ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களால் இந்தாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரி சங்கத்தினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அரச வைத்திய அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் அங்கு மேலும் தெரிவிக்கையில், இதுவரையில் இடம்பெற்ற விபத்துக்களில் 896 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும், கடந்த சில மாதங்களாவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு வீதி விபத்துக்களில் சிக்கி படுகாயமடைந்த 3 ஆயிரத்து 204 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்…
-
- 0 replies
- 229 views
-
-
கோட்டாவின் கூற்றுக்கு இந்தியாவும் ஐ.சி.ஆர்.சியும் பதிலளிக்கவேண்டும்: கூட்டமைப்பு -அழகன் கனகராஜ் இறுதி யுத்தத்தின் போது புலிகள் சரணடைந்திருந்தாலும் சாதாரண மக்கள் சரணடைந்திருந்தாலும் அவர்களுக்கெல்லாம் அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும். என்பதுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் கூற்றுக்கு இந்தியாவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் பதிலளிக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. இரு அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் முன்னுக்கு பின் முரண்படுகின்றன என்பதனால் இவைத்தொடர்பில் சர்வதேச…
-
- 3 replies
- 598 views
-
-
முல்லை பாலிநகர் இராணுவமுகாமை அகற்றக்கோரி தீர்மானம் முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி இயல்பான கற்றல் நடவடிக்கைகளுக்கு வழி செய்யுமாறு மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்றைய அபிவிருத்திகுழுக்கூட்ட த்தில் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. பாசாலைக்கு முன்பாக இராணுவ முகாம் காணப்படுவதனால் மாணவர்கள் இயல்பான முறையில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலிநகர் மகா வித்தியாலயம், பாலிநகர் ஆரம்பவித்தியா லயம் ஆகியவற்றுக்கு முன்பாக இராண…
-
- 0 replies
- 260 views
-
-
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு, கிழக்கு புறக்கணிப்பா?- ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் இந்த உறுதி மொழி வழங்கப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப் பிரிவு தெரி…
-
- 0 replies
- 367 views
-
-
நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதும் எம் தமிழ் மக்களின் உரிமைப் போர் இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண அரசாங்க நிர்மாண நிர்மாணிகள் சங்கத்தின் கூட்டம் நேற்றுக் காலை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கில் பல அபிவிருத்தித்திட்டங்கள்இ கட்டட நிர்மாணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக …
-
- 0 replies
- 327 views
-
-
பொது வேலை நிறுத்தம் சட்டவிரோதமானதல்ல என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு இலங்க தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 363 views
-
-
மத்திய வங்கியின் இரகசிய தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மத்திய வங்கியின் தகவல்கள் கசிந்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோரியுள்ளார். மத்திய வங்கியின் முக்கியமான தகவல்கள் எவ்வாறு கசிந்தது யார் இவ்வாறு கசியவிட்டது என்பது குறித்து விரிவான அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. வங்கியின் தகவல்களை பாதுகாத்துக் கொள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுனர் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார். தகவல்கள் கசிந்த விவகாரம் …
-
- 0 replies
- 216 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 126 திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். அந்த வகையில், வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 24 திட்டங்களுக்கு 27 இலட்சமும் வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் 19 திட்டங்களுக்கு 31 இலட்சமும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 18 திட்டங்களுக்கு 20 இலட்சத்து எழுபத்தையாயிரமும் ஒதுக்கியுள்ளார். மேலும், செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் 27 திட்டங்களுக்கு 24 இலட்சத்தி இருபத்தையாயிரமும் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 06 திட்டங்களுக்கு 17 இலட்சமும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 06 திட்டங்களுக்கு ஆறு இலட்சத்து ஐம்…
-
- 0 replies
- 198 views
-
-
5 முன்னாள் தளபதிகள் மீதான விசாரணை சட்டமா அதிபரிடம் விரைவில் அறிக்கை நாட்டின் இறுதி யுத்தத்தில் கலந்துகொண்ட இராணுவ தளபதிகள் ஐந்து பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை, பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமையொன்றை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அந்த ஐவரின் விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்க ப்படுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு மற்றும் இரகசியப் பொலிஸ் திணை க்களம் என்பன இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னாள் கடற்படைத் தளபதிகளான திசர சமரசிங்க, வசந்…
-
- 0 replies
- 270 views
-
-
பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண் இலங்கை;கென நியமித்த விசேட பிரதிநிதியை, இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவை நேற்று வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபான்ட், தமது விசேட பிரதிநிதியை நிராகரித்தமைக்கான காரணத்தை விளக்குமாறு கோரியுள்ளார். இது ஒரு தலைப்பட்சமான நியனம் என ஏற்கனவே வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையை போகல்லாகம, மிலிபானுக்கு விளக்கிக் கூறியுள்ளார். எனினும், இரு நாடுகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இணக்கம் காணப்பட்டதாகத் தெரியவருகிறது. இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுவரும் மோதல்களை நிறுத்தி, இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013 01:42 வடக்கு மாகாணசபைத் தேர்தலை செப்டெம்பரில் நடத்தவுள்ளோம். அதற்காக ஏனைய மாகாணசபைத் தேர்தல்களையும் நாம் பிற்போட்டுள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தலை நிறுத்தி வைக்கும் எண்ணம் இல்லை. அதைச் செய்து விமர்சனங்களை எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய எட்டு மாகாணசபைகளும் அனுபவிக்கும் அதிகாரங்களை விடவும் கூடுதலான அதிகாரங்களை வடக்கு மாகாணசபை கொண்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 'த ஹிந்து' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். - See more at: http://tamil.dailymirror.lk/2010-07-1…
-
- 0 replies
- 422 views
-
-
யுத்தம் முடிந்த நிலையில்பயங்கரவாதம் என அரசு கூறக்கூடாது-மாவை நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், மீண்டும் பயங்கரவாதம் என்ற சொல்லை உச்சரிக்காமல் இருப்பது நல்லது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இந்தக் கோரிக்கையை விடுத்த மாவை யுத்தத்தில் தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் என்றும், தோல்வியடைந்தவர்கள் என்றும் அரச தரப்பினர் உச்சரிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கிலுள்…
-
- 1 reply
- 378 views
-
-
பௌத்த மத தலைவர்களின் ஆதரவுடன் 20வது திருத்தத்தை கொண்டுவர வலியுறுத்தல் 35 Views பௌத்தமத தலைவர்களின் ஆதரவுடனேயே 20வது திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என முருத்தெட்டுவாவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். வேறு எவருடைய செல்வாக்கு காரணமாகவும் 20வது திருத்தத்தை கொண்டுவந்தால் பௌத்தமத தலைவர்கள் அதற்கு அனுமதியளிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். பௌத்த மகாசங்கத்தின் ஆலோசனையை அங்கீகாரத்தை பெற்று 20வது திருத்தத்தினை கொண்டுவரமுயன்றால் பௌத்தமகாசங்கம் பதில்களை வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கத்தினை அதிகாரத்துக் கொண்டுவந்த மக்கள் மறக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், புதிதாக உள்வாங்கப் பட…
-
- 0 replies
- 463 views
-
-
ஈழத் தமிழர் விவாகரத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மௌனம் சாதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த தமிழருவி மணியன் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகியுள்ளார். காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் தொடக்கம் அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகிய தமிழருவி மணியன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது இத்தகவலை வெளியிட்டுள்ளார். "மகிந்த ராஜபக்ச அரசால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மௌனத்தை கலைக்கவில்லை. எனவே அவரின் தலைமையிலான கட்சிக்கு தமிழ் மொழியையும் சமுதாயத்தையும் அடகு வைப்பதை …
-
- 3 replies
- 1.1k views
-
-
-றிப்தி அலி மீள்குடியேற்ற செயற்பாடு முடிவடையும் காலத்தை வரையறுத்து கூற முடியாது என்பதுடன் வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது "மீள்குடியேற்றமே' தவிர 'மீள்குடியமர்த்தல்" அல்ல என வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன நேற்று புதன்கிழமை தெரிவித்தார். இவர்கள் வெலிஓயா, பதவியா மற்றும் வவுனியா தெற்கு ஆகிய பகுதிகளிலேயே மீள்குடியேற்றப்பட்டவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள சிங்கவர்களுக்காக 850 வீடுகளை அரசாங்கம் நிர்மாணிக்கவுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச தெரிவித்தார். "இதில் முதற் கட்டமாக 500 வீடுகள் நிர்மாணிக்கப்ப…
-
- 4 replies
- 563 views
-
-
கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்து காயமடைந்த நிலையில் வருபவர்கள் போர் களத்தில் போரிட்டவர்கள் ‐ கோத்தபாய: கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்து காயமடைந்த நிலையில் வருபவர்கள் போர் களத்தில் பேரிட்டவர்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய ஊடக மகாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் கடந்தகால வரலாற்றில் அதிகளவிலான புலிகளின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அவை மிகவும் ஆபத்தான ஆயுதங்கள் என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் இதனால் போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குற…
-
- 4 replies
- 1.4k views
-
-
