Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குருணாகல் நாரம்மலை கிரியுல்ல பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் ஆட்டோ நேருக்குநேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 இளைஞர்கள் உடல் நசுங்கிப் பலியானார்கள். இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். வெளிறாடு ஒன்றுக்குச் சென்று விட்டு ஊர் திரும்பிய சகோதரனை அனைத்துக்கொண்டு வரும் போதே இக்கோரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. மாத்தளை உக்குவெலை பகுதியைச் சேர்ந்த அப்துல் அசீஸ் மொகமட பவகார் (வயது 21) அப்துல் அஸீஸ் முகமட் அமீன் (வயது 20) கசீன் (வயது 23) அலீர்தீன் (வயது 23) ஆகியோரை உயிரிழந்தவர்களாவர். www.ethiri.com

  2. பிரிவினை காட்டாது... அனைவருக்கும், ரணில் விக்கிரமசிங்க.. சிறந்த சேவை புரிவார் – விஜயகலா ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த வாக்களிக்காத மக்கள்என்ற பிரிவினை காட்டாது அனைவருக்கும் நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க சிறந்த சேவை புரிவார் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் புதிதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நாடுபூராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த வாக்களிக்காத மூவின மக்களுக…

    • 4 replies
    • 316 views
  3. குமரன் பத்மநாபனுக்கு பொது மன்னிப்பு.... அரசுப் பதவி!!-இலங்கை சூசகம் வியாழக்கிழமை, ஜூன் 10, 2010, 9:07[iST] கொழும்பு: கே.பி எனப்படும் குமரன் பத்மநாபனுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பும், அரசுப் பதவியும் வழங்கும் வாய்ப்பு தென்படுவதாக இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புலிகளின் வெளியுலகத் தொடர்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்தவர் கேபி. தேசியத் தலைவர் என தமிழர் கொண்டாடும் பிரபாகரனால் அந்தப் பொறுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டவர். ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பிறகு முன்னுக்குப் பின் முரணாக செய்திகள் கொடுத்து தமிழரின் நம்பிக்கையைத் தகர்த்தார். புலிகளின் தலைவர் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். சிறிது தினங்கள் கழிந்த நிலையில், மலேஷியாவில் …

  4. சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கருத்து வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையில் இலங்கை தொடர்பிலான விசாரணைகளை நடாத்த அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த கால காயங்களை ஆற்றுப்படுத்த சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைப்பாடு திருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்…

  5. சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை சிங்கள கட்சிகள் உணரவேண்டும் மறைந்த தந்தை எஸ்.ஜே. வி. செல்வநாயகம், “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றார். சம்பந்தனை “இலங்கை நாட்டையே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லும் நிலைமைக்கு தள்ளி விடாதீர்கள். எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் இன்று மிகவும் இறங்கி வந்து பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதைவிட அவரால் இறங்க முடியாது. அவரை தயவு செய்து வெறுங்கையுடன் வடக்குக்கு அனுப்பி வைத்து விடாதீர்கள். அப்படி அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொது எதிரணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய சிங்கள பெ…

  6. தர­மற்ற பெற்­றோலை கப்­ப­லி­லி­ருந்து இறக்­க­மாட்டேன் (ஆர்.ராம். எம்.எம்.மின்ஹாஜ்) எவர் என்ன கூறி­னா லும் என்னை வீட்­டுக்கு அனுப்­பி­னாலும் நான் அமைச்­ச­ராக இருக்கும் வரை தர­மில்­லாத பெற்­றோலை கப்­பலில் இருந்து இறக்க மாட்டேன். அத்­துடன் இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியோ அல்­லது பிர­த­மரோ எனக்கு அழுத்தம் பிர­யோகம் செய்­ய­வில்லை. மேலும் இந்த பிரச்­சி­னையை ஒரு சிலர் அர­சி­ய­லாக்க முயற்­சிக்­கின்­றனர். தயவு செய்து இந்த பிரச்­சி­னையை தீர்க்க எனக்கு இட­ம­ளி­யுங்கள் என துறை­முக மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க சபையில் தெரி­வித்தார். இந்த நிலை­மைக்கு நாட்டை கொண்டு வந்­த­மைக்கு கார­ண­மா­ன­வர்­களை இனங்­காணும் வகையில் விசா­ர…

