ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143603 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுவிஸர்லாந்து நாட்டிற்கான பயணத்தினை மேற்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸில் இருந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு சுவிஸ் வருமாறு சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்திருப்பதாக கொழும்பை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதற்கு என்ன பதில் வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக பிரித்தானியா செல்வதாகத் தெரிவித்தே அவர் பயணித்ததாகவும் ஆனாலும் சுவிஸ் சென்ற விடயம் தமக்குத் தெரியாது என்று கூட்டமைப்பின் இள நிலை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவ…
-
- 5 replies
- 1.4k views
-
-
மத்திய அரசின் ஆதரவை திரும்ப பெற்றால் இலங்கை பிரச்சனை தீர்ந்து விடுமா : கலைஞர் இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று வியாழக்கிழமை பிரதமரை சந்திப்பதாக சட்ட மன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் இன்று நடைபெறும் பிரதமர் சந்திப்பிற்காக நேற்று புதன்கிழமை முதல்வர் கருணாநிதியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ், மற்றும் கி.வீரமணி ஆகியோரும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். விமானம் மூலம் டெல்லிக்கு வந்த முதல்வர்,விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு புதிய இல்லமான சாணக்கியாபுரி வந்தார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கேள்வி: இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி அளிக்கி…
-
- 4 replies
- 1.4k views
-
-
‘இது, மட்டுமே... மிஞ்சியுள்ளது’ நாடாளுமன்ற வளாகத்தில்... "உள்ளாடைப்" போராட்டம்! ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹொரா கோ கம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ என்ற கோஷங்களோடும் பதாதைகளோடும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியில் ஆண்கள், பெண்களது உள்ளாடைகள்... தொங்கவிடப்பட்டு, மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1280464
-
- 17 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் அமெரிக்க நாட்டவர் ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க நாட்டவர் ஒருவர் சுற்றுப்பயணம் வந்துள்ளார். அவர் நேற்று மதியம் கோண்டாவில் பகுதியில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர் அவரிடம் இருந்து 300 டொலரைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. அதையடுத்து அந்த அமெரிக்க நாட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டை அடுத்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள…
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா? யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது பற்றி பல்கலைக்கழக துறை சார்ந்த அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் ஆய்வுரீதியாக பரிசோதனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்தி மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என கலாநிதி ஆறுதிருமுருகன் ஊடகங்கள் ஊடாக கேரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ் குடாநாடு மட்டுமன்றி வடபகுதி எங்கும் போத்தல் தண்ணீரின் ஆதிக்கம் வலுப்பெற்று மக்களின் பணம் வீண்விரயமாகிறது. அது மட்டுமன்றி போத்தல் தண்ணீருக்கான மக்களின் பணம் தென்னிலங்கை செல்கிறது. ஏழை வீட்டின் மரண சடங்கு முதல் தண்ணீர் போத்தலால் பணம் மேலதிக செலவாகிறது. …
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆபிரிக்காவைச் சேர்ந்த சோமாலியா கடற்பகுதியில் இந்தியக் கடற்படை வீரசாகசம் புரிந்துள்ளது. இந்தியக் கடற்படையில் உள்ள ஐ.என்.எஸ். தபார் எனும் போர்க்கப்பல் சோமாலியா கடற்கொள்ளையரின் தாய்க்கப்பலை சுட்டு மூழ்கடித்துள்ளது. சோமாலியாவை ஒட்டியுள்ள ஏடன் கடல் பகுதியில் கடற்கொள்ளை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரின் சரக்கும் கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. மிகப்பெரிய தொகைகளை பெற்றுக்கொண்ட பிறகே பல கப்பல்களை கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.இந்த நிலையில் இந்திய கப்பல்களும் பிறநாட்டுக்கப்பல்களில் வேலைப்பார்த்த இந்திய மாலுமிகளும் கூட கடற்கொள்ளையரின் தாக்குதலுக்குத் தப்பவில்லை.…