நாட்டின் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் காரணமாக, கொழும்பு-புறக்கோட்டை மெனிங் சந்தையை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்க அரசு தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
-
- 0 replies
- 232 views
-
-
கடந்த 10.02.2009 அன்று கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினால் கைது செய்து காணாமல் போன லூர்த்து மேரி சுரேஸ்குமார் அவர்கள் (பிறந்த தேதி 12.03.1984) பாலியல் வல்லுறவுக்குட்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 19.02.2009 அன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலை டாக்டர்களிடம் கேட்டபோது இதுபோல் இலங்கை இராணுவத்தின் அட்டகாசம் நடக்கின்றது இதை தட்டிக்கேட்பதற்கு யாருமில்லை. இதில் மனவேதனை என்னவென்றால் இதற்கு உதவியாக ஒருசில டாக்டர்கள் உள்ளனர். தட்டிக்கேட்டால் நாங்களும் நாளை கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடக்க நேரிடும் என அச்சப்படுகிறார்கள். நன்றி - தமிழ்வின்
-
- 0 replies
- 984 views
-
-
பொருத்து வீட்டுத்திட்டத்தால் நாடாளுமன்றில் வாக்குவாதம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உத்தேசிக்கப்பட்ட பொருத்து வீட்டுத் திட்டத்தால் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே கோரிக்கை விடுத்த தாக தேசிய கலந்துரையாடல்கள், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சரின் தகவலை நிராகரித்தனர். நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு - செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்ட…
-
- 0 replies
- 173 views
-
-
இரத்தக் காட்டேறி ராய பக்சே - காணொளி மார் 17, 2013 போர் நின்றுவிட்டது... ஆம்... சத்தமாக செய்த போர் மட்டும்... தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது சத்தமில்லாத போர்... http://www.sankathi24.com/news/28073/64//d,fullart.aspx
-
- 0 replies
- 507 views
-
-
உதயமாகிறது தமிழர் தேசிய சபை.! தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார் ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை வினைத்திறன் மிக்கதாகப் பெற்றுக் கொள்வதற்காகவும் தேசிய சபை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஒன்றுபட்டு செயற்படுவதற்காக இப்போது தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளை ஒன்றிணைத்துப் பயணிக்க ஆரம்பித்துள்ளோம். இது தொடர்பில் நான் விடுத்த கோரிக்கைக்கு அனைத்து தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சி…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமது காணிகளுக்காக தற்போதும் போராடும் நிலையிலேயே தமிழ் மக்கள்-சாந்தி எம்.பி தமது காணிகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் உண்ணாவிரதம் இருப்பதும் வீதிவீதியாக சென்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து நியாயம் கேட்பதும் வடக்கில் இன்றும் தொடர்வதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் வனஜீவராசிகள் அமைச்சு மற்றும் காணி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்களின் காணிகளுக்குள் மக்கள் செல்ல முடியாதவாறு இராணுவம் முகாம்கள் அமைத்து நிலைகொண்டுள்ள தாகவும், இ…
-
- 0 replies
- 204 views
-
-
மாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன் யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தங்களின் வீடுகளில் நினைவேந்தல்களை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏசுமந்திரன் தெரிவித்துள்ளார். மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தாங்கள் தனியாக நினைவேந்தல்களை செய்வதனை மன்று ஏற்றுகொள்வதாகவும் ஆனால் கூட்டாக சேர்ந்து, மாவீரர் நினைவேந்தல் என…
-
- 5 replies
- 1k views
-
-
ஊடகவியலாளர் ஒருவர் டொலர்களுக்கு ஆசைப்பட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் குருநாகலில் இடம்பெற்ற இராணுவ நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்டத்தில் நடைபெற்றதான மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பிலான புகைப்படங்கள் பல திடுக்கிடும் வகையில் வெளிவந்துள்ளன. இதனால் இலங்கைக்கு சர்வதேச நாடுகளினால் அழுத்தங்கள் பாரிய அளவில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி களமுனைப் படங்களை வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு வழங்கியவரைத் தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய சிங்கள ஊடகம் ஒன்றைச் சேர்ந்த இவர், 2009ஆம் ஆண…
-
- 5 replies
- 934 views
-
-
சித்திரைப் புதுவருடத்துக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்தோடு இலங்கை அரசாங்கமும், படைத்தரப்பும் சண் டையைத் தீவிரமாக்கும் முயற்சிகளில் இறங் கியிருக்கின்றன. கிளிநொச்சி, ஆனையிறவுப் பகுதிகள் கைப்பற்றப்பட்ட பின்னர் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா வழங்கியி ருந்த பேட்டியொன்றில் சித்திரைப் புதுவருடத் துக்குள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றி விடுவோம் என்று கூறியிருந்தார். அதேவேளை, கடந்த வாரத்தில் இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான தகவல் ஒன்று அடுத்த 3 வாரங்களுக்குள் புலி கள் முற்றாக அழிக்கப்பட்டு அவர்கள் வரள்ள பகுதிகள் கைப்பற்றப்பட்டு விடும் என்று கூறியிருந்தது. புலிகளுக்கு எதிரான போர் 99 வீதம் நிறைவடை…
-
- 2 replies
- 2.3k views
-