ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
புத்தளத்தில் மின்மாற்றி வெடித்து சேதம் 2/19/2008 9:18:46 AM வீரகேசரி இணையம் - புத்தளத்தில் இன்று காலை மின்மாற்றியொன்று வெடித்துள்ளது.புத்தளம் மங்கலேலிய பகுதியிலுள்ள மின்மாற்றியொன்ரே வெடித்து சேதமாகியுள்ளது. இவ் வெடிப்பு சம்பவத்திற்க்கான காரணம் இது வரை கண்டறியப்படவிலை. பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
- 1 reply
- 1.5k views
-
-
துணை இராணுவக் குழுவினரை அடக்க சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம். சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படுகொலைகளை நிகழ்த்தி வரும் துணை இராணுவக் குழுவினரை கட்டுப்படுத்தி வைக்குமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது. அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தனது இலங்கைப் பயணத்தை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ரிச்சர்ட் பௌச்சர், இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித் தீர்வு காண முடியாது என்று தெரிவித்திருந்தார். தற்போதைய இலங்கைப் பயணத்தின் போது சிறிலங்கா மீது கடுமையான அழுத்தங்களை அமெரிக்கா செலுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருது…
-
- 2 replies
- 1.5k views
-
-
மழை கொட்டுகிறது, உணவும் இல்லை மட்டக்களப்பில் அகதிகள் பெரும் அவலம் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், கடுமையான உணவுப் பற்றாக்குறைக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைப் போல் எந்த விதமான உணவு விநியோகங்களும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மூன்று வேளையும் உணவை உட்கொள்ள வேண்டிய மக்கள் 100 தொடக்கம் 200 கிராம் அரிசியுடன் ஒரு நாளைக் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால் மா வகைகளின் பற்றாக்குறையினால் சிறார்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
-
- 8 replies
- 1.5k views
-
-
சிங்களவர்களை அரவாணிகளாக்காதீர் : நாங்கள் சிங்கங்கள் கெஹெலிய மாவீரர் தினத்தை நினைவு கூருவதற்கு அரச அங்கீகாரத்தை வழங்கி சிங்களவர்களை"அரவாணிகளாக்கி” விடாதீர்கள். சிங்களக் கொடி கம்பீரமாக பறந்த நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டாம் என சபையில் கோரிக்கைவிடுத்த கெஹெலிய ரம்புக்வெல்ல எம்.பி.,காஷ்மீரில, இங்கிலாந்தில், பாகிஸ்தானில், ஜேர்மன், கனடாவில் பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு அனுமதியளிக்கப்படுகின்றதா என்ற கேள்வியையும் முன்வைத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஒலி பெருக்கி கட்டுப்பாடு குறித்து ஆலயங்களுக்கு அறிவிப்பு -எஸ்.அரசரட்ணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் ஆலயங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியின் சத்தத்தைக் கட்டுப்படுத்த முன்வந்துள்ளதாக தெரிவித்த பிரதேச செயலாளர், சம்பந்தப்பட்டவர்களால் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைவாக ஒலிபெருக்கியை பயன்படுத்துமாறு ஆலய நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆலயங்களில் திருவிழாக் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் சுற்றாடலுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மாணவர்களின் கல்வியும் நோயாளரின் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது. இந்நிலை குறித்து பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம், …
-
- 12 replies
- 1.5k views
-
-
`நிலமற்ற மனிதர்கள், நிலமில்லாத வரலாற்றைக் கொண்டிருப்பர்'. மகாவம்சப் பொய்யர்கள், தமிழினத்தின் மீது பிரயோகிக்க முனையும் ஆக்கிரமிப்பு யுத்தம், கூறவிழையும் செய்தியும் இதுதான். பூர்வீக நிலமென்கிற அடிவேர் அற்ற மனிதக் கூட்டமாகத் தமிழினம் அலைய வேண்டுமென்கிற விவகாரமே, தற்போது சிங்களத்தின் முதன்மையான இன அடி அழிப்பு கோட்பாடாகவிருக்கிறது. இடம்பெயரும் தமிழ் மக்களின் வாழ்விற்கான இருப்பு, தம்மால் நிர்ணயம் செய்யப்படுவதையே பேரினவாதச் சக்திகள் விரும்புகின்றன. அவை நிறைவேறாத பொழுது, போர் விமானங்களும், ஆட்டிலெறிகளும், இடம்பெயரும் தமிழர்களின் அசைவியக்க ஊக்கிகளாகப் பயன்படுமென்கிற கற்பிதமும் சிங்களத்திற்கு அதீதமாக உண்டு. இதுதான் தற்போது வன்னியில் நடைபெறும், நிலமில்லாத வரலாற்…
