ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142899 topics in this forum
-
(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான பதியுதீன் மொஹமட் ரியாஜ்ஜின் மக்கள் வங்கியில் உள்ள கணக்குக்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள சுமார் நூறு கோடி ரூபா தொடர்பில் சி.ஐ.டி.எனும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்கிஸை பிரதான நீதவான் உதேஷ் ரணதுங்கவுக்கு விசாரணையாளர்கள் இன்று அறிவித்தனர். குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷா இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்லியூ. திலக்கரத்ன ஆகியோருக்கு, கடந்த பெப்ரவரி …
-
- 13 replies
- 1.3k views
-
-
தினக்குரல் ஊழியரான கு.கஜன் (26வயது) என்பவர் தெமட்டகொட வீட்டில் வைத்து 11.01.2007 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் இவருடன் இணைந்திருந்த கல்வியியல் கல்லூரி மாணவனும் கைது.
-
- 0 replies
- 1.3k views
-
-
மகிந்தவுக்கு எதிரான பிரச்சாரத்தில் சந்திரிக்கா. Written by Pandaravanniyan - Aug 13, 2007 at 08:35 AM முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொழும்பு திரும்பியுள்ள நிலையில், மங்கள - ரணில் அணியுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று கொழும்பு திரும்பிய உடனடியாகவே மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் பேசிய சந்திரிகா இன்று திங்கட்கிழமை அவரை நேரில்சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். ரணில் - மங்கள அணியினரின் அடுத்த கட்ட 'மக்கள் அலை' ஆர்ப்பாடட்டப் பேரணி அத்தனகலையில் நடைபெறும் எனவும், அதில் சந்திரிகா குமாரதுங்க கலந்துகொள்ளலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெதிவித்தன. தன்னுடைய மகளான யசோதாவின்…
-
- 2 replies
- 1.3k views
-
-
மன்னார் பாலைக்குழியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் இன்று கடும் மோதல் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி புதுச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இயக்குனர் சீமானின் காவலை ஏப்ரல் 16ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கூறி இயக்குனர் சீமானை புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலை
-
- 0 replies
- 1.3k views
-
-
அறிக்கை பொதுமக்களுக்கு சில நாட்களில் சமர்ப்பிக்கப்படும்: சனல் போர் Saturday, April 16, 2011, 5:07 சிறீலங்கா சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையானது, சில தினங்களில் பொதுமக்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல்போர் செய்தி நிறுவனம் நேற்று (15) தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (12) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது பத்து தினங்களில் வெளியிடப்படும் என ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனைத்துலக போர்க்குற்ற விசாரணை ஒன்றை அமைப்பதற்கு அதில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருவதாக யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா பூட்டனிஸிடம் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை, ஜனநாயக ரீதியாக அவர்கள் தமது மாற்று நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும் பலவிதமான முட்டுக்கட்டைகள் இருக்கின்றன என்றும் இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுவரிடம் எடுத்துக்கூறியதாக யாழ் ஆயர் தெரிவித்தார். இலங்கையில் தமது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஸியா பூட்டனிஸ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். மக்கள் …
-
- 3 replies
- 1.3k views
-
-
03.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....24c7d2583be6925
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரின் இடத்துக்கு மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் மனைவி சுதர்சினி அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி நியமிக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது. வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு வசந்த சமரசிங்கவை நியமிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்த்pரக் கூட்டமைப்பிடம் கோரியிருந்தது. அவ்வாறானதொரு கோரிக்கை மக்கள…
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டு. கத்தோலிக்க தேவாலயத்துக்குள் சென்ற இரு இஸ்லாமிய பெண்கள் உட்பட நால்வர் கைது மட்டக்களப்பு புனித செபஸ்டியன் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக ஆலயத்திற்கு வந்த இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் குறித்த தேவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆராதனை இடம்பெற்றது. இதன்போது அங்கு இரு பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட முஸ்லிம்கள் ஆலயத்தினுள் உட்புகுந்ததையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆராதனையில் ஈடுபட்ட மக்கள், அருட்தந்தையூடாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு ச…
-
- 4 replies
- 1.3k views
-
-
