ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர் 03 Sep, 2025 | 11:00 AM நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இணைந்து கச்சத்தீவுக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் எமது மீனவ சொந்தங்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அப்பகுதியில் மேற…
-
- 3 replies
- 409 views
- 1 follower
-
-
திருகோணமலையை இன்று பிற்பகல் சூறாவளி தாக்கியதில் 29 வீடுகள் முற்றாக சேதமடைந்தும் 26 வீடுகள் சிறிய சேதத்துக்கும் உள்ளானது.மின்சார இணைப்புகள் சேதமடைந்துள்ளதால் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது. டெயிலிமிரர்
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆழமாக்கப்படுகிறது புல்லுக்குளம் யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள புல்லுக்குளத்தை ஆழமாக்கும் பணிகள் மிகவும் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. யாழ் குடாநாட்டில் கரும வரட்சி நிலவி வருகின்றதனால் புல்லுக் குளமானது நீர்வற்றி காணப்பட்டது எனிவரும் காலப்பகுதி மழைகாலம் என்பதால் இதனை ஆழமாக்கும் பணிகள் மிகவும் விரைவாக இடம் பெற்று வருகின்றது. http://onlineuthayan.com/News_More.php?id=172511450222507216
-
- 0 replies
- 804 views
-
-
கொரோனா அச்சம் – வவுனியாவிலிருந்து ஒருவர் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றம்! கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஒருவர் வவுனியாவிருந்து யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்றிரவு(செவ்வாய்கிழமை) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே இவ்வாறு யாழ்.வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபர் கொரோனா குறித்த விசேட பரிசோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 43 பேர், விசேட வைத்தியக்குழுவின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் சுமார் 220 பேர் வைத்திய…
-
- 0 replies
- 247 views
-
-
கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ் மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரைக் கொலை செய்ய தானே திட்டமிட்டதாக பத்மே ஒப்புக்கொண்டார். அத்துடன் கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சியில் நேரடி தொடர்பு இல்லையெனவும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் கோரிக்கையின் பேரில் அதற்கு ஒத்துழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொக்கேய்ன், ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்…
-
- 0 replies
- 170 views
-
-
நெடுங்கேணியில் கிளைமோர் தாக்குதல்: அப்பாவிப் பொதுமக்கள் இருவர் படுகொலை [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 09:00 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணிப் பகுதியில் உள்ள ஒலுமடுவில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் பொதுமக்களை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் மரக்கறி வியாபாரியான சந்திரன் (வயது 35) மற்றும் சுகிர்தன் (வயது 15) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். புதினம்
-
- 0 replies
- 678 views
-
-
மட்டக்களப்பில் 2015ஆம் ஆண்டு 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பேத்திக்கு ஒரு இலட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த வியாழக்கிழமை (25) கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார். 56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ஆம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம் வரை உள்ள காலப்பகுதியில் 3 தடவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சந்தேக…
-
- 0 replies
- 142 views
-
-
வன்னிப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருவதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படையினருக்கு உத்தரவிட்டுள்ளதோடு இடம் பெயர்ந்துள்ள மக்கள் படையினரால் திறக்கப்பட்டுள்ள பாதைகள் மூலமான அரச காட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அனுரபிரிய தர்ஷன யாப்பா கூறினார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். http://www.tamilseythi.com/srilanka/Anurap...2009-08-04.html
