ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பில்லை [Monday February 11 2008 03:16:44 PM GMT] [யாழ் வாணன்] இந்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இடதுசாரிக்கட்சியான ஜே.வி.பி.யிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1970ஆம் ஆண்டு முதல் மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்டின் வருடாந்தா மாநாடு கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேண்டுகோளை அடுத்தே கம்யுனிஸ்ட் மாநட்டிற்காக ஜே.வி.பி.யிற்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
தென்னாசியப் பிராந்தியத்தில் ஆழமாக கால்பதிக்கும் அமெரிக்கா! By naatham On 29 Mar, 2012 At 07:26 AM | அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு திட்டத்தின் ஒர் அங்கமாக ஒஸ்றேலியாவுக்க்கு சொந்தமான சொந்தமான கோக்கோஸ் தீவில் பாரிய கடற்படைத்தளத்தினை அமைக்கும் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட அமைக்கப்படவுள்ள இந்தக் கடற்படை தளத்துக்கான அனுமதியை அமெரிக்காவாவின் நாடாளுமன்றம் வழங்கியுள்ளது. ஒஸ்றேலியாவின் டார்வின் தீவிலும் அமெரிக்கப்படைகளை நிலைநிறுத்துவதற்கான தளம் ஒன்று அமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒஸ்றேலியாவின் கோக்கோஸ் தீவில் இந்தப் பாரிய படைத்தளம் உருவாகின்றது. அமெரிக்க அரசுத் தலைவர் …
-
- 0 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் தொடர்பில் இலங்கை ஊடகங்களில் வெளியான தகவல்களை இந்தியா மறுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் தமிழகத்தில் இயங்கி வருவதாக அண்மையில் இலங்கையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. மூன்று இரகசிய முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்தத் தகவல் முழுமையாகவே பிழையானதும், அடிப்படையற்றதுமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான முகாம்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரோ அல்லது அரசாங்கமோ தகவல்களை பரிமாறவில்லை என தெரிவ…
-
- 2 replies
- 978 views
-
-
அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்ற கலைப்பு குறித்து முடிவு Sep 05, 2019 | 2:27by கி.தவசீலன் in செய்திகள் 19 ஆவது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் சிறிலங்கா அதிபரிடம் இருந்து நீக்கப்பட்டிருப்பதால், இந்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தல்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான எந்த முடிவும் சபை உறுப்பினர்களால் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று ஜேவிபி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார். இன்று நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் உள்ளது. கடந்த காலங…
-
- 0 replies
- 326 views
-
-
“மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” உணவு திருவிழா ஆரம்பம்! கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது “மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன் பாரம்பரிய உணவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை தயாரிக்கும் முறைகளும் இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையியின் பிரதிப் பணிப்பாளர் தயாளினி, கிளிநொச்சி மாவட்ட சித்த ஆதார வைத்தியசாலையியின் மருத்துவ அத்தியட்சகர் அரவிந்தன், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், …
-
- 0 replies
- 331 views
-
-
ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது ஜா-எல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா-எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜா-எல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி ஒரு கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்…
-
- 0 replies
- 388 views
-
-
ஆலையடிவேம்பு பகுதிகளில் ஆயுதபாணிகள் பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற அதிர்ச்சி சம்பவங்கள் [14 - March - 2008] * பத்மநாதன் எம்.பி.யிடம் முறைப்பாடு அம்பாறையில் ஆலையடிவேம்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு இரவு நேரங்களில் வரும் ஆயுதம் தாங்கியோர் பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த மாதம் 25 ஆம் திகதிக்குப் பின்னர் ஆலையடிவேம்பு , கோளாவில், நாவற்காடு, வாச்சிக்குடா, அக்கரைப்பற்று -8 உட்பட பல பிரதேசங்களைச் சுற்றி வளைத்து பாரிய தேடுதல்களை நடத்திய விசேட அதிரடிப்படையினர் வீடு வீடாகச் சென்று அனைவரையும் வீடியோ படமெடுத்துள்ளனர். இதற்குப் பின்னரே இவ்வாறான மோசமான சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பலர் தன்னிடம் …
-
