Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தரம் 5 பரீட்சையில் தேசிய மட்ட முதலிடங்கள் வெளியிடப்படாது – ப.ஆ. தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையின் தேசிய மற்றும் மாவட்ட ரீதியான கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் இருக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கூறப்படுகின்றது. தேவையற்ற போட்டித் தன்மையினால் மாணவர்களிடையே அநீதி இழைக்கப்படுவதை தடுப்பது திணைக்களம் எடுத்துள்ள இந்த தீர்மானத்துக்குரிய காரணமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார் http://www.dailyceylon.com/190442/

    • 0 replies
    • 307 views
  2. கொழும்பு பேலியகொடயில் ரயில் வீதிக்கு மேலாக அமைக்கப்பட்ட மேம்பாலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளது 3/25/2008 10:39:00 AM வீரகேசரி இணையம் - கொழும்பு பேலியகொடயில் ரயில் வீதிக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள 325 மீட்டர் நீளமான மேம்பாலம் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. இப்பாலத்தை 61 நாட்களில் நிர்மாணித்தன் மூலம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனை இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ் அரசாங்கமே நிகழ்த்தியிருந்தது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரத்தில் சுமார் 300 மீட்டர் நீளமான மேம்பாலத்தை அந்நாட்டு அரசாங்கம் 66 நாட்களில் நிர்மாணித்தது. கொழ…

  3. வழமை போன்று புலிப் பூச்சாண்டி பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரி-56 ரக துப்பாக்கியொன்றுடன் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் சேருநுவர பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேருநுவர இராணுவ முகாமின் அதிகாரி ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், குண்டுகள், செல்லிடப்பேசிகள், பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட ரீசேர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த வீட்டியில் தங்கியிருந்த சந்தேக நபரின் மனைவி, சகோதரி ஆகியோரையு…

  4. (அப்துல்சலாம் யாசீம்) ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை புறக்கணிக்க வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், "ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள 35 வேட்பாளர்களில் தமிழ் பேசும் மக்களின் பொதுவேட்பாளராக நான் களம் இறங்கியுள்ளேன். பிரதானமான முக்கிய அரசியல் கட்சிகளில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரும் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளியுள்ளனர்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.l…

    • 3 replies
    • 688 views
  5. சிறிலங்கா படையினரின் கடுமையான எறிகணை வீச்சைத் தொடர்ந்து மடுத்திருத்தலத்திலிருந்து மாதா சிலை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு தேவாலய பங்குத்தந்தை மற்றும் பணியாளர்களிற்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். மன்னார் ஆயரே தான்தான் மாதா சிலையை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதாக டெய்லி மிரர் மற்றும் தமிழ்நெட் ஆகியவற்றிற்குத் தெரிவித்திருந்தார். ஆனால் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு புலிப்பயங்கரவாதிகளின் தேவாலய வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பலவந்தப்படுத்தியதாகவும் மன்னாரில் உள்ள செல்வாக்குமிக்க பயங்கரவாதிகளின் ஆதரவாளர் ஒருவரின் முழுமையான ஒத்துழைப்பு இதற்குக் கிடைத்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு இணையத் தளத…

  6. இலங்கையின் வடக்கில்கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் ஒரு கனடிய பிரஜை கொலை செய்யப்பட்டமை குறித்து இலங்கை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக கனடா கூறியுள்ளது. போர் காலத்தில் தாம் இழந்துபோன தமது குடும்ப சொத்துக்களை மீளப் பெறும் நோக்கத்துடன் கனடாவின் பிரஜையான அந்த இலங்கை தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் அங்கு வந்திருந்தபோது கொல்லப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. கிளிநொச்சி நகருக்கு சற்று வெளியே அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா என்னும் அந்த நபர் ஒரு குழுவினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இலங்கைக்கான கனடாவின் தூதுவர் புரூஸ் லெவி பிபிசியிடம் கூறியுள்ளார். பல வருடங்களாக விடுதலைப்புலிகளின் தலைமையகமாக திகழ்ந்த இந்தப் பகுதி தற்போது இலங்கை இராணுவத்தின் கடுமையான பா…

  7. தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அச்சம்- சிவஞானம் (தி.சோபிதன்) தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்ப்பாளர்களும் ஒளித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களி…

    • 3 replies
    • 497 views
  8. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அடுத்த வெளிநாட்டு விஜயமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்தார். அதன் பின்னர் ஜனாதிபதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, பிராந்திய வல்லரசுகளாக இந்தியா மற்றும் சீனாவுக்கு விஜயம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். உலகின் அனைத்து நாடுகளுடனும் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த விஜயங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=308530

      • Like
      • Thanks
      • Haha
    • 19 replies
    • 956 views
  9. அதி உயர் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அரசியல்வாதிளுக்கு இந்தியாவின் கூர்க்கா படையினரை பாதுகாப்பிற்காக அமர்த்தும் யோசனை பற்றி அரசு தனது கவனத்தை செலுத்தியுள்ளது. இது சம்பந்தமாக யோசனையை பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன் வரும் காலங்களில் இத்திட்டத்தைப் பற்றி அரச மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளது. ஆசியாவின் சில நாடுகளில் கூர்க்காப் படையினர் உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கும் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு அமர்த்தப்பட்டள்ளனர். கூர்க்கா படையினர் பாதுகாப்ப வழங்குவதில் அதி சிறந்தவர்கள் என்பது பலரது கருத்து. இலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயர் உயிர் அச்சுறுத்தல்களைக் கருத்திற் கொண்டு இத்திட்டத்தை பரிசீலனை செய்த…

