Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. டென்மார்க்கில் துலடடயனெ (யூலண்ட்) மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டி 23-06-2011 சனிக்கிழமை கேர்ணிங், நகரிலுள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெற்றது. இதில் 20 கலைக்கூடங்களிலிருந்து சுமார் 300 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். டென்மார்க் தேசியக்கொடியேற்றல், தமிழீழத்தேசியக் கொடியேற்றல், எழுச்சிப்பந்தமேற்றல், அகவணக்கம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இவ்விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டார்கள். பெற்றோர், பார்வையாளர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள். போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவித்தனர். http://tha…

    • 0 replies
    • 415 views
  2. ஞானசாரருக்கு பிணை மறுப்பின் எதிரொலி! எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகுமாறு சிஹல ராவய அழைப்பு [ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2016, 03:02.49 AM GMT ] ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்படாமை தொடர்பில், தீவிரமான நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகுமாறு சிஹல ராயவ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சிஹல ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஹோமாகம நீதிமன்ற வளவில் வெளியிட்ட கருத்துக்காக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று அவரை பிணையில் எடுக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து கருத்துரைத்து…

  3. ஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்க இதுவே காரணம் என்கின்றனர் அஸ்கிரிய மல்வத்து பீடங்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் சர்வதேச சக்திகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது தெளிவாக தெரிவதாவும் ஆகவே நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழலை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தும் அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள் அதனாலேயே ஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்கியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் இரண்டு அரசுகள் உருவாக்கப்பட்டால் மட்டுமே அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி முன்வைத்ததாக கூறப்படும் காரணியில் இலங்கை அரசாங்கம் அதன் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில் இலங்கையின் பிரதா…

    • 5 replies
    • 850 views
  4. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் அரசியல் அமைப்பு சபை இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் பதவியேற்றதை அடுத்து இவ்வாறு அரசியல் அமைப்புச் சபை கூடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்நிலையில் இன்றைய அரசியல் அமைப்பு சபை பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இல்லாதே கூடியுள்ளது. அரசியல் அமைப்பு சபையில் 10 உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் உத்தியோகப்பூர்வ அதிகாரத்திற்கு அமைய தெரிவுச் செய்யப்படுவர். அவர்களில் இடைக்கால அரசாங்கதின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. அதேபோல் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை பெயரிடப்பட்டுள்ள போதிலு…

  5. மார்ச் 22, 2025 அன்று, கொம்பனித்தீவு பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகத்தில் ஸ்டிக்கரை ஒட்டியதற்காக 22 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞன் அந்த வணிக வளாகத்தில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு,காசாவில் அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக யாரோ ஒருவர் இரண்டு ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள்.பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.இஸ்ரேல் ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு என இரண்டிற்காகவும் உலகம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.தங்கள் சொந்தக் கருத்துக்கள் குறித்து தங்கள் கோபத்தை…

    • 0 replies
    • 197 views
  6. -எஸ்.நிதர்ஷன், என்.ராஜ் யாழ்ப்பாணம் - தென்மராட்சி, மறவண்புலவு பகுதியிலுள்ள பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களால், இன்று (18) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக, கொடிகாமம் பஸ் நிலையத்தில் இருந்து ஏ9 வீதியூடாக சாவகச்சேரி பிரதேச சபையை நோக்கிப் பேரணியாகச் சென்ற மக்கள், பிரதேச சபைக்கு முன்னால், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்த சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர், இந்தத் திட்டம் தொடர்பில், பிரதேச சபைக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் சபையின் அனுமதியில்லாமலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட…

  7. 03 APR, 2025 | 05:22 PM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று வெள்ளிக்கிழமை (4) இலங்கைக்கு வருகை தருகிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரும் இலங்கை விஜயத்தில் பங்கேற்கின்றனர். இந்த விஜயத்தின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்பந்தங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து கூட்டறிவித்தலை வெளியிடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் சுதந்திர சதுக்கத்தில் இராணுவ மரியாதை …

  8. இலங்கை இராணுவத்தினர் இதுவரை பயன்படுத்தாதக துப்பாக்கி ஒன்றை திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். வெள்ளை இரும்பினால் வடிவமைக்கப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி ஒன்றை மூதூர்வாசி ஒருவரிடம் இருந்து கைப்பற்றியதாக திருகோணமலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துருப்பிடிக்காத இந்த துப்பாக்கி மூலம் குண்டுகளையும் எறிய முடியும் எனவும் இதனை போன்ற துப்பாக்கியை இலங்கை இராணுவத்தினர் இதுவரை பயன்படுத்தியதில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த துப்பாக்கி வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு ஒன்றிடம் இருந்து கிடைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில்; கைதுசெய்யப்பட்ட நபர் மத்திய கிழக்கில் தொழில்புரிநதவர் எனவும்,…

