ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
"சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எம்மை பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்கவேண்டும். இது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கமான பதிலை ஜனாதிபதி எமக்கு வழங்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் நாம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவைத் தழுவுவோம். இதுதான் எமக்கு இறுதியாக எஞ்சியுள்ள ஒரே வழி. எமது சாவுக்கு ஜனாதிபதியே முழுப் பொறுப்பு. இறந்த பின்னர் எமது உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கின்றோம்.'' - இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்தனர் என்று அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் கடந்…
-
- 0 replies
- 1.4k views
-
-
மொன்றியல் காவற்துறை உயர் அதிகாரிகளும் றோயல் கனடிய காவற்துறை உயர் அதிகாரிகளும் இணைந்து மொன்றியல் தமிழ் சமூகத்தினருடன் விசேட சந்திப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2009, 04:51.09 PM GMT +05:30 ] 24.01.2009, சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில், மொன்றியல் இல. 6767 கோடினெக்ஸ் இல் அமைந்துள்ள சமூக மண்டபத்தில் மொன்றியல் மாநகர மற்றும் றோயல் கனடிய காவற்துறை உயர் அதிகாரிகள் மொன்றியல் தமிழ் சமூகத்தினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். இந்த கலந்துரையாடல் மூலம் தமிழ் சமூகத்தோடு நல்லுறவை ஏற்படுத்துவதும் சில சட்டங்கள் பற்றிய விளக்கங்ளை அளிப்பதுமாகும். இதன்போது தமிழர் தரப்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்ட அதேவேளை ஆதங்கங்களும் வெளிப்படுத்தப்பட்டன. இச்சந்திப்பு ஆரம்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் _ வீரகேசரி இணையம் 2/28/2012 12:19:53 PM இலங்கைக்கு எதிரான ஜெனீவாவின் தீர்மானங்களுக்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் அமெரிக்காவை போன்று இந்தியா துரோகத்தனமாக செயற்படாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கையரசு இடமளிக்காது. என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். அரசாங்கத்தை பாதுகாக்க பொது மக்கள் நாடளாவிய ரீதியில் போராடி வருகின்றனர். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சூழ்…
-
- 3 replies
- 1.4k views
-
-
7 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் !! 7 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் !! 7 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளனர். அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய ஆளுநர்கள் அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். மேல் மாகாணத்துக்கு ஹேமகுமார நாணயக்காரவும், வட மேல் மாகாணத்துக்கு – கே.சி. லோகேஸ்வரனும், சப்ரகமுவ மாகாணத்துக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
வட-கிழக்கை இணைப்பதற்கான எதிர்ப்பும் இனப்பிரச்சினைத்தீர்வும் “வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது காலாவதியாகிப் போன ஒன்று. இனிமேல் அதுபற்றிப் பேசுவதற்கே இடமில்லை.” என்று மகிந்த ராஜபக்ஸ கூறியிருக்கிறார். தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியருடனான சந்திப்பின் போதே அவர் இதை வெளி;ப்படையாகக் கூறியிருக்கிறார். “வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. அது காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக் கொண்டு வராதீர்கள். கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்படியிருக்க அவர்களின் விருப்பை மீறி நாம் வடக்கு-கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது. ஒரு பிரதேசத்துக்கு ஒ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வியாழன் 28-06-2007 04:56 மணி தமிழீழம் [சிறீதரன்] வான் படையினரின் பயிற்சி வானூர்தி விபத்தில் சேதம் இரத்மலானைப் பகுதியில் சிறீலங்கா வான் படைகளுக்குச் சொந்தமான பயிற்சி வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்ட வானூர்த்தியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது சிறீலங்கா பயிற்சி வானூர்தி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி சேதமடைந்த வானூர்த்தியை சீர்செய்துவிட முடியும் என கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவ் விபத்தையடுத்து நேற்று மாலைவரை வான்படைக்கு சொந்தமான வானூர்திகள் எதுவும் பற…
-
- 1 reply
- 1.4k views
-
-
தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி வழிபாட்டு நிகழ்வுகள் இன்று புதன்கிழமை(22) அலரி மாளிகையில் இடம்பெற்றன. http://tamil.dailymirror.lk/--main/130637-2014-10-22-14-19-27.html
-
- 11 replies
- 1.4k views
-
-
அரசாங்கத்தில் நாங்கள் இணைவதா? தலை முடியைக்கூட உங்களால் எடுக்க முடியாது: ஜெயராஜூக்கு த.தே.கூ. கடும் கண்டனம் [வெள்ளிக்கிழமை, 6 யூலை 2007, 14:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் இணையவே மாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலை முடியைக்கூட உங்களால் எடுக்க முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் பேசியதாவது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைய உள்ளதாக அமைச்சர் ஜ…
-
- 1 reply
- 1.4k views
-
-
எகிப்தில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது [13 - February - 2008] எகிப்தில் கொலை செய்யப்பட்ட எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த வதுகே வஜிர புஸ்பகுமார என்ற 31 வயது நபரின் சடலம் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2007 டிசம்பர் 12 ஆம் திகதி எகிப்தில் உள்ள அவரது அறையில் வைத்து இவர் கொலை செய்யப்பட்டார். இவரிடமிருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்தவர்களே இவரைக் கொலை செய்துள்ளனர். இக்கொலை தொடர்பாக அங்கு தொழில்புரியும் இலங்கையர் ஒருவர் உட்பட இரு எகிப்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவரது சடலம் விமானமூலம் கொண்டுவரப்பட்டு மரண விசாரணைக்காக நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது. சட்ட வைத்திய அதிகாரி…
-
- 0 replies
- 1.4k views
-
-
யுத்தம் தொடங்கினால் "விடுதலைப் புலிகளின் இலக்கு யாழ்ப்பாணம்": ரொய்ட்டர்ஸ் [புதன்கிழமை, 11 சனவரி 2006, 16:33 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் மீண்டும் யுத்தம் தொடங்கினால் யாழ்ப்பாணம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் கூறுகிறது. ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்தின் ஊடகவியாலாளர் பீற்றர் ஆப்ஸ் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை: இலங்கையின் இரு தசாப்த கால யுத்தம் மீண்டும் கொழுந்து விட்டெரிந்தால் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இராணுவ விநியோகப் பாதைகள் மீது கொரில்லாத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தின் மையமான பகுதிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
இனப் பிரச்சினைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்திய ஏகாதிபத்தியம் என்று குற்றஞ்சாட்டினான் தமிழகத்தின் நெருப்புப் பொறி முத்துக்குமார். இந்திய அரசும் காங்கிரஸும் சாதித்தது கள்ள மௌனம் என்றால், தி.மு.க. சாதித்தது என்ன மௌனம்? கலைஞருக்கே வெளிச்சம்.தி.மு.க.காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, கலைஞரின் பேனாவுக்குக் கிடைத்த வெற்றி என்று புளகாங்கிதமடைகிறார், வெற்றி வீரர் (!) ப.சிதம்பரம் ஈழத்தமிழர்களின் துயரத்துக்கு முடிவுகட்டுவதில்மட்டும் கலைஞரின் பேனா தோல்வியடைந்தது எப்படி? மன்மோகனுக்கு மனு எழுதி மனு எழுதி மனிதருக்கு முதுகுவலி வந்ததுதான் …
-
- 2 replies
- 1.4k views
-
-
நார்வேயைத் தோற்கடித்த மேற்குலக இராசதந்திரம் - ஜெயராஜ் போர் நிறுத்த உடன்பாட்டின் எதிர் காலம் பெரும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இன்று யுத்த நிறுத்தம் ஒன்று அமுலில் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு ஓர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான யுத்தம் நடந்து கொண்டிருக் கின்றது என்பதே கள யதார்த்த மாகும். ஒருபுறத்தில் யுத்த நிறுத்த மீறலானது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது போன்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக, மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை மற்றும் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீதான தாக்குதல் என்ற ரீதியில் சிறிலங்கா விமானப்படை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதேசமயம், நார்வேத் தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல…
-
- 1 reply
- 1.4k views
-
-
