ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
சிறிலங்காவின் மத்திய மாகாணம், கண்டியில் உள்ள கிராமம் ஒன்றில் முஸ்லிம் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள மோதல் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட பலர் படுகாயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 399 views
-
-
கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் – இன்று முதல் புதிய நடைமுறை அமுல் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன. பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலம் முழுவதும் இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக ஒருநாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் நடைமுறை நேற்று வரை அமுலில் இருந்த நிலையில், இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் தாமதம் மற்றும் அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை எடுக…
-
- 1 reply
- 309 views
-
-
கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து நாளை ஓய்வுபெறும் எயர் சீஃப் மாசல் டொனால்ட் பெரேரா வெளிநாடு ஒன்றுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படவிருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்களாதேஷ், வியட்நாம் உட்பட ஐந்து நாடுகளில் ஏதாவது ஒன்றில் இவர் தூதுவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. வானூர்தி படைத் தளபதிப் பதவி உட்பட பல முக்கியமான பதவிகளை அவர் கடந்த காலங்களில் வகித்துள்ளார். வான் படைத் தளபதிப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 30 வருட காலம் இவர் வான் படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் இராணுவத் தளபதிப் பதவியில…
-
- 0 replies
- 506 views
-
-
முப்படையைச் சேர்ந்தவர்களே இன்று அதிகளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இன்று நாட்டில் இடம்பெற்று வரும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் அதிகளவில் பொலிஸாரும் படையினருமே தொடர்புபட்டிருக்கின்றனர்.கொள்ளைக் கூட்டத்தில் முப்படையைச் சேர்ந்த ஒருவரேனும் இருக்கின்றார். கொலை செய்தால் தூதுவர் பதவி கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.குடிக்க சுத்தமான நீரைக் கேட்டால் அரசாங்கம் அவர்களை தேசத்துரோகிகள் என்கிறது. குற்றவாளிகளே இன்று உயர் பதவிகளை வகிக்கின்றனர். எங்களது கடவுச் சீட்டில் ஜனநாயகக் குடியரசு என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை இன்று நாட்டில் இருக்கின்றதா?குடிநீர் கேட்டவர்கள் க…
-
- 0 replies
- 805 views
-
-
சிங்கள கருத்துக்களுக்கு பதில் கருதுக்கள் எழுதவும் http://www.guardian.co.uk/commentisfree/20...ka-tamil-rights
-
- 0 replies
- 613 views
-
-
"வெலிவேரியாவில் மூன்று உயிர்கள் இராணுவத்தினரால் காவுகொள்ளப்பட்டதற்கு உடனடியாகவே பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ள அரசு, முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட போரை நடத்தியதற்காக இதுவரை மன்னிப்புக் கோரவில்லை. இதிலிருந்தே தமிழர்களுக்கு இந்நாட்டில் நியாயம் கிடைக்காது என்பதை சர்வதேச சமூகம் அறிந்துகொள்ளவேண்டும்." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வெலிவேரிய சிங்கள மக்கள்விவகாரம்; முள்ளிவாய்க்காலோ தமிழ் மக்கள் விவகாரம் என்றபடியால்தான் அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என்றும் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சுத்தமான குடிதண்ணீருக்காக போராட்டம் நடத்திய வெலிவேரிய மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியமைக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்ச…
-
- 1 reply
- 279 views
-
-
போராட்டத்தைப் பலவீனப்படுத்த ரணில் சதி! - கேப்பாப்பிலவு மக்கள் விசனம் [Thursday 2017-04-20 17:00] பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தாளும் தந்திரத்துக்கு நாங்கள் பலிக்கடாவாக மாட்டோம் என, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர். படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்க கோரி, படை முகாமுக்கு முன்பாக கேப்பாப்பிலவு மக்கள் நடத்தி வரும் போராட்டம் 51 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்படுமெனவும் தகவல் வெளியானது. எனினும், “எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது. கோரிக்கை. அவ்…
-
- 0 replies
- 333 views
-
-
காணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கான புதிய நியமனங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையாளர் கவலை 39 Views இலங்கையில் காணாமல்போனவர்கள் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகத்திற்கான சமீபத்தைய நியமனங்கள் குறித்தும் நாட்டின் சமீபத்தைய பயங்கரவாத தடை சட்டவிதிமுறைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் கரிசனை வெளியிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 47வது அமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முஸ்லீம்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என கருதப்படுபவை குறித்தும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் நான் கரிசனை கொண்டு…
-
- 0 replies
- 240 views
-
-
கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த முஸ்லிம் மதத்தவரான மெளலவி ஒருவர் நேற்று இரவு அடையாளம் தெரியாத குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
