ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142710 topics in this forum
-
வாழைச்சேனையில இன்று காலை கைக்குண்டு வீச்சு வாழைச்சேனை ஓட்டமாவடி மீராவோடை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேச சபை உறுப்பினர் எம் வீ வாசுதீன் என்பவிரின் வீட்டுக்கே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 அளவில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளான பிரதேச சபை உறுப்பினரின் மனைவி வாழைச் சேனை வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.meenagam.org/?p=6031
-
- 0 replies
- 363 views
-
-
காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்துடன் பேசுவதில் அர்த்தமில்லை முல்லைத்தீவு கலந்துரையாடலின் பின்னர் சுமந்திரன் அதிருப்தி (கே.குமணன்) கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பில் இராணுவ தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப்பயனும் இல்லை. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து காணிகளை விடுவிக்க முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் எம்.எ. சுமந்திரன் தெரிவித்தார். மக்கள் மாற்றுக் காணிகளை எடுக்கப்போவதில்லை என்பதை உறுதியாக தெரிவித்து வருகின்றனர். ஆகவே அதே நிலைப்பாட்டில் இருந்து மக்களின் சொந்த நிலங்…
-
- 4 replies
- 346 views
-
-
கடந்த ஒருமாத காலமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பயணத்தடை தளர்த்தப்பட்டது. அத்தோடு, மதுபான நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுவதாகவும் மதுவரித் திணைக்களம் அறிவித்தது. எவ்வாறாயினும், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் பயணத்தடை தளர்த்தப்பட்டதும் தொழிலுக்குச் சென்று குடும்பங்களை கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதைக் கடந்து மதுப்பிரியர்கள் காலை முதல் மதுபான சாலைகளின் வாசல்களில் காத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வெயில் படாமல் வீட்டுக்குள் முடங்கி இருந்தவர்கள் எல்லாம் இன்று உழைப்பாளர் தின பேரணியில் பங்கேற்பது போன்று வரிசையில் சென்று மது…
-
- 5 replies
- 462 views
-
-
சிறிலங்காவின பொதுநலவாய உச்சிமாநாட்டில் பங்கெடுத்துக் கொள்ளப் போவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்து, பிரித்தானிய வாழ் தமிழர்களை கவலை கொள்ள வைத்திருந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து வேட்டையில் லண்டன் தமிழர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பொதுநலவாய உச்சிமாநாட்டு விவகாரம் மட்டுமல்ல அதற்கும் அப்பால், சிறிலங்கா தொடர்பில் பிரித்தானிய அரசின் கொள்கை நிலைப்பாட்டில் ஓர் இறுக்கமான மாற்றம் அவசியம் என்பதனை வலியுறுத்தும் பொருட்டு இக்கையெழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்றது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரித்தானியாவின் வெளிவிகார தேர்வுக் குழுவின் கவனத்திற்கு சிறிலங்க…
-
- 0 replies
- 321 views
-
-
காணாமல் போனவர்களின், உறவினர்களினால்... வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே“, “கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே“ என்று கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225950
-
- 0 replies
- 356 views
-
-
"எமது மக்களின் சுதந்திரப் போராட்டம் மாற்றமடையவில்லை. 'நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் எமது போராட்ட இலட்சியம் மாறாது' என எமது தலைவர் எப்போதும் சொல்லிவந்துள்ளார். அதன்படி எமது போராட்டம் முடிவுக்கு வரவில்லை. எமது இலக்கை அடைவதற்கான போராட்ட வடிவத்தையே நாம் மாற்றிக்கொண்டுள்ளோம்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவில் இருந்து வெளிவரும் 'த வீக்' பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கியிருக்கும் பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் பத்மநாதன், தமிழ் மக்களின் சுயாட்சிக்காக 1976 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட உரிமைக் கோரிக்கை மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது. …
-
- 1 reply
- 622 views
-
-