- 0 replies
- 859 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்தவிடம் இந்தியக் குழு வலியுறுத்தியதா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், இந்தியக்குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் நழுவியுள்ளனர். இலங்கை சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமாலை சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அச்சந்திப்பின் போது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு புனர்வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதேபோல போரின்போது நடந்த மனிதஉரிமை மீறல்களும் முக்கிய பிரச்சினை. இதுகுறித்து, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இந்தியக் குழு வலியுறுத்தியதா என்று செய்தி…
-
- 0 replies
- 455 views
-
-
SMS களின் காட்டிக்கொடுப்பு !!! தமிழரசுக் கட்சியையும் – மக்களையும் வழிநடத்தவும் வழித்தெரியாமல், கட்சியின் பிரச்சினைகளை அன்னிய நாட்டின் இராஜதந்திரிகளிடம் கையளிப்பதையும், கட்சியைப் பற்றியும் – கட்சியின் தலைமையைப் பற்றியும் விமர்சிக்கின்ற கட்டுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், செய்தி ஆசிரியர்களை வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் ஊடக நிறுவனங்களின் தலைமையிடமும் காட்டிக்கொடுப்பதையும், வழக்கமாகக் கொண்டுள்ள SMS களின் (சம்பந்தன் – சுமந்திரன் – மாவையின்) கையாலாகத்தனம் இன்று அனைத்து மட்டங்களிலும் அம்பலப்பட்டு இராஜதந்திரிகளே முகம் சுழிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. இந்த காட்டிக்கொடுப்பின் உச்சக்கட…
-
- 1 reply
- 959 views
-
-
கூட்டணி குறித்த ஸ்ரீ ல.சு.கட்சியின் அறிவிப்பு இன்று ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதா? இல்லையா? என்பது தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. நேற்றுமுன்தினம் சு.கவின் மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவையே கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(7) அறிவிக்க இருப்பதாக சு.க தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுன் முடிவு நேற்று அறிவிக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க அறிவித்திருந்த போதிலும், அது இன்று வரை பின்போடப்பட்டுள்ளது. http://www.dailyceylon.com/190453/
-
- 0 replies
- 226 views
-
-
தமிழரின் சுயநிர்ய உரிமையை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் [25 - March - 2008] * உலகளாவிய ரீதியில் 47 இடதுசாரி அமைப்புகள் வலியுறுத்தல் தமிழ்த்தேசிய இனத்தின் தாயகம் சுயாட்சி மற்றும் சுய நிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அதன் அடிப்படையில் தீர்வொன்றைக் காண்பதற்கு உலகெங்குமுள்ள இடதுசாரி, முற்போக்கு அமைப்புகள் தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள், முற்போக்கு ஊடகங்கள் ஆதரவளிக்க வேண்டுமென 47 இடது சாரி அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பாகவே நேற்று புதிய இடதுசாரி முன்னணியின் பிரமுகர்கள் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் இந்த வேண்டுகோள் பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த நிறு…
-
- 0 replies
- 1k views
-
-
முன்னாள் போராளிகளின் தற்கொலைகள் காரணம் நாங்களா ? Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, May 5, 2012 நேற்று (04.05.2012) பொலிகண்டியைச் சேர்ந்த 38வயதான சுகந்தி சிவலிங்கம் என்ற முன்னாள் பெண்போராளியின் தற்கொலை பற்றிய செய்தி இந்த நிடமிடம் வரை சூடு தணியாமல் நமது செய்திகளில் நிற்கிறது. இந்தப் போராளியின் தற்கொலைக்கான இரங்கல்கள் , வீரவணக்கங்கள் , இவற்றையும் தாண்டிய அரசியல் சிந்தனைகள் என சுகந்தியின் மரணம் பல்வேறு வகையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இனிவரும் சிலநாட்களில் சுகந்தியின் தற்கொலை பற்றிய தமிழ் ஊடகப்புலனாய்வு பரபரப்புச் செய்திகளும் வரும். இன்னும் சில வாரங்களில் சுகந்தியென்ற ஒருத்தியையும் மறந்துவிடுவோம். எத்தனையோ மரணங்கள் மனித வலிகள…
-
- 0 replies
- 751 views
-
-
கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி கடந்த 08 ஆம் திகதி இரவு 7.15 மணிக்கு சென்ற பேருந்தில், விடுமுறைக்கு சென்று வந்த இராணுவத்தினர் பேரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்து பயணத்திற்கு இடையூறு விளைவித்த வண்ணம் வந்துள்ளனர். இதனை அவதானித்த இப்பேரூந்தில் பயணம் செய்த இளைஞர்கள் சிலர் தடுக்க முயன்றுள்ளதுடன் இவ்வாறாக நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் சிவில் உடையில் குடிபோதையில் இருந்த இராணுவத்தினர் தொடர்ந்தும் தொந்தரவு செய்து கொண்டிருந்தமையினால், குறிப்பிட்ட இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது. அவ்வேளையில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆனைவிழுந்தானை பேரூந…
