ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்! சிறிலங்காவில் விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஜப்பானில் வாழும் சிறிலங்கா நாட்டவர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ அங்கிருந்தவாறு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களினால் நாட்டை சீராக வழிநடத்த முடியாமல் உள்ளதால், ஆட்சியாளர்கள் மீது ஜப்பானில் உள்ள சிறிலங்கா நாட்டவர்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும், இதனால் சிறிலங்காவில் உடனடியாக ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தற்ப…
-
- 0 replies
- 410 views
-
-
அடுத்த ஆண்டுக்கான நிதித் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்குப் பதிலாக நாட்டின் கணக்கு அறிக்கையை வாக்கெடுப்புக்கு விட சிறிலங்கா அரசு முயற்சிப்பதாக வெளியான செய்திகளை மறுத்திருக்கும் அரசு, எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் நாள் நிதித் திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 446 views
-
-
சப்தநாடியும் ஒடுங்கிய மிருகம்! புகழேந்தி தங்கராஜ் சாத்தான் வேதம் ஓதுமா? என்று கேட்கிறார் அப்புசாமி. கேள்வியே தவறு. இப்போதெல்லாம் சாத்தான்கள் தான் அதை ஓதுகின்றன. இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்குப் பின்வாசல் வழியாகவே சென்று, பின்வாசல் வழியாகவே திரும்பிய மகிந்த மிருகம் அதை நிரூபித்திருக்கிறது. (முன் வாசல் வழியாகப் போகிற பழக்கமே இலங்கை மிருகங்களுக்கு இல்லையா?) வேறுவிதமான கலாச்சாரங்கள் உள்ள நாடுகளில், ஒரு குறிப்பிட்ட விதமான ஜனநாயகத்தைத் திணிக்க முயல்வது பெருங்குழப்பத்தை ஏற்படுத்துமாம்.... ஐ.நா. கூட்டத்தில் மகிந்த மிருகம் இப்படிப் பேசியிருக்கிறது. அது என்ன வேறுவிதமான கலாச்சாரம்? ஐ.நா.வுக்குள் கூட பின் வாசல் வழியாக நுழைவதா? ஈழத் தமிழ் இனத்துக்…
-
- 0 replies
- 470 views
-
-
அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிக்க... 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது மத்திய வங்கி கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2 அரச வங்கிகள் ஊடாக இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க இதற்கு மேலதிகமாக அதிக பணம் தேவைப்பட்டால் இலங்கை மத்திய வங்கி அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241801
-
- 2 replies
- 246 views
-
-
சிறிலங்கா தரைப் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரியவை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள ஈரானிய தூதரக இரண்டாம் நிலை அதிகாரியான பிரிகேடியர் சயீட் ரசா அஷ்கரி நேகா இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 243 views
-
-
தெற்கை விடவும் வடக்கிற்கு அதிகளவில் செலவிடப்பட்டுள்ளது – ஜனாதிபதி 05 அக்டோபர் 2013 தெற்கை விடவும் வட மாகாணத்திற்கு கூடுதலான அளவு பணம் செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த நிறைவின் பின்னர் அரசாங்கம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களை வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தொகையானது தெற்கு அபிவிருத்திக்காக செலவிடப்பட்ட தொகையைவிடவும் அதிகமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு மற்றும் பிரதானமான ஒரு சில நகரங்களில் காணப்படும் அதி நவீன வசதிக் கொண்ட மருத்துவமனையொன்று யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை பிரி;த்தானிய பாராளுமன்ற கூட்டமைப…
-
- 1 reply
- 424 views
-
-
ஆபாசப் பேச்சுகளுக்கு... விரைவில் தடை! ஆபாசப் பேச்சுகளை தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு …
-
- 0 replies
- 256 views
-
-
இந்தியாவில் பிரதமராகுவதற்கு ராகுல் காந்திக்கு சகல தகுதிகளும் இருப்பதாக இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் வீரர் விஜித ரோஹண விஜிதமுனி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1987 ஆம் ஆண்டு இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைச் சிப்பாய் தற்போது ஜோதிடராகவும், இசைக் குறுந்தகடுகளை விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார். கொழும்பு அருகில் உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் இரண்டு கணினிகளுக்கு முன் அமர்ந்து, சுற்றிலும் இசைத் தட்டுகள் அடுக்கப் பட்டுள்ள நிலையில் தாடியுடன் காணப் படும் அவரைப் பார்ப்பவர்கள் அவர் சில ஆண்டுகளுக்கு முன் ராஜீவைத் தாக்க முற்ப…
-
- 1 reply
- 386 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் தனது கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையாகிய பாயும் புலி சின்னத்தை பதித்திருந்தமையானது அவரைப் பார்த்த அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் சுவிர்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராவார். அண்மையில் தனது மனைவியுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்த இந்த வெள்ளை இனத்தவர் யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தார். குறிப்பாக பருத்தித்துறை, கீரிமலை, அரியாலை போன்ற இடங்களிலுள்ள கடற்கரைகளுக்குச் சென்றிருந்தனர். இது போன்று யாழ்ப்பாணத்திலுள்ள பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். ஈழப் போராட்டம் தொடர்பாக நல்லபிப்பிராயத்தை வெளியிட்ட இவர்கள் தங்களுக்கு போராட்டத்தில் மதிப்பு இருந்…