  7. ஜனாதிபதி... பாதுகாப்பு அமைச்சினை வகிக்க முடியுமா, முடியாதா ? அரசியல் கட்சிகள் மாற்று கருத்து! அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை வகிக்க முடியுமா, முடியாதா என்பது குறித்து அரசியல் கட்சிகள் மாற்று கருத்துக்களை முன்வைத்துள்ளன. 19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக நடைமுறைப்படுத்துவதை முதற்கட்டமாகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதை இரண்டாம் கட்டமாகவும் செயற்படுத்த கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தற்போது 19ஆவது திருத்தத்தின் முக்கிய விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூல வரைபில் உள்வாங்கப்படவில்லை என்பதனால் அதில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து விர…

  8. கட்டவிழும் முடிச்சுக்கள்: தென்தமிழீழத்தில் நிகழ்ந்தது என்ன? - சேரமான் Pழளவநன டில: ழn ஜூலை 3இ 2010 தென்தமிழீழத்தில் ராம் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இயங்கி வருவதாக அண்மைக் காலங்களில் இந்திய ஊடகங்களில் பரபரப்பான செய்திகளும், கட்டுரைகளும் வெளியிடப்பட்டதோடு, இவ்வாரம் மட்டக்களப்பு படுவான்கரை குடும்பிமலை வனப்பகுதியில் சிங்கள வான்படையினரின் மிகையொலி யுத்த விமானங்களில் இருந்து குண்டுவீச்சுக்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. உண்மையில் தென்தமிழீழத்தில் நடந்ததும், நடப்பதும் என்ன? இதில் கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனின் பங்கு எத்தகையது? என்ற இரண்டு கேள்விகளுக்கும் விடைபகரும் களமாக இக்கட்டுரை விரிகின்றது.…

    • 28 replies
    • 4.5k views
  9. உலக கிண்ணத்தைக் கைப்பற்றிய இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு! – அலரி மாளிகையில் கேக் வெட்டி கொண்டாட்டம். [Wednesday, 2014-04-09 09:50:20] பங்களாதேஷில் நடந்த 20க்கு 20ஓவர் உலக கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு நேற்று விமான நிலையத்தில் இருந்து காலிமுகத்திடல் வரை கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அலரிமாளிகையிலும் சிறப்புக் கொண்டாட்டங்களும் நடைபெற்றன. இலங்கை அணி வீரர்கள் நேற்று பி.ப. 3.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய பின்னர் இலங்கை அணி வீரர்கள் திறந்த இரட்டைத்தட்டு பஸ்ஸில் விமான நிலையத்தில் இருந்து வாகன பவனியாக கட்டுநாயக்க, கொழு…

  10. வவுனியாவில் தெலுங்கு முறைப்படி நடந்த திருமணம்! - மகுடியும், பாம்பும் சீதனம் [Sunday 2017-11-12 09:00] வவுனியா கிராமம் ஒன்றில் மல்காந்தி என்ற 19 பெண்ணுக்கும் அரவித்த குமார என்ற 20 வயதுடையவருக்கும் தெலுங்கு சம்பிரதாய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. பெரியோர்கள் முன்னிலையில் ரபான் அடித்து, பாசி மாலை அணிந்து, மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் குறித்த இருவரும் இணைந்துள்ளனர். வவுனியா, தெற்கு பிரதேச செயலகத்தின் நொச்சிகுளம் கிராமத்தில் வித்தியாசமான வாழ்க்கை முறையை கொண்ட சமூகம் ஒன்று வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சமூகத்தில் சுமார் 54 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. …

  11. "பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது!" சீமான் சொல்லும் ஐந்து ஆபத்துக்கள்! ப.திருமாவேலன் முள்ளி வாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க... அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க... ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க... இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது. போர் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையிலும், இன்னமும் கொடூரங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவே செய்தி கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி 'நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமானிடம் பேசினோம். "இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க, ஐ.நா. அவை மூவர் குழுவை நியமி…

  12. ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இலங்கை நம் நட்பு நாடு என்று சொல்கிறது பாரதீய ஜனதா. இலங்கை நம் நட்பு நாடு. ராஜபக்ச நமது நண்பர் என்கிறது காங்கிரஸ் கட்சி. இலங்கை பகை நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனவே அதற்காகவே அவரை நாம் ஆதரிக்கின்றோம். ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி. அவரையும் அவருடைய சகாக்களையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று நட்புறவை துண்டிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் …

