ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
யாழ் பெரிய கோவிலில் நடமாடிய மர்ம நபர் கைது; மன்னார் ஆலயத்திலும் நடமாடியவராம்!. யாழ்ப்பாணம் – பெரிய கோவில் வளாகத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மன்னார் பேசாலை தேவாலயத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய அதே நபரே இன்று யாழ் பெரிய கோவிலிலும் நடமாடித்திரிந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்திற்கு இன்று நண்பகல் 12.30 மணியளவில் வந்த குறித்த நபர் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் மிக நீண்ட நேரம் தனது உடமைகளுடன் நடமாடித்திரிந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரை கைது செய்து தற்போது வி…
-
- 0 replies
- 343 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 15 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 348 views
-
-
நேபாளத்தில் 2005ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போரின்போது சித்ரவதைகளைச் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிழக்கு சஸ்ஸெக்ஸ் கவுண்டியில் செயிண்ட் லெனார்ட்ஸ் ஆன் சீ என்ற கடலோரத்து ஊரில் 46 வயதான இந்த நேபாளி வியாயழனன்று மெட்ரொபாலிடன் பொலிஸ் படையைச் சேர்ந்த அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் முன்னாள் அரசாங்கத்தில் சம்பந்தப்பட்டிருந்தவர் இவர் என்றும், ஐக்கிய ராஜ்ஜியத்தில் இவருக்கெதிராக கொடுக்கப்பட்டிருந்த ஒரு புகாரின் பேரில் பொலிசார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டனின் கிரிமினல் ஜஸ்டிஸ் சட்டம் 1988ல் பிரிவு 134ஐ மீறும் வகையில் சித்ரவதைகளை செய்தார் என்ற சந்தேகம் …
-
- 1 reply
- 639 views
-
-
தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மேலும், தொல்பொருள் பிரச்சினை சில பிரதேசங்களில் தற்போது உருவெடுத்து வருகின்றது. சுமார் 30 வருட யுத்தத்தினால் பல்வேறு கஷ்டங்களையும் பல இன்னல்களையும் வடக்கு, கிழக்கு மக்கள் சந்தித்தனர். உயிர்களையும் உடைமைகளையும் இழந்தது மட்டுமின்றி, காணிகளைக் கூட இழந்திருக்கின்றனர். யுத்தம் முடிந்து தனது சொந்த இடங்களில் மீளக்குடியேறிய மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். தொல்பொருளியல் என்ற போர்வையிலே, இந்த மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது. பிரச்சினைகள் …
-
- 9 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களிடம் எத்தகைய உதவிகளையும் கோரக்கூடாது என்று வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி அரசாங்க அதிபர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார். கடந்தவாரம் இந்தக் கடிதத்தினை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ன மூன்று மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதியீன் ஆலோசகரும், எம். பியுமான பசில் ராஜபக்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் ஐ.நா. அமைப்புக்களிடமோ, சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமோ, எ…
-
- 0 replies
- 637 views
-
-
சென்னை எழும்பூரில் உள்ள இலங்கையர்களால் நடத்தப்படும் மகாபோதி சொசைட்டி என்ற பெயரிலான பௌத்த மடத்தில் ஒரு இளம் துறவி தற்கொலை செய்து கொண்டார். தனது இடுப்பு நாடாவால் அவர் தூக்கிட்டு மாண்டுள்ளார். எழும்பூர் ரயில் நிலையம் எதிரே கென்னத் லேன் தெருவில் மகாபோதி சொசைட்டி உள்ளது. சிங்கள பெளத்தர்களால் நடத்தப்படும் மடம் இது. இங்கு இலங்கையிலிருந்து வரும் சிங்கள பெளத்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என பலரும் வருகை தருவர். மேலும் இங்கு ஏராளமான அறைகளைக் கட்டி வைத்துள்ளனர். அங்கு துறவிகளும் தங்கியுள்ளனர். இங்கு பெங்களூரைச் சேர்ந்தவரான ரத்தினபாலா என்ற 27 வயது துறவி தங்கியிருந்தார். பீகார் மாநிலம் புத்தகயாவுக்குச் செல்வதற்காக சென்னை வந்த அவர் இன்று காலை ரயில் மூலம் பீகார் செல்லத் திட்…
-
- 2 replies