-
- 0 replies
- 1.5k views
-
-
2000 மில்லியன் மக்களைக் கொண்ட பொது நலவாய நாடுகளின் குழுமத்தில் ஜனநாயகமும், மனித உரிமையும் எவ்வளவு முக்கியம் என்று உலகத்திற்கே தெரியும். ஆனால் சிறுபிள்ளைத்தனமாக அவுஸ்ரேலிய பிரதமர் யூலியா கில்லட் அதனை அலட்சியப்படுத்தியுள்ளார் பத்திரிகைகள் கூறியுள்ளன. சிறிலங்கா அரசாங்கம் போரின் இறுதிப்பகுதியில் 40,000 மக்களைக் கொன்றுள்ளது. சரண்டைந்தவர்களை சுட்டுக்கொலை செய்துள்ளது, பெண்களை பலாத்காரம் செய்துள்ளது. மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசியுள்ளது. இவற்றையெல்லாம் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. மிகப்பெரிய, கொடூரமான போர்க்குற்றங்களை புரிந்துள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு அவுஸ்ரேலிய பிரதமர் நல்ல பெயரை வாங்கி கொடுக்க நினைத்தது எப்படி?. இதே வேளை கனேடியப் பிரதமர்…
-
- 3 replies
- 1.5k views
-
-
குடும்பிமலை காட்டுக்குள் பிரவேசிக்க முனைந்த அதிரடிபடையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 18 அதிரடைபடையினர் காயமடைந்தனர்.புலிகளின் மோட்டார் தாக்குதலால் மற்றும் ஆட்டிலெறி தாக்குதலால் காயமடைந்த 11 அதிரடிபடையினர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருகின்றனர் அத்துடன் 7 அதிரடி படையினர் மாகா ஓயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலிகள் இந்த சம்பவம் தொடர்பாக எந்த செய்தியையும் இன்னும் வெளியிடவில்லை ஆதாரம் -தமிழ் நெட் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22284
-
- 1 reply
- 1.5k views
-
-
ரவிராஜின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சர்வதேசமே கவனத்தை திருப்பென உரத்த கோஷங்கள் படுகொலையுண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. நடராஜா ரவிராஜின் இறுதி அஞ்சலிக் கூட்டமும் கண்டனப் பேரணியும் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றபோது இன, மத வேறுபாடுகளை நிராகரித்து விட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். படுகொலைக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற திடமான உறுதிப்பாட்டுடன் திரண்டு வந்த மக்கள், கட்டுக்காவலுடன் உள்ள தலைநகரில் பட்டப் பகலில் இடம்பெற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென உரத்த கோஷங்களை எழுப்பினர். கொழும்பு பொரளையிலுள்ள ஏ.எவ். ரேமன்ஸ் மலர்ச…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற அடிப்படைவாத கட்சிகளின் நடவடிக்கையினால் இக்கட்டானநிலை ஏற்பட்டுள்ளது மாவிலாறு பிரச்சினையை பேசித்தீர்த்திருக்கலாம் என்கிறார் பிரதியமைச்சர் டிலான் பெரேரா வீரகேசரி நாளேடு மாவிலாறு அணைக்கட்டு விவகாரத்தை புலிகளுடன் பேசித் தீர்த்திருக்கலாம். ஆனால் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற அடிப்படைவாத கட்சிகளின் சுய அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கையால் இன்று இக்கட்டான நிலைமை உருவாகியுள்ளது. சேருவில விகாரையின் தேரர் கூட இதனை உறுதிப்படுத்தியிருந்தார் என்று அரசியல் அமைப்பு விவகார ,தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். மாவிலாறு அணைக்கட்டு பிரச்சினை இன்று பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல உ…
-
