலக்கம் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வந்த ஜி எஸ் பி+ எனப்படும் ஏற்றுமதி வரிச்சலுகை 15.8.10 அன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுவது அங்கு பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுர்கள் கூறுகிறார்கள். இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றங்கள் தேவைகள் என ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்பந்தங்களுக்கு இலங்கை அடிபணியாது என்று அரசு கூறியது. நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்த எழுத்துபூர்வமான உத்திரவாதத்தை அரசு அளிக்காத நிலையல். வரிச்சலுகையை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் திரும்பப் பெறப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியத்…
-
- 0 replies
- 986 views
-
-
இலங்கை - இந்திய மக்களுக்கிடையில் சரியானதொரு புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்தார். இந்தியாவின் 64ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய இல்லத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், அங்கு உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இந்திய உயஸ்தானிகராலயத்தின் ஆலோசனை பிரிவை யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் திறக்கவுள்ளதாகவும் கூறினார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுக்க தீர்மானித்துள்ளது. அத்துடன் யாழ், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதுடன் தலைமன்னாருக்கும் தூத்துக்குடிக்கும…
-
- 2 replies
- 976 views
-
-
தலைமன்னார்இராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பமாகும் : -இந்திய உயர்ஸ்தானிகர்- திகதி:16.08.2010, இந்தியாஇலங்கை இடையேயான பாரம்பரிய தொடர்புகளை மீளவலுப்படுத்துவதன் ஒரு கட்டமாக கொழும்புதூத்துக்குடி, தலைமன்னார்இராமேஸ்வரத்திற்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்தார் 64 ஆவது இந்திய சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றபோது இந்திய தேசியக் கொடியேற்றி ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் சுதந்திர தின உரையினை வாசித்தபின்னர் இந்தியஇலங்கை உறவு குறித்து உரை நிகழ்த்துகையிலேயே உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில…
-
- 0 replies
- 408 views
-
-
இன்று காலை மன்னார் அரச செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். மாந்தை மேற்கு பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தமது விவசாய பிரச்சினைகள் தொடர்பில் பல தடவைகள் மன்னார் அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். எனினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, இன்று காலை 9.30 மணியளவில், அரசாங்க அதிபரை நேரில் சந்திக்க மன்னார் அரச செயலகத்திற்குச் சென்றனர். கடந்த காலங்களில் தம்மைப் பற்றியும் தமது அரச அலுவலகம் பற்றியும் தவறான செய்திகள் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 488 views
-
-
இந்திய வல்லாதிக்கத்தின் பழங்குடி மக்கள் மீதான போரை எதிர்த்து லண்டனில் பேரணி இந்திய தூதரகம் முன் நடை பெற உள்ளது. இந்தப் பேரணியில் தமிழ் அமைப்புக்களும் கலந்து கொள்வதன் மூலம்,இந்திய வல்லாதிக்கத்துக்கு நாம் தெளிவான செய்தியைச் சொல்லலாம். அடக்கப்படும் ஒடுக்கப்படும் மக்களுக்கு நாம் வழங்கும் ஆதரவே அவர்கள் எங்களை ஆதரிக்கத் தூண்டும்.புலத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் இதனை முக்கியமான ஒரு அரசியல் வேலைத் திட்டமாகச் செய்ய வேண்டும்.இந்தப் போராட்டத்தில் நேபாளிகளின் தொழிற்சங்ககளும் பங்கு பற்றுகின்றன. Protest against the murder of Comrade Azad and Hem Pandey , Operation Green Hunt and Indian Expansionism at the Indian High Commission in Aldwych – London on Sunday 15th Aug…