-
- 0 replies
- 878 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லைக்குள் மலையகத் தோட்டப்புறங்களையும் உள்வாங்க வேண்டும்! இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லைக்குள் மலையகத் தோட்டப்புறங்களையும் உள்வாங்க வேண்டும் என்று மலையக சிவில் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதேச சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்க உரிமை இருக்கும் தோட்டப்புற மக்களுக்கு அந்தப் பிரதேச சபைகளின் சேவைகளைப் பெறுவதில் மட்டும் சட்டரீதியான தடைகள் இருப்பதாக நீண்டகாலமாக சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டி வருகின்றனர். இலங்கையின் உள்ளூராட்சி மன்ற முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது. இதற்கான விவாதத்தின்போது, மலையக மக்…
-
- 0 replies
- 358 views
-
-
யாழ்ப்பாண சிறைச்சலையினால் 150 குடும்பங்கள் பாதிப்பு 18 மே 2016 யாழில் புதிதாக யாழ்.கொட்டடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சிறைச்சாலை கட்டடத்தினால் அதன் அயலில் உள்ள 150 குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளன. யாழ்.குடாநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சிறைச்சாலைக்கு அருகில் வசிக்கும் கொட்டடி J/80 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட மீனாட்சி குளம் பகுதியை சேர்ந்த மக்களே அவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளனர். சிறைச்சாலை புதிதாக நிர்மாணிக்கும் போது அப்பகுதி மண் போட்டு மேட்டு நிலமாக மாற்றிய பின்னரே சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட்டது. அதனால் சிறைச்சாலை பகுதியை தாண்டி வெள்ளம் ஓட முடியாத நிலை காணப்படுவதனால் அப்பகுதியில் வெள்ளம் தேங…
-
- 0 replies
- 449 views
-
-
யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி! சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி, ஒருவர் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்வி ஜனாதிபதி சிறப்புப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார். இதன் போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை , ஜனாதிபதி அனுரவிடம் இருந்து மாணவி பெற்றுள்ளார். பதக்கம் வென்ற யாழ் மாணவி கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது. யாழிற்கு பெருமை சேர்த்த மாண…
-
- 4 replies
- 341 views
-
-
கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறாள் தமிழினி என்ற சிறுமி. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்று வரும் தமிழினி கடந்த புலமை பரீட்சையில் 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருக்கிறார். மாவட்டத்தில் இந்த பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்று முதலாம் இரண்;டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் பலர் இருக்க வெட்டுப்புள்ளியான 146 புள்ளிகளை பெற்ற இந்த தம்ழினியை பற்றி ஏன் எழுதவேண்டும்? தமிழினியின் வாழ்க்கை பெரும் துயரத்தில் மிதக்கிறது. அவளது வாழ்வில் இந்தப் புள்ளிகள் ஒரு சாதனையாகின்றன. தமிழினியின் தந்தை தனபாலளை யுத்தம் இந்த உலகை விட்டு அழித்துவிட்டது. தாய் புவனேஸ்வரி வறுமையினால் வெளிநாட்டில் உழ…
-
- 37 replies
- 4.7k views
-
-
இந்த அரசாங்கம் எதிர்காலத்தில் தாய்ப்பாலுக்கும் வரி விதிக்கக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். போர் வெற்றி என்ற போர்வையில் பணம் மற்றும் அரச வளங்கள் கொள்ளையிடப்படுகின்றன. தற்போது விவசாயிகளின் நீர்பாசன கிணறுகளுக்கும் வரி அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.எதிர்காலத்தில் தாய்ப்பாலுக்கும் வரி அறவீடு செய்யப்படலாம். மக்கள் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். தேசப்பற்று என்ற போர்வையில் அரசாங்கம் விவசாயிகளின் மீது வரிச் சுமையை சுமத்த முயற்சிக்கின்றது.வரிச் சுமையினால் மக்கள் எதிர்காலத்தில் இன்னும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹொரணை பிரதேசத்தில்…
-
- 0 replies
- 383 views
-
-
