ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
04 JUL, 2023 | 08:05 PM தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குருந்தூர்மலையில் பௌத்தலோக நற்பணிமன்றம் கல்வெட்டை நிறுவியதாக பௌத்தலோக நற்பணிமன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். எனவே அவ்வாறு கல்வெட்டு அமைக்கப்பட்ட செயற்பாடு சட்டவிரோதமான செயற்பாடு அல்லவெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த இடத்தில் புனரமைப்பு விடயங்களை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களம், தொல்பொருள் சட்டங்களின் கீழ் இந்த விடயங்களை மேற்கொண்டுள்ளது. தொல்பொருள் சட்டத்தின் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் இவற்றை அகற்றுவ…
-
- 4 replies
- 408 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 633 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு உல்லாசப் பயணத்துறையில் மிகவும் ஒரு முன்னேற்றமான நிலையை ஏற்படுத்தியிருந்தது. எனினும் தற்போது ஆரம்பித்துள்ள மோதல்களில் மிகவும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள துறையாக உல்லாசப் பயணத்துறையே இருப்பதாக அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் சிறிலங்காவில் உல்லாசப் பயணத்துறையை முன்னேற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். எனினும் தினமும் இடம்பெறும் கடல், வான், தரை தாக்குதல்கள் அதற்கு சாதகமாக இல்லை. இப்படிப்பட்ட நிலைமைகளில் உல்லாசப் பயணத்துறையே முதலாவதாக …
-
- 1 reply
- 863 views
-
-
சன் சீ கப்பல் மாலுமி ஒருவர் ஆட்கடத்தலில் ஈடுபடவில்லையென குடிவரவு மற்றும் அகதிகள் சபை தீர்ப்பளித்தது சன் சீ கப்பலின் மாலுமிகளில் ஒருவர், ஆட்களைச் சட்டவிரோமாகக் கனடாவுக்குள் கொண்டு வரும் நடவடி;ககையில் ஈடுபடவில்லையென குடிவரவு மற்றும் அகதிகள் சபை தீர்ப்பளித்துள்ளது. அந்தக் கப்பலின் மாலுமிகள், ஆட்கள் சட்டவிரோமாகக் கனடாவுக்குள் கொண்டு வரப்படுவதில் முக்கிய பங்கை வகித்ததாக கனேடிய அரசு வாதிட்டு வருகிறது. இந்த நிலையில், மாலுமிகளில் ஒருவர் மீதான விசாரணையில், கடந்த பதினைந்தாம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பு நேற்று ஊடகவியலாளர்களுக்கு வெளியிடப்பட்டது. அந்தத் தமிழர், ஏனையவர்கள் கனடா வருவதற்கு உதவியிருக்கலாமென்றாலும், அவர், அந்த நடவடிக்கையை ஏற்பாடு செய்து, ஏனைவர்கள் கன…
-
- 1 reply
- 440 views
-
-
யாழில் யானைகளுக்குத் தடை : அரசாங்க அதிபர் விசேட நடவடிக்கை! யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்களின் போது வேறுமாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு அவற்றை எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி ஆலய சடங்குகளிலும் மற்றும் ஊர்வலங்களிலும் ஈடுபடுத்துகின்றனர். இதன்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இவ்வாறு யானைகளை பயன்படுத்தவது சட்டவிரோதமானதும் பொதுமக்களுக்கு எதிர்பாராதவிதமான ஆபத்…
-
- 4 replies
- 861 views
-
-
[Tuesday, 2011-06-28 12:29:12] சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான தமரா குணநாயகம் என்பவர் ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இந்த விடயம் குறித்து முறைப்பாடு செய்வதற்கு ஜெனீவா செல்லும்போது. அங்கு சென்ற அவர் தமரா குணநாயகத்துடனேயே தங்கி இருந்து தனது பணிகளை மேற்கொள்ளுமளவுக்கு நம்பிக்கையும் சினேகமும் உள்ளவரென தெரியவருகிறது. கியூபாவிலுள்ள சிறிய இலங்கைத் தூதரகத்தில் சிறிலங்கா தூதுவராகத் தற்போது கடமையாற்றி வரும் தமரா குணநாயகம் தற்போது மிக முக்கியத்துவமிக்க தூதுவர் பதவிக்கு ஜனாதிபதி மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ளதனை சிறிலங்கா வெளிவிவகார அம…
-
- 1 reply
- 530 views
-
-
புதிய அரசாங்கம் எங்களை அரசியல் ரிதியில் துன்புறுத்தி வருகின்றது' என்று ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அன்று போலவே இன்றும் நாம் மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறோம். தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் என்னையும் எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=126054&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 686 views
-
-
விடுதலைப் புலிகளின் போர்க் கப்பலைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யோர்தான் நாட்டுக்குச் சொந்தமான போர்க் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பான முல்லைத்தீவில் கரை ஒதுக்கியது. பின்னர் இந்த கப்பல் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த கப்பலை பார்வையிடுவதற்காக அதிகளவான சுற்றுலாப் பணிகள் முல்லைத்தீவுநோக்கி வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் போர்க்கப்பலை பொது மக்கள் பார்வையிடுவதற்கு தற்போது இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/story/16/விட…
