ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளிக்கும் இந்திய கடற்படையின் டோனியர் விமானம் கடற்படை மற்றும் விமானப்படைக்குப் பயிற்சிகளை அளிப்பதற்காக, இந்திய கடற்டையின் டோனியர் விமானம் ஒன்று கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா வந்துள்ளது. வான்வழி அவதானிப்பு பயிற்சி ஒத்திகைக்காகவே, இந்த டோனியர் விமானம் இந்திய கடற்படையினால் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தெற்கு கரைக்கு அப்பால் 10 கடல் மைல் தொலைவில், கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த இந்த பயிற்சி ஒத்திகை நேற்று வரை நீடித்தது. அரிதான இந்தப் பயிற்சியில், சிறிலங்கா கடற்படையின் 12 அதிகாரிகள் பங்கேற்ற…
-
- 2 replies
- 549 views
-
-
அரசாங்கத்தை வீழ்த்துவதற்குகு ஐ.தே.க.வினரும் புலிகளும் இணைந்து சர்வதேச மட்டத்தில் சதி வீரகேசரி நாளேடு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கூட்டாகச் சேர்ந்து சர்வதேச மட்டத்தில் சதித்திட்டங்களை தீட்டிவருகின்றன. பணத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்குவாங்கி, அரசைக் கவிழ்ப்பதற்கு விடுதலைப் புலிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கிழக்கை மீட்டுள்ள அரசாங்கம், நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் பெரும் முயற்சியில…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக ஜூன் 9ம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை! [Thursday 2015-05-28 19:00] அரசாங்கத்துக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிராக எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மஹிந்தானந்த, 'புதிய அரசாங்கத்துக்கு 100 நாட்களுக்கு மேலதிகமாக 50 நாட்கள் கொடுத்தாகிவிட்டது. அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்வரும் 9ஆம் திகதி சமர்ப்பிக்…
-
- 0 replies
- 364 views
-
-
ஈழத்தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க வேண்டும் என்கின்றது ஸ்பெயின் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுயாட்சி அதிகாரம் மிக்க தமிழ் மக்களுக்கான தேசம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் பார்சிலோனா வலியுறுத்தியுள்ளது. இலங்கை தொடர்பாக ஸ்பெயின் நாட்டின் பிராந்திய அரச கட்டமைப்பிற்குள் ஒன்றான பார்சிலோனாவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயங்கக் கூடாது என்றும் அரசியல் கைதிகளை இலங்கை அரசாங்கம் தாமதமின்றி விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களும் இதில் அடங்குகின்றது. அத்தோ…
-
- 2 replies
- 731 views
-
-
இலங்கை விமான நிலையங்கள் தொடர்பில் அதானி குழுமம் கலந்துரையாடல் இலங்கையின் 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி த இந்து வர்த்தக இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. அந்த விமான நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதற்கும் ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு எதிர்பார்க்…
-
- 2 replies
- 652 views
- 1 follower
-
-
வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுமடு கிராம மக்கள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாட்டை துப்புரவு செய்வதற்கு கிராம அலுவலரின் ஊடாக பிரதேச செயலாளரின் அனுமதியினைப் பெற்று கொட்டும் மழையிலும் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் விசேட அதிரடிப்படையினர் எட்டுபேரை அடாவடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்படுகையில் நெடுங்கேணி காவல்நிலைய பொறுப்பதிகாரி அருகில் இருந்தும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. சிவில் நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு காவல்துறை இருக்கையில் இவர்கள் ஏன் கைது செய்து தங்களது வாகனத்தில் ஏற்றுச் செல்ல வேண்டும் என்று மக்கள் கவலடையந்துள்ளனர். இந்த நாட்டில் சிரமதானம் செய்வதுகூட தவறானதா என்று கேட்கும் கிராம மக்கள், வீதியோரத்தில் இருக…
-
- 2 replies
- 775 views
-
-
நாயாறில், கோயில் அமைக்க முடியாதென நீதிமன்றில் சாட்சியம்! முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விஹாரை இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் இந்து கோயில் அமைப்பது சட்டத்துக்கு முரணானது எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த பகுதியில் பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன ஏற்கனவே இருந்ததென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோயிலையும் அதனை அண்மித்த பகுதிகளையும் பௌத்த மதகுரு ஒருவர் ஆக்கிரமித்தமை தொடர்பான வழக்கு, நேற்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாரணையின்போது தொல்பொருள்…
-
- 4 replies
- 635 views
-
-
[ புதன்கிழமை, 19 ஒக்ரோபர் 2011, 02:05 GMT ] [ கார்வண்ணன் ] அனைத்துலக அளவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய காவல்துறை சிறிலங்கா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். அண்மையில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் நியுயோர்க் சென்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் எத்தனை பேர் அமெரிக்கா சென்றனர் என்றும் அவருடன் எத்தனை பாதுகாப்பு அதிகாரிகள் சென்றிருந்தனர் என்றும் ஐதேக உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “எவ்வளவு செலவு ஏற்பட்டாலும், எத்தகைய சூழ்நிலையிலும் சி…
-