- 2 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடம் குறித்து விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்னரே அவரது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொடூரமாகக் கொலை செய்துள்ளது. இந்தத் தகவலை இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரியே தெரிவித்துள்ளதாக சேனல் 4 நிறுவனத்தின் கேலம் மெக்காரே தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்களம் என்ற பெயரிலான ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டு இலங்கையின் இனவெறிப் படுகொலையின் பயங்கர முகத்தை உலக சமுதாயத்திற்கு அம்பலப்படுத்தியவர். தற்போது 2வது ஆவணப்படமும் தயாராகியுள்ளது. இதில் பிரபாகரனின் இளைய மகனான 12 வயதான பாலச்சந்திரனை கொடூரமாகக் கொலை செய்த காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ நாளை வெளியாகிறது. இந்த நிலையில் கொலை செய்வற்கு முன்பு பாலச்சந்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி.க்கு(குமரன் பத்மநாதனுக்கு) நேற்றுக் காலை கன்னத்தில் பலமான அடி விழுந்தமையால் அவரின் கையா ட்கள் இங்கு ஆடுகின்றனர் என்று ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதõன நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் இவை குழு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது ரவி எம்.பி உரையாற்ற தயாராக இருந்தார். இதனிடையே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது மேசையில் இருந்த புத்தகமொன்றை காண்பித்து இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டா நாம் இன்று (நேற்று) விவாதிக்கின்றோம். அப்படி விவாத…
-
- 3 replies
- 1.5k views
-
-
லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக, சிறிலங்காவின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெனிவாவுக்கான, சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள தூதரகங்களை வலுப்படுத்தி, சிறிலங்கா எதிர்ப் பரப்புரைகளை வலிமையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். “உலகில் எல்லா பிராந்தியங்களையும் கவனிக்கத்தக்க வகையில், சிறிலங்காவின் தூதரகங்கள் அமைய வேண்டும். இந்த நடவடிக்கை…
-
- 10 replies
- 1.5k views
-
-
யாழ் இந்துக்கல்லூரியை சேர்ந்த 2019ம் ஆண்டு உயர்தர பிரிவை சேர்ந்த மாணவ முதல்வர்கள் பாடசாலையின் கற்றல் உபகரணங்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கி அதை காணாளிப்படுத்தி “TikTok” டிக்டொக் செயலியில் பதிவேற்றியுள்ள சம்பவம் யாழ் கல்விச் சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. யாழ்ப்பாணம் உட்பட போரால் பாதிக்கப்பட்டு மரங்களிற்கு கீழும் தறப்பாள் கொட்டகைக்குள் பாடசாலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்க இவ்வாறான மாணவர்கள் தமக்கு இருக்கின்ற வசதிகளையே தமது சிற்றின்பத்திற்காக அடித்து நொறுக்குவது தமிழர் தேசத்தின எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தான ஒரு விடயமாகும். பல மாவீரர்களை இந்த மண்ணுக்காக உகந்த ஒரு பாடசாலையில் இவ்வாறான சம்பவம் நடந்தேறியிருப்பது கவலைக்குரிய …
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
சிறீலங்காவில் இடம்பெற்றதாக கருதப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையை தாம் வரவேற்பதாக அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரசின் பேச்சாளர் கலாநிதி சாம் பாரி தெரிவித்துள்ளார். போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தடுப்பதில் அவுஸ்திரேலியா உட்பட அனைத்துலக சமூகம் தவறிழைத்துள்ளது. ஆனால் தற்போது சிறீலங்காவில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு ஐ.நாவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. வர்த்தக்கத் தடைகள் மற்றும் பயணத்தடைகளை ஏற்படுத்தி சிறீலங்காவுக்கு அதிக அழுத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசை கொண்டுவர முடியும் என அவர் மேலும் தெரிவித்து…
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
