ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்தரப்பினர் முன்நிலையாகாத நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. குறிப்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் சம்வத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக சபர்களை கைதுசெ…
-
- 0 replies
- 246 views
-
-
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குமாயின், அது தொடர்பாக ஜெனிவா மனித உரிமை மாநாட்டிற்கு சென்று முறையிடுமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தினார். இதேவேளை, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தமக்கு விடுக்கப்பட்டுள்ள உயர் அச்சுறுத்தல் தொடர்பாக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். நான் கட்சிக்காக சிறை உணவினையும் உட்கொண்டவன். கட்சி காரணமாக ஏராளமான வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்தேன். முன்னர் எனது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற…
-
- 1 reply
- 524 views
-
-
இது தொடர்பாகத் தகவல் தெரிவித்த காவல்துறைப் பேச்சாளர், என்.கே.இலங்கக்கோன், மரணமடைந்த ராணியின் இரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது .................... தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4973.html
-
- 1 reply
- 1.5k views
-
-
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை செய்யபட மாட்டார் என, தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதிமொழி வழங்கியிருந்தாக சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்,....................... தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6194.html
-
- 5 replies
- 1.8k views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் மீனவர்களிடமிருந்தும், தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்தும் கப்பம் பெற்றுவருவதாக வடக்கின் இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு - யாழ்ப்பாணம் பயணத்திற்கான ஒருவழிக் கட்டணமாக தற்போது தலா பயணியிடம் 2000 ரூபா அறவிடப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கப்பம் கொடுக்காவிடின், பயணியிடம் அறவிடப்படும் தொகையை 1100 ரூபாவாக உரிமையாளர்களுக்கு குறைக்க முடியுமென இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். அத்துடன், அமைச்சரின் சகாக்கள் நாள்தோறும் தம்மிடம் கப்பப் பணம் சேகரித்து வருவதாக வடக்கிலுள்ள மீனவர்கள் இராணுவத்திற்கு தொடர்ச்சியாக முறைப்பாடு செய்துவருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. …
-
- 10 replies
- 1.5k views
-
-
அமைச்சர் டக்களசால் முடியவில்லை! ஊர் பார்க்கச் சென்ற மக்கள் திருப்பி அனுப்பட்டனர் 05 ஜூலை 2013 குளோல் தமிழ் விசேட செய்தியாளர் உயர் பாதுகாப்பு வலயக் கோயில்களுக்கு சென்ற மக்கள் திருப்பி அனுப்பட்டனர். யாழப்பாணம் வலிகாமம் பிரிவில் உள்ள மயிலிட்டி பிரதேசத்தில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயம், முருகன் ஆயலம் உட்டப சிலர ஆலயங்களுக்கு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவால் அழைத்துச் செல்லப்பட்ட மக்களே இவ்வாறு திருப்பி அனுப்பட்டனர். இராணுவத்தின் அதியுயர் பாததுகாப்பு வலயம் காரணமாக கடந்த 25 வருடங்களாக இந்தப் பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் தமது பிரதேசங்களில் காடு மண்டி பாழடைந்த கடவுகளின் வீடுகளை ஒரு முறையாவது தரிக்க மக்கள் அங்கலாய்த்தனர். ஊரை சென்று பார்வையி…
-
- 0 replies
- 273 views
-
-
சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸிற்கு சிக்கன் கூனியா! சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவிற்கு சிக்கன் கூனியா நோய்ஏற்பட்டுள்ளதாக யாழ் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். யாழ் குடா நாட்டிற்கு வருகைதந்திருந்த டக்கிளஸ் தேவானந்தா யாழில் உள்ள சிறிதர் திரையரங்கில் ஒட்டுக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டதாகவும் இவ்வாறு சந்திப்பில் ஈடுபட்டிருந்த போது. தீடிரென மயங்கி விழுந்ததாகவும் இதனையடுத்து ஒட்டுக்குழுவினர் யாழ் மருத்துவமனைக்குச் சென்று வைத்தியர் ஒருவரை அழைத்து வந்து பரீசோதித்ததாகவும் இதன்போது வைத்தியர் சிக்கன் கூனியா நோய்க்கான அறிகுறி உள்ளதாகக் கூறியதாகவும் இதனையடுத்து ஒட்டுக்குழுவினர் தமது அமைச்சருக்கு சிக்கன் கூனியா நோய் ஏற்பட்டுள்ளது தொடர…
-
- 2 replies
- 2.3k views
-
-
கட்டாக்காலி நாய்களுக்கும் முகாம் அமைக்கலாமே இப்படி ஓர் அபூர்வமான ஆலோசனை நேற்று கோப்பாய் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான அபிவிருத்திக் கூட்டம் நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் அவை தொடர்பான ஆலோசனைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஒவ்வொன்றாக ஆராயப்பட்டன.விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்ட போது ஒரு விவசாயி கட்டாக்காலி நாய்கள் தமது விவசாயப் பயிர்களை அழித்து நாசமாக்குவதாகவும் அதனைத் தடுப்பதற்கு …
-
- 4 replies
- 1.9k views
-
-