-
- 5 replies
- 3.8k views
-
-
சிறப்பு அதிகாரங்களுடன் இரண்டாவது தடவையும் அரச தலைவராக மைத்திரி சுதந்திரக் கட்சி யோசனை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர், அவருக்கு மீண்டுமொருமுறை அரச தலைவர் பதவி வழங்கப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத்திடம் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர் என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரச தலைவருக்குரிய நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மைத்திரிபால சிறிசேனவின் பத…
-
- 0 replies
- 641 views
-
-
இனவாதத்தை தூண்ட ஆதரவு அளிப்பது தண்டனைக்குரிய குற்றம் (ஆர்.ராம்) சபையில் வலியுறுத்தினார் பிரதமர் ரணில் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாத, அடிப்படைவாதங்களை தூண்டுவதும் அவ்வாறு தூண்டுபவர்களுக்கு ஆதரவளிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என சபையில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிகாரத்திற்கு வர முயற்சிப்பவர்களே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இனவாத, மதவாதங்களை அடிப்படையாக கொண்டு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் இனவாத, அ…
-
- 0 replies
- 219 views
-
-
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது, எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் பிரதான ஆரம்ப நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரதமரின் விஜயம் ஒரு நாளுக்கு வரையறுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பிரதமர் மாநாட்டில் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=95867&category=TamilNews&la…
-
- 0 replies
- 180 views
-
-
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிராமத்திற்கு, ஐக்கியநாடுகள் சபையின் மனிதாபிமான செயல்பாடுகளுக்கு பொறுப்பான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் இன்று புதன்காலை விஜயம் செய்தார். தனது மொழிபெயர்ப்பாளர் சகிதம் சென்ற இவர், மக்களுடன் தனிப்பட்ட ரீதியில் உரையாடினார். தாம் மீளக்குடியேற விரும்பவதாகவும் விரைவில் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னரும் இவர் இந்த இடத்திற்கு விஜயம் செய்தமை குறிப்பிடதக்கது. 2010ம் ஆண்டு சனவரிக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் அவர்களுடைய பழைய இருப்பிடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது
-
- 2 replies
- 654 views
-
-
-
பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்துடன் 41 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு! அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நிரந்தர நியமனம் வழங்கப்படுவோருக்கு மாதாந்தம் 41 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் 58,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1252117
-
- 1 reply
- 144 views
- 1 follower
-
-
தனது சுயநலத்திற்காக இனப்படுகொலைகளை செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொது நலவாய அமைப்பின் தலைமைப் பதவியினை கொடுக்கக்கூடாது. இறுதி நேரத்திலாவது மீள்பரிசீலனை செய்து தலைமைப் பதவியினை தடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையில் இன்று மனித உரிமை மீறல்களை நாங்கள் தான் செய்கின்றோம் என அரசாங்கம் சர்வதேசங்களுக்கு வெளிப்படையாகவே காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் 'சமகி" அமைப்பினால் நேற்று 'மனித உரிமைகளுக்கான போராட்டம்" என்னும் தொனிப்பொருளில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின…
-
- 1 reply
- 411 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நாடாளுமன்றில் பிரேரணை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தப் பிரேரணையை முன்வைத்தார். நேற்று நாடாளுமன்றம் ஒத்திவைப்பு வேளையின்போது அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையாக இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரேரேணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- “காணாமல் போன ஆள்கள்” தொடர்பான விடயம் இலங்கையில், குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பாரதூரமான ஒரு பிரச்சினையாகச் சில காலமாக இருந்து வருகின்றது. அத்தோடு, காணாமல் போன ஆள்களுடைய குடும்பங்கள்…
-
- 0 replies
- 210 views
-
-
யாழில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – சம்பிக்க! யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்துள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு, காலி போன்ற நகரங்களினை போல யாழ்ப்பாண நகரத்தினையும் அபிவிருத்தி செய்யும் முகமாக பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வடபகுதியில் முன்ன…