-
- 6 replies
- 932 views
-
-
[sunday, 2011-07-03 13:09:24] பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை விரைவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Lee Scott yp ஸ்கோட்டின் தகவல்படி இன்னும் விவாதத்துக்கான உறுதிப்படுத்தப்பட்ட திகதி குறிக்கப்படவில்லை. இலங்கையில் சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டுவது தொடர்பிலேயே இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இந்தப்பிரேரணை 52 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் இலங்கை தொடர்பில் பரிந்துரைத்துள்ள போர்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளல் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு தொழில்க்கட்சியும் ஆதரவளிக்கிறத…
-
- 1 reply
- 316 views
-
-
டிசம்பர் 31க்கு முன் காணிகளை விடுவிப்பதற்கு பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதி ஆளுநர்களுக்கு பணிப்பு. October 22, 2018 வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய தேவையான பங்களிப்பினை வழங்குமாறு ஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டிற்கான மாகாண சபை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். சகல மாகாணங்களினதும் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர்…
-
- 0 replies
- 269 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி: இனப்பிரச்சினைக்கான தீர்வு மாவட்ட சபை! இலங்கையில் தற்போதுள்ள மாகாணசபை ஆட்சி முறையினை நிறுத்தி, மாவட்ட சபை முறையிலான ஆட்சி முறையை உருவாக்குவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. கொழும்பு சார்ந்த அரசியல் கட்சிகளினால் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமது தீர்வுத்திட்ட யோசனை கொண்ட அறிக்கையினை மே மாதம் சமர்ப்பிக்கவுள்ளனர். நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், தீர்வுத் திட்டம் குறித்த யோசனைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில,; தற்போதுள்ள மாகாணசபை முறைய…
-
- 1 reply
- 1.1k views
-
-
கழிவகற்றும் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பிரணவநாதன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாநகரசபையினால் அகற்றப்படும் திண்மக் கழிவுகள் இதுவரை கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகர சபை கழிவகற்றல் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இந்த கழிவு அகற்றும் முறை மீண்டும் ஆரம்பிக்கும் வரை மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் அரச, அரச …
-
- 2 replies
- 563 views
-
-
இலங்கையின் கோரிக்கைக்கு அமைய, இந்திய கடற்படைக்கு சொந்தமான Donier-228 கடல் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமானப்படை முகாமில் விமானத்தை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த Donier-228 கடல் கண்காணிப்பு விமானம் இரண்டு வருடங்களுக்கு நாட்டின் விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க இதனைப் பெற்றுக்கொண்டுள்ளார். இந்தியா – இலங்கைக்கிடையிலான தொடர்பு மேலும் வலுவடைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பாவிக்க…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
இறுதி நாட்களும் எனது பயணமும் – 11 பதிந்தவர்: ADMIN திங்கள், 11 ஜூலை, 2011 சற்றுநேரமேனும் என்னை புரிந்துகொண்டவர்களாய் என்னோடிருந்த மனிதர்களும் சென்றுவிட்டார்கள். அவர்கள் எழுந்துசென்ற இடைவெளியை வேறு யாரோ வந்து நிரப்பினார்கள். மங்கலாகிவிட்ட பார்வையை கூர்மைப்படுத்தியபடி அவதானித்தேன். வயோதிப தம்பதியொன்று தமது பைகளை போட்டு அவைமீது குந்திக்கொண்டிருந்தனர். எனக்கோ கண்களை திறக்க முடியாமல் தலையை வலித்தது. உடலும் மனமும் களைத்து சோர்ந்துபோய்விட்டிருந்தது. போத்திலில் இருந்த, ஒரு மிடறுக்கும் போதாத பானத்தை கவிழ்த்து ஊற்றி நாக்கை முழுதுமாய் நனைத்து விழுங்கினேன். சற்றுநேரத்தில் என்முன்னால் சிறுவன் ஒருவன் வந்துநின்றான். ‘அக்கா அந்த போத்தில தாறிங்களா?’ என்றபடி. அந்த போத்தில் என…
-
- 0 replies
- 900 views
-
-
மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றுக்கு பாரியளவு கடன் வட்டி செலுத்த நேரிட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிர்மானிக்கப்பட்ட மத்தள விமான நிலையம் மற்றும் மற்றம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியனவற்றுக்காக பாரியளவில் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கடன்களுக்காக மிகக் கூடுதலான வட்டித் தொகையை செலுத்த நேரிட்டுள்ளது. எவ்வாறெனினும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் பகுதியின் இரண்டாம் கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்தளை விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியன தொடர்வில் எவ்வாறான தீர்மானம் எடுப்பது என்பது குறித்து எத…