- 399 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 107 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் ஆதா ரங்களை சமர்ப்பித்தால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல தயாராகவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் 107 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே தாம் அறிந்து கொண்ட தாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி ப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் போராளிகளின் தொடர் உயிரிழப்புக்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 295 views
-
-
ஈழம் தொடர்பாக தொடர் முழக்கம் நடத்திக் கொண்டிருப்பவர் சீமான். ராமேஸ்வரம் பேரணி கூட்டத்தில் தனி ஈழம் மலரும் என்று பேசியவர் உணர்ச்சி பிரவாகத்தில் சில வார்த்தைகளை கொட்டப் போக, கைது, சிறையடைப்பு என்று போனது விவகாரம். இவரோடு அந்த பேரணியில் பேசிய அமீரும் கைது செய்யப்பட்டார். வெளியே வந்ததும் அமீர் கொஞ்சம் அடக்கி வாசிக்க, சீமான் அதே முரட்டு பிடிவாதத்துடன் பேசிக் கொண்டிருந்தார். பின்பு ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மீண்டும் உணர்ச்சிவயப்பட்டார் சீமான். இது தொடர்பாக ‘மாயாண்டி குடும்பத்தார்’ படப்பிடிப்பில் இருந்த போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் அமைந்துள்ள இவரது அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கும் மர்ம மனிதர்கள் தீ வைத்…
-
- 0 replies
- 1.9k views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27916 இந்த உறவுகள் செய்த பாவம் என்ன.. சிங்கள இனவெறியின் குண்டுக்குப் பயந்து இடம்பெயர்வதும் குற்றமா..???! சிங்கள தேசத்தின் மீது ஒரு அணுகுண்டு போட்டாலும்.. இதற்கு ஈடாகாது..! சிங்கள இனத்தையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற உணர்வுதான் எழுகிறது..!
-
- 7 replies
- 1.3k views
-
-
வடக்கில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து மோசடி சம்பவம் இடம்பெற்று வருகின்றது. குறித்த மோசடி மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வேலையற்ற இளைஞர் யுவதிகளை இலக்கு வைத்து அவர்களுடைய கைத்தொலைபேசிக்கு ஒரு நபர் அழைப்பு விடுப்பார். அதில் யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக திறக்கப்பட்ட வங்கி கிளையில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும், அதற்காக அவர்களின், சுயவிபரக்கோவையை மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கோரி மின்னஞ்சல் முகவரி குறுஞ்செய்…
-
- 0 replies
- 452 views
-
-
கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு! நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பருத்தித்துறை நீதிமன்றினால் இன்று (04) நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் செய்வதற்கு எதிராக கடந்த வருடம் தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மீண்டும் கடந்த மாதம் 19ம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்பினரது சமர்ப்பணங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் இது…
-
- 19 replies
- 2.2k views
-
-
விவசாயிகள் போர்வையில் 2000 சிங்களவர்களை படையினரின் பாதுகாப்பில் குடியமர்த்துவதற்கு அரசு திட்டம் ஜன 22, 2013 வடக்கு மாகாணத்தின் எல்லையில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் என்ற போர்வையில் 2000 சிங்கள குடும்பங்களை படையினரின் பாதுகாப்பில் குடியமர்த்துவதற்கு அரசு திரைமறைவில் திட்டம். இதற்கான வேலைகள் முழு மூச்சாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குடி யேற்றப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. மனிதாபிமான விவசாய உற்பத்தி நடவடிக்கைச் செயற்றிட்டத்தின் கீழ், வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட் பட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்…
-
- 0 replies
- 318 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வருகின்றனர். இதற்கமைய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி உள்ளவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான இக்குழுவினர் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஆசீர் வாதம் பெற்றுள்ளனர். யாழ் ஆயர் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற இச் சந்திப்பில் ஆயரிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்ட முன்னணியினர் சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர். இதேவேளை நேற்றையதினம் நல்லை ஆதீனத்திற்குச் சென்ற மேற்படி முன்னணியின் குழுவினர் நல்லை ஆதீனக் குரு முதல்வரைச் சந்தித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதுடன் சமகால நிலைமைகள் தொடர்பிலும் கலந்துர…