- அடிக்கடி நிகழும் நிலநடுக்கம், புயல், ... இவை நாளாந்தம் அதிகரிக்கின்றன ... இன்று உலகின் பல பகுதிகளில் நிலம் அதிர்நதது ...! ... இந்தப் படத்தில் நாளாந்தம் கவனிக்கலாம், விளங்கிக் கொள்வதற்கு விளக்கம் இங்கே தளத்தில் மேலும், 20 நாள் பங்குனி மாதம் (80ம் நள்)இரவும் பகலும் சமனாவை, இந்த (equinox) நிகழ்வை படத்தில் விழும் நிழலின் நீள்சதுரமான உருவம் காட்டுகிறது. ஒவ்வரு நாளும் இங்கு வந்து பாருங்கள் இந்த நிழல் மெல்ல மெல்ல உருமாறுவதை காணலாம் ! அதன் படியே பருவ காலங்களும் மெல்ல மெல்ல மாறுகின்றன ... 21 ம் நாள் ஆவணி மாதம் தென் கோளத்தின் நீண்ட பகலை காட்டும் படியாக இந்த நிழலின் உருவம் மணி போல் குவிந்த பகுதி மேலேயும் விரந்த பகுதி கிழேயும் …
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியப் போராட்டம்: மறுவடிவை நோக்கி… தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுப் பாதை கடந்த காலங்களோடு ஒப்பிடுமிடத்து இன்னும் பலத்த சவால்களை சந்திக்கவுள்ளது. கடந்து வந்த 25 ஆண்டு காலப்பகுதியில் காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட தடைகளை சந்தித்து அவற்றினை தகர்த்தெறிந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இனிவரும் காலம் காத்திருக்கின்ற சவால்கள் மிகமிக கனதியானவை கடினமானவை. எனினும், இவற்றினை தகர்க்கமுடியாதென்றில்லை. ஆனால், முகங்கொடுக்கவேண்டிய முறையில் பல மாறுபாடுகளிற்கு இடமுண்டு. அந்த மாறுபாடுகளை எதிர்நோக்கும் போது சில புதிய சாவால் மிக்க அனுபவங்கள் ஏற்பட இடமுண்டு. இந்த புதிய அனுபவங்கள் புரிவதற்கு சற்று கடினமானதாகவும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் முஷாரப்பின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தானிய படைகள் வரவில்லை! இலங்கையில் நடைபெறவுள்ள 15 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தானிய படைகள் வரவில்லை என தூதுவராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தான் ஜனாதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரம் இந்த விஜயத்தின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இந்திய பிரதமரின் பாதுகாப்பிற்கு 3000த்திற்கும் மேற்பட்ட இந்திய படையினர் இலங்கை வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய அனைத்து அரச தலைவர்களின் பாதுகாப்பிற்காகவும் இந்திய படையினர் விசேட பாதுக…
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழ் ஈழமும், மதுரை மீட்ட சுந்தரபாண்டியனும் - I மாவீரன் நெப்போலியனிடம், பிரஞ்சுப்படையில் இருக்கும் வீரர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் என்னைச் சேர்க்காமல் 50,000 பேர் என்பானாம். உங்களையும் சேர்த்தால் 50,001 அப்படித்தானே என்றால் இல்லை, 1,50,000. அந்த இலக்கம் 1ஐ முதலில் சேர்க்க வேண்டும் என்பானாம். பிரெஞ்சுக்காரர்களைக் கேட்டால் இந்த வார்த்தைக்கு அவன் மிகவும் பொருத்தமானவன் என்பார்கள்! ஏனெனில் அவனை மாவீரன் என்று உலகுக்குப் பறை சாற்றிய துலோன் யுத்தம் (டிசம்பர், 1793), ஒரு தளபதியாக அவன் நடத்திய கன்னிப்போர்! யுத்தத்தை நடத்திய தளபதி போர்க்களத்தில் காயமடையவே, பதிலுக்கு தளபதியாக நியமிக்கப் பட்ட நெப்போலியன், யுத்தகளத்தில் தோற்று ஓடிய சொற்ப வீரர்களை ஒரு குன்றின் மீது ஒன்று …
-
- 5 replies
- 1.3k views
-
-
யாழ் ஸ்ரான்லி வீதி ஒருபக்கம் பள்ளமான குழிகளால் ஆன சீரில்லாத பகுதியாகவும் மற்றப் புறம் சீரான நேரிய பகுதியாகவும் காணப்பட்டு வீதியால் பயணிப்பவர்களை யோசனையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் அவ் வீதியில் பயணிப்பவர்கள் சிலர் இப்பகுதிகள் இரண்டுக்கும் இடையில் காணப்படும் பிரதேசத்தில் சறுக்கி விழுவதுமாக இருக்கின்றார்கள். யூரோவில் நிறுவனம் இவ் வீதியைப் புனரமைப்பு செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இருந்தும் முக்கிய வர்த்தகப் பகுதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரது அலுவலகங்கள் இருக்கும் இவ் வீதியை இவ்வாறு அர்த்தநாதீஸ்வரர் கோலத்தில் விட்டுள்ளது அனைவரையும் அசெளகரியப்படுத்துகின்றது. thx newjaffna.com
-
- 0 replies
- 1.3k views
-
-
அழுத்து http://puspaviji.net/page102.html
-
- 0 replies
- 1.3k views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டை இராணுவ ஆட்சிக்கு இட்டுச்செல்லும் அபாயம் தோன்றியுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க கொழும்பில் இருந்து வெளிவரும் வார இறுதி சிங்கள ஏடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.3k views
-
-
சந்தேகநபர் ஒருவரை அவசரகாலச்சட்டத்தின் கீழ், நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் ஒன்றரை வருடங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டில் தடுத்துவைக்கப்பதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சந்தேகநபர் ஒருவரை 90 நாட்களுக்கு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்துவைத்து விசாரிப்பதற்கு அனுமதிப்பதற்கும், விளக்கமறியலில் வைத்திருப்பவரை மீண்டும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் சட்டமா அதிபருக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த பின்னர் உயர்நீதிமன்றம் இந்த வர்த்தமானியை ரத்துச்…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைச் சிறுத்தைகள் தலைவரால் "கரும்புலி முத்துக்குமார் பாசறை" தொடக்கமாம் மேலும் படிக்க http://www.sankathi.com/uploads/images/news/2010/05/03/Arikkai-17-05-2010.pdf நன்றி - சங்கதி