-
- 0 replies
- 781 views
-
-
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பதிலாக புதிய தேர்தல் கூட்டணியொன்றை உருவாக்க விமல் வீரவன்ச தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போதைக்கு புதிய கூட்டணியில் சுமார் பத்து அரசியல் கட்சிகள் இணைந்து கொண்டுள்ளதாக விமல் வீரவன்சவின் கட்சி அறிவித்துள்ளது. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் ஊடகத் தொடர்பாளர் முஸம்மில் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெலஉறுமய, தினேஷின் மக்கள் ஐக்கிய முன்னணி, வாசுதேவ கட்சி, டியூ குணசேகர கட்சி, நவ சிஹல உறுமய, திஸ்ஸ அத்தநாயக்கவின் கட்சி, போன்ற கட்சிகளே விமல் வீரவன்சவின் கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளன. இவற்றோடு முன்ன…
-
- 0 replies
- 512 views
-
-
சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையின் புதிய படையணி ஒன்று பயிற்சியை முடித்து வெளியேறியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழில் 4 நாளில் 35 பேருக்கு டெங்கு யாழில் கடந்த நான்கு நாட்களில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி 35 சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை வட்டார புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு 1309 பேர் இந்த நோயின் தாக்குத்துக்குள்ளாகியிருந்து, அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர். 2014 ஆம் ஆண்டு 1339 பேர் நோயின் தாக்கத்துக்குள்ளாகியிருந்து ஒருவர் உயிரிழந்திருந்தார். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகமான நோயாளர்கள் (357 நோயாளர்கள்) இனங்காணப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவான நோயாளர்கள் (348 நோயாளர்கள்) இனங்காணப்பட்டுள்ளனர் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid…
-
- 0 replies
- 432 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையோ அவரது குழுவினரோ இலங்கை வருவதால் அரசுக்கு எவ்விதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் நாட்டின் உள்ளக நிர்வாகங்களில் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிப்பதாகவோ அவர்களின் விஜயம் அமையக் கூடாது. என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கையின் உள்ளார்ந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை. வடக்கு கிழக்கில் முகாம்களை நிர்மாணித்தல், அரசியல் தீர்வை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளை ஆராய்வது போன்ற விடயங்கள் உள்நாட்டு விவகாரங்களாகும். இதில் சர்வதேச நாடுகள் தலையிட்டு நாட்டின் நீதிமன்ற பொறிமுறையினை இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அரசாங்கம் குறிப்பிட்ட…
-
- 2 replies
- 691 views
-
-
ஸ்ரீலங்கன் விமான நிலையத்தின் விமானிகள் பலர் ஒரே தடவையில் சுகயீன விடுமுறை எடுத்துக் கொண்டதால் பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மற்றும் துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமால் ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படாமையினால் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஸ்ரீலங்கன் விமான நிலையத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்ற போது விமானிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது, இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். எனினும், இதுவரையில் குறித்த எந…
-
- 0 replies
- 1.6k views
-
-
மாபெரும் இனப்படுகொலையினை செய்துவிட்டு அது குறித்த எவ்வித குற்ற உணர்வும் இன்றி நடமாடித்திரியும் மனித மிருகம் ராஜபக்சே இரண்டாவது தடவையாக லண்டன் மண்ணிற்கு வந்தபோது நேரிடையாக நின்று துரத்தியடித்த பிரித்தானிய ஐரோப்பியவாழ் ஈழத்தமிழர்களின் வீரத்தை சிரம்தாழ்த்தி வணங்கிநிற்கின்றது ஈழதேசம் இணையம். ஒக்த்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த கொலைவெறியன் மகிந்தவை குறுகிய கால அவகாசத்தில் துரிதமாக செயற்பட்டு விரட்டியடித்து போர்பரணி பாடிநின்ற பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்கள் இம்முறை அதனிலும் பலபடி சென்று சாதனை படைத்துள்ளார்கள். கடந்த முறை ஒக்த்போர்ட் பல்கலைக்கழகத்தில் கொலைவெறியனின் பேச்சை நிறுத்திய உங்களது போராட்டம் இம்முறை பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டையே நிறுத்திவைக்கும…
-
- 2 replies
- 686 views
-
-