யுத்தத்தில் வெளிநாட்டு உதவிகளை இலங்கை ஒருபோதும் பெறவில்லை: ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு ஆலோசனைகளை நாடவோ வெளிநாட்டு துருப்புகளை ஈடுபடுத்தவோ இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறியுள்ளார். எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு வெளிநாட்டு ஆலோசனைகள் அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதி கூறினார். எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், புனரமைப்பு மற்றும் நல்லிணக்க செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் வெளிநாட்டு தலையீடுகளோ அல்லது அவர்களின் அறிவுறுத்தல்களோ இந்நாட்டிற்கு அவசியமில்லை என அவர் கூறினார். எமது வீரம்மிக்க படையினரால் மாத்திரம் உள்நாட்டில் வகுக்கப்பட்ட இராணுவ தந்திரோபாயங்களின்படி இந்த யுத்தத்தில் போரிட்டு…
-
- 14 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலித் தலைவர்களை இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேற்ற அமெரிக்க முயற்சித்துள்ளது தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களை இரகசியமான முறையில் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகை முதற்பக்க செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் புலித் தலைவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்கும் முனைப்புக்களில் அமெரிக்கா தீவிரம் காட்டி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 2 replies
- 1.4k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக ஒருசில லண்டன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தமை முட்டாள் தனமான ஒரு விடயம் எனவும் இதற்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர், அரச ஊதுகுழலும் கட்சிக்கு துரோகம் விளைவித்தவருமாகிய பிரபா கணேஷன் தெரிவித்துள்ளார். கொழும்பில், சற்றுமுன்பு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த ஊதுகுழல் பிரபா கணேசன் மஹிந்த ராஜபக்ஷ்வினை உரையாற்றவிடாது, புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருசிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முட்டாள் தனமானதொரு விடயம். இதனால் இலங்கையில் ஏதும் நடந்துவிடப்போவதில்லை. இந்த போராட்டத்தினால் ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஷ்விற்கு வெற…
-
- 10 replies
- 1.4k views
-
-
கூட்டமைப்புக்கு வந்த சோதனை? நிலாந்தன் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும் ஏகபோகத்திற்கு இப்பொழுது சோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பும் தற்பொழுது சமூகத்தின் ஏனைய மட்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளன. அண்மைய ஆண்டுகளில் இணையப் பரப்பில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கூட்டமைப்புக்கு எதிரான கேள்விகளும் விமர்சனங்களும் அதிகரித்து வந்தன. இப்பொழுது அந்த அதிருப்தியானது மெய்நிகர் யதார்த்த பரப்பையும் தாண்டி ஒரு பௌதீக யதார்த்தமாக பரவிவருகிறது. யாழ்ப்பாணத்தின் பத்திரிகைகள் சிலவற்றின் ஆசிரியர் தலையங்கங்களும் அதைப் பிரதிபலிக்கின்றன. இவ்வாறா…
-
- 18 replies
- 1.4k views
-
-
புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து இணைய தளங்கள் குறித்து விசாரணை ஆரம்பம் திங்கட்கிழமை, 20 டிசம்பர் 2010 04:38 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான முறையில் இயங்கி வரும் ஐந்து இணைய தளங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர் புலி ஆதரவாளர்களை திருப்திபடுத்தும் வகையிலும், பாதுகாப்பு படையினருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வரும் ஐந்து இணைய தளங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சினால் இந்த விசாரணைங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து தமிழ்,சிங்களம்,மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரசுரிக்கப்படும் குறித்த இ…
-
- 6 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி, பன்னங்கடி, இரணைமடு வாய்க்கால் பகுதியில் யாழ் இளைஞர்களுக்கும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரணைமடு வாய்க்கால் பகுதிக்குச் சென்று மது அருந்துதல், அப்பகுதியால் செல்லும் பெண்களிடத்தில் ஆபாசமாக பேசுதல். பெண்களிடத்தில் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தல் என கிராம மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்த மக்கள் இன்று யாழ் இளைஞர்களிடம் இவ்வாறாக நடந்து கொள்ள வேண்டாம் எனவும் வாய்க்கால் பகுதியில் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர். அதற்கு மறுத்த இளைஞர்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரு வீதி விபத்து சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜர் ஆகாத அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை கொடுத்துள்ளதாம். நீயுஸ் ஃபர்ஸ்டை மேற்கோள் காட்டி ஶ்ரீலங்கா டிவீட் செய்தி.