டொரொன்டோ வாழ் தமிழ் உறவுகளே! திங்கள் காலை 10:00 மணிக்கு(10/01/2011) ஆரம்பமாகும் கவனயீர்ப்புக்கு வருகை தாருங்கள். கொலை வெறியர்களினதும் காமுகப்பிரியர்களினதும் பிடியில் சிக்கி தவிக்கும் எமது தாய் தந்தையர்களையும் சகோதர சகோதரிகளையும் காப்பாற்றுமுகமாகவும் திறந்தவெளி சிறைச்சாலையாகத்திகழும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் நடக்கும் கொடூரங்களை வெளி உலகத்திற்கு தெரியபடுத்தவும் நடக்கும் இன் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழர் சார்பில் தமிழரை அழைக்கிறார்கள். இடம்:40,St Clair Avu(சிறிலங்கா துணை தூதரக முன்றல்) டொரன்டோ யார் செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை! எதற்காக செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். "அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு" ORIGINAL VERSON:- தம…
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமிழ் அரசியல் தலைவர்கள் குறித்து கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் விக்கிலீக்ஸ் இணையத் தளம் மூலம் வெளியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க தூதுவர் பற்றிசியா புட்டெனிஸ் அமெரிக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சு அலுவலகத்துக்கு கடந்த 15 ஆம் திகதி இராஜதந்திரப் பொதியில் வைத்து அனுப்பிய அறிக்கை ஒன்றில் தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு எழுதி இருக்கும் அபிப்பிராயங்கள் மிகவும் சுவாரஷியமாக உள்ளன. இவ்வறிக்கையில் எம்.கே. சிவாஜிலிங்கம், ஆர். சம்பந்தன், மனோ கணேசன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் குறித்த அபிப்பிராயங்கள் உள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியாக இருந்த சிவாஜிலிங்கம் முக்கியத்துவம் வாய்ந்த-மேன்மையான தமிழ் அரசியல்வாதியென சி…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா கடற்படையினரால் 300-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் "உள்நோக்கம்" எதுவும் இல்லை என்று இந்திய கடற்படையின் தமிழ்நாடு பிரிவு தளபதி ஹல்டெரென் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.5k views
-
-
இராணுவ நேர்முக பரீட்சைக்கு வந்த 7 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது 1/22/2008 11:17:39 AM வீரகேசரி இணையம் - இராணுவத்தில் இணைந்துக்கொள்வதற்காக நேர்முகப் பரீட்சைக்கு வருகைத் தந்த சந்தேகத்திற்கிடமான இளைஞர்கள் ஏழு பேர் அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சை அநுராதபுரத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர். முஸ்லிம் பெயர்களில் வந்த இந்த இளைஞர்கள் மொ னராகல, அரகலங்வில மற்றும் வெலிக்கந்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் முறையாக சிங்களம் பேசத் தெரியாதவர்களாக இருந்த இவர்களின் ஆவணங்களும் சந்தேகத்திற்குரியவைகளாக இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவி…
-
- 0 replies
- 1.5k views
-
-
வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட 520 சிறுவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிட வசதியை யாழ்.பரியோவான் கல்லூரி [சென்.ஜோன்ஸ்] வழங்கியுள்ளது. சிறுவர்களுக்கான திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு அதிபர் நலன்விரும்பிகளிடம் ஆதரவு கேட்டு வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார்.விரிவான திட்ட அறிக்கை: +++ ST. JOHN’S COLLEGE JAFFNA CHILDREN / YOUTH SUPPORT PROGRAMME PRIMARILY IN THE INTERNALLY DISPLACED CHILDREN (FROM WANNI) OF SRI LANKA "Lux In Tenebris Lucet" A Request for Support From the Principal St. John’s College to the Alumni and Friends of the College Dear Johnians and Well Wishers, The following pages …
-
- 6 replies
- 1.5k views
-
-