-
- 1 reply
- 287 views
-
-
ஒருமித்த கோரிக்கை தற்காலத்தின் தேவை என்கிறார் சம்பந்தன்! இப்போதைய நிலைமையில் தமிழ் பேசும் மக்களின் கோரிக்கையை ஒருமித்த நிலைப்பாட்டுடனும், ஒன்றுமையுடனும் முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்காகவே தமிழ்க் கட்சிகள் இடையே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அனைவரும் ஒருமித்த கருத்துடன், ஒன்றுமையுடன் இருக்கின்றோம். இந்த விடயம் தொடர்பாக நாம் மேலும் கூடி ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடுவோம். இந்த முயற்சிக்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று கொழும்பில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நடந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே …
-
- 4 replies
- 315 views
-
-
ஜனாதிபதி தேர்தல் காலம் முடியும் வரை நாடு பூராக திடீர் வீதி தடுப்புக்கள், சோதனைகள், நேற்றில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. 40 பொலிஸ் பிரிவுகளிலும் பகல் இரவு ரோந்து பணிகள் ஆகியனவும் இடம்பெறும் எனவும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலிற்கான விசேட பாதுகாப்பு திட்டத்தின் கீழ இந்த பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார் பொலிஸ்மா அதிபர். இதுவரை 76 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் ஒரு கொலை சம்பவமும் அடங்கும் எனவும் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 555 views
-
-
தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடையே மீண்டும் மிளிர்ந்துள்ள ஒற்றுமையான செயல்பாடுகளை வரவேற்ப்பதுடன் தொடரும் ஓற்றுமைக்கான முயற்சிகளை பலப்படுத்தப்படவேண்டும் எனவும் வேண்டி தமிழீழ எல்லாளன் படையினர் இன்று அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர். தமிழீழ எல்லாளன் படையின் முழுமையான அறிக்கை >> தமிழீழம் 26.11.2013 ஓற்றுமைக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்கின்றோம். அன்பார்ந்த எம் தமிழீழ உறவுகளே! “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது…” என்ற தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடை…
-
- 5 replies
- 1.4k views
-
-
விக்னேஸ்வரன், சம்பந்தன் திடீர் சந்திப்பு : காரணம் இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்குகொள்ளும் அவசர கலந்துரையாடல் இன்று மாலை முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சித் தலைவர்களும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்துகொள்கின்றனர். வட மாகாண சபையில் அமைச்சரவை தொடர்பில் நிலவிய சர்ச்சை அதன் பின்…
-
- 10 replies
- 2.9k views
-
-
அக்கரப்பத்தனையில் மத முரண்பாட்டை உருவாக்க திட்டமா? January 2, 2022 அக்கரபத்தனை நகரில் பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருக்கும் கடைகளில் சில கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவுருவச் சிலைகளும் பொம்மைகளும் இனந்தெரியாதோரால் நேற்றிரவு அல்லது இன்று விடியற்காலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலய நிர்வாக சபையினர் அக்கரபத்தனை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள பிரதான ஆலயமான சித்தி விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை விசேட பூஜை வழிபாடுகள் …
-
- 5 replies
- 543 views
-
-
இந்தியாவை நாம் தந்திரமாக ஏமாற்றினோம்: சிறீலங்கா திகதி: 04.01.2010 // தமிழீழம் யுத்த காலததில் இந்தியாவுடனான உறவுகளை தந்திரோபாயமான முறையில் முன்னெடுத்த காரணத்தினால் அழுத்தங்களிலிருந்து மீள முடிந்ததாக சிறீலங்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தங்களை விடவும், இந்தியாவினால் யுத்தம் தொடர்பாக பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மிகவும் அதிகம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், சூட்சுசமான முறையில் முறையில் இந்தியாவுடனான உறவுகளை இராஜதந்திர ரீதியில் அணுகியதனால் சிக்கல்கள் இன்றி யுத்தத்தை முன்னெடுக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு பதக்கம் அணிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக்…
-
- 4 replies
- 1k views
-
-
விசாரணை செய் அல்லது விடுதலை செய் என்ற கோரிக்கையை முன் வைத்து நாட்டின் பல்வேறு சிறைச் சாலைகளிலும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் நான்கு பேர் மயக்கமடைந்த நிலையில் சனிக்கிழமை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிய மகசீன் சிறைச்சாலைக் கைதிகள் இருவரும் யாழ்ப்பாண சிறைச்சாலைக் கைதிகள் இருவருமே உடல்நிலை மோசமடைந்த நிலையில் சனிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் இருப்பின் அது தொடர்பாக விசாரணை செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சிறைச்சாலைகளில் மிக நீண்டகாலமாக வாடும் 577 தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவி…
-
- 0 replies
- 631 views
-