ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
சிறிலங்காவிற்கு மிகப் பெருமளவில் ஆயுதங்களை வழங்கும் நாடுகளில் ஒன்றான சீனாவிற்கு ஒரு வார கால பயணத்தை மேற்கொண்டு திரும்பியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபாய ராஜபக்ச. கடந்த 28ம் திகதி சீனா சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச, 6ம் திகதி வரை சீனாவில் தங்கியிருந்து ஆயுதக் கொள்வனவுகளில் ஈடுபட்டுள்ளதுடன், ஆலோசனைகளையும் பெற்றுத் திரும்பியுள்ளார். இதன்போது சீனா இராணுவ உயர்மட்டத் தலைவர்களை சந்தித்துப் பேசிய கோத்தபாய ராஜபக்ச, வன்னிக் களமுனையின் தற்போதையை வெற்றி நிலை குறித்தும் வரை படங்களுடன் எடுத்து விளக்கியதாக தெரியவருகின்றது. சிறிலங்காவிற்கு இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் இராணுவ உதவிகளை வழங்கி வருவது தெரிந்ததே. படங்கள்.................. http://www.tam…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதிய அமைச்சரவையின் பிரதமராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்க்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சர்வகட்சி அமைச்சரவை ஒன்றை நிறுவ உள்ளதாகவும் தற்போதைய அமைச்சரவை கலைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இன்று அல்லது நாளை அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளக் கூடுமென எதிர்பார்க்கப…
-
- 22 replies
- 1.3k views
-
-
கொழும்பில் தற்கொலை அங்கி கண்டெடுப்பு 1/26/2008 6:18:40 PM வீரகேசரி இணையம் - கொழும்பு ஜிந்துப்பிட்டி கன்னாரத்தெரு மக்கள் குடியிருப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மலசலக் கூடம் ஒன்றில் இருந்து தற்கொலை அங்கி ஒன்று பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டது. பொது மக்களிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்தே மூன்றே கால் கிலோ எடையுடைய சி 4 ரக வெடி மருந்து நிரப்பப்பட்ட இந்த தற்கொலை அங்கியை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை அங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற முப்படையினரும் அப்பகுதி மக்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் பதறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். பெர…
-
- 0 replies
- 1.3k views
-
-
ரூபாயின் பெறுமதி... மேலும் வீழ்ச்சி: டொலரின் பெறுமதி 282 ரூபாயாக அதிகரிப்பு இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 272 ரூபாயாகவும் விற்பனை விலை 282 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 359 ரூபாயாகவும் விற்பனை விலை 372 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அவுஸ்ரேலிய டொலரின் விற்பனை விலை 210 ரூபாயாகவும் கனேடிய டொலரின் விற்பனை விலை 225 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/1272909
-
- 21 replies
- 1.3k views
- 1 follower
-
-
சீனப் புதத்தை காட்டித் துள்ளிக் குதிக்கும் இலங்கை ஆட்சிப் பீடத்தை சமாளித்து வழிக்குக் கொண்டுவர வகை தெரியாமல் விழிபிதுங்கி தடுமாறித் திணறுகின்றது இந்திய உபகண்டப் பேரரசு ராஜபக்ஷேவால் தென்னிலங்கையில் வலுவாகக் காலூன்றிய சீனா, இப்போது இந்தியாவிற்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. சீனாவின் வல்லாதிக்கம், இப்போது வடக்கு இலங்கையின் வடபகுதி முனைவரையிலும் கூட நெருக்கமாக முன்னேறி இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாகியிருப்பதுதான் இப்போது லேட்டஸ்ட் சர்ச்சை. இலங்கையின் யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் வங்காள விரிகுடாவை ஒட்டி அனலை தீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, காரைதீவு, மண்டைதீவு, பாலைதீவு, இரணைதீவு என்று பல சிறிய தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் காரை தீவு,…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழரை கொல்ல துணை பாதுகாப்பு அமைச்சர் பதவி கேட்டாராம் சந்திரசேகரன். - மீண்டும் சந்திரசேகரனின் வங்குரோத்து அரசியல். [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 01:21 தமிழீழம்] [எஸ்.கே] மலையக மக்கள் முன்னனியின் தலைவர் பொ.சந்திரசேகரன் இன்று இலங்கை அரசுடன் இனைந்துகொண்டுள்ளார். மலையக மக்களை காக்கவும் வாக்கு போட்ட மக்களை காக்கவும் இவ்வாறு இனைந்துள்ளதாக சந்திரசேகரன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். இதே நேரம் தமிழர் எல்லாரும் ஒன்றினைந்து ஒரு பொது திட்டத்தின் கீழ் வேலை செய்யவேண்டும் என்று வன்னிக்கு சென்று பகிரங்க ஊடகப் பேட்டி கொடுத்து புலிகளுடன் இணைந்து கொள்வேன் என்று மகிந்த ராஜபக்சவுக்கு மிரட்டல் விட்ட ஆறுமுகம் தொண்டமானும் இன்று தன்னை அரசுடன் இணைத்துள்ளார். இருவரும் மலையக மக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