வடமராட்சிப் பகுதியில் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வடமராட்சி வதிரிப் பகுதியில் வலிகமாகம் தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினரும், வடக்குமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் கஜதீபன் என்பவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே மேற்படித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. குறித்த பகுதியில் நேற்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் போது அப்பகுதிக்குச் சென்ற தமிழ் தேச…
-
- 1 reply
- 736 views
-
-
தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் மேடையாக பயன்படுத்துங்கள் : எதிர்க்கட்சித் தலைவர் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்கொடுத்து வருகின்ற சவால்கள் என்பவற்றினை முன்னிலைப்படுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடையாகவும் தொழிலாளர்களின் முயற்சிகளை நினைவு கூர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் தமது மே தினக் கொண்டாட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என்று தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழ…
-
- 0 replies
- 109 views
-
-
எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கு பகிரங்க அழைப்பு யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை உட்பட பல பிரதேசங்களிலுள்ள பெறுமதி மிக்க காணிகளை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்க தம்முடன் இணைந்து செயற்படுமாறு நாட்டைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவரான எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தப் பகிரங்க அழைப்பை விடுத்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், “இன ரீதியாக நாங்கள் பிரிந்திருந்தால் ஒருபோதும் எமக்கு சுதந்திரம் கிட்டாது. நாங்கள் பிரிந்திருக்கின்ற வரை சர்வதேச சக்திகள் எமது நாட்டுக்குள் பிரவேசித்து, நாட்டின் வளங்களைச் சூறையா…
-
- 16 replies
- 775 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனை இந்தியா கேட்டுக்கொண்டால் ஒப்படைப்பதற்குத் தயார் என்று சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார். பத்மநாதனை ஒப்படைக்கும்படி இந்தியா கேட்டுள்ளதா என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு எதிர்மறையாகவே அவர் பதிலளித்துள்ளார். இந்தக் கடத்தல் நடவடிக்கையில் சிறிலங்கா அரச படையினரும் தமது வெளிநாட்டு சகபாடிகளுடன் சேர்ந்து ஈடுபட்டிருந்தனரா என்று கேட்கப்பட்டதற்கு, அவர் ஆம் எனப் பதிலளித்தார். அரச படையினரின் எந்தப் பிரிவினர் இதில் ஈடுபட்டிருந்தனர் என்று கேட்கப்பட்டதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். பத்மநாதனைக் கைது ச…
-
- 2 replies
- 973 views
-
-
காவல் துறையினரின் உதவியுடன் தேர்தல் சட்டங்கள் மீறப்படுகிறது: ட்ரான்ஸ்பரன்சீ இன்டர்நசனல் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் சட்டங்களை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என ட்ரான்ஸ்பரன்சீ இன்டர்நசனல் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சட்ட விதிகள் மீறப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்த சட்ட மீறல்களுக்கு எதிராக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகமாக அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இவ்வாறு வாகனங்களை சட்டவிரோதமா…
-
- 0 replies
- 408 views
-
-
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் தலைவர் SSP வாஸ் குணவர்ட்தென காவல்துறைத் தலைமயகத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளார். ஒரு தகவல் தொழிநுட்ப மாணவர் தாக்கப்பட்டமை தொடர்பில் திரு.வாஸ் குணவர்தென முழுமையான சர்ச்சைக்குள்ளாகியுள்ளதாகக
-
- 0 replies
- 664 views
-
-
இலங்கையில் சிவில் யுத்தம் இடம்பெற்ற மூன்று தசாப்த காலத்திற்குள் இலங்கையில் வாழ் அனைத்து இன மக்களுக்கும் எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவுள்ளதாக மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மட்டுமன்றி யுத்தம் நிலவிய ஒட்டுமொத்த காலப்பகுதிக்குள் இடம்பெற்ற அனைத்து மனித உரிமைகள் நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படுமென சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடலின் போது நவிபிள்ளை தெரிவித்துள்ளதாக அவரது பிரதிநிதியான ரொரி முன்கவன் தெரிவித்துள்ளார். விசேடமாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரன் கிழக்கின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த காலப்பகுதியில் பௌத்த பிக்குமார்களை கொலை செய்தமை ஆயிரக் கணக்கா…