இந்த வருட இறுதியில் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும் என கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். மன்னாருக்கு இன்று வருகை தந்த கடற்தொழில் அமைச்சர், மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பாகவும் மன்னார் கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தில் கலந்துரையாடினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மன்னார் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி பலர் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிறு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இது தொடர்பில் பலர் இங்கு என்னிடம் முறையிட்டுள்ளனர். எனவே தடை செய்யப…
-
- 0 replies
- 298 views
-
-
எங்கள் தமிழ் அரசியல் வரலாற்றை ஒரு கணம் எட்டிப் பார்க்கின்றேன். அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின் ஜனநாயக வீரம் புரிகிறது. இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது. கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது. காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது. இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது. இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை. தமிழ் அரசியல் தரப்புகளைப் பார்த்து நக்கலும் நையாண்டியும் செய்கின்ற அளவிலேயே முகநூல் பதிவுகள் உள்ளன. இந்த உண்மைகளைக்கூட எங்கள் தமிழ…
-
- 6 replies
- 1.4k views
-
-
20 FEB, 2025 | 03:56 PM இலங்கை தனிமைப்பட்ட நிலையில் இருக்க முடியாது. இலங்கை ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவது அவசியம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற இனொவேசன் ஐலண்ட் உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முதலாவதாக இலங்கை ஒரு பெரும்மாற்றத்தின் தருணத்தில் உள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இரண்டு தேர்தல்களின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பில் புதிய விதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் பெருந்தொற்றும் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியும், பல தசாப்தங்களாக இலங்கையர்கள் எதிர்பார்த்த மாற்றங்களிற்கான தேவைகளை வெளிப்படு…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
இலங்கை அரசினால் பஸ்களிலும் கிராமங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்டன எனக் கூறப்படும் தாக்குதல்களுக்கான பதில் நடவடிக்கையாகவே கடந்த வருடம் மேற்கொண்ட பல தாக்குதல்கள் அமைதிருக்கின்றன எனத் தெரிகின்றது என்று அமெ. வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை அச்சுறுத்தவதற்காகா இலங்கை அரசு ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்துகிறது எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. உலக நாடுகளின் பயங்கரவாத நிலைமை குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமெரிக்காப் பிரஜைகளையோ சொத்துகளையோ இலக்கு வைக்கவில்லை என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப…
-
- 7 replies
- 2.7k views
-
-
சம்பிக்க ரணவக்க ஆவேசம்! அமெரிக்கா தனது ஆணவத்தை இலங்கை விவகாரங்களில் காட்ட முற்பட்டால் அதனை வேடிக்கை பார்க்கப்போவதில்லை - சம்பிக்க ரணவக்க ஆவேசம்! இந்தியாவின் முட்டாள் தனத்திற்கும் அமெரிக்காவின் ஆணவத்திற்கும் இலங்கை ஒரு போதும் அடிபணியாது. வட மாகாண சபை தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கட்டளையிட வேண்டியதில்லை என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேற்குலக நாடுகளில் புலிகள் சுதந்திரமாக செயற்படுகின்றனர். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் சென்ற போது அங்கு புலிகள் செயற்பட்ட விதமும் அதற்கு ஏற்றாற் போல் அந்த நாடுகளின் பாதுகாப்பு ஒழுங்குகளின் குறைகளும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயங்களாகும் என்றும…
-
- 2 replies
- 801 views
-
-
வயது முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இம்சை வயது முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இம்சை செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இளம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வழிகளில் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் தொல்லைகளை கொடுத்து வருவதாக கொழும்பில் தகவலகள்; வெளியாகி உள்ளன. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளை அடிக்கடி தொட்டு வாழ்த்து தெரிவிப்பது, மேனி அழகை ஆபாசமான முறையில் வர்ணித்தல் போன்ற பல்வேறு வழிகளில் மூத்த பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை அசௌகரியத்தில் ஆழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 386 views
-