சமாதானப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர் நிறுத்த உடன்படிக்கையின் முறிவு -விதுரன்- போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்தன் மூலம் முழு அளவிலான போருக்கு அரசு அறைகூவல் விடுத்துள்ளது. இவ்வாண்டை போராண்டாகப் பிரகடனப்படுத்திய அரசு சமாதான முயற்சிகளுக்கு அடியோடு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. இதனால் அரசின் அறைகூவலுக்கு முகம் கொடுக்க விடுதலைப் புலிகளும் முழுஅளவில் தயாராக வேண்டியிருக்கும். விடுதலைப் புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. `ஜெயசிக்குரு' படை நடவடிக்கையின் படுதோல்வியை அடுத்து புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் தாக்குதல்களால் யாழ்.குடாநாட்டை அவர்கள் கைப்பற்றும் நிலை உருவானது. வன்னியில் பலபடைத்தளங்கள் புலிகளிடம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
"தமிழ் மக்கள் பேரவை மீது அரசியல் சாயம் பூச வேண்டாம்" தமிழ் மக்கள் பேரவை மீது அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று அந்த அமைப்பின் இணைத்தலைவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் இயக்கம் என்றும் ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதற்கோ அல்லது தேர்தல்களில் போட்டியிடுவதற்கோ அதற்கு எண்ணமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது அமர்வு ஞாயிறன்று யாழ் பொது நூலக மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும…
-
- 16 replies
- 1.3k views
-
-
வெளி நாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பசில் இராஜபக்ஷ தனது அமைச்சிற்கு முழு நேர அமைச்சு செயலர் ஒருவரை தருமாறு கேட்டுள்ளார். தற்போது திறைசேரி செயலர் டி.பி. ஜயசுந்தரவையே மஹிந்த பசிலின் பொருளாதார அமைச்சுக்கு பகுதி நேர செலராக நியமித்துள்ளார். பசில் இராஜபக்ஷ கண் மண் தெரியாமல் பெருவாரியாக பணத்தை சுருட்டிக்கொண்டு இருக்கின்றார் இதில் பங்குகள் சரியாக மஹிந்தவிற்கு போய் சேரவில்லை. கோத்தபாயவை விட பசில் இராஜபக்ஷவே பணம் சுருட்டுவதில் வல்லவராம். இதனை அறிந்த மஹிந்த தானே டி.பி,.ஜெயசுந்தரவை நியமித்துள்ளார். ஆனால் பசிலிற்கு ஜயசுந்தர இடைஞ்சலாக உள்ளார் என கூறப்படுகின்றது. எனவே தான் பசில் இராஜபக்ஷ தனக்கு தனியான ஓர் செயலரை தருமாறும் அதுவும் தான் சிபார்சு செய்யும் சா…
-
- 0 replies
- 1.3k views
-
-
மகேஸ்வரி நிதியம், அங்கீகரிக்கப்படாத நிதியம்! வன்செயல்களுக்குப் பொறுப்பானவரின் வீட்டிற்குச் சென்று ஜனாதிபதி நட்புறவு கொள்கிறார். மணல் அகழ்வு மற்றும் மகேஸ்வரி நிதியம் என்பவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பிணமாகின்றனர். ஆர்ப்பாட்டம் தொடர்பாகச் செய்திகளை வெளியிடக்கூடாது என லொறிகளில் வரும் குண்டர்கள் குடாநாட்டு தமிழ்ப்பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுகின்றனர். இவ்வளவு வன்செயல்களுக்குப் பொறுப்பானவரின் வீட்டிற்குச் சென்று ஜனாதிபதி நட்புறவு கொள்கிறார்.அது தொடர்பான படங்கள் ஊடகங்களிலும் வந்துள்ளன. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு வேதனையளிக்கின்றது என சரவணபவன் எம்.பி தெரிவித்துள்ளார். யாழ். குடாநட்டில் இடம் பெறும் தொடர் கொலை, கொள்ளை மற்றும் சட்டவிரோதச் சம்பவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
- பாங் கி மூன் விடுதலைப் புலிகளும் சிறீலங்கா அரசாங்கமும் அமைதி முயற்சியை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங் கி மூன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் மட்டக்களப்பில் உலங்கு வானூர்த்தி மூலம் இராஜதந்திரகள் கொண்டுசெல்லப்பட்ட போது எறிகணைத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட விடயம் தொடர்பிலேயே பாங் கி மூன் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தாக்குதலைக் கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செலயலாளர் நாயகம் வெளிநாட்டுத் தூதுவர்களையும் அனைத்துலகத் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளையும் ஏற்றிச் செல்லப்பட்ட உலங்கு வானூர்த்தி மீதான தாக்குதலானது அனைத்துல சமூகத்ததின் உயிர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது எ…
-
- 3 replies
- 1.3k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், அவர் நடாத்தி வந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகம் , கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் 2 ஆம் மாடியில் உள்ள அறையொன்றில் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று சி.ஐ.டி.யினரால் அந்த பள்ளிவாசல் அறை அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அங்கிருந்து பல ஆவணங்கள், குறித்த அமைப்புக்கு நிதி வழங்கியவர…
-
- 8 replies
- 1.3k views
-
-
http://www.tamilkathir.com/news/2448/57//d,view_video.aspx