  13. அரச ஊழியர்கள்... தடையின்றி, வெளிநாடு செல்ல... அமைச்சரவை அனுமதி! அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்வதற்கு ஏதுவாக தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது படிப்பு அல்லது வேலை வாய்ப்புக்காக அரசு ஊழியர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தங்கள் பதவிக்காலத்தில் வெளிநாடு செல்ல முடியும். இத்திருத்தத்தின் கீழ், தற்போதுள்ள விதிகள் திருத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியரின் ஓய்வூதியக் கணக்கீடு உள்ளிட்டவற்றை பாதிக்கும் விதிகள் தளர்த்தப்படும். அத்தகைய திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய சுற்றறிக்கையை விரைவாக வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/12…

  14. தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். 26ஃ07ஃ2010 எமது அன்புக்குரிய தமிழ் மக்களே! இன்று பல நெருக்கடிகளை சந்தித்து புலம்பெயர் நாடுகளில் ஒற்றுமை முயற்சிகளை மேற்கொள்பவர்களைப்பற்றி ஒரு வருடம் கடந்த நிலையிலும், தாயக மக்களுக்கு எந்த விதமான உதவியையோ அல்லது நம்பிக்கையையோ கொடுக்காதவர்கள் தமது பிழைகளை சுட்டிகாட்டுபவர்களையும் கருத்துச் சொல்பவர்களையும் ஒற்றுமைக்கு உறுதுணையாக செயற்படுபவர்களையும் தேசியத்தின் பேரால் தொடர்ந்து விமர்சிப் பதினூடாக மக்கள் மத்தியில் குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் நபர்கள் பற்றியும், இணையத்தளங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தவேண்டிய கடமை எமக்கானது என்பதால் விடுதலைப்புலிகளின் அறிக்கைவிடும் மரபையும் மீறி அடிக்கடி அறிக்…

    • 4 replies
    • 3k views
  15. ஈழத்து காந்தி எனப் போற்றப்படும் தந்தை செல்வாவின் 37 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது. தந்தை செல்வாவின் சிலைக்கு மலை மாலை அணிவிக்கப்கட்டு மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து நினைவுப் பேருரை இடம்பெற்றது. நிகழ்வின் நினைவுப் பேருரையை ஓய்வு நிலை நீதிபதி திருநாவுக்கரசு நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் தழிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் தந்தை செல்வாவின் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். http://ww…

  16. இன்று முதல்... மின்வெட்டு அமுலாகும் நேரத்தில், மாற்றம்! நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் சுழற்சிமுறையில் இரண்டரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று முதல் மதியம் 12 மணிமுதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேர மின்வெட்டு சுழற்சிமுறையில் அமுலாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1287653

  17. தெஹியத்தகண்டிய ஹேனானிகல பிரதேசத்தில் ஆதிவாசிகளின் தலைவராக இருந்த கலுஅப்பு காலமாகும் போது 114 வயதடைந்திருந்ததோடு 14 பிள்ளைகளின் தந்தையாகவும் இருந்தார். இவருக்கு நான்கு தலைமுறையைச் சேர்ந்த பேரன் பேத்திகள் 105 பேர் உள்ளனர். முன்னர் ஆதிவாசிகளின் புராதன வசிப்பிடமான தம்பானையில் வசித்த இவர் மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணி வழங்கப்பட்டு ஹெனானிகலையில் குடியேறி உள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை இவரது இறுதிக் கிரியைகள் இடம்பெற உள்ளன. http://www.virakesari.lk/articles/2014/05/01/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E…

  18. சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் சுகாதார சேவைகள் பணிப்பாளரை தாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் (எம்.நியூட்டன்) சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் கிளிநொச்சி மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை தாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாடு முழுவதும் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. மக்கள் அனைவருமே எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை …

    • 3 replies
    • 329 views
  19. தமிழக கியூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழீழ உளவுப் பிரிவின் பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டி இது..! கேள்வி : உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா? பதில் : என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கியிருந்தாலும், இது காலம்வரையிலு் நான் எந்தவிதத் தவறான செயல்பாடுகளிலும் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைது செய்திருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை. கேள்வி : பிரபாகரனுக்கு எதிரான வரதராஜப்பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தம…