-
- 1 reply
- 759 views
-
-
புலி உறுப்பினர்களின் வாக்குமூலம் சட்டரீதியானது அநுராதபுரம் வானூர்தித் தாக்குதல் வழக்கு அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது வான் மற்றும் தரை வழியாகத் தாக்குதல் நடத்தினார்கள் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ள, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் வழங்கிய வாக்குமூலம் சட்டப்படியானது என்று அனுராதபுரம் மேல் நீதிமன்று நேற்று அறிவித்தது. இது தொடர்பான வழக்கு அநுராதபுர மேல் நீதிமன்றில் நீதிபதி மகேஸ் வீரமன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அனுராதபுரம் விமானப்படை முகாம் மீதான தாக்குதல் காரணமாக சுமார் 400 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் …
-
- 1 reply
- 360 views
-
-
வட மாகாண சபை தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் இடம் பெறுவதனை வேட்பாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான மக்கள் இயக்கம் கஃபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் சட்ட விரோத ஆயுதப்பாவனை அதிகரித்துள்ளமையினால் வேட்பாளர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஆயுதக்குழுக்களிடமுள்ள ஆயுதங்களை பொலிஸார் களைந்து வேட்பாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.http://goldtamil.com/?p=7877
-
- 0 replies
- 410 views
-
-
இதுவரையில்... தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று வாய்ப்பு! கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, அவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு- தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலை, ஐ.டி.எச் வைத்தியசாலை, அவிசாவளை வைத்தியசாலை, விஹாரமஹாதேவி பூங்கா ஆகிய இடங்களில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1232521
-
- 0 replies
- 287 views
-
-
ஊடகவியலாளர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் உலகிலேயே மெக்சிக்கோவுக்கு அடுத்தபடியாக இலங்கையிலேயே நடைபெறுகின்றது என 26 ஆவது அனைத்துலக காணாமல் போனோர் நாளான இன்று சனிக்கிழமை எல்லைகளற்ற ஊடவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர்களைத் தேடும் பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதில்லை என்று அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை முக்கிய பணியாகக் கொண்டு காணாமல்போன ஊடகவியலாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளது. ஊடகவியலாளர்கள் அரச முகவர்களாலோ உள்ளூர் குற்றவாளிகளாலோ கடத்தப்பட்டாலும் அவர்கள் அனைவரும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்பதையே அச்செயல்கள் காட்டுகின்றன. ஊடகவியலாளர்களைக் கடத்துவதற்கு அவர்கள் கொடூரமான …
-
- 0 replies
- 326 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு சூழ்ச்சி நடைபெற்றது போலவே, அந்த தாக்குதலுக்கு தொடர்பானவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் கொண்ட உப குழுவொன்றை நியமித்திருப்பது நியாயமானது இல்லை என கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். எதிர்வரும் 21 ஆம் திகதியன்று தேவாலயங்கள், வீடுகள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் கறுப்பு கொடி ஏந்துமாறு இன,மத, மொழி பேதமின்றி சகலரையும் ஒன்றிணையுமாறு ஆண்டகை சகலருக்கும் அழ…
-
- 1 reply
- 321 views
-
-
விடுதலைப்புலிகளின் உதவியுடனேயே 2005இல் அரசாங்கம் ஆட்சி அமைத்தது: ஐ.தே.க 12 செப்டம்பர் 2013 ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் என்பது வெறும் வார்த்தையல்ல அடுத்த ஆண்டில் அரசாங்கத்தினை அமைப்பதற்கான ஒரு ஆரம்பமாகவே இம்முறை மாகாண சபைத் தேர்தல்கள் அமையப் போகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். வடக்கில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக்கட்சி முயல்கின்றதென அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனால் கடந்த தேர்தலில் புலிகளின் உதவியோடே அரசாங்கம் ஆட்சி அமைத்தது என்பதையும் மறந்து விடக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்…