-
- 7 replies
- 1k views
-
-
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்லக்கூடாது : திருமாவளவன் பேட்டி வீரகேசரி இணையம் 1/15/2009 5:18:28 PM - இலங்கைத் தமிழரைப் பாதுகாக்க கோரி சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள திருமாவளவன் நிருபர்களிடம் பேசிய போது, இலங்கையில் தமிழ் மக்கள் பேரவலப்படுகின்றார்கள்; மரணிக்கின்றார்கள். இதைக் கண்டித்து இலங்கை கிரிக்கெட் அணியுடனான சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இது குறித்து திருமாவளவன் மேலும் தெரிவிக்கையில், ''மும்பை குண்டுவெடிப்பில் ஈடுபட்டது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதால் அந்த நாட்டுக்குச் செல்லவிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இப்போது, இலங்கையில் தமிழ் மக்கள் கொன்று குவிக்…
-
- 2 replies
- 879 views
-
-
யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் விரைவில் முடிவுறுத்தப்படும் : யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் விரைவில் முடிவுறுத்தப்படும் ஜனாதிபதியுடனான நீதிபதிகளின் சந்திப்பில் நீதிபதி இளஞ்செழியன் உறுதிமொழி யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போதைப் பொருள் கடத்தல் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் அடாவடித்தனமான குற்றச் செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். போதைப் பொருளை ஒழித்தல், யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு …
-
- 3 replies
- 385 views
-
-
அமைதி வலயங்களையும் அமைதி இடைவளிகளையும் அமைப்பது அவசர தேவையாகும்.-ஆயர்கள் கூட்டம் திங்கள், 19 ஜனவரி 2009, 23:26 மணி தமிழீழம் [செய்தியாளர் கோபி ] வன்னிப் போர்க்களத்தில் பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுப்பதற்கு கவனமாக திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தங்களிடம் மனதார வேண்டுகின்றோம் எனராஜபக்ஷவிடம் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர். யாழ்ப்பாணம் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இரா யப்பு ஜோசப் ஆண்டகை, குருநாகல் ஆயர் றோமன்ட் பீரிஸ் ஆண்டகை, அனுராத புரம் ஆயர் அன்றாடி ஆண்டகை, இலங்கை திருச்சபையின் கொழும்பு ஆயர் டுலிப் சிக்கேரா ஆகியோர் கூட்டாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்ப…
-
- 3 replies
- 923 views
-
-
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் ராமநாதன் கலந்துகொண்ட அதிகாரம்
-
- 0 replies
- 409 views
-
-
காங்கிரஸை தனிமைப்படுத்துங்கள்- திருமாவளவன் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி எவ்விதப் பயனும் ஏற்படாததால் திடீரென சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அவரது உடல்நிலையைக் கருதி பல்வேறு கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடக் கோரினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று நான்கு நாட்களுடன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் திருமா. உண்ணாவிரதத்தினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம். `அத்துமீறுவோம், அடங்க மறுப்போம்' என்ற கொள்கைக்குப் பிறகு…
-
- 0 replies
- 964 views
-
-
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகள் முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஒத்துழைப்பு நல்குவோமெனத் தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, அடுத்த அரசமைப்புத் திருத்தத்திலேயே அதை உட்புகுத்தினால் ஜே.வி.வி முழுமையாக ஆதரவளிக்கும் என்றார். தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், 13,19ஆவது திருத்தங்களைப் போலவே 20ஆவதும் ஒரு திருத்தமாகும் என்றார். “திருத்தங்களின் ஊடாக, அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். திருத்தவேண்டிய ஆவணங்கள், புதிய கடிதங்களை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். அவ்வாறான ஆவணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும்” என்றார…