-
- 0 replies
- 1.4k views
-
-
யுத்தம் ஒரு வருடத்திற்குள் முடிவடைந்துவிடுமென இராணுவ தளபதி சரத் பொன்சேகா கருதுகிறார். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண லேவண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் தேசிய தலைமைத்துவம் உள்ளது. எமக்கு வழங்கபட்ட இலக்கு பயங்கரவாதத்தை அழிப்பதாகும் என்றும் அவர் கூறியுள்ளார். கனடாவின் 'நாஷனல் போஸ்ட்' பத்திரிகையாளர் ஸ்ரெவார்ட் பெல்லிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியிலேயே இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார். 'இலங்கையின் உட்புறம் யுத்தத்துக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வு' எனும் தலைப்பில் ஸ்;ரெவாட் பெல் போர் முன்னரங்க நிலைகளுக்கு தான் சென்று வந்த அனுபவங்களையும் பேட்டிகளையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய ஆறு பகுதி தொடர் கட்டுரையின் 5 ஆவது அங்கத்தில் சரத் பொன்சேகாவின் பேட்டியும் இடம் பெற்றுள்ளது. …
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள நினைவுத்தூபி ஒன்று இடிக்கப்படுகின்றது. புத்தூர் வாதரவத்தை வீதியில் புத்தூர் தகரம்பிள்ளையார் ஆலயத்திற்கு வடக்கு பக்கத்தில் வீதியின் அருகே அமைந்துள்ள நினைவுத்தூபி ஒன்று கடந்த சில நாட்களாக இடிக்கப்பட்டுள்ளது. இந்திய அமைதிப்படையினர் புத்தூர் கிழக்கு பகுதியில் மேற்கொண்ட படுகொலையில் 09 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அம்மக்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அப்பகுதி மக்களினால் அமைக்கப்பட்டிருந்தது. இத்தூபி கடந்த 2002ம் ஆண்டில் செம்மையாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அந்த மக்கள் தூபி இன்று இராணுவத்தினரால் இடிக்கப்பட்டு வருகின்றது. இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் கட்டிட நிர்மாண பணிகளுக்கு தேவையான கற்களை பெறுவதற்காக இத்தூபி இடிக…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐ. நாவால் விடையளிக்காத கேள்விகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் அஞ்சலி நிகழ்வும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை (25-11-2018) பிற்பகல் -02.30 மணி முதல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் அமைந்துள்ள வை.எம்.சி மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடந்த கால உள்நாட்டுப் போரில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது கனடியத் தமிழர் தேசிய பேரவையின் மண்வாசனை அமைப்பின் நிதிப் பங்களிப்பில் தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சே…
-
- 2 replies
- 1.4k views
-
-
மீண்டும் - மூன்றே நிமிடங்களை ஒதுக்கி சிறிலங்காவுக்கான வரிச்சலுகையை இரத்துச்செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைக் கோருவோம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் (Link) இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் பெயரையும், முகவரியையும் கொடுக்கப்பட்ட இடங்களில் நிரப்புங்கள். பின்பு,"Send E-mail"-ஐ அழுத்தினால் உங்கள் கடிதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையரை உடனடியாகச் சென்றடையும். http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=31 நீங்கள் அனுப்பகின்ற இந்த கடிதத்தின் தமிழ் மொழியாக்கம் கீழே தரப்பட்டிருக்கின்றது. நன்றி அன்புடையீர் உரிய அதிகாரியின் பெயர் இங்கு சேர்க்கப்படும் சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களைத் தங்களது கவனத்திற்கு கொ…
-
- 0 replies
- 1.4k views
-
-
திங்கள் 03-03-2008 19:47 மணி தமிழீழம் [மயூரன்] ஒட்டுசுட்டானில் வான்வழித் தாக்குதல்கள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறீலங்கா வான்படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று திங்கட்கிழமை மதியம் 12.45 மணியளவில் ஒட்டுசுட்டான் குளமுறிப்பு பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளன. குண்டு வீச்சில் ஏற்பட்ட சேதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.4k views
-
-
ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் உறுப்பினர்கள் 200 பேருக்குக் கொரியாவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரியாவில் வேலைக்குச் செல்வதற்கு முன்னர், ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் 200 பேருக்கும் கொரிய மொழியைப் பயிற்றுவிக்கும் நிலையமொன்றை கிழக்கு மாகாணசபை கடந்த வாரம் மட்டக்களப்பில் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 500 பேருக்கு கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவிருப்ப
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறீலங்காவிற்கான நிதிநிறுத்தம் தொடர்பில் வெளியான தகவல் குறித்து ஜேர்மனிய தூதரகம் விளக்கம். சிறீலங்காவிற்கு நிதியுதவிகள் நிறுத்தம் தொடர்பில் வெளியான செய்திகள் தவறானவை என கொழும்பில் உள்ள ஜேர்மனிய தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் போர்நிறுத்த மீறல்கள் தொடர்பாகவும், ஏனைய இடையூறுகள் காரணமாகவும், கடந்த ஆண்டு ஜேர்மனியின் அனுசரணையின் கீழ் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்க முடியவில்லை எனவும் இதனால் மேலதிக நிதியொதிக்கீடுகளை மேற்கொள்வதை இடைநிறுத்தியுள்ளதாகவும் அக்குறிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால உதவிகள் கடந்த காலங்களை போலல்லாது புதிய அணுகுமுறையின் கீழ் வழங்கப்படும் என்றும் இதற்கமைய வடக்குகிழக்கில் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இராணுவ முகாங்களில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு சரமாரியான எறிகணை தாக்குதலைமேற்கொண்டுள்ளனர். பதிலுக்கு விடுதலை புலிகளும் மோட்டார் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மட்டக்களப்பு வலயிறவு விமான படை முகாம் கடும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத் தாக்குதலால் படையினரிற்கு பலத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பதிவு.com
-
- 3 replies
- 1.4k views
-
-
வடக்கிலுள்ள அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுகேகொடை ஆனந்த சமரகோன் வெளிப்புற நாடக சங்கத்தின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.hirunews.lk/tamil/224273/ஜனாதிபதி-வேட்பாளர்-தொடர்பில்-ஞானசார-தேரர்-கருத்து சர்வதேச சக்திகள் இலங்கையின் கழுத்தை நெரிக்கின்றன- குணவங்ச தேரர் சர்வதேச சக்திகள் இலங்கையின் கழுத்தை நெரிப்பதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். அநாகரிக்க தர்மபாலவின் 155 வது ஜனன தின நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெர…
-
- 1 reply
- 1.4k views
-
-
முள்ளிவாய்க்கால் முடிவல்ல! புதியதோர் ஆரம்பம்! தமிழீPழத் தனியரசே இனஅழிப்புக்கான பரிகாரநீதி! - பிரதமர் வி.உருத்திரகுமாரன் [Monday 2015-05-18 17:00] முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக இன அழிப்புக்கெதிரான சட்டத்தின்கீழ் சுதந்திரமும் இறையாண்மையுமுள்ள தமிழீழத் தனியரசே முழுமையான தீர்வாக அமையுமென நாம் திடமாக நம்புகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மே18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். சனநாயக வழியில் இத் தீர்வினை எட்டிக் கொள்ள ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதோடு சுயநிர்ணய உரிமையின்…
-
- 11 replies
- 1.4k views
-
-
முதல்வரின் பிள்ளையொன்று சிங்களப்படையினரால் கொல்லப்பட்டிருந்தால் இப்படித்தான் அமைதி காத்திருப்பீர்களா? * இவ் விடயம் 14. 07. 2010, (புதன்), தமிழீழ நேரம் 20:37க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி நல்ல சினிமா இயக்குனராக அறியப்பட்ட செந்தமிழன் சீமான், பெரியாரின் சுயமரியாதை பகுத்தறிவுப்பாசறையில் வளர்ந்த கண்ணியமான இளைஞரானதால் தமிழர்களின் அடக்குமுறையை சகிக்க முடியாமல். தன்சுயமான சொகுசு வாழ்வைத்துறந்து, ஏழை எளியவர்களுக்கு குரல் கொடுக்கும். “நாம்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைபாளராகவும் இருந்து வருகிறார். நேற்றய முந்தினம் சீமான் தமிழக அரசினால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சீமா…