சமநிலையற்ற அரசியல் அதிகாரங்களே இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணம் - பிரான்சிஸ் ஸ்டுவர்ட் சனி, 05 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணம் இலங்கையில் அரசியல் அதிகாரங்கள் சமநிலையற்றுக் காணப்படுவதே என ஒக்ஸ்போர்ட்டை மையமாகக் கொண்டியங்கும் க்ரைஸ் அமைப்பின் பணிப்பாளர் பிரான்சிஸ் ஸ்டுவர்ட் கடந்த வியாழக்கிழமை கியூமன் ரைற்ஸ் ரிபியூன் என்ற இணைத்தளத்திற்கு கருத்துரைத்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான அதிகாரங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே சமநிலையற்றுக் காணப்படுவதே பிரதான காரணமாக அமைகின்றது. குறிப்பாக அரசியல், பொருளாதாரம், சமூகவியல், கலாச்சாரம் உட்பட ஏனைய விடயங்களிலும் சமநிலையற்றுக் காணப்படுகின்றது. இங்கே அரசியல் அதிகாரங்கள் ஒரு பிரிவா…
-
- 0 replies
- 1.5k views
-
-
‘உகண்டா பாலா’ சி.ஐ.டி.யினரால் கைது மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்தபோது விமான நிலையத்தில் மடக்கி பிடிப்பு சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பாலா அல்லது ‘உகண்டா பாலா’ என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு பாலச்சந்திரன் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து வருகைதந்த சந்தேகநபரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் மடக்கிப்பிடித்துள்ளனர். முல்லைத்தீவின் தெற்கு பிரதேசத்திலுள்ள மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவியமை, வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தல், பணமோசடி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டவர் என்று இரகசிய பொலிஸ் திணை…
-
- 2 replies
- 1.5k views
-
-
யூதர்களுக்கு ஹிட்லர் போல, தமிழர்களுக்கு வாய்த்த ராஜபக்ச - சு.ஞாலவன் - குடியானவன் ஒருவன் கடும் பிரயத்தனங்களின் இறுதியிலே பேராற்றல் மிக்க முனிவர் ஒருவரைச் சந்திக்கிறான். 'சுவாமி! வாழ்க்கையில் துன்பங்களை மாத்திரமே சந்தித்து வரும் எனக்கு விரும்பியவற்றை எல்லாம் பெற்று மேன்மையான வாழ்க்கையை அடைந்துகொள்வதற்கான சக்தியை நீங்கள் அளிக்கவேண்டும்" என்று அவரை வணங்கினான். அவனுடைய வேண்டுதலுக்கு இரங்கிய முனிவர் தன் கைகளினால் அவனை ஆசீர்வதித்து விட்டு 'நீ கேட்டுக்கொண்ட சக்தியை இக் கணத்திலிருந்தே நான் உனக்கு அருளிவிட்டேன். இனிமேல் எது உனக்குத் தேவைப்பட்டாலும் என்னை நினைத்துக்கொண்டு தேவையானதை உரத்துக்கூறு! உடனே அது உனக்குக் கிடைக்கும். ஆனாலும், ஒரு நிபந்தனை: என்னை நினைக்கும்போது …
-
- 5 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சியில் அப்பிள் செய்கை சாத்தியமானது – மாதிரி அப்பிள் கன்றிலிருந்து அறுவடை செய்துள்ளார் ஒரு விவசாயி by : Jeyachandran Vithushan குளிர்வலய கன்றுகளை வெப்ப வலயங்களில் உருவாக்குவதில்விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை காலமும் வெளிநாடுகளிலிருந்து அப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளன. கொரோனோ அச்சுறுத்தல் நிறை்த இக்காலகட்டத்தில் இறக்குமதி பொருட்களும், உற்பத்திகளும் நாட்டில் அரிதாகவே கிடைக்கின்றது. எனினும் இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளை இலங்கையிலும் மேற்கொள்ள முடியும் என்பதை பல விவசாயிகள் நிடூபித்துள்ளனர். 1960ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் முதல் முதலாக அப்பிள் பயிரிடப்பட…
-
- 18 replies
- 1.5k views
-
-
சர்வதேச நாணயங்களுக்கு எதிராக ரூபாவை மிதக்க விடுவதற்கு தீர்மானம் - இலங்கை மந்திய வங்கி அறிவிப்பு வீரகேசரி நாளேடு 10/30/2008 10:38:39 PM - இலங்கை மத்திய வங்கி ரூபாயின் நாணயப் பெறுமதியினை சர்வதேச நாணயங்களுக்கு எதிராக மிதக்க விடப்பபோவதாக இன்று அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக இலங்கையின் நாணயமான ரூபாவின் பெறுமதி சர்வதேச நாணய மாற்று வீதங்களுக்கு எதிராக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வந்த இலங்கை மத்திய வங்கி தற்போது ரூபாவின் நாணயமாற்றுப் பெறுமதியை சர்வதேச நாணயங்களுக்கு எதிராக மிதக்க விடப் போவதாக இன்று அறிவித்துள்ளது. இந்த கொள்கை மாற்றமானது அண்மையில் உலக சந்தையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து இலங்கையின் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கும் நோக்குடனேயே மேற்…
-
- 1 reply
- 1.5k views
-