-
- 9 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசின் பப்பெற் கமிசனான நல்லிணக்க ஆணைக்குழு நேற்று வவுனியாவில் http://www.youtube.com/user/Eelanatham#p/a மக்களிடம் வாக்கு மூலங்களை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் சென்றபோதும் வரையறுக்கப்பட்டவர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட்டன. கூடவே இவர்களுக்கு சில அழுத்தங்களும் கொடுக்கப்பட்டன. எனினும் மக்கள் அழுத வண்ணம் தங்கள் வாக்கு மூலத்தை கொடுத்தனர். இ ராணுவத்தினரால் தங்கள் உறவினர்கள் கடத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் மக்கள் சாட்சியம் அளித்துள்ளனர். கட்டத்தப்பட்டவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர். பல ஆண்டுகளாக சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் கூடிய விரைவில் அவர்களிடம் விசாரணையை முடித்து, விடுதலை செய்ய வேண…
-
- 2 replies
- 854 views
-
-
தமிழினப் படுகொலைக்கு துணைபோன கருணாநிதி குடும்பத்தின் தயாரிப்புக்களைப் புறக்கணியுங்கள் - பேராசிரியர் இராமசாமி While responding to a question posed by Malaysian Nanban, a Tamil newspaper in Malaysia, Prof. Ramasamy said he was urging the Tamils in Malaysia, Tamils in Tamil Nadu and elsewhere to boycott commercial businesses operated by Karunanidhi family. மேலதிக விபரங்களுக்கு http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32396
-
- 2 replies
- 883 views
-
-
ஈழநாதம் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 16, 2010 எம்.வி சன்சீ இல் வந்த சிலர் கடல்பயணத்தின் போது உயிரிழந்துள்ளனர் என செய்திகள் கசிந்துள்ளது. ஜூலை மாதம் 28 ஆம் திகதி கப்பல் நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருந்தபோது 30 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரது உடலை கப்பலில் வைத்தே எரித்ததாக கப்பல் சிப்பந்திகள் கூறியுள்ளனர். இந்த நபரிற்கு இலங்கையில் மனைவியும் ஓர் குளந்தையும் உள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் 70 வயது மதிக்கத்தக்க ஓர் வயோதிப குடும்பமும் கப்பலில் பயணித்ததாக சிலர் தெரிவித்துள்ளனராம் ஆனால் அவர்களை அகதிகளில் காணக்கிடைக்கவில்லை எனவும் அறியப்படுகின்றது. கப்பல் பயணத்தின் போது இடம்பெற்ற துன்ப துயரங்களை கனேடிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் அதனை வெளிக்கொண்டுவர முடியவ…
-
- 0 replies
- 855 views
-
-
ஈழநாதம் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 16, 2010 கவர்ச்சியான சம்பளங்களுடன் பல சலுகைகளும் வழங்கப்படும் என கிளினொச்சியில் இருந்து 40 இளம் O/L, படித்த இளம் பெண்களை கண்டிக்கு கூட்டி செல்ல முற்படும் வேளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பயிற்சிக்காலம் முடிவுற்ற பின் அதிகூடிய சம்பளமாக 14 ஆயிரம் ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 2 ஆயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரையிலும், உற்பத்தித்தரக் கொடுப்பனவாக ஆயிரத்து அறுநூறு ரூபாவும், மேலதிக நேர வேலைக்கு 2 ஆயிரத்து ஐநூறு ரூபாவும், அதற்கும் அதிகமாகவும் மற்றும் இலவச சுகாதாரம், காப்புறுதி வசதி, தங்குமிட வசதி மற்றும் காலையுணவு, மதிய நேரத் தேநீர், உரிய இடத்துக்கான போக்குவரத்து வசதி, இறப்பின் போது 30 ஆயிரம் ரூபா பணம் போன்றன சலுகைக…
-
- 0 replies
- 519 views
-
-
திங்கட்கிழமை, 09 ஓகஸ்ட் 2010 11:50 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரகாரனினுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டார். 7ஆம் திகதி சனிக்கிழமை டெய்லிமிரர…
-
- 106 replies
- 8.7k views
-
-