    • 21 replies
    • 3.6k views
  20. தமிழீழ ஏதிலிகளின் மடல்கள் “நேஷனல் போஸ்டின்” மனக்கதவை தட்டியது அனலை நிதிஸ் ச. குமாரன் கனேடிய தேசிய ஆங்கிலப்பத்திரிகையான “நேஷனல் போஸ்ட்" என்ற வலதுசார் கொள்கையுடைய பத்திரிகை முதன் முதலில் தமிழீழ ஏதிலிகளின் கண்ணீர் மல்கிய மடல்கள் மூலமாக தனது மனக்கதவை திறந்து அவர்களுக்கு ஆதரவான கட்டுரையை பிரசுரித்துள்ளது. அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் மனமாற்றம். இந்த மனமாற்றம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நேஷனல் போஸ்ட் பத்திரிகை கடந்த பல வருடங்களாக ஈழத்தமிழருக்கு எதிரான கட்டுரைகளையே எழுதி வந்துள்ளது. குறிப்பாக, ஈழத்தமிழர் என்றால் அவர்கள் அனைவருமே புலிகள் என்றும் …

    • 0 replies
    • 929 views
  21. கொழும்பு அரசு தவறு செய்கிறது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வழங்­கும் பெயர்ப் பட்­டி­ய­லுக்­கும் இனி அரச வேலை வாய்ப்பு வழங்­கப்­ப­டும் என்று கொழும்பு அரசு அறி­வித்­துள்­ளது. சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல நாடா­ளு­மன்­றத்­தில் இத­னைத் தெரி­வித்­துள்­ளார். இது தவறு. தன்னை நல்­லாட்சி அரசு என்று கூறிக்­கொள்­ளும் ஒரு அரசு அர­சி­யல் நிய­ம­னங்­களை வழங்­கு­வது எந்­த­வ­கை­யில் சரி­யா­னது? இது அர­ச­மைப்­பின் கீழ் இலங்­கை­யின் குடி­மக்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வழங்­கப்­பட்­டுள்ள சம உரி­மை…

  22. அமெரிக்காவின் தடைகளினால்... இலங்கைக்கு, பாதிப்பில்லை – ஜூலி சங் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளுடன் இலங்கை எவ்வாறு இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும் என்பது தொடர்பில் அமெரிக்கா ஆலோசனை வழங்குவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அது இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய்…

    • 1 reply
    • 247 views
  23. வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் 5 பேர் கடத்தல் [செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2006, 02:15 ஈழம்] [ம.சேரமான்] மட்டக்களப்பு வெலிக்கந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் 5 பேர் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் நேற்று திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு கணக்கியல் தொடர்பான பயிற்சிநெறி வகுப்பில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது வெலிக்கந்தையிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் திங்கட்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் வெலிக்கந்தையடியில் வழிமறித்த அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினர் 5 பேரை பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ள…

    • 28 replies
    • 5.2k views
  24. இலங்கைத் தொழிலளார் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினருமான ஜெகதீஸ்வரனின் வீடு கொள்ளையிடப்பட்டுள்ளது நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் நகரில் அமைந்துள்ள அவரது வீட்டில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 15 லட்ச ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ம் திகதி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கில் குறித்த வீட்டை மூடிவிட்டு கொழும்பு சென்றதாகவும், மீண்டும் வீட்டிற்கு வந்த போது கொள்ளையிடப்பட்டமை தெரிய வந்ததாக முன்னாள் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அட்டன் காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், இதுவரையில் இந்த சம்பவத்…

    • 1 reply
    • 462 views
  25. இனக்கொலையாளியும் அரசபயங்கரவாதியுமான மகிந்த ராஜபக்ச தலைமையில் முள்ளிவாய்க்கால் அழிப்பு நாள் வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டது. முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை சாட்சிகளை முடிமறைத்துக் கொலைசெய்து அழித்துவிட்ட நாளைக் கொண்டாடும் கோரத்தை வெற்றி என்கிறது இலங்கை அரச பாசிசம். உலகின் அதிகார மையங்கள் அனைத்தும் இணைந்து அதிபயங்கரக் கொலையாளிகளான ராஜபக்ச குடும்பத்தை உருவாக்கிய இந்த நாள் மனித குலம் தோல்வியடைந்த நாள். இதே வேளை கொல்லப்பட்ட உறவினர்களுக்குக் கூட அஞ்சலிசெலுத்தும் அடிப்படை உரிமையை மறுக்கும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் வடக்கையும் கிழக்கையும் இராணுவக்களைகளை விதைத்திருந்தனர். ஒவ்வொரு மூலையிலும் இராணுவமும் அரச படைகளும் ஒரு போரின் முன்னறிவைப்பைப் போ…

    • 4 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.