-
- 0 replies
- 308 views
-
-
கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் – யாரும் உரிமை கோர முடியாது : கம்மன்பில வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது. வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில், மூவின மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள். இ…
-
- 17 replies
- 1.4k views
-
-
கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவியுங்கள் : சீமான் [Friday, 2011-07-15 11:26:10] இந்தோனேசிய அரசால் நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க தமிழக முதல்வர் முயற்சி மேற்கொள்ள கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை: கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவியுங்கள் : சீமான் இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழர்கள் மீது சிங்கள இனவாத அரசு தொடர்ந்து நடத்திவரும் இன அழித்தலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்துக்கொள்ளவும், நியூசிலாந்து நாட்டை நோக்கி கப…
-
- 0 replies
- 306 views
-
-
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று! சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது கடந்த இரண்டு நாட்களாக விவாதம் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த அவநம்பிக்கையை முன்வைத்துள்ளதுடன் அதற்கு ஆதரவாக தங்களது தரப்பினர் வாக்களிப்பார்கள் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1348602
-
- 2 replies
- 549 views
- 1 follower
-
-
துரையப்பா பொதுவிளையாட்டு மைதானம் படையினரின் பயிற்சி தளமாகியுள்ளது. யாழ். கோட்டைப்பகுதி துரையப்பா பொதுவிளையாட்டு மைதானப்பகுதியில் அதிகாலை 5.00 மணித்தொடக்கம் காலை 8.00 மணிவரை படையினர் குவிக்கப்பட்டு பயிற்சி நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கனரக வாகனங்களில் கொண்டுவந்து இறக்கப்படும் நூற்றுக்கணக்கான படையினர் இப்பகுதியில் பயிற்சி நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதுடன் 53 ஆம் பிரிகேட் படையினரே தலையில் சிகப்பு ரிபனை கட்டி கொமாண்டோ பயிற்சிகளை எடுக்கின்றனர். இவர்கள் பெரும்சத்தம் இட்டுகத்தி பயிற்சியில் ஈடுபடுவதாகவும் பொதுமக்களின் பாவனைக்குரிய துரையப்பா விளையாட்டு மைதானம் யாழ். நூலக முன்வீதி மக்கள் பாவனைக்கு தடைசெய்யப்பட்டு பட…
-
- 0 replies
- 1k views
-
-
அரசுடனான பேச்சுக்கள் வெற்றிபெற கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள்; விக்கிரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களிடம் கோரிக்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுகளில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனமாகும். இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் உதயனுக்குத் தெரிவித்தவை வருமாறு: அரசு எந்தவிதமான யுக்திகளைக் கையாண்டாலும் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக்தியை அணு அளவாவது அசைக்…
-
- 0 replies
- 278 views
-
-
November 13, 2018 வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. யாழ். குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மன்னார், புத்தளம், திருக…
-
- 1 reply
- 422 views
-
-
17 SEP, 2023 | 10:23 AM முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை (13)காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் தென்னம் காணியொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியமையால் அங்கிருந்த கிராமவாசி ஒருவர் சென்று பார்த்தவேளை அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என …
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
-
அமைச்சர் ஆறுமுகன் தலைமையிலான குழுவினர் தாக்குதல்: 15 பேர் காயம் _ 7/23/2011 11:44:37 AM அமைச்சர் ஆறுமுகன் தலைமையில் தலவாக்கலை தோட்டத்துக்குச் சென்ற 80 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு ஒரு மணியளவில் இடம்பெற்றதாகவும், தாக்குதலை மேற்கொண்டவர்களில் பெரும்பாலானோர் குடி போதையில் இருந்தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32836
-
- 0 replies
- 311 views
-
-
ஈ.பி.டி.பி தவிர்ந்த அனைத்து கட்சிகளுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார். யாழ். பலாலியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வின்போது, பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு முரண்பாடுகள் ஏற்பட இடமளிக்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் தேர்தல் அரசியலை எதிர்நோக்குவதற்கு முன்வருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொள்கை அடிப்படையில் ஒன்றுபட…
-
- 0 replies
- 488 views
-