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=4]இனவழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் போதிய கவனத்தை செலுத்தவில்லை. ஒரு சில ஊடகங்களைத் தவிர மற்றயவை இவ்விடயம் பற்றி அக்கறை காட்டுவதில்லை என்பதனால் மக்கள் மத்தியில் செய்திகள் சென்றடைவதில்லை.[/size] [size=4]ஆதலால் அனைத்துலக மக்களின் கவனத்தை ஈர்க்கவே நான் போராடுகிறேன் இவ்வாறு இன்று பதினேழாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் திரு. சிவந்தன் கோபி Voice of America இன் ஊடகவியலாளருக்குத் தெரிவித்துள்ளார்.[/size] http://youtu.be/NEA_SKb5ZfM [size=4]திரு. சிவந்தன் தங்கியிருக்கும் கூடாரத்துக்கு அருகில், இன்று அவரை நேர்காணல் செய்த மேற்படி ஊடகவியலாளர், ஒலிம்பிக் ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, தமிழ் மக்கள் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹாண் குணரட்ன தெரிவித்துள்ளார். பிரபாகரன் தமிழ் மக்களுக்கு பெரும் துயரங்களை ஏற்படுத்தினார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களின் சிந்தனைகளில் சிலர் விஷம் தூவி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை இல்லாதொழிக்க அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்…
-
- 3 replies
- 1.3k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தம் மாற்றம் எதுவுமே இன்றி தொடர்ந்து அமுலில் இருக்கும் அரசு அதனை முறித்துக்கொள்ளாது: கெஹலிய ரம்புக்வெல. போர்நிறுத்த ஒப்பந்தம், மாற்றம் எதுவும் இன்றித் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். அதனை அரசாங்கம் முறித்துக்கொள்ளவும் மாட்டாது, அதில் திருத்தம் எதனையும் செய்துகொள்ளவும் மாட்டாது. இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் முறித்துக்கொள்ளப் போவத…
-
- 5 replies
- 1.3k views
-
-
நிலச்சரிவால் நிலைகுலைந்திருக்கும் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் அமைச்சர் செந்தில் தொண்டமான் பேட்டி இலங்கையின் ஊவா மாகாணத்தில் பதுளை அருகே கொஸ்லந்த, நீரியபத்த பகுதியில் கடந்த 29-ம் தேதி ஏற்பட்ட கடும் மண்சரிவு, மலையகத் தமிழர்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்துவிட்டிருக்கிறது. 10 நாட்கள் ஆகியும் இதுவரை மீட்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இந்தச் சூழலில், கள நிலவரங்களை ‘தி இந்து’வுடன் பகிர்ந்து கொள்கிறார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் அமைச்சருமான எம். செந்தில் தொண்டமான். மலையகத்தில் ஏற்பட்ட மண் சரிவு எப்படிப்பட்டது? முழுக்க முழுக்க இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒன்றரை கிலோ மீ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என சிறிலங்கா அரசாங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களில் இருந்து பொது மக்களை கருணா குழுவினர் கடத்திச் செல்வதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்ததைத் தொடர்ந்து அரசாங்கத்தின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவத்ததாவது: அரசியல் வேலைகள் தவிர்ந்த கருணா குழுவினரின் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பான மு…
-
- 5 replies
- 1.3k views
-
-
தேசியத்தலைவரின் அகவை 56ல் ஈழத்தமிழ் உறவுகளுக்கு உதவிய நாம் தமிழர் கட்சியினர் தேசியத்தலைவர் அவர்களின் அகவை 56 பிறந்தநாள் அன்று அரசபாளையம் (இராசபாளையம்) மொட்டைமலை ஈழ ஏதிலி முகாமில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சியினர் உதவிகளை வழங்கியுள்ளனர். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் அரசபாளையம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வை.தமிழினி, கண்ணன், கௌதம், யாழினி யாதுமாகி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலதிக படங்களுக்கு: http://meenakam.com/2010/11/29/14950.html
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபச்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவியைக் கொடுக்கும் நோக்கில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் அமைச்சுப் பதவியைப் கைமாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
In இலங்கை April 19, 2020 7:19 am GMT 0 Comments 1076 by : Benitlas இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 32 வது நினைவு தினம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை உணர்வு பூர்வமாக வடக்கு கிழக்கு எங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.30 மணி அளவில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் …
-
- 8 replies
- 1.3k views
-
-
சொல்கிறேன் உறுதி கொண்ட நெஞ்சையுடைய தமிழனாக நிமிர்ந்து நில் துணிந்து செயற்படு விரைந்து செல் சுமார் நாலரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த ஜரோப்பியர்கள் இவ்விலங்கைத் தீவிலிருந்து வெளியேறிய பின்னர், ஆட்சியதிகாரத்தைத் தாம் கையகப்படுத்திய சிங்களவர்கள், தமிழர்களாகிய எம்மை இத்தீவிலிருந்து அழித