- 0 replies
- 880 views
-
-
தனது ஆலோசனையின் பேரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலன் (சசிதரன்) இலங்கை இராணுவத்தினரிடம் கரணடைந்ததாக அவரது மனைவி அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிராகரித்துள்ளார். 'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை. இந்த செய்தியின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியாது' என்று, இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து பத்திரிகைக்கு கனிமொழி எம்.பி கூறியுள்ளார். 'தனது கணவர் எழிலன், இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு தீர்மானம் எடுக்க முன்னர், செய்மதி தொலைபேசி மூலம் கனிமொழியுடன் உரையாட…
-
- 65 replies
- 5.7k views
-
-
யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள் யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர், துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கி அதனை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கான துவிச்சக்சகர வண்டிப் பயணமானது, கண்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி அங்கிருந்து மாத்தளை ஊடாக தம்புள்ளை வந்து, அங்கிருந்து நேற்றையதினம்(01) வவுனியாவை அடைந்தனர். அதன்பின்னர…
-
-
- 24 replies
- 2.4k views
-
-
அவுஸ்திரேலிய மத்திய அரசின் அனுமதியின்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்த நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தலைவருக்கு எதிரான இவ்வாறான வழக்குகளை சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி தொடர முடியாது எனவும் அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய பேட்டியில் ஆஸி. பிரதமர் கூறியுள்ளார். அத்துடன் இந்த வழக்கு குறித்து சட்டமா அதிபருக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்த வழக்கு குறித்த எந்த ஆவணமும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குக் கிடைக்கவில்லை என ஆஸி சட்டமா அதிபர் திணைக்களமும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வழக்கு தொடர்பில் சட்ட…
-
- 14 replies
- 1.4k views
-
-
மாவை சேனாதிராஜா அவர்களின் செவ்வி (june 7 2015)
-
- 0 replies
- 417 views
-
-
ரயில் இருக்கைகளுக்கான முன்பதிவுகள் இன்று முதல் ஒன்லைன் மூலம் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஒன்லைன் மூலம் ரயில் நிலையங்களின் ஊடாக தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார். இதன்படி, பயணிகள் பயணிப்பதற்கு 30 நாட்களுக்கு முன்னதாக தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன், இன்று காலை 7 மணிமுதல் அதற்கான பதிவு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295697
-
-
- 4 replies
- 829 views
- 1 follower
-
-
சிறிலங்காவுக்கான இந்தியப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமானது ‘திருப்புமுனையாக’ உள்ள போதிலும் உறுதியாக எதையும் சாதிக்கவில்லை. சிறிலங்காவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறு புதுடெல்லியில் இருந்து வெளியாகும் the statesman நாளிதழில், சாம் ராஜப்பா எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இன்னமும் சூழல் மாறவில்லை. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள அரசலூர் அகதி முகாமிலேயே நந்தினி பிறந்தார். இவரது பெற்றோர்கள் சிறிலங்காத் தீவின் வடக்கு மாகாணத்தில் போர் மேகம் சூழப்பட்ட 1990 இல் அங்கிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். நந்தினி உயர்நிலைப் ப…
-
- 0 replies
- 350 views
-
-
FacebookTwitterGoogle+Email ViberWhatsApp தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாதிரி வீட்டுதிட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 150 மாதிரிக்கிராமங்கள் அமைக்கபடும் என்று வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா முகாமையாளர் வி.எம்.வி.குருஸ் தெரிவித்தார். வவுனியா முருகனூர் ஆனந்தபுரம் கிராமத்தில் வீட்டுதிட்டத்திற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது. அதில் அவர் தெரிவித்ததாவது, கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக வீட்டுதிட்டத்தி…
-
- 0 replies
- 561 views
-
-
முஸ்லிம் இளைஞர் படுகொலை வழக்கில் வவுனியா புளொட் இயக்க அலுவலகத்தின் பொறுப்பாளரை கைது செய்வதற்கு வவுனியா நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறப்பு : March 10, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் வடக்குக்கான முதலாவது பிராந்திய அலுவலகம் மன்னாரில் திறக்கப்படவுள்ளதாக பணியகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தெற்கில் மாத்தறை மாவட்டத்தை மையப்படுத்தி கடந்த 2ஆம் திகதி இந்த அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில் வடக்கு, கிழக்கு , தெற்கு உட்பட நாட்டில் 8 பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ள காணாமல் போனோர் பணியகம், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வருடத்துக்குள் பூர்த்தியாக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவே…
-
- 0 replies
- 435 views
-
-
