ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
பிக்கறிங்-ஸ்காபரோ கிழக்கு தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய ஆளும் கன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கொர்நேலீ ச்சிசு கனடிய நாடாளுமன்றத்தில் சிறீலங்காவில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல் தனது குற்றத்தைப் பொறுப்பேற்க மறுப்பது மற்றும் ஐ.நா. இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை போன்றவை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நல்லிணக்கம் மீள்அபிவிருத்தி பொறுப்புக்கூறுதல் மற்றும் மனித உரிமைகளை மதித்தல் போன்ற விடயங்கள் போருக்குப் பின்னதாக சிறீலங்கா அரசால் முன்னெடுக்கப்படாமல் தொடர்ந்தும் மறுக்கப்படுவதாக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியான அறிக்கையை மேற்கோள் காட்டி கருத்துக்கூறிய கொர்நேலீ ச்சிசு சிறீலங்காவில் இடம்பெற்ற …
-
- 1 reply
- 268 views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிலாளி, நாகர்கோயில் மற்றும் முகமாலை பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவ முன்நகர்வுகளைத் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதென இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை. இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.30 வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.எ.சந்திரசிறியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரும், தென்னிலங்கையில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுமே அதிகளவான மதுபானங்களை அருந்துகின்றார்கள். அதைவிடுத்து மதுபாவனையில் யாழ்.மாவட்டம் முதலாம் இடத்தில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிந்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் வி.சிவயோகன் சுட்டிக்காட்டியுள்ளார். கண்பொல்லை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உயர்கல்வி கற்கும் 28 மாணவர்களுக்கு பண உதவி வழங்கலும் மற்றும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் கரவெட்டி சிறிசாரதா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினர். அவர் அங்கு…
-
- 2 replies
- 442 views
-
-
குமுதம் இவ்வார இதழிற்கு, நடேசன் அண்ணா வழங்கிய பேட்டி ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு எவ்விதமான நெருக்கடியையும் கொடுக்கமாட்டோம்" என்று கலைஞர் அறிவித்த நேரம் மீண்டும் தமிழர்கள் மீதான குண்டு வீச்சுகளை தீவிரப்படுத்தியுள்ளது இலங்கை இராணுவம். உண்மை நிலவரம் அறிய புலிகளின் செய்தித் தொடர்பாளர் நடேசனைத் தொடர்பு கொண்டோம். இலங்கை ராணுவம் முன்னேறி வரும் நிலையிலும் விடுதலைப்புலிகள் தரப்பில் முற்று முழுதாக இன்னும் யுத்தத்தில் குதிக்கவில்லையென்று சொல்லப்படுகிறது. இந்தப் பின்வாங்கலுக்கு என்ன காரணம்? "எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நாம் எவ்வாறான தியாகங்களையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். எமது இயக்கம் ஓர் விடுதலை இயக்கம். அரச படைகளுக்கு எதிராகப் போராடுகின்றோம…
-
- 12 replies
- 2.2k views
-
-
யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை தண்ணீர் போத்தலால் தாக்குவேன் என்று யாழ்.மேயர் யோகேஸ்வரி பற்குணராசா எச்சரித்துள்ளார். யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தின் போதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சபை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறிக்கையில், எழிலூர் என்ற கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விடயம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை. இது தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி, இந்த விடயம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை, இதனால் நாங்கள் ஒப்பமிட முடியாது என்று தெரிவித்தார். இதற்கு பதிலாளித்த மேயர் "நீங்கள் கையொப்பம் இடத்தேவையில்லை வாற கோபத்திற்கு தண்ணீர்போத்தலால் வாங்கப்போறிங்கள்" என்று சபை முன்னி…
-
- 0 replies
- 288 views
-
-
பூந்தோட்டம் நலன்புரி முகாமிலுள்ள குடும்பங்களுக்கு புளியங்குளத்தில் வீடுகள் அமைக்க காணி கையளிப்பு inShare வவுனியா – புளியங்குளத்தில் வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான 40 ஏக்கர் காணி, பூந்தோட்ட முகாமில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் நீண்டகாலமாக வசித்துவரும் மக்களின் நிலை தொடர்பில் மீண்டும் சிந்தியுங்கள் செயற்றிட்டத்தினூடாக நியூஸ்பெஸ்ட் அண்மையில் வெளிக்கொணர்ந்திருந்தது. நியூஸ்பெஸ்ட் மீண்டும் சிந்தியுங்கள் செயற்றிட்டத்தினை முன்னெடுப்பதற்காக கடந்த…
-
- 0 replies
- 300 views
-
-
டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலப்பகுதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டபோதிலும் தற்போது அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. http://athavannews.com/டெங்கு-மற்றும்-எலிக்-காய/
-
- 6 replies
- 533 views
-
-
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதம் தடம்புரண்டுள்ளது வீரகேசரி இணையம் 11/13/2008 10:12:02 AM - மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த சாகரிக்க எனப்படும் புகையிரதம் களுத்தறை கட்டுகுறுந்த பகுதியிலின்று காலை தடம்புரண்டுள்ளது. இதனால் பிரதான கரையோர புகையிரத சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 650 views
-
-
பல்கலைக்கழகத்திற்குள்ளும் விடுதிக்குள்ளும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் தேவை கருதியே இராணுவம் உள்நுழைந்ததாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இன்று பிறபகல் பலாலியில் அமைந்துள்ள யாழ். கட்டளைத் தளபதியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கட்டளைத்தளபதி ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்றது அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.onlineuthayan.com/News_More.php?id=886301670704188391
-
- 0 replies
- 312 views
-
-
வட மாகாணத்தில் சுமார் 35,000 பேர் வரை வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது வட மாகாணத்தில் 3200 நிறுவனங்கள் வரை இருப்பதாக குறிப்பிட்ட அவர் அதில் பத்தாயிரம் வரையோனோர் பணி புரிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மாகாணம் என்ற வகையில் வடக்கை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=161284&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 180 views
-
-
இலங்கை இனப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 429 views
-
-
பிரதேச செயலகத்தின் பிரதான பெயர்ப்பலகை உடைத்து நாசம் ஜவ்பர்கான் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதான பெயர்பகை விசமிகளால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டிருந்த இப்பெயர்பலகை கடந்த வாரமே புதிதாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை பெயர்பலகை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/9007
-
- 0 replies
- 374 views
-
-
நாவல் எழுதும் ஒரு நாவராசிரியர். இலங்கையின் இலக்கிய விருது பெற்றவரம், சர்வதேச எழுத்தாளர்கள் திட்டத்தின் உலகின் இளம் தேசிய வேட்பாளருமான அரசியல் பொருளாதாரம் மற்றும் கல்வி சீர்திருத்த கல்வி கற்றுவருபவருமான கொழும்பை சேர்ந்த திருச்சி வன்னியாராச்சி என்ற 22 வயதுடைய பெண்னே இந்த கட்டுரையை எழுதியுள்ளார். எனக்கு தெரிந்த உரிமை குறித்து நான் இதை எழுதுகின்றேன். நான் நன்மைகள் குறித்து நன்கு அறிவேன்.நான் சாதாரண சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்தவர். தாய்நாட்டை விட்டு சற்று வெளியில் சென்று பார்போமாயின்,சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை விவாதங்கள் பற்றி கேள்ளவிப்பட்டிருக்கேன் ஆனால் இது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள பயமாக உள்ளது. …
-
- 1 reply
- 553 views
-
-
எச்சில் இலையிலுள்ள எலும்புகளை ஏற்கோம் நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம் எண்ணுவதில்லை. அடுத்தநாள் மீண்டும் ஆதவன் உதிப்பான் என்ற நம்பிக்கை எம்முள் இருக்கும். அதேபோலத்தான் இதுவும் என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான தீர்வை, தன்னால் மட்டும்தான் தரமுடியும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் தெரிவித்திருந்தார். அப்படி அவரால் கூறமுடியாதெனக் கூறிய சி.வி, காரணம், தமிழர்களின் பிரச்சினை என்னவென்றே பிரதமருக்குத் தெரியாதென்றார். வேண்டுமானால், இவ்வளவுதான் த…
-
- 8 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் அதிகரித்துள்ளதாக திருகோணமலை-மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 524 views
-
-
நூருள் ஹுதா உமர். முன்னாள் பிரதியமைச்சரும், திகாமடுள்ள மாவட்ட வேட்பாளருமான வி. முரளிதரன் (கருணா அம்மான்) என்னுடைய அரசியல் இருப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்பதையும் தாண்டி என்னுடைய உயிருக்கும் இலக்கு வைத்துள்ளார். அது தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. விசாரணைகள் முடிவுற்றதும் முழு விபரங்களையும் பகிரங்கப்பட்டுவேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். இன்று(20) காலை நடைபெற்ற பொத்துவில் விவகாரம் குறித்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …
-
- 1 reply
- 521 views
-
-
தயவு செய்து youtube இல் காணொளிகளை தரப்படுத்துவதுடன் கருத்துகளையும் பதிந்து விடுங்கள்