யாழ். மாவட்டத்தில் இதுவரை 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றம் -செல்வநாயகம் கபிலன் யாழ். மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது வரையான காலப்பகுதியில் 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றியுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'இந்தியாவில் இருந்து வருகை தந்த 955 குடும்பங்கள் உள்ளடங்கலாக 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் இவ்வாறு 33,472 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளன. இந்நிலையில், யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 10,770 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவையாக உள்ளன. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த 2015ஆம், …
-
- 0 replies
- 247 views
-
-
பெளத்த அதிகாரத்தின் அதியுச்ச ஆக்கிரமிப்பு! நூற்றுக்கணக்கான விகாரைகளை கட்டிய மகிந்த மகிந்த ராஜபக்ச நீண்டகாலமாக புத்தசாசன அமைச்சராக செயற்பட்ட நிலையில் குச்சவெளியை புனிதபூமியாக மாற்றி நூற்றுக்கணக்கான விகாரைகளை கட்டியதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ரஜீவன் தெரிவித்துள்ளார். புனித பூமி என்கின்ற ஆக்கிரப்பு உறுதிகளை ஆதாரமாக காட்டி பெளத்த அதிகாரத்தின் அதி உச்ச ஆக்கிரமிப்பின் வடிவத்தினை வெளிப்படுத்துவதாகவும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குச்சவெளி புனிதபூமி மகிந்த ராஜபக்ச நீண்டகாலமாக புத்தசாசன அமைச்சராக செயற்பட்ட நிலையில் குச்சவெளியை புனிதபூமியாக மாற்றி நூற்றுக்கணக்கான விகாரைகளை கட்டினார்கள்.விரும்பிய பிக்குகள் விரும்பிய இடத்தை கேட்டு வாங்கக்கூட…
-
- 0 replies
- 67 views
- 1 follower
-
-
அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பபுச் செலவுக்கு 17ஆயிரத்து 710 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவிருக்கிறது. இது தொடர்பாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முப்படையினருக்காவும் அரசு 2009ம் ஆண்டில் 177.1 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யவுள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலமாக இது தெரியவந்துள்ளது. இராணுவத்திற்கான 8 ஆயிரத்து 390 கோடி ரூபா ஒதுக்கபட்டுள்ளது. இதே வேளை, கடற்படையினரின் தேவைகளுக்காக 2 ஆயிரத்து 750 கோடி ரூபாவும் விமானப் படையினருக்கு 2 ஆயிரத்து 50 கோடி ரூபாவும் அரசு ஒ…
-
- 1 reply
- 714 views
-
-
நிதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெப்பு தோல்வியில் முடிந்தது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 51 வாக்குகளும் எதிரான 145 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது. இந்த வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை. - See more at: http://www.tamilmirror.lk/174331/ந-த-யம-ச-சர-ம-த-ன-நம-ப-க-க-ய-ல-ல-ப-ர-ரண-த-ல-வ-#sthash.oz6p0a52.dpuf ஜே.வி.பி ஆதரவு நிதியமைச்சர் ரவி கருண…
-
- 1 reply
- 379 views
-
-
தமிழ் அரசியல் கட்சிகள் மரண அச்சுறுத்தல் விடுப்பதாக மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மங்களராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.தமிழீழ அரசியல் கட்சிகளினால் தமக்கும் சிங்கள மக்களும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. தமக்கும் பிரதேச சிங்கள மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறு சுமனரத்ன தேரர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.மட்டக்களப்பு சிட்டிமடு மற்றும் கெவிலியா மடுவ ஆகிய பிரதேசங்களில் 90 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டது முதல் இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு சுதந்திரமடைந்துள்ள நிலை…
-
- 0 replies
- 442 views
-
-
08 Dec, 2025 | 05:04 PM பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார். எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் என கூறி பெண் ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜரான பெண், “எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். தந்தை உரிமையை நிலைநாட்டுவதற்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கின் பிரதிவாதியான இலங்கை கிரி…
-
- 0 replies
- 74 views
-
-