  9. [size=4]ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக மட்டுமே மீண்டும் அரசியலுக்கு வருவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.[/size] [size=4]நான் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவேன். மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கினால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக மட்டுமேயாகும்.[/size] [size=4]எனினும், மீண்டும் அரசியலில் களமிறங்குவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மற்றும் இடதுசார கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து சந்திரிக்கா புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.[/size] [size=4]எனினும், அ…

  10. சிறிலங்கா வெள்ள அனர்த்தத்தில் 18 பேர் பலி- 2 லட்சம் பேர் இடம்பெயர்வு [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 02:56 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தென்பகுதியிலும் மலையகத்திலும் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் மண் சரிவினால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானனோர் இடம்பெயர்ந்துள்ளனர். தென்பகுதியில் உள்ள களுத்துறை, காலி, இரத்தினபுரியிலும் மலையகத்தில் நுவரெலியா, கேகாலை, ஹற்றன் போன்ற இடங்களிலே கடும் மழையும் மண்சரிவும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக களுத்துறை மாவட்டத்திலேயே மழையினாலும் மண்சரிவாலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இங்குள்ள பெரும்பாலான கிராமங்களை வெள்ள நீர் மூழ்கியுள்…

    • 3 replies
    • 875 views
  11. [size=5]கனகராயன் குளத்தில் முளைத்த பெரெரா வீதி[/size] வவுனியா வடக்கு கனகராயன் குளத்தில் ஒரு வீதிக்கு கசாலா பெரெரா வீதி எனப் பெயரிடப்பட்டுள்ளது. வன்னியில் பல பகுதிகளிலும் வீதிகளுக்கும், ஊர்களுக்கும் சிங்களப் பெயர் சூட்டுவதில் இராணுவத்தினரும், அரச அதிகாரிகளும் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர். இதன்படி பல இடங்களும் வீதிகளும் சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப்பகுதி மக்கள் விசனமடைந்துள்ளனர். தமிழ் கிராமங்களதும் வீதிகளதும் பெயரை அபிவிருத்தி என்ற பெயரில் அரச அதிகாரிகள் சிங்ளமயமாக்க துணைபோவதாகவும் நாளடைவில் இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கனகராயன் குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில்…

  12. காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம் தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் அதிகாரிகளுக்கு ஆலோசனை காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம் மற்றும் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அதன் அடிப்படையில் குறித்த அபிவிருத்தி செயற்பாட்டின் பொருட்டான செயன்முறை திட்டம் தீட்டல் செயற்பாட்டை மேற்கொள்வதற்காக துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளினால் ஆலோசனை சேவை நிறுவனத்திடம் கையளிப்பதற்கு தேவ…

  13. 23 APR, 2025 | 03:09 PM தம்பகல்ல பொலிஸ் பிரிவின் பஹலவத்த பகுதியில் வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, ஆயுதங்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஹலவத்த, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு, 09 மிமீ வகை 05 வெடிமருந்துகள், 25 T56 வெடிமருந்துகள், 03 T56 வெடிமருந்துகள், 01 M16 வெடிமருந்துகள், 04 வெடிமருந்து பைகள், 03 பெல்ட் ஆர்டர்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/212719

  14. புலிகளுக்கு வாக்கிடாக்கி Sunday, 08 June, 2008 02:44 PM . சென்னை, ஜூன் 8: விடுதலைப்புலிகளுக்கு அனுப்பு வதற்காக சென்னை பர்மா பஜாரில் இருந்து 44 வாக்கி - டாக்கிகள் வாங்கப்பட்டதாக போலீசில் சிக்கிய புலிகளின் முகவர்கள் இருவர் தெரிவித்தனர். இவர்கள் இதுவரை என்னென்ன பொருட்களை புலிகளுக்கு வாங்கி அனுப்பியுள்ளனர் என்ற விவரத்தையும் போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறினர். . கடந்த மாதம் 18-ந் தேதி இலங்கை பசலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்ற பி.விஜி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்மராசா என்ற டி. சின்னவன் ஆகிய இருவரும் ராமேஸ்வரம் கடற்கரை பகுதிக்கு 44 வாக்கி-டாக்கிகளை கடத்திச் சென்றபோது மதுரையில் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அந்த வாகனத்தை ஓட்டிச்சென்ற …

    • 0 replies
    • 1.2k views
  15. வியத்தகு சாதனை புரிந்த இலங்கை மருத்துவர்கள் பிறப்பிலே முள்ளந்தண்டு வளைந்திருந்த பாடசாலை மாணவனை சத்திர சிகிச்சையின் மூலம் மீண்டும் சாதாரண நிலைமைக்கு கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளனர் இலங்கை மருத்துவர்கள். காலி கரம்பிடிய வைத்தியச்சாலையிலே இந்த சத்திரசிகிச்சை மேல்கொள்ளபட்டுள்ளது. இரண்டு கட்டமாக நடந்த இந்த சத்திரசிகிச்சையின் பின் குறிந்த மாணவனுக்கு வழங்கப்பட்ட விஷேட மருத்துவ உடையின் உதவியுடன் நிமிர்ந்து சாதாரண மனிதர்களை போல் நடக்க முடிகின்றது. இந்த சத்திரசிகிச்சைக்கு முன் அசங்க பியமால் என்ற அந்த மாணவன் ஒரு பக்கமாக சாய்ந்து தான் நடப்பார். இந்த வருடம் கா.போ.த சாதாரணத் தர பரீட்சை தோற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சத்திர சிகிச்சைய…