    • 4 replies
    • 1.2k views
  10. பிரித்தானிய மகாராணியின் வைரவிழா கொண்டாட்டங்களுக்கு போர்குற்றவாளியும் இலங்கை ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ வருவதனை தடுத்து நிறுத்தும் மற்றொரு முயற்சியினை பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபடியாக, பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை அவர்கள் வதியும் தொகுதிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம், மஹிந்த ராஜபக்ஷவினை வரவிடாமல் தடுக்க ஆவன செய்ய வலியுறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இதனை இலகுபடுத்தும் நோக்கில், கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கு வசதியான இரண்டு மாதிரி கடிதங்கள் கீழ்வரும் இணைப்புக்களில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வசதியான ஒரு முறையின் மூலம் தமது தொகுதிக்கு…

  11. தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை நிராகரித்தார் சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை முன்னாள் சட்ட மா அதிபரும், அரசியல் சாசன சட்ட வல்லுனருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார். அரசியல் சாசனத் திருத்தங்கள் குறித்த குழுவில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியாவில் வதியும் சிவா பசுபதி, கடந்த வாரம் தனிப்பட்ட ரீதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். தொலைபேசி மூலம் விக்னேஸ்வரன் இந்த அழைப்பினை விடுத்திருந்தார் எனவும், தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பு ஒன்றியம் அவசியம் கிடையாது என சிவா பசுபதி தெரிவ…

  12. தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டாபயவுக்கு ஆதரவு! தமிழரசு கட்சியின் வாகரை பிரதேச சபை வட்டார உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் செயலாளருமான பாலசிங்கம் முரளிதரன் ஜனாதிபதி தேர்ததில் போட்டியிடும் பொதுஜன பெரமுனை கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், “அன்று நாங்கள் ஆயுத ரீதியான போராட்டத்தை செய்து கொண்டிருந்தோம் 2009 யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் எங்களுடைய சமூகம் அநாதைகளாக இருக்கின்றார்கள். இன்று கிழக்கு மாகாண தமிழ் மக்களாகிய நாங்கள் …

  13. இலங்கைத் தமிழர்கள் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சட்ட விரோதமாகப் பயணம் செய்வதற்கு சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் முகவர்கள் கொழும்பு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள வலைப்பின்னல்களினூடாக.............. தொடர்ந்து வாசிக்க............................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6232.html

  14. தமிழ் மக்கள் பேரவை தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது. அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையானது கடந்த 2 ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தயாரிக்கும் நிபுணர்களடங்கிய உபகுழுவின் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தது. அந்த உபகுழுவின் பணி வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் உயரிய நோக்குடன் துறைசார் வல்லுநர்களடங்கிய உபகுழுவை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது…

  15. Published by Priyatharshan on 2019-11-15 17:04:15 (நா.தனுஜா) கோதுமைமாவின் விலை கூட்டப்படவோ அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. எமது நாடு மிகவும் முக்கியமானதும், நெருக்கடியானதுமான தேர்தலொன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் கோதுமைமாவின் விலையை அதிகரிப்பதென்பது திட்டமிடப்பட்ட சதி என்பதுடன், அது அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுவதுமாகும். எனவே உரிய அமைச்சு மற்றும் அதிகாரசபைகளின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் இவ்வாறான விலை அதிகரிப்பில் கோதுமைமா வழங்குநர்கள் எவரேனும் தொடர்புபட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தொழில், வர்த்தகம், இடம்பெயர்ந்தோருக்…

    • 0 replies
    • 265 views
  16. கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய வானூர்தி [வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008, 06:02 பி.ப ஈழம்] [காவலூர் கவிதன்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகருக்கு மேலாக, திடீரென வானூர்தி ஒன்று பறந்ததைக் கண்ட பொதுமக்கள் பதற்றமடைந்து ஓடினர். கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ள உயர் தொடர்மாடிக் கட்டடத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த பணியாளர்கள் சிலர், வானூர்தி ஒன்று பறந்து செல்வதை அவதானித்தனர். அப்பகுதியில் வானூர்தி எதுவும் அந்நேரத்தில் பறப்பதில்லை என்பதால் பதற்றமடைந்த பணியாளர்கள், அப்பகுதி மக்களுக்கு அறிவித்ததால் அங்கு பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. பின்னர் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான வானூர்திதான் அது என்று தெரிவிக்கப்பட்டதும் அப்பகுதி மக்களின் ப…