-
-
- 18 replies
- 1.4k views
- 1 follower
-
-
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே இன்று ராமேஸ்வரம் மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை 262 படகுகளில் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் வந்தனர். தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த கடற்படையினர், குயின்ராஜ் என்பவருக்குச் சொந்தமான படகில், இருந்த அக்காள் மடம் கிறிஸ்டி (30), அந்தோணி ராயப்பன், மரியகுவிட்டன், மரியபிச்சை ஆகியோரை துப்பாக்கி முனையில், நிறுத்தினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்களை கையை உயர்த்தியபடி நிற்க வைத்த சிங்களப் படையினர் பின்னர் த…
-
- 4 replies
- 1.4k views
-
-
கதவுகளைத் திறந்து வைத்திருப்பது மாத்திரமே எனது பொறுப்பு.!! யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது கட்சியில் இருந்து எவரையும் வௌியில் அனுப்பவில்லை எனவும் பிரிந்து சென்றவர்கள் ஒற்றுமையாக மீண்டும் இணைந்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்காலம் முடியும் வரை கூட்டமைப்பில் இருந்துவிட்டு, அடுத்தநாள் புதுக்கட்சி ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார். கஜேந்திரகுமாரும் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகக் குறிப்பிட்ட சுமந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந…
-
- 9 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரி ஒருவரின் பெயரில் மாத்தறை - தெனியாய பிரதேசத்தில் முழுமையான வசதிகளுடன் கூடிய சொகுசு மாளிகையொன்று நிர்மாணிப்பதற்காகவும், அந்தக் காணியை கொள்வனவு செய்வதற்காகவும் அரசாங்கம் கோடிக்கணக்கான பணத்தையும், வளங்களையும் வழங்கியமை தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்த மாளிகை நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னர், 50 ஏக்கர் தேயிலைத் தோட்டமொன்று கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இந்தக் காணிக்குச் செல்லும் வீதியை அமைப்பதற்காக மாத்திரம் 95 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னி பெரும் மனித அவலங்களை எதிர்நோக்குகிறது [ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007, 16:28 ஈழம்] [க.திருக்குமார்] வன்னிப்பகுதிக்கான போக்குவரத்துப் பாதையான ஓமந்தை மற்றும் உயிலங்குளம் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளதனால் உணவுப் பற்றக்குறை உட்பட பெரும் மனித அவலங்களை வன்னிப்பகுதி எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு தரப்புக்களிடம் இருந்தும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் பெறப்படும் வரையில் சோதனைச் சாவடிகளில் தமது அதிகாரிகளை நியமிக்க முடியாது என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தினால் வன்னிப் பகுதிக்கான உணவு, மருந்து விநியோகங்கள் தடைப்பட்டுள்ளன. முகமாலை பாதை மூடப்பட்ட பின்னர் வன்னிக்கான பிரதான வழங்கல் பாதையாக ஓமந்தைப் பாதையே இருந்து வந்துள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
என்னைப் பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்கள் கூத்தாடும்; யாழில் சனாதிபதி! என்னை பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்களுக்கதான் பலம் கூடும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் இவ்வாறு கருத்தை முன்வைத்துள்ளார். யாழ் வரும் போது சில சம்பவம், சில போராட்டம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நான் பல வருடம் அரசில் செய்து வருகிறேன். எனக்கு நன்றாக தெரியும்.என்னை ஜனாதிபதியாக எல்லாரும் தெரிவு செய்தீர்கள். பிரச்சனை தீர்க்க தான் ஜனாதிபதி ஆக்கினார்கள்.தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏழ்மை இல்லாமல் செய்ய வேண்டும். அத்தனை பேரும் என்னு…
-
- 13 replies
- 1.4k views
-