நாங்கள் செய்துள்ள சாதனையை ஜெயலலிதா நேரில் வந்து பார்க்கட்டும்- ராஜபக்சே அட்டு (மாலத்தீவு): தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம். அவரை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் தமிழர் பகுதிகளில் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். ஜெயலலிதாவும் இதை நேரில் வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே. மாலத்தீவில் நடைபெறும் 17வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த ராஜபக்சே அங்கு டைம்ஸ் நவ் டிவிக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பார்கள் என்ற அச்சம் தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை இலங்கைக்கு வரவேற்பதாகவும் அவர் சொல்லியுள்ளார். அந்த …
-
- 8 replies
- 1.9k views
-
-
அடிமட்ட நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த விளைகின்ற அதேவேளையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை நோக்கிய நகர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன். நேற்றுமுன்தினம் புதன்கிழமை குடத்தனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் பல தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 6 வருடங்களுக்கு முன்பு மே மாதம் 19ஆம் திகதி முடிவுக்கு வந்தது. எமது மக்களும் எமது பிரதேசமும் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். யுத்தம் முற்றுப் பெற்றதெ தவிர அடக்குமுறைகள் ஓயவில்லை. முட்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டவர்களாய் தமது சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்கள…
-
- 2 replies
- 260 views
-
-
ஐ.நா.வில் அரசு உறுதியளித்தாலும் செயற்பாட்டில் இழுபறி தொடரும் : போர்க்குற்ற விசாரணை அவசியம்: கேர்ணல் ஹரிகரன் (ஆர்.ராம்) ஐ.நா.வில் இலங்கையின் எந்த அரசு எத்தகைய உறுதி அளித்தாலும் செயல்பாட்டில் இழுபறி தொடரும். ஆகவே தென்னாபிரிக்காவைப்போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்ககைளை உடன் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் நாட்டின் நலனுக்காக போர்க்குற்ற விசாரணை அவசியமாகுமென இந்திய இராணுவத்தின் ஓய்வு நிலை புலனாய்வு நிபுணர் கேர்ணல் ஆர்.ஹரிகரன் வீரகேசரிக்குத் தெரிவித்தார். ஜெனீவா கூட்டத்தொடர் தற்பொது நடைபெற்று வரும் நிலையில் படையினர் இழைத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் சர்வதேச தரத்தில்செய்யப்பட என்று வேண்டும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வல…
-
- 0 replies
- 517 views
-
-
புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் 17 டோறாப் படகுகளைக் கொண்ட பெரும் அணிமீது கடற்புலிகள் நடத்திய தீவிர தாக்குதலில் சிறிலங்கா கடற்படையினரின் இரு டோராப் படகுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் ஒரு டோராப் படகு சேதமடைந்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 4 replies
- 3.2k views
-
-
அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் தடை தாண்டும் போட்டியொன்றில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அரசின் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்காக பகிரதப் பிரயத்தனங்களில் அது ஈடுபாடு காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டியது. கடந்த திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணா திலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிகளின் போது ஜே. ஆர். ஜயவர்த்தன, பிரேமதாஸ, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி, ஏ.சி.எஸ்.ஹமித், ரணில் விக்கிரமசிங…
-
- 0 replies
- 924 views
-
-
அனலைதீவில் பெரும் பட்டினி அவலம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி தற்கொலை [04 - October - 2007] தீவகம் அனலைதீவுப் பகுதி மக்கள் கடும் பஞ்சம், பசி, பட்டினியை எதிர்நோக்கிவருவதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முகம் கொடுக்கமுடியாது மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நண்பகல் குடும்பஸ்தர் ஒருவர் தூக்குப்போட்டு இறந்துள்ளதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவித்தன. யாழ்.குடா நாட்டில் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலையையடுத்து அனலைதீவுப் பகுதி மக்கள் தொழில் வாய்ப்புகள் இன்றி பெரிதும் அல்லற்பட்டுவருகின்றனர். வர்த்தக நிலையங்களிலும் உணவுப்பொருட்கள் இருந்தாலும் அவற்றை வாங்குவதற்கு கையில் பணம் ஏதுமின்றி மக்கள் திண்டாடி வருவதாகவும் தெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் முப்படையினரும் இன்று நூற்றுக்கு நூறு விழுக்காடு பலம் பெற்றுள்ளனர் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 6 replies
- 1.9k views
-
-
'விடுதலைப் போராட்டத்திற்காக மக்களிடம் திரட்டப்பட்ட பணம் குறித்த கேள்விகள் கேட்பதற்கு முன்னதாக, ஜி.ரிவி. தனது நிதி மூலம் குறித்த தமிழ் மக்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். கட்டணமற்ற தொலைக்காட்சியாக இயங்கும் ஜி.ரிவி விளம்பரம் மூலம் பெற்றுக்கொள்ளும் சிறிய வருமானத்தில் தனது சேவைக்கான செலவையும், ஊழியர்களுக்கான சம்பளத்தையும் வழங்குவது சாத்தியமே அற்றது. அப்படியானால், ஜி.ரிவியின் நிதி மூலம் என்ன? யார் வழங்குகின்றார்கள்? மக்களிடம் இருந்து பங்களிப்புப் பெறப்பட்டால் அதன் விபரம் என்ன? என்பதனை வெளிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியம் பின்னால் அணி திரண்டுள்ள மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது. அதனை நிவர்த்தி செய்யாதவிடத்து, ஜி.ரிவியின் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகத்திற்குரியதாக…
-
- 0 replies
- 683 views
-