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் நீர்வேலிக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் கோப்பாய் என்ற ஊரினை தெற்கெல்லையாகவும் ஊரெழு, உரும்பிராய், அச்செழு ஆகிய ஊர்களை மேற்கு எல்லையாகவும் சிறுப்பிட்டி என்ற ஊரினை வடக்கெல்லையாகவும் நீண்ட தரவை மற்றும் நீரேரியை கிழக்கெல்லையாகவும் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் என்றதும் பனைமரம் அதன் குறியீடாக அமைவதைப்போல நீர்வேலி என்றதும் எல்லோரது நினைவுக்கும் வருவது வாழைமரம் ஆகும். பெயர்க்காரணம் கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பிரிவினுள் நீர்வேலிக் கிராம நிர்வாகம் உள்ளடங்குகிறது. இவ்வூரின் பெயர்க்காரணமாக நீரை வேலியாக உடையதால் நீர்வேலி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது. நீர்வேலி ஊரின் கிழக்கெல்லையாக நீர்நிலை உள்ளமை இதற்குக் காரணமாகச் சொல்லப…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர்க்கு உலக நீதி - போர் குற்றம் - ஒரு கலந்துரையாடல் 01-08-2010 :- மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் தொகுப்பு பகுதி 1 ------------------------ http://www.youtube.com/watch?v=j72pcHLRCdU பகுதி 2 & பகுதி 3 ... பகுதி 2 ------------- http://www.youtube.com/watch?v=iNgV798SOtk பகுதி 3 http://www.youtube.com/watch?v=ULuWbWMV3js http://tamil-eelam-discussions.blogspot.com/ ---------------------------------
-
- 1 reply
- 813 views
-
-
அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை! ஓசியன் லேடியில் கடந்த வருடம் கனடா வந்த இளைஞன் நினைவு கூருகின்றார் சனி, 14 ஆகஸ்ட் 2010 22:44 . . அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை.. ஆனால் நான் எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றமைக்காகவே எனது நாட்டை விட்டு வெளியேறினேன் - இப்படி கூறினார் ஓசியன் லேடி கப்பல் மூலம் கடந்த வருடம் கனடாவை வந்தடைந்த ஈழத் தமிழர்கள் 76 பேரில் ஒருவரான 21 வயது இளைஞன். அவர் பாதுகாப்புக் காரணங்களாக பெயரை வெளிப்படுத்த மறுத்து விட்டார். ஆயினும் அக்கடல் பயணத்தின்போது எதிர்கொண்ட பேராபத்துக்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் தெரிவித்தவை வருமாறு:- ”நான் மூன்று இலட்சம் தமிழர்களில் ஒருவராக வவுனியாவில் முட்கம்பி முகாம்களுக்குள் …
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒரு தலைக்கு 50 ஆயிரம் டொலர் வரை விலை! ! ஞாயிற்றுக்கிழமை, 15 ஆகஸ்ட் 2010 10:25 . .எம்.வி.சன்.சி கப்பலில் கனடா வந்திருக்கும் ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவரும் கப்பல் கட்டணமாக 40 ஆயிரம் அமெரிக்க டொலர் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் வரை செலவு செய்துள்ளார்கள் என்று தெரிய வருகின்றது. தாய்லாந்தில் இருந்து கனடாவுக்கான இம்மூன்று மாதப் பயணத்துக்காக இப்பெருந்தொகைப் பணத்தை மனிதக் கடத்தல்காரர்களுக்குக் கொடுத்துள்ளார்கள் என்று கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ் தெரிவித்துள்ளார். ஆயினும் குடும்பமாக வந்திருக்கின்றவர்களுக்கும், சிறுவர்களுக்கும் இப்பயணக் கட்டணத்தை செலுத்துகின்றமையில் ஏதாவது சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா? என்பது தெரியவில்லை என்றும் அவர்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாரிய இக்கட்டில் மாண்டுள்ள இலங்கையின் ஆட்சிபீடம் காஸ்மீர் பிரச்சனையை தலையில் வத்து கூத்தாடியவர்களுக்கான அறிவிப்பை ஒபாமா அரசின் அனுசரணையோடு பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ளார்.இவ்வறிவிப்பால் முதலில் ராஜதந்திரரீதியாக பாதித்துள்ள இலங்கை பல அழுத்தங்களையும் எதிர் நோக்கவுள்ளது.இதற்கு வலு சேர்க்கும் விதமாக சரத்பொன்சேகாவின் பதக்கபறிப்பும் நடைபெற்றுள்ளது.