நெடுந்தீவில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஒரு சாதாரண விடையம். என்ன கொலையா நடந்து விட்டது. இதனைப் ஏன் வீனாக பெரிது படுத்துகின்றீர்கள் என்று அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான சுசில் பிரேமஜெயந்த ஊடகவியலாளர்களிடம் கேள்வியேழுப்பியுள்ளார். நெடுந்தீவில் உள்ளவர்களில் 90 வீதமும் ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவாளர்கள் ஆனால் மேற்படித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பி கட்சிக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் எவர் ஏறுக்குமாறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். யாழ்.வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. மேற்படிச் சந்திப்பில் அமை…
-
- 5 replies
- 593 views
-
-
செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வெற்றி இப்போது முழுமை பெற்றுள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலியில் உள்ள ரிச்மன்ட் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்தக் கல்லூரியில் பயின்று பின்னர் சிறிலங்காப் படைகளில் இணைந்து உயிரிழந்தோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 30 வருடங்களாக பயங்கரவாதத்தின் விளைவாக ஏற்பட்டிருந்த எதிர்மறை சிந்தனைகளில் இருந்து எமது அடுத்த தலைமுறைகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது நாட்டின் அபிவிருத்தி பற்றி சிந்திக்க வேண்டும். அரச தலைவர், படைத் தளபதிகள் …
-
- 0 replies
- 776 views
-
-
ஆலயங்களில் நகைகளை கொள்ளையடித்து வந்த கும்பல் கைது எஸ்.கார்த்திகேசு அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களின் கதவுகளை உடைத்து நீண்ட நாட்களாக நகைகளைக் கொள்ளையடித்து வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு, விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பத்திர காளியம்மன் கோயிலின் மூலஸ்தானக் கதவு உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச் சம்பவம் தொடர்பாக ஆலயத் தலைவர், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை, மறுநாள் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பொலிஸ்…
-
- 0 replies
- 320 views
-
-
சனிக்கிழமை, 15, ஆகஸ்ட் 2009 (19:44 IST) பாதி எரிந்த சோனியா உருவப்படத்தின் மேல் பிரபாகரன் படம்:கடலூர் பதட்டம் கடலூர் மாவட்ட, காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா உருவப்படம் எரிக்கப்பட்ட சம்பவத்தால், பதட்டம் ஏற்பட்டது. கடலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. சுதந்தின விழா கொண்டாடுவதற்காக, 14ம்தேதி கொடி மேடை வெள்ளையடித்து காங்., கொடி தோரணம் கட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அலுவலக நிர்வாகி பக்தவச்சலம் இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். காலை 7 மணிக்கு பக்தவச்சலம் காங்., அலுவலகத்தை திறந்த போது தோரணங்களில் இருந்த காங்., கொடி எரிக்கப்பட்டிருந்தது. கொடி மேடை அருகே, சோனியாவின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில்…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுததலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக வானூர்திகள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு வானூர்தி நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளேடான 'லங்காதீப' செய்தி வெளியிட்டிருக்கின்றது. இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், இந்த வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 887 views
-
-
பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் - 4' காணொலி வெளியிட்ட கானொலி தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கான சபை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியன நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் குரூரமாகப் படுகொலை செய்யப்படும் காணொலி பிரித்தானியாவின் 'சனல் - 4' நிறுவனத்தால் வெளியிடப்பட்டத்தை அடுத்து, 'இந்தியா ருடே' ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது நேர்காணல் குறித்து 'இந்தியா ருடே' வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: சிறிலங்காப் படையினரால் மிகச் சாதாரணமாக மனிதத்துக்கு எதிரான பயங்கரக் குற்றம் இழைக்கப்பட்டிருப்பது தன்னை அதி…
-
- 0 replies
- 471 views
-
-
தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி! கொரோனா தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி! கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. தொற்றுநோய் பிரிவின் இரு விசேட மருத்துவர்களும், உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவரும் இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர் – என்று அரச பங்காளிக்கட்சியான தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு அந்தக்கட்சியின் தலைமையகத்தில் நேற்றுமுற்பகல் நடைபெற்றது. அதில் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் த…
-
- 38 replies
- 2.1k views
-
-
இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன் இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த அரசின் ஆசீர்வாதத்துடன் சில அரச அதிகாரிகளும், அரசின் முகவர்களும் மண், காணி அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வியாபாரம் செய்து வந்ததை நாம் அறிவோம். அதற்கான ஆதாரங்களை வெருகல் தொடக்கம் துறைநீலாவணை வரையுள்ள மக்களிடம் கருத்து கேட்டறிந்தால் நன்கு தெரியும். 2009ற்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களும் இன்று இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களின் நிலையையும் இந்த மக்களிடம் கேட்கும்போது மக்களே கூறுவார்கள். இவர்களைப் போன்ற சில அதிகாரிகள் இன்றைய நல்ல…