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கை உட்பட பல நாடுகளிலிருந்து ஜப்பானில் அகதிகளாக புகலிடம்கோரி விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அகதிகளுக்கு உதவிவரும் தன்னார்வ நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரையான காலப்பகுதியில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,015ஐ அடைந்திருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. “மியன்மார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்தே கூடுதலானவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனைவிட இலங்கை, நேபாளம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் காணப்படும்ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த நாடுகளிலிருந்து புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என டோக்கியோவைத் தளமாகக் கொண்டியங்கும் அகதிகளுக்கான ஜப்பான் நிலையம் தெரிவித்துள்ளது. ஜப்பா…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் 29.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....d33c36b1b5fc2cb 22.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....3afe57c2e008bc8 15.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....8ef4c628eba0259 நிலவரம் - ஆய்வு நிகழ்வு 27.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....9bbe3554a4fdf6f 15.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....b2374f342be9ed4 காலக்கணிப்பு 23.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....25f8597834fa83a
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லியுடன், சீனப் படைத்துறையை சேர்ந்த ஜெனரல் தரத்துக்கு நிகரான பதவிகளை வகிக்கும் 11 உயர்அதிகாரிகளும் கொழும்பு வந்துள்ளனர். ஒரே நேரத்தில் வெளிநாடு ஒன்றின் அதிகளவிலான அதிஉயர் மட்டப் படைஅதிகாரிகள் சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. சீனப் பாதுகாப்பு அமைச்சருடன் சீனாவின் அதிஉயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 23 பேர் கொழும்பு வந்துள்ளனர். சிற்பபு விமானத்தில் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினரை வரவேற்க சிறிலங்கா கூட்டுப்படைகளின் த…
-
- 8 replies
- 1.3k views
-
-
கள நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலேயே பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாக முடியும் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலி களுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்க அனுசரணைப் பணியில் நோர்வே தரப்பினர் அவசரப்பட்டு இறங் கும் நிலையில் இப்போது இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்திகளில் வெளியானது போல் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் ஹன்சன் போவர் உடனடியாக வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று கொழும்பிலுள்ள நோர்வே தூதரகப் பேச் சாளர் எரிக் நுரென் பேர்க் தெரிவித்தார். ""அப்படியான திட்டம் எதுவும் இல்லை. செய்திகள் யாவும் வெறும் எதிர்வு கூறல் களே'' என்றார் நுரென் பேர்க். கள நிலைகள் மேம்படுமானால் எதிர் வரும் மாதங்களில் அவ்வாறான ஒரு விஜயம் சாத்தியப…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த இரதோற்சவம் இன்று புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு நடைபெற்ற வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து எம்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அலங்காரக் கந்தனென வர்ணிக்கப்படும் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வருடாந்தத் தேர்த் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். (படங்கள்: எஸ்.கே.பிரசாத்,என். நவரத்தினராசா) http://tamil.dailymirror.lk/--main/81289-2013-09-04-05-51-23.html
-
- 15 replies
- 1.3k views
-
-
சரத் பொன்சேகாவின் மகள் கடிதம் ஒன்றை ஹிலாரி கிளின்ரனிடம் அளித்துள்ளார் [ திங்கட்கிழமை, 31 மே 2010, 09:13 GMT ] [ கி.வேணி ] சிறிலங்கா முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா அமெரிக்க இராஜாங்க துறை செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கான கடிதம் ஒன்றை அவரின் உதவி தலைமை அதிகாரியிடம் கையளித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறிலங்க வெளியுறவு அமைச்சர் பீரிஸ் ஹிலாரி கிளின்ரனை சந்தித்து பேசவிருந்த சில நிமிடங்களுக்கு முன் அப்சரா இந்த கடிதத்தை அளித்தது முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்சரா பொன்சேகாவும் சிறிலங்கா மனித உரிமைகள் அமைப்பு ஒன்றினை சார்ந்த மேலும் மூன்று சிறிலங்காவினை சேர்ந்தவர்களும் இதில் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, …
-
- 0 replies
- 1.3k views
-