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=4][size=5]நெருப்பு சுடும் எண்டு கைய விட்டுப் பார்த்தா தெரியவேணும் நெருப்புக்குள் கையை வைத்து தான் சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை எப்படி நியாயம் என்று சொல்ல முடியும். அது பிழை தான் அதற்காக யாரும் மன்னிப்பு கேட்க முடியாது. அத்துடன் மன்னிப்பை ஏன் கோர வேண்டும் [/size]என டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக தெரிவித்தார். வவுனியா சிறையில் நடைபெற்ற கலவரத்தையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்சன் ஆகியோர் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நானும் ஒரு முன்னாள் அரசியல் கைதி தான். நானும் MP தான்.…
-
- 6 replies
- 1.4k views
-
-
-
உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் நாடு பேரழிவையே சந்திக்க நேரிடுமென எச்சரித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, யுத்த இழப்புகள் பற்றிய புள்ளிவிபரங்களை அரசு மூடி மறைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சமாதானப் பேச்சுகளை அரசு முறித்துக் கொண்டதன் பிரதி பலன், இரண்டரை வருடங்களில் படைத்தரப்பிலிருந்து 9 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும் ..............., முகமாலைத் தாக்குதலை நடத்தினர் . அதன் பயன் பெருந்தொகையான படையினரை இழக்க வேண்டியேற்பட்டது. சுமார் 200 படைவீரர்கள் பலியானதாகவும் 600 பேரளவில் காயமடைந்ததாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ............... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/…
-
- 1 reply
- 1.4k views
-
-
எருமைக்கும் காளைக்கும் இடையேயான பேச்சுவார்த்தைதான் சு.க.-ஐ.தே.க. பேச்சு: சோமவன்ச அமரசிங்க சாடல் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தை எருமைக்கும் காளைக்கும் இடையேயான பேச்சுகளைப் போன்றது என்று அரசாங்கத்தை ஆதரிக்கும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சாடியுள்ளார். மகிந்தவின் அரசாங்கத்தை ஆதரிக்க தமது கட்சி முன்வைத்துள்ள 20 அம்ச திட்டம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சியை கொழும்பில் ஜே.வி.பி. நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பேசியதாவது: மகிந்த சிந்தனைக்கு எதிராக மகிந்த ராஜபக்ச செயற்பட்டால் அரச தலைவர் தேர்தலைச் சந்திக்க நேரிடும். …
-
- 3 replies
- 1.4k views
-
-
கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பின்போது கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசனின் ஏற்பாட்டில் கன்னியா வென்னீரூற்று பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்திருந்தார். இதற்கென நேற்று 11 மணிக்கு விசேட கூட்டத்தையும் ஜனாதிபதி ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார். …
-
- 9 replies
- 1.4k views
-
-
புதிய அரசியலமைப்பை வழங்குவதாக கூறி மக்கள் ஆணையை பெற்ற இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்து பாராளுமன்றத்தில் பேசும்போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு பேசிய அவர் மேலும் கூறியதாவது; போர் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்தும் இன்னும் தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வு இல்லை.தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்.சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது. சர்வதேச சமூகம் அரசியல் , இராஜதந்திர , பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்க வேண்டும்.புலிகளை தோற்கடிக்க உதவியது சர்வதேச சமூகம். இத…
-
- 10 replies
- 1.4k views
-
-
''மகிந்த அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் எவ்வளவு பாதிப்பை எதிர் தரப்புக்கு ஏற்படுத்தினும் இலங்கை தீவில் வன்முறைக்கு இது முற்றுப்புள்ளி வைக்காது'' என்று தன் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ள ஜப்பானின் முன்னணி சுதந்திர ஆங்கில நாளேடான ஜப்பான் டைம்ஸ் மகிந்தவின் வெற்றிகளை ஆய்வு செய்கிறது. ''பழைமை வாதியான ராஜபக்ச ஆட்சியை கைப்பற்றியவுடன் போர் நிறுத்த உடன்பாடை கைவிட்டதுடன் அனைத்துலகின் பாரிய எதிப்பு குரலுக்கு மத்தியில் முடிவான வெற்றிக்கு தன்னை அற்பணித்தார். 1.6 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பாதுகாப்பு செலவினத்தை அதிகரித்த அவர் இராணுவ ஆட்சேர்ப்பை 40மூ ஆல் அதிகரித்தார்.'' ''போரின் போது தமிழ் மக்களின் உயிர் இழப்புகளை கணக்கெடுக்காத அவர் ஊடகங்கள் மீதான …
-
- 1 reply
- 1.4k views
-