    • 11 replies
    • 747 views
  16. விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகத்துடன் தொடர்புடைய கே.பத்மநாதனை சந்தித்தமை தொடர்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பத்மநாபனை தேடி ஜெர்மனி சென்றுள்ளனர். ஆனால் கடந்த ஜனவரி 9ம் திகதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ஜி.கே. மணி, திருமாவளவன் ஆகியோர் மலேசியா சென்று, அங்கிருந்து தாய்லாந்து சென்று பத்மநாபனை சந்தித்துள்ளனர் என சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாசிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.2k views
  17. [size=4]அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று அடுத்த மாத முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]ரொபேட் ஓ பிளேக்குடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் இந்த உயர்மட்டக் குழுவில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் ஏற்பாட்டிலேயே இந்த அவசரப் பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இலங்கைக்கு வருகை தரவுள்ள இக்குழுவினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட்ட பலர…

    • 4 replies
    • 886 views
  18. உந்துருளியை தரமறுத்த இளைஞன் கடத்தப்பட்டார். 20.06.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் உந்துருளியை தரமறுத்த இளைஞன் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். கிண்ணையடி நாகதம்பிரான் வீதியில் வசித்துவந்த பிரபாகரனது உந்துருளியை பறிமுதல் செய்வதற்கு பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஓவியன் என்பவர் முயற்சி செய்து வந்திருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 7 ஆம் திகதி வாழைச்சேனையிலுள்ள அலுவலகத்திற்கு பணிக்குச் சென்ற பிரபாகரனை பிள்ளையான் குழுவினர் கடத்திச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  19. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (23) மாலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த களுத்துறை - வெலிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த மாணவி தனது கல்லூரி விடுதியினுள் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன உளைச்சலுக்குள்ளாகி மாணவி உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என மாணவியின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். மாணவி உயிரை மாய்த்துக்கொண்டமைக்கான காரணத்தை கண்டறிய கல்வி அமைச்சினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு…

  20. பௌத்த தேசியத்துக்குள் பலியாகப்போகும் இந்தியாவின் வல்லரசு கனவு -ப.தெய்வீகன்- ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வரும் பிடிவாதமான முரண்போக்கு குறித்து தமிழீழத்திலும் சரி தமிழ்நாட்டிலும் சரி எப்படி எடுத்துக்கூறினாலும் காதில் வாங்காத இந்திய மத்திய அரசு, அண்மையில் கொழும்புக்கு அனுப்பிய அதன் உயர்மட்டக்குழுவின் நடவடிக்கைகளின் மூலம் தான் இன்னும் திருந்தவில்லை என்ற செய்தியை ஈழத்தமிழர்களுக்கு மறைமுகமாக சொல்லியிருக்கின்றது. தனது பிராந்திய நலனை உத்தரவாதம் செய்வதற்கு ஈழத்தமிழர் விடயம் உட்பட எந்த விவகாரத்தையும் தனது அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாக பயன்படுத்த தயார் என்ற தனது நிலைப்பாட்டை நிரூபிக்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்…

  21. புலம்பெயர் தமிழர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. 22 பேரைக் கொண்ட புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளே இவ்வாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். யுத்த வலய தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, புலம்பெயர் தமிழர்களிடம் உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனிதாபிமான விவகாரங்கள், வடக்கு கிழக்கு புனரமைப்பு, புனர்வாழ்வு போன்ற விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா, சுவிட்சர்லா…

  22. போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோர், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி…

  23. கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற ஏல விற்பனை ஒன்றில் வெள்ளை பூண்டு கொள்கலன் ஒன்றை கொள்வனவு செய்த புறக்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று, 50 லட்சம் ரூபா கப்பம் கோரி, 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கப்பமாக பெற்ற, வர்த்தகராக தன்னை இனங்காட்டிக் கொண்ட பாதாள உலக தலைவர் உள்ளிட்ட குழுவொன்றை கைதுசெய்ய கொட்டாஞ்சேனை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். துறைமுகத்தில், கடந்த 14 ஆம் திகதி ஏறவிற்பனை நடைபெற்றதுடன் அன்று மாலை வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். துறைமுகத்தில் நடைபெற்ற ஏல விற்பனையில் 15 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாவுக்கு, வர்த்தகர் வெள்ளை பூண்டு கொள்லனை வாங்கியுள்ளார். துறைமுகத்தில் நடைபெறும் ஏல விற்பனையில் எவ்வளவு பணத்தை செலுத்தி பொர…

  24. வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்! adminJune 18, 2025 வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (18.06.25) வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. தவிச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.