-
- 0 replies
- 755 views
-
-
இனவாத, மதவாத நிலைமை மீண்டும் தோற்றம் - சோமவன்ச இனவாத மற்றும் மதவாத நிலைமையொன்று மீண்டும் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமையை அரசாங்கம் தனது ஆசிர்வாதமாகவே கருதி வருகின்றது என்று தெரிவித்த அவர், பல்வேறு விதமாக கோபதாபங்களை தோற்றுவிக்காமல் நீண்டகால நோக்குடன் செயற்படுமாறு இலங்கை வாழ் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். யார் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இடமளிக்காது எனவும் சோமவன்ச அமரசிங்க சுட்டிக்காட்டினார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 498 views
-
-
இந்திய உயர்மட்ட குழு இலங்கை வருகின்றது இந்திய மத்தியரசின் உயர் மட்டக் குழுவினர் இவ்வார இறுதியில் இலங்கைக்கு வருகின்றனர். அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வரும் இந்த உயர் மட்டக் குழுவினர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். குறிப்பாக இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவில் தீர்மானிக்கப்பட்ட உத்தேச பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் (எட்கா) தொடர்பாக இந்திய மத்தியரசின் உயர் மட்ட குழுவினர் அவதானம் செலுத்த உள்ளனர். உள் நாட்டில் தேசிய அரசியலில் சூடுப்பிடித்துள்ள எட்கா ஒப்பந்தத்தை நிறை…
-
- 0 replies
- 212 views
-
-
வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்.! வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார். வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. தற்போதுள்ள இராணுவ முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அங்குள்ள முகாம்களை அகற்றுகின்ற எந்த நோக்கமும் எமக்கு கிடையாது. வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுவதை வைத்துக் கொண்டு, மக்களின் செயற்பாடுகளில் இராணுவம் தலையிடும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஜனாதிபதி கோட்ட…
-
- 5 replies
- 692 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக, அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றத்தவறியதால், எதிர்வரும் 08 ஆம் திகதி அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என வாக்குறுதி அளித்து தமிழ் மக்களிடம் வாக்குகளை பெற்ற போதிலும், இன்று வரை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. அதேவேளை, கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை நான் நம்புகின்றேன். நீங்கள் எங்களை நம்புங்கள் என்று வாக்குறுதி அளித்து உண்ணாவிரதத்தினை நிறைவு செய்யுமாறு வலியுறுத்…
-
- 1 reply
- 408 views
-
-
வடக்கு மக்கள் எமக்கு வாக்களிக்காவிட்டாலும் அப்பகுதிகளுக்கும் அபிவிருத்திகளை தொடருவோம்- மஹிந்த by : Yuganthini வடக்கு மாகாண மக்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, அரசாங்கம் அந்த மாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளது. இனிமேல் அந்தக்கட்சி ஒன்று சேர்வதற்கான வாய்ப்பே கிடையாது. யாராவது இந்தக் கட்சி இணையும் என்று நினைத்தால், அது நிச்சயமாக பகல் கனவாகத்…
-
- 0 replies
- 203 views
-
-
அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் பின்வாங்கிச் செயற்படுவது துரதிஸ்டவசமானது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளைய உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று யாழ். பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து வௌியிடுகையிலேயே சித்தார்த்தன் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில், அதனைச் செய்வதாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு உறுதிய…
-
- 2 replies
- 303 views
-
-
இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. சுருக்கமாக கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். நாம் மகாவம்சத்தை நம்பினால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த உண்மை வரலாற்றை பௌத்த குருமார் உட்பட எவராவது மறுப்பார்களா? என கேள்வியும் எழுப்பியுள்ளார். தற்போது ஆலயங்கள் பௌத்த விகாரை என பௌத்த தோர்கள் தெரிவித்து வருவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டனம் தெரிவித்து இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இலங்கையின்…
-
- 4 replies
- 1k views
-
-
கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுப்பு வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கமல் ரத்வத்தே மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்குக் கொண்டு வர முடியாத நிலைமை காணப்படுகிறது. இதன் காரணமாக இறுதிச்சட ங்குகளை அந்த அந்த நாடுகளில…
-
- 0 replies
- 321 views
-