-
- 0 replies
- 236 views
-
-
இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் வரப்போவதில்லை; இந்திய ஆசிரிய பயிற்சியாளர்கள் பற்றியே கலந்துரையாடுகிறோம் அமைச்சர் மனோ இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள், மலை யக பாடசாலைகளுக்கு தருவிக்கப்பட போவ தில்லை. மலையக பாடசாலைகளில் விஞ்ஞான,கணித பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, நமது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதை, தமிழ் முற்போக்கு கூட்டணி கவனத்தில் எடுத்து உள்ளது. எனவே, கணித, விஞ்ஞான பாட ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க, சிறப்பு தமிழ் மொழி மூல ஆசிரியர் பயிற்சி கலாசாலை அமைத்து அங்கே, இந்திய பயிற்சியாளர்களையே, பிரதமர் நரேந்திர மோடியிடம் நாம் வழங்கிய கோரி…
-
- 0 replies
- 179 views
-
-
ஹிஷாலினி உயிரிழப்பு – 5ஆவது சந்தேக நபராக, ரிஷாட் பதியுதீன் பெயரிடப் பட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில், உயிரிழந்த ஹிஷாலினியின் வழக்கில் ரிஷாட் பதியுதீன் 5ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனி…
-
- 0 replies
- 539 views
-
-
சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: அமெரிக்கா அறிவித்துள்ளதாக திவயின தகவல் உரிய சாட்சிங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்கா சிறிலங்கா அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை உருத்திரகுமாரன் மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது. குறித்த நபரை சிறிலங்காவிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது. உருத்திரகுமாரன் எல்லைகடந்த தமிழீழ இராச்சியத்தின் தலைவராக கடமையாற்றி வருவதாக சிறிலங்கா அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. http:…
-
- 0 replies
- 814 views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 17/09/2009, 11:51 போருக்குப் பின்னரான நிலைமைகளைப் பார்வையிட லின் பொஸ்கோ வவுனியா செல்கிறார் இலங்கைக்குச் சென்றடைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பொஸ்கோ இன்று வியாழக்கிழமை வவவுனியாவுக்கு சென்ற தடுப்பு முகாங்களில் உள்ள ஏதிலிகளின் நிலைமைகளைப் பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இரு நாட்கள் தங்கியிருக்கும் லின் பொஸ்கோ இலங்கையில் போருக்குப் பின்னராக நிலவும் சூழல், தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்களை மீளக் குடிமயர்த்தல், போர் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி விவாதிப்பார் எனத் ஐக்கிய நாடுகள் சபையின் செய…
-
- 0 replies
- 564 views
-
-
வடமாகாண தேசியப் பட்டியல் ஆசனம் அடுத்ததாக எமக்கே – புளொட்! வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான சுழற்சி முறையிலான தேசிய பட்டியல் ஆசனம் அடுத்ததாக தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்புக்கே கிடைக்கவேண்டுமென அந்தஅமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாணத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனங்கள் இரண்டு கிடைத்தன. அவற்றுள் ஒன்று முஸ்லிம் இனத்தவர்களுக்கு என்ற ரீதியில் அஸ்மினுக்கு வழங்கப்பட்டது. மற்றைய ஆசனம் சுழற்சிமுறையில் வழங்கப்பட்டு வந்தது. இவ்விடயம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் இணைந்து எடுக்கப்பட்டது. அதற்கமைய, முதன்முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசு கட்சி உறுப்பினர் மேரி கமலா குணசீல…
-
- 0 replies
- 304 views
-
-
தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் பத்மநாபா பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரப் பகிர்வு, அகதிகள் நிவாரணம் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் இன்றியமையாததென கட்சியின் தலைவர் ஆர்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கட்சிகளின் தனித்துத்தைப் பேணிக்கொள்ளும் அதேவேளை, ஒரே கூட்டணியாக சகல கட்சிகளும் இணைந்து கொள்ளவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கட்சி கொள்கைகளுக…
-
- 4 replies
- 1.2k views
-