-
- 0 replies
- 475 views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதற்குத்தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 483 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தின் முழு அதிகாரங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வட மாகாணத்தில் ஆட்சியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கக் கூடாது. வடக்கில் சுயாட்சி ஏற்பட ஆளும் கட்சியின் பங்காளிகளும் பிரிவினைவாதிகளுக்கு உதவிகளைச் செய்கின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பிரபாகரன் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை அவ்விடத்தை நான் நிரப்புவேன் என முள்ளிவாய்க்கால் மக்களுக்கு நவநீதம்பிள்ளை உறுதியளித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 13…
-
- 1 reply
- 516 views
-
-
வடக்குமாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புகள் யாவும் இன்று மாலை 4 மணியுடன் முடிவுற்றுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் இருந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கென்னும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. பிரத்தியோகமாக ஒழுங்கு செய்யப்பட்ட பஸ் வண்டிகளிலேயே மேற்படி வாக்குப் பெட்டிகள் வந்து சேர்ந்துள்ளது. நெடுந்தீவு பகுதி பகுதியில் சேகரிக்கப்பட்ட வாக்குகளின் பெட்டிகள் மட்டும் அதிவேகப்படகில் குறிகட்டுவான் வரைக்கும் கொண்டுவரப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு பிரத்தியோக வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரியினை வந்தடைந்தவுட…
-
- 2 replies
- 406 views
-
-
தமிழ் மக்களிடம் இருக்கும் போராட்ட குணத்தை யாராலும் முறியடித்துவிட முடியாது என்கிற செய்தியை மீண்டும் ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறது வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள். அதற்காக, போராட்ட குணம் என்பது ஆயுத போராட்டத்துக்கான மீள் திருப்பம் என்றும் யாரும் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட வேண்டாம். அப்படியான செய்தியை வடக்கு மக்கள் இம்முறை சொல்லவும் இல்லை. விருப்பவும் இல்லை. போராட்ட குணம் என்று இங்கு சொல்லப்படுவது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான அவசியமான போராட்டம் பற்றியது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்து இன்று வரை தமது அரசியல் போராட்டத்தை தமிழ் மக்களும், தலைமைகளும் முன்னெடுத்திருக்கின்றன. ஒவ்வொரு போராட்ட வடிவமும் எதிர்வினைகளின் படியும், சர்வதேச சூழலுக்கு …
-
- 1 reply
- 428 views
-
-
மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையம் தீக்கிரை மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது. காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீயை அணைக்க பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியப்படவில்லை, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.…
-
- 35 replies
- 1.8k views
-
-
விழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமாக தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கல் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்றதை தெளிவுபடுத்தியுள்ள இந்த காணொளி பார்ப்பவர்களை கண் கலங்கவைக்கிறது, "விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்" என்ற பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது. இந்த 30 நிமிட ஆவணப்படம் விரைவில் பிரித்தானியாவில் வெளியிட இருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனைய ஜரோப்பிய நாடுகளிலும் தமது சொந்த நகரங்களிலும் இதனை வெளியிட விரும்புவோர் கீழ் காணும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். கருதரங்குடன் கூடிய ஒரு விவரண படமாக இதை நீங…
-
- 3 replies
- 1.9k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாண முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சி.வீ.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் யாழ்ப்பாணத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை யாழ்ப்பாணம் வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அமெரிக்கா பயணித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும், இதுகுறித்து பேச்சு நடத்த தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுகுறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண ஆளுநர் முன்னிலையிலா, ஜனாதிபதி முன்னிலையிலா, கட்சித் தலைவர் முன்னிலையிலா வடக்கு மாகாண முதலமை…
-
- 1 reply
- 615 views
-
-
கடையடைப்புக்கு அழைப்பு எஸ்.நிதர்ஷன் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரினால், வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து, வடக்கு மாகாணத்தில் நாளை (16) கடையடைப்பை மேற்கொள்ளுமாறு, தமிழ் மக்கள் பேரவை கேட்டுள்ளது. "இந்த குறுகிய முன்னறிவிப்பை பொறுத்துக்கொண்டு, இனத்தின் நலன்கருதி எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன், அனைவரும் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு தரவேண்டுமென நாம் விநயமுடன் வேண்டுகிறோம். மேலும், பதவி போன்ற அற்ப பேரங்களுக்காக கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது, எமக்காக புரியப்பட்ட தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் மனதில் கொண…
-
- 9 replies
- 580 views
-