-
- 0 replies
- 371 views
-
-
Please sent emails as below to ensure that SKY TV gives due coverage� Sky News has announced that if enough interest is shown they would attend and broadcast the mass awareness event on 31/01/2009. Please act now and email Mr. Paul Bromley news.plan@bskyb.com "Sample Letter" Re: Tamil Genocide in Sri Lanka I learned that your are coving the event organised to create awareness about the Genocide of Tamils in Sri Lanka to be held in London tomorrow from 1 pm. The international Community has been silent to this holocaust properly due to the lack of exposure. It is expected that over a hundred thousand will participate in this rally.…
-
- 1 reply
- 789 views
-
-
உளவு பார்ப்பதற்காக தமிழக மீனவர்கள் வடிவில் இலங்கைக்குள் புகும் இந்திய இராணுவம் : கைதான ஒருவர் நடுக்கடலில் இரகசியமாக விடுதலை : உளவு பிரிவு அதிர்ச்சி தகவல் எல்லைத் தாண்டும் இந்திய மீனவர்களின் வடிவில் வடக்கில் உளவு பார்ப்பதற்காக இந்திய இராணுவத்தினர் மற்றும் முகவர்கள் ஊடுறுவதாக இரகசிய தகவல்கள் உளவுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பில் உளவுப் பிரிவு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பின் உள்ளக தகவல்கள் வீரகேகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தன. இந்நிலையில் அண்மையில் நெடுந்தீவு கடற்பகுதி ஊடாக இவ்வாறு இந்திய இராணுவ வீரர் ஒருவர் இலங்கை எல்லைக்குள் ஊடுறுவ முற்படும் போது ரோந்துச் சென்ற கடற்படையினரால் கைது ச…
-
- 1 reply
- 414 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட தமிழின அழிப்பு மற்றும் இந்தியா வழங்கி வரும் இராணுவ உதவிகளை நிறுத்துமாறு வலியுறுத்தி ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 423 views
-
-
மகிந்தவிடம் ‘றோ‘ பணிப்பாளர் அலோக் ஜோசி பரிமாறிய இந்திய அரசின் ‘முக்கியசெய்தி‘ [ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013, 11:17 GMT ] [ கார்வண்ணன் ] திருப்பதி சென்றிருந்த போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோவின் பணிப்பாளர் அலோக் ஜோசி இந்திய அரசாங்கத்தின் ‘முக்கியமான செய்தி‘ ஒன்றைப் பரிமாறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. “சிறிலங்கா அதிபரின் பயணத்துக்கு முன்னதாக இடம்பெற்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் புதுடெல்லிப் பயணத்தின் நோக்கம் குறித்து, அண்மையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த போது, இந்தியாவின் தேசிய நாளேடு செய்தி ஒ…
-
- 12 replies
- 1.4k views
-
-
அமைச்சர்களான அர்ஜூன,தயாசிறி மோதல் உச்சம் அமைச்சரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜூன ரணதுங்கவை, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை வர்த்தக மாபியா என அர்ஜூன விமர்சனம் செய்திருந்தார். வர்த்தக மாபியாவுடன் திலங்க சுமதிபால தொடர்புபட்டுள்ளார் என அர்ஜூன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து அதே ரணதுங்க 1990களில் வர்த்தக மாபியாவின் தலைவராக இருந்துள்ளார் என விளையாட்டுத் துறை அமைச்சர் குற்றஞ்சாட்டினார். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அர்ஜூன ரணதுங்கவின் சகோதர்கள் இணைந்த போதே மாபியா என்ற ஒன்று உருவாகியுள்ளது. அ…
-
- 0 replies
- 183 views
-
-
20வது அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்பியும் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதேவேளை இது தொடர்பில் இதுவரை ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி மேலும் கொள்கை மாற்றங்களுக்கான மையம் சார்பில் பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி நாகந்த கொடித்துவக்கு, அனில் காரியவசம் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். https://newuthayan.com/20வது-திருத்தத்துக்கு-எதி-2/
-
- 8 replies
- 1.2k views
-