அமைச்சர் டக்ளசும் அமைச்சர் பியசேன கமகேயும் யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்து கொண்டனர் http://www.globaltamilnews.net/tamil_news....11579&cat=1
-
- 17 replies
- 3.6k views
-
-
அமைச்சர் டக்ளசை எரிச்சலூட்டியுள்ள பாடகர் உன்னி கிருஷ்ணனின் மன்னிப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நற்பெயரைப் பெறும் நோக்குடனே தென்னிந்திய பாடகர் உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான விருந்தில் கலந்துகொண்ட சமயம் ஊடகவியலாளர்கள் மத்தியில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன அழைப்பு விடுத்தமையாலே தான் அந்த நி…
-
- 25 replies
- 1.9k views
-
-
அமைச்சர் டக்ளஸிடம் அடிபணியுமாறு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கோரிக்கை:வலி.வடக்கு பிரதேச சபையில் பெரும் அமளி துமளி! அமைச்சர் டக்ளஸிடம் அடிபணிந்தால் சுடலைகளைப் புனரமைக்க முடியும் என ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தால் வலி.வடக்கு பிரதேச சபையில் இன்று வெள்ளிக்கிழமை பெரும் அமளி துமளி ஏற்பட்டது. இன்று காலையில் சபைக் கூட்டம் நடைபெற்றபோது, சென்ற கூட்டத்தின் போது, ஆளுந்தரப்பு உறுப்பினரான ஹரிகரன் என்பவர் கடந்த கூட்டத்தில் முன்வைத்த “உறுப்பினர்களின் சம்பளப் பணத்தில் வலி.வடக்கில் உள்ள சுடலைகளைப் புனரமைக்கலாம்” என்ற தீர்மானம் தொடர்பாக தமது எதிர்ப்பை எதிர்கட்சியினர் வெளியிட்டனர். …
-
- 0 replies
- 870 views
-
-
பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. இந்திய தூதுவர் ஆசோக் கே. கந்தா கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைததார். இந்திய அரசின் நன்கொடை நிதியில் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையினை நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சு அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான அடிக்கல்லை நாட்டும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தது. எனினும் இன்றைய நிகழ்வுகளில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கலந்து கொள்ள மாட்டார் எனவும் அதன்படி அடிக்கல் நாட்டும் வைபவம் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்படும் என அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வ…
-
- 1 reply
- 483 views
-
-
வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் முன்னரங்க பாதுகாப்பு அணைக்காக பொதுமக்களது வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னர் தெரிவித்திருந்தார். எனினும் இவருக்கு வழங்கிய உறுதி மொழிகளை கிடப்பில் போட்ட படைத்தரப்பு தொடர்ந்தும் வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலய முன்னரங்க பாதுகாப்பு அணைக்கென பொதுமக்களது வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றது. புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தை நிரந்தரமாகப் பேண புதிய பாதுகாப்பு மண் அணை மற்றும் வேலிகளை அமைக்கும் பணிகளை கடந்த சில நாட்களாக படைததரப்பு முன்னெடுத்து வருகின்றது. இடம்பெயர்ந்த மக்களது கடும் எதிர்ப்ப…
-
- 8 replies
- 748 views
-
-
அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு! வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை நாட்டிலுள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ் புத்திஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், மதப் பெரியார்கள் மற்றும் சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள இந்த அறைகூவலை இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் சாருமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இந்த முயற்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்த…
-
- 9 replies
- 1.1k views
-
-
யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிய கருத்துக்களை இராணுவம் மறுத்துள்ளது. "இராணுவம் இந்த குற்றச்சாட்டுக்களை பூரணமாக மறுக்கிறது" என யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பயப்பிராந்தியுடன் வாழும் மனநிலை ஒன்று மக்களிடம் தோன்றியிருப்பதாகவும் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கூறியமைக் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவதில் இராணுவம் பொலிஸாருக்கு உதவி வருகின்றது. இராணுவம் இரவு நேரத்தில் ரோந்துக்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இங்கு இடம்பெறும் களவு, கொலை, மற்றும் வேறு குற்றச்செய…
-
- 0 replies
- 1.4k views
-
-
அமைச்சர் டக்ளஸின் செயற்பட்டால் தமிழ் நாடு மற்றும் வடக்கு- கிழக்கு வாழ் மீனவர்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் – இரா. சாணக்கியன் இலங்கை அரசாங்கத்தின் மீன் பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.எனவே, மீன்பிடித்துறை அமைச்சர் வடக்கு- கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.அமைச்சரின் இந்த அசமந்தச் செயற்பாடானது தமிழ் நாடு மற்றும் வடக்கு- கிழக்கு வாழ் மீனவர்களுக்கிடையில் பிரச்சினைகள…
-
- 1 reply
- 300 views
-
-