    • 0 replies
    • 1.3k views
  17. இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு அந்த பிரதேச குடியிருப்பாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு அந்த பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்; இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இன்னமும் தங்கியிருக்கின்றார்கள். தாங்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், தமது குடியிருப்புப் பகுதிகளில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் இவர்கள், இதற்கு இந்தியா உதவுவது குறித்து அந்த நாட்டின் மீது தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர். இது குறித்து பீ.பீ.சியிடம் கருத்து தெரிவித்த ம…

    • 0 replies
    • 1.4k views
  18. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களால் தான் சிறிலங்கன் விமானசேவை மற்றும் மிகின் எயர் விமான நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக ஐதேக குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்ற நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, “சிறிலங்கா அதிபரும் அவரது அமைச்சர்களும் இந்த விமானங்களைப் பயன்படுத்துவதால் தான் 24 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் இருந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மட்டும் 35 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். சிறிலங்கா அதிபரும் அவரது அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களால் நாட்டுக்கு அதிகபட்ச செலவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் மிகக்குறைந…

  19. மகிந்த ஏன் மயில்மாளிகையை விரும்புகின்றார் 18 ஜனவரி 2016 ஜோதிடம் மற்றும் அமானுஸ்ய சக்திகள் மீதான ஆர்வம் என்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை பொறுத்தவரை இரட்டைமுனை கத்திகளாகவே காணப்பட்டுள்ளன. அவற்றின் மீதான நம்பிக்கை அவரிற்குபாரிய வெற்றிகளை வழங்கிய அதேவேளை அதலபாதளத்திலும் தள்ளியுள்ளன. எனினும் ஜோதிடர் ஓருவரின் எதிர்வுகூறல் காரணமாக தனக்கு மிகவும் விருப்பமான பெலவத்தை மயில்மாளிகையில் குடியேறுவதற்கான மகிந்தராஜபக்சவின் விருப்பத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.அந்த மாளிகையில் குடியேறினால் முன்னாள் ஜனாதிபதியின் அரசியல்எதிர்காலம் மீண்டும் உச்சத்திற்கு செல்லும் இதனால் அந்த வீட்டை ம…

  20. மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுகேணிபகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மூன்று இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது, மீன் பிடிப்பதற்காக சென்ற இளைஞர்களில் 4 பேர் நீரில் மூழ்கிய நிலையில், ஒருவர் உடனடியாக அப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டிருந்தார். அதனையடுத்து, காணாமல் போன மூன்று பேரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே குறித்த மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மடடககளபபல-நரல-மழகய-மவர-உயரழபப/150-241507

  21. ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின! முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்தவகையில் மஹிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு முதல் 2014 வரை – 3,572 மில்லியன் ரூபாயினையும், மைத்திரிபால சிறிசேன – 2015 ஆம் ஆண்டு முதல் 2019 வரை 384 மில்லியன் ரூபாயினையும், கோட்டாபய ராஜபக்ச – 2020 ஆம் ஆண்டு முதல் 2022 வரை 126 மில்லியன் ரூபாயினையும், ரணில் விக்ரமசிங்க – 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் 533 மில்லியன் ரூபாயினையும், அநுர குமார திசாநாயக்க கடந்த செப்டம்பர் மாதம…

  22. நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகருத்திருக்கின்ற நிலையில், அரசாங்க செலவினங்களும் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் பொது மக்களின் பார்வை எவ்வாறு இருக்கிறது என்பது பற்றிய அறிக்கை ஒன்றினை எல்.எம்.டி சஞ்சிகை வெளியிட்டுள்ளது. " நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு அபிப்பிராயங்கள் இருக்கின்றபோதிலும், எல்லோரும் ஒரு விடயத்தை மாத்திரம் ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களின் சமூக, மத, நம்பிக்கைகள் எவ்வாறிருப்பினும், எம்மிடம் பேசிய 80 வீதமான மக்கள் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனும் கருத்தில் ஒன்றுபடுகின்றனர்" என எல்.எம்.டி சஞ்சிகையின் மே மாத இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவினம் ஏற்றுக்கொள்ளத்தக்…

    • 1 reply
    • 737 views
  23. ஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை சரித்திரம் பெறும் கதைகளை மகாகாவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மண்ணை நான்தொட்டு வணங்குகிறேன். இந்த மண்ணைத் தொழுகின்றபோது எனக்கு என்ன உணர்வு வந்ததென்று ஆயிரம் சொற்களால் எழுதிவிடமுடியாது. முதன்முதலில் மண்ணில் விழும் மழைத்துளிக்கு ஒரு சிலிர்ப்பு வரும், மண்ணுக்கு …

  24. Published By: Vishnu 07 Mar, 2025 | 03:45 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்-தையிட்டி பகுதியில் தனியார் காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதை அமைச்சர் அறியத்தருவாரா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27 /2 பிரகாரம் ''திஸ்ஸ ராஜமகா விகாரை''தொடர்பில் கேள்விகளை ம…

  25. கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்? இரு நாட்களில் வெளியிட அரசாங்கம் உத்தேசிப்பு புதன், 14 மே 2008 [கொழும்பிலிருந்து மயூரன்] கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பதை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் முன்னணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அதிகூடிய விறுப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே முதலமைச்சராக தெரிவு செய்யப்படவுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/?p=241

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.