ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
அம்பாறையில் புலிகள் தாக்குதல்: அதிரடிப்படையைச் சேர்ந்தவர் பலி [செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2008, 08:40 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அம்பாறையின் எல்லைப்பகுதியான குமுக்கன் ஓயாப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6:20 மணியளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த படையினரையும் கொல்லப்பட்டவரினது உடலத்தையும் படையினர் உலங்குவானூர்தியில் ஏற…
-
- 13 replies
- 2.1k views
-
-
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டம் யால வனப்பகுதியில் சிறிலங்கா படையினர் மீது இன்று அடையாளம் தெரியாத ஆயுதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 305 views
-
-
அம்பாந்தோட்டையில் சீனக்குழுவினருக்கு இலங்கை கடற்படை பாதுகாப்பு அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட வுள்ள நிலையில், சீனக் குழுவொன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு நேற்றுமுன்தினம் வந்துள்ளது. இந்தக் குழுவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்பாந்தோட்டைத் துறைமுகத் தற்காலிகப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படையினர் கவசவாகனங்களுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, அடுத்த மாதம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன http://newuthayan.com/story/27862.html
-
- 0 replies
- 114 views
-
-
அம்பாந்தோட்டையில் சீனா பாரிய முதலீடு – புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது 36 Views உலகின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சீன ஷாங்டொங் ஹாஹுவா டயர் நிறுவனம் 300 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்து அம்பாந்தோட்டை துறைமுக தொழிற்துறை பூங்காவில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது. கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஷென்ஹொங் ஆகியோர் காணொளி மூலம் இணைந்…
-
- 2 replies
- 1k views
-
-
அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படை தளம் - அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தியது இலங்கை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை அமைக்கலாம் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள இலங்கை இது குறித்து அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவலகம் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் சீனாவின் கடற்படை தளம் உருவாகலாம் என சிலர் கற்பனை செய்கின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது இலங்கையின் துறைமுக அதிகார சபைக்கும் சீனா மேர்ச்சன்ட் நிறுவனத்திற்கும் இடையிலான வர்த்தக முயற்சி எனவும் குறிப்பிட்டுள்ளது. இலங்க…
-
- 0 replies
- 376 views
-
-
அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத் தளம்- ஜப்பானிய தளபதி எச்சரிக்கை இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை நடவடிக்கைகள் விரிவடைந்து வருவது குறித்து ஜப்பானிய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானோ எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சீனக் கடற்படை தளது நடவடிக்கைகளை உறுதியாக விரிவுபடுத்தி வருகிறது. இந்தியாவைச் சுற்றி கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக சீனா தனது நிதியை முதலீடு செய்து வருகிறது. பிராந்தியத்தில் தனது இராணுவத் தளங்களின் வலையமைப்பை உறுதியாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. சீனாவின் கடற்படை விரிவாக்க மூலோபாயத்துக்கு உதவும் கட்டமைப்புகளுக்கு உதாரணமாக, பாகிஸ்தானின் குவடார் துறைமுகம், சீனாவி…
-
- 5 replies
- 509 views
-
-
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும், தூதரக அதிகாரிகள் குழுவொன்று, இரண்டு நாள் பயணமாக அம்பாந்தோட்டை சென்று, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பார்வையிட்டுள்ளது. நேற்றுமுன்தினமும், நேற்றும், அம்பாந்தோட்டைக்குச் சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழுவினர், மத்தல விமான நிலையம், துறைமுகம், மாகம்ருகுணுபுர அனைத்துலக மாநாட்டு மண்டபம், ஆகியவற்றைப் பார்வையிட்டனர். அத்துடன், அம்பாந்தோட்டை வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்கள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டங்கள் தற்போது முடங்கிய நிலையில் உள்ளன. அம்பாந்தோட்டை முறை…
-
- 0 replies
- 429 views
-
-
சீனாவினால் மில்லியன் டொலர் செலவில், சிறிலங்காவின் தெற்கின் கடலோர நகரமான அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத்தளத்துடன் கூடிய துறைமுகம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதை டைம்ஸ் ஒன்லைன் கசியவிட்டுள்ளது. முழு தெற்காசியாவுக்குமான தமது கண்காணிப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும், கடற்போக்குவரத்தின் போது கப்பல்களுக்கு மீள் எரிசக்தி அளிக்கவும், கப்பல் பழுது பார்க்கும் தளமாகவும் மாறவிருக்கும் இக்கடற்படை தளத்தினை அம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்காக 2007 மார்ச் மாதம் ஒப்பந்தத்தினை சீனா, இலங்கை அரசுடன் கைச்சாத்திட்டதாகவும், சிரிலங்கா அரசின் இராணுவ வெற்றிகளுக்கும், சீனா வழங்கிய இராணுவரீதியான உதவிகளே காரணம் எனவும் டைம்ஸ் ஒன்லைன் சுட்டிக்காட்டியுள்ளது. பாகிஸ்த்தானின் க்வதார், வங்காளதேசத…
-
- 1 reply
- 1.1k views
-
-
அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பகுதயில் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இந்த துப்பாக்கி பிரயோகத்துக்கு காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். காயமடைந்தவர்கள் மூன்று பேர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் ஏனைய இருவர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/?q=node/359538
-
- 1 reply
- 397 views
-
-
தெற்கு கைத்தொழில் வலயத்தில் சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலைகளில் பணிக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கு பயிற்சிகளை அளிப்பதற்கான தொழிற்பயிற்சி நிறுவகம் ஒன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவும் சிறிலங்காவும் இணைந்து இந்த தொழிற்பயிற்சி நிறுவகத்தை ஆரம்பித்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்துக்கு அருகில் இந்த தொழில்நுட்ப நிறுவகத்தை திறந்து வைத்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது, இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தெற்கு அபிவிருத்தித் திட்டத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இதன் மூலம், வரும் ஆண்டுகளில் இந்தப் பகுதி …
-
- 0 replies
- 274 views
-
-
அம்பாந்தோட்டையில் நின்று அமெரிக்காவுக்கு அம்பு விடுகிறார் பீரிஸ்! – லிபியா, ஈராக்கை போல ஊடுருவ முயற்சியாம். [sunday, 2014-02-09 08:18:33] லிபியா, ஈராக் போன்று இலங்கையிலும் ஊடுருவுவதற்கு சில தீய சக்திகள் முயற்சித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், சில சர்வதேச சக்திகள் இலங்கைக்குள் செய்ய முடியாதவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டே மனிதஉரிமையைக் கருவியாகப் பயன்படுத்தி, செய்ய முயற்சிக்கின்றனர். லிபியாவில் அந்நாட்டு அதிபர் முஹம்மர் கடாபி ஓர் நாயைப் போன்று கொலை செய்யப்பட்டார். ஈராக்கில் அந்நாட்டு ஜனாதிபதி பலவந்தமாக பதவி விலக்கப்பட்டார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு…
-
- 2 replies
- 653 views
-
-
[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 12:59 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவின் தென் முனையிலுள்ள அம்பாந்தோட்டைப் பகுதியில், 2714 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட முதலீட்டு வலயத்தில், பாரிய 11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தினை அமைச்சரவை யூலையில் வழங்கவிருக்கிறது. இந்த நிலையில், அம்பாந்தோட்டை நகரத்தினை மையப்படுத்திய அரசாங்கத்தினால் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் இந்த அமைச்சரவை அங்கீகாரத்துடன் முழுவேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய உலகின் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜேர்மனியைச் சேர்ந்த அவுடி [Audi] நிறுவனம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அண்மையில் பல மில்லியன் …
-
- 0 replies
- 716 views
-
-
அம்பாந்தோட்டையில் பதற்றம்;என்றுமில்லாதவாறு பொலிஸார் குவிப்பு அம்பாந்தோட்டை நகரில் என்றும் இல்லாதவாறு பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதால் பெரும் பதற்றநிலை உருவாகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்றைய தினம் அம்பாந்தோட்டையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில் அமைதியின்மை ஏற்படாமல் இருப்பதற்காக பொலிஸார் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/police-crowd-in-hambantota மத்தள விமான நிலைய விவகாரத்துக்கு எதிராக அம்பாந்தோட்…
-
- 8 replies
- 525 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பதில் குழப்பத்தில் உள்ளார். மேலும் தனது மாவட்டமான அம்பாந்தோட்டையில் போட்டியிடுவதற்கு அவர் பெரும் அச்சப்படுகின்றார் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். ஜனவரி 8 ஆம் திகதி வெற்றி கொண்ட சவால்களை மீளவும் வெற்றிகொள்வது எமக்கு பெரிய சவால் அல்ல. எவர் தேர்தலில் களமிறங்கினாலும் நாமே பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய அரசா…
-
- 1 reply
- 172 views
-
-
அம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் ஆலை – 14 பில்லியன் டொலர் முதலீடு அம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சிங்கப்பூரின் Sugih Energy International நிறுவனம் 14 பில்லியன் டொலரை முதலீடு செய்யவுள்ளதாக அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், “ஏனைய சிங்கப்பூர் நிறுவனங்களால் முன்மொழியப்பட்டுள்ள ஏனைய திட்டங்களை விட இந்த முதலீடு மிகப்பெரியது. முதலாவது சிங்கப்பூர் நிறுவனம் அமைக்கவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நாளொன்றுக்கு 2 இலட்சம் பீப்பாய்களை மாத்திரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டத…
-
- 0 replies
- 313 views
-
-
அம்பாந்தோட்டையில் மீண்டும் சீனா DEC 21, 2014 | 0:09by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சீனா தளம் அமைக்கப் போவதாக அனைத்துலக ஊடகங்களால் ஊகம் வெளியிடப்படும், அம்பாந்தோட்டையில், 16 மில்லியன் டொலர் பெறுமதியான மற்றொரு அபிவிருத்தித் திட்டத்தை சீனாவிடம் கையளித்துள்ளது சிறிலங்கா அரசாங்கம். ஒருங்கிணைந்த பேருந்து-தொடருந்து முனையத்தை அமைக்கும் திட்டமே தற்போது சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனமே, சிறிலங்கா நாணயப் பெறுமதியில் சுமார் 2 பில்லியன் ரூபா பெறுமதியான இந்த திட்டத்தை நிறைவேற்றவுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கப்படும் இந்த திட்டம், ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் என்று திட்டத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.காமினி தெரிவித்து…
-
- 1 reply
- 391 views
-
-
அம்பாந்தோட்டையில் மூன்று ராஜபக்சக்கள் போட்டி! - கம்பகாவில் மூன்று ரணதுங்க[Saturday 2015-07-11 08:00] பாராளுமன்றத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக் ஷ குடும்பத்தை சேர்ந்த மூவர் போட்டியிடவுள்ளனர். அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் மூன்று ரணதுங்கக்கள் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். மஹிந்த ராஜபக் ஷ எதிர்வரும் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும் அவரின் சகோதரர்கள் மூவர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வர் நாமல் ராஜபக் ஷ, மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரி நிருபமா ராஜபக் ஷ ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில…
-
- 0 replies
- 185 views
-
-
அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் தெற்கு தொடருந்துப் பாதை அமைப்பு ஆகியவற்றுக்காக சீனா மேலும் 1.12 பில்லியன் டொலர் நிதியை சிறிலங்காவுக்கு கடனாக வழங்கவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது கட்ட நிர்மாணப் பணிகளுக்காக சீனாவின் எக்சிம் வங்கி 878.2 மில்லியன் டொலரை கடனாக வழங்கவுள்ளது. தெற்கு தொடருந்துப் பாதை அமைப்புக்காக மேலும் 237.35 மில்லியன் டொலரை சீனா கடனாக வழங்கவுள்ளது. இந்தக்கடன் 7 ஆண்டு விலக்குடன் 20 ஆண்டுகளில் 2 வீத வட்டி, முகாமைத்துவ கட்டணம் 0.5 வீதம், பொறுப்புக் கட்டணம் 0.5 வீதம் ஆகியவற்றுடன் 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். முன்னதாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு சீனா 400 மில்லியன் டொலரை வழங்கியிருந்தது. …
-
- 0 replies
- 523 views
-
-
அம்பாந்தோட்டையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம் – அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை கார்வண்ணன்Oct 07, 2018 | 2:34 by in செய்திகள் கடன் இராஜதந்திரத்தை தனது பூகோள செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்வதற்கு சீனா பயன்படுத்திக் கொள்கிறது என்றும், அம்பாந்தோட்டை துறைமுகம், பீஜிங்கின் வளர்ந்து வரும் நீல நீர் கடற்படையின் முன்னரங்க தளமாக விரைவில் மாற்றமடையும் என்றும் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உயர்மட்ட சிந்தனைக் குழாமான, ஹட்சன் நிறுவகத்தில், வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக வியாழக்கிழமை நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”ஆசியா, ஆபிரிக்கா, தொடக்கம், ஐரோப்பா வரை மட்டுமன்றி, இலத்தீன் அமெரிக்கா வரையான நாடுகளுக்கு, …
-
- 1 reply
- 759 views
-
-
அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவதற்கான முட்டுக்கட்டை அகன்றது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனுடன் இணைந்த 15 ஆயிரம் ஏக்கர் காணியில் கைத்தொழில் பூங்காவையும் அமைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் இரண்டு சீன நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை சிறிலங்கா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சீன நிறுவனங்களுடன், கட்டமைப்பு உடன்பாட்டுக்கு செல்வதற்குத் தடை விதிக்குமாறு கோரி, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்த…
-
- 0 replies
- 268 views
-
-
அம்பாந்தோட்டையை சீனாவுக்குக் கொடுப்பது இந்தியாவுக்கு ஆபத்து எச்சரிக்கிறார் பார்த்தசாரதி சென்னையில் கடந்த சனிக்கிழமை சென்னை அனைத்துலக நிலை யத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய, இந்தியாவின் முன்னாள் மூத்த இராஜதந்திரியான ஜி. பார்த்தசாரதி அங்கு மேலும் தெரிவித்ததாவது: பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் சீனாவுடனான தொடர்புகள் இந்தியாவுக்கு முக்கியமானது. தனது இருப்பை வலுப்படுத்துவதற்காகச் சீனா பெரும் பொருளாதார முதலீடுகளின் மூலமாக இந்தியாவைச் சுற்றி வளைத்துள்ளது. சீனாவின் நிதியில் பெரும் உட்கட்டமைப்பு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்…
-
- 2 replies
- 418 views
-
-
அம்பாந்தோட்டையை வசப்படுத்தியது சீனாவின் இராணுவ மூலோபாயம் – பென்டகன் சீனா தனது இராணுவ மூலோபாயத்தின் ஒரு அங்கமாகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசுக்கு, இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் தொடர்பாக பென்டகன் சமர்ப்பித்துள்ள ஆண்டு அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் டிஜிபோட்டியில் சீனா தனது இராணுவத் தளம் ஒன்றை அமைத்த சில மாதங்களில் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது. சீனாவின் பாதை மற்றும் அணைத் திட்டம், பீஜிங்கின் நலனுக்காக ஏனைய நாடுகளின் நலன்களை வடிவமைக்கும் நோக்கம் கொண்டது. …
-
- 0 replies
- 281 views
-
-
அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிறுவியுள்ள துறைமும், மற்றும் விமான நிலையம் ஆகியவற்றைப் பயன்படுத்த அனைத்துலக கப்பல் மற்றும் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டாதது சிறிலங்கா அரசுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியுள்ள நிலையில் அங்கு குறிப்பிட்ட சில கப்பல்களே வந்துள்ளன. துறைமுகத்தின் நுழைவாயிலில் காணப்பட்ட பாரிய கற்பாறைகளை அகற்ற பல மில்லியன் டொலரை சிறிலங்கா அரசு செலவிட்ட போதும், இங்கு போதிய கப்பல்கள் வராதது சிறிலங்கா அரசாங்கத்தை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தநிலையில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு கப்பல்களை அனுப்புமாறு பங்களாதேசுடன் சிறிலங்கா அரசு பேச்சுகளை நடத்தியுள்ளது. வேறும்…
-
- 1 reply
- 401 views
-
-
செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 8, 2011 தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவை கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹலின் மர்சூக் உள்ளிட்ட உயர் நீதிமன்ற 3 நீதியரசர்கள் கொண்ட குழுவினால் இந்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் பின்னர் தன்னை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்குவதற்கு அந்த கூட்டமைப்பு தீர்மானித்ததாக பி.பியசேன மனுவில் குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கபடுவதற்…
-
- 0 replies
- 866 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திற்கு புதிதாக பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரவி ஜயவர்தன இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமைவரை தமக்கு இந்த இடமாற்றம்பற்றி அறிவிக்கப்படவில்லையெனத் தெரிவித்த அவர் இந்த இடமாற்றத்திற்கான காரணமென்னவெனத் தெரியவில்லையெனக் கூறினார்.இதேவேளை இது தொடர்பாக எவ்வித உத்தியோகபூர்வ அறிக்கையும் வெளியிடப்படமாட்டாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ. எம். கருணாரத்ன கூறினார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 740 views
-