எப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களின் மீது சிறிலங்க இராணுவம் தாக்குதல் நடத்தி, அதன் காரணமாக மிகப் பெரும் அளவிற்கு மனிதாபிமான, மனித உரிமை பிரச்சனை எழுகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து அவர்களுக்கு ஆதரவாகவும், சிறிலங்க அரசின், அந்நாட்டு இராணுவத்தின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் இருந்து குரல் எழுவது இயல்பான, இயற்கையான எதிர் வினையாகும். ஆனால், அவ்வாறு சிறிலங்க அரசின் அடக்குமுறையையும், சொந்த நாட்டு மக்கள் மீது அவர்கள் கடந்த 30 ஆண்டுக்காலமாக கட்டவிழ்த்துவிட்டுவரும் காட்டுமிராண்டித்தனமான இன அழிப்பிற்கு எதிர்ப்புக் குரல் எழும்போதெல்லாம், இங்கிருந்து சில அரசியல் ‘தலைவர்களும்’, சில பத்திரிக்கைகளும் அதனை பயங்கரவாதத்திற்கு ஆதரவான குரலாக சித்தரித்து எதிர்க்குரல…
-
- 2 replies
- 1.1k views
-
-
[size=4]காணாமல் போதல் பற்றிய ஐ.நாவின் செயற்குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு ஐ.நா. செயலாளர் நாயகத்திடமும் அது தொடர்பில் ஆவனம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் காணாமல் போனமை தொடர்பான இலங்கை விசாரணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடத்தல்களில் இருந்து சகலரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் இலங்கை கையொப்பமிட வேண்டுமெனவும் இலங்கையில் இடம்பெற்ற காணாமல் போன சம்பவங்களை ஆராய ஒரு சுதந்திரமான ஆணைக்குழுவை அமைக்குமாறு கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செய்துள்ளன அதனை பூரணமாக செயற்படுத்த வேண்டுமெனவும் இந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. காணாமல் போனமை தொடர்பான விசாரணைக்குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரன் மற்றும் காணாமல்…
-
- 0 replies
- 581 views
-
-
அர்ஜுன மகேந்திரனை மீள்நியமிப்பதில் தீவிரமாக இருக்கும் பிரதமர் : ஜனாதிபதியுடனும் தொலைபேசியில் உரையாடல் (ரொபட் அன்டனி) மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக இது தொடர்பில் பல்வேறு பொது அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரியவருறது. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பொருளாதார கொள்கைகளை அர்ஜுன மகேந்திர…
-
- 2 replies
- 227 views
-
-
19 Dec, 2025 | 12:54 PM நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு தமிழ்நாட்டில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (19) நடைபெற்றது. இதன்போதான கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. அத்துடன் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கான தீர்வு முதலான விடயங்கள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. அதேவேளை, முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையள…
-
-
- 9 replies
- 708 views
-
-
அவையில் 'ஹோ' கோஷம்; பிரதமருக்கு இருமல் அழகன் கனகராஜ் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ள விவகாரம் அவையில் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் அவ்வணியின் உறுப்பினர்கள் எழுந்து நின்று 'ஹோ, ஹோ' என்று கோஷம் எழுப்பினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைடைந்ததன் பின்னர், பிரச்சினையொன்றை முன்வைப்பதற்கு மட்டும், தினேஷ் குணவர்தன எம்.பி.க்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை எழுப்ப முடியுமே தவிர, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதனால் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கு இடமளிக்க முடியாது என்று செல்வம் அடைக்கலநாதன் திட்டவட்டமாக அறிவித்த…
-
- 0 replies
- 272 views
-
-
நாங்கள் சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? - சி.வீ.கே.சிவஞானம் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியதுடன் இந்திய வெளியுறவு நாங்கள் அதனை வலியுறுத்தினேன் என தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக சி.வீ.கே.சிவஞானம் நேற்று (28) நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயத்தை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்படவில்லை எனவும் உயர்ஸ்தானிகரிடமே மகஜர் கையளிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார். இவ்வாறான சந்திப்புக்களில் அமைச்சர் மகஜரை கையேற்பதில்லை எ…
-
- 0 replies
- 234 views
-