அமைச்சர் டக்ளஸின் பொங்கல் தின வாழ்த்து செய்தி எமது மக்களின் வாழ்விடங்களிலும், ஒவ்வொரு இல்லங்களிலும் புது மகிழ்ச்சி பொங்கிடும் என்ற பெரு நம்பிக்கையோடு பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை அகம் மகிழ்ந்து வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வாழ்த்து செய்தியில்.. உழவர் திருநாள் என்றும் தமிழர் பெருநாள் என்றும் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடி வரும் எமது மக்கள், இயற்கையை வணங்கிய எமது முன்னோர்கள் வழிநின்று தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் காலந்தோறும் பாதுகாத்து வருகின்றனர். வாழ்வெங்கும் வலி சுமந்த எமது மக்கள் தை ப…
-
- 0 replies
- 572 views
-
-
Published by T Yuwaraj on 2022-03-11 19:38:35 கச்சதீவு அந்தோணியார் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் நல்லெண்ணச் சந்திப்பு இன்று(11.03.2022) நடைபெற்றது. இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாடடில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் தங்களது கருத்துக்களையும், ஆதங்கங்களையும் வெளியிட்டனர். குறிப்பாக, இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறை காரணமாக பாதிப்புக்களை எதிர்…
-
- 2 replies
- 290 views
- 1 follower
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை புதுடில்லிக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அழைப்பு விடுத்ததாக அக்கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த எஸ். எம்.கிருஷ்ணா நாடு திரும்பும் தருணத்தில் அவரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா தாம் அவசரமாக நாடு திரும்ப வேண்டியிருப்பதால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதபடி…
-
- 8 replies
- 1.1k views
-
-
நிர்வாகச் செயற்பாடுகளில் இராணுவத் தலையீடு இருப்பதாகக் குறிப்பிட்டு, முன்னாள் இராணுவ அதிகாரியாகிய ஆளுனர் சந்திரசிறிக்குப் பதிலாக சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வடமாகாண சபையினால் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் தாங்கள் பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகவும், அவர் ஜனாதிபதியிடம் பேசி ஒரு தீர்வு காண்பதாக உறுதியளித்திருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாண சபையினரும் புறக்கணித்திருந்த நிலையில் அந்தக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முதலமைச்சரையு…
-
- 2 replies
- 565 views
-
-
"வடக்கிலுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் செயற்பாடுகளைச் செயலாளர்களினூடாக வடமாகாண அபிவிருத்திக் குழுத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் தடுத்துநிறுத்துகின்றனர். அத்துடன், வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தாண்டிய ஆதரவையும் அவகள் மறுத்துரைக்கின்றனர். எனவே, இனியும் அடிவருடிகளை நம்பி அரசு செயற்படுவது நாட்டை மீண்டும் சேற்றுக்குழிக்குள் தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். வடக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்களும் உத்தியோகத்தர்களும் மக்களால…
-
- 0 replies
- 497 views
-
-
Published By: DIGITAL DESK 3 31 JAN, 2024 | 09:27 AM ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காலணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று செவ்வாய்க்கிழமை (30) சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர். இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தாவினால…
-
- 4 replies
- 622 views
- 1 follower
-
-
செய்திப்பிரிவு தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்களிடம் ஒருமித்த கருத்து நிலவுவது முக்கியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் திங்கட்கிழமை (13) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்த அமெரிக்க பதில் தூதுவர், தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்…
-
- 9 replies
- 737 views
-
-
அமைச்சர் டக்ளஸை தமிழன் என்றல்ல மனிதன் எனக் கூறுவதே வெட்கக்கேடு Monday, July 18, 2011, 8:37 சிறீலங்கா வன்னியில் நடந்த கடைசிக் கட்டப் போரில் ஒன்றும் நடக்கவில்லை, ஒரு வரும் கொல்லப்படவில்லை என்று வாய் கூசாமல் பொய் கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவரைத் தமிழன் என்று கூறவே வெட்கப்படவேண்டும். தமிழன் என்று மட்டுமல்ல, மனிதன் என்று கூறுவதற்கே வெட்கப்படவேண்டும் என்று தெரிவித்தார் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: தென்னிலங்கையில் அரசுக்கு வாக்களித்த மக்கள் அங்கு ஜனாதிபதிய…
-
- 7 replies
- 773 views
-
-
அமைச்சர் டக்ளஸ் - செந்தில் தொண்டமானிடம் சுமந்திரன் விடுத்துள்ள விசேட கோரிக்கை ஆர்.ராம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குள் தமிழர்களை உள்வாங்கும் செயற்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தாவும், செந்தில் தொண்டமானும் துணைபோகக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களின் அடிப்படைகளையும், நாட்டின் பல்லினத் தன்மையையும் அடியோடு அழிக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளவுள்ள ஞானசாரர் தலைமையிலா…
-
- 2 replies
- 414 views
-