-
- 1 reply
- 1.8k views
-
-
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய உடனடித் தேவைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சாத்தியமான வழியில் விரைவாகத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கத்தினால் நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி கூட்டம் கிழக்கு மாகாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் 9 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானத்துக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அவர்கள் உத்தியோகபூர்வமான முறையில் பதிலளிக்கவில்லை எனத் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் தெரிவித்துள்ளது. உட்கட்டமைப்பு…
-
- 2 replies
- 760 views
-
-
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என்று பகிரங்கமாகக் கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும், அதற்காக இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைச்சர் கிருஷ்ணா அளித்துள்ள பதில்கள் தமிழர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக நெடுமாறன் கூறியுள்ளார். இலங்கை கடற்பகுதிக்கு எல்லை மீறி…
-
- 3 replies
- 955 views
-
-
நீதிகேட்டு நடக்கும் சிவந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
-
- 1 reply
- 670 views
-
-
தன் மகன் இன்னமும் உயிருடன் இருக்கலாம் எனவும் என்றோ ஒரு நாள் திரும்பி வருவார் எனவும் நம்பிக்கொண்டு இருக்கின்றார். கிளினொச்சி ஆனந்த புரத்தை வசிப்பிடமாக கொண்ட அழகம்மா ரீச்சர். 53 வயதான அழகம்மா ரீச்சரின் கணவர் 2008 சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். தன்னுடைய மகன் வன்னி போரில் முள்ளிவாய்க்கால் வரை புலிகள் அமைப்பில் இருந்தார். மகன் போரிற்கு சென்றார். அதன் பின்னர் மகன் என்ன ஆனார் என்று தெரியவில்லை. ஆனாலும் மகன் உயிருடன் சரணடைந்ததாக பலர் கண்டுள்ளனர். எனினும் இவர் தேடாத இடங்கள் இல்லை, செல்லாத அலுவலகங்கள் இல்லை. இதுவரை எந்த பதிலும் யாரிடத்தில் இருந்தும் கிடைக்கவில்லை. எனினும் மகன் எங்கோ இருக்கின்றார் அவர் உயிருடன் வருவார் என காத்திருகின்றார். …
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி இன்று 23வது நாளாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். மலைப் பிரதேசங்கள் ஊடாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தன் நேற்றும், இன்றும் கடும் மழையின் மத்தியில் தனது பயணத்தை உறுதியுடன் மேற்கொண்டு வருகின்றார். மழை காரணமாக இரவிலும், பகலிலும் நடை பயணம் மற்றும் தங்குமிடங்களில் பாரிய இடர்கள் எதிர்நோக்கப்படுகின்ற போதிலும், சிவந்தனும், அவர்களுக்கு உதவியாகச் செல்பவர்களும் தமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடும் மழையின் மத்தியில் நேற்று 30 கிலோமீற்றர்கள் நடந்திருந்த சிவந்தன் இன்றும் மக்களின் ஆதரவுடன் தனது பயணத்தைத் தொடர்ந்து வர…
-
- 0 replies
- 741 views
-
-
இலங்கை அரசிற்கு எதிராகப் போராடாதீர்கள் – உளவியல் யுத்தம் : சபா நாவலன் இலங்கைப் அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலையின் பின்னான அரசியல் பல அரசியல் பிரச்சனைகளுக்கான உரைகல். புதிய முகாம்கள், புதிய சார்பு நிலைகள் என்று ஒவ்வொரு அரசியல் மனிதனும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மிகக் குறிப்பான காலகட்டம் ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நினைத்துப் பார்க்க முடியத அழிவுகள். அதிர்ச்சியூட்டும் அணி சேர்க்கைகள! இவற்றின் பின்புலத்தில் உருவமைக்கப்படும் சமூகப் பொதுப்புத்தி என்பது அழிவுகளை அங்கீகரிக்கக் கோருகிறது. இதற்காக அதிகார வர்க்கம் செயலாற்றும் வழி முறை அதன் செல் நெறி என்ப்னவெல்லாம் மிகுந்த சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவிற்கு மிகுந்த அச…
-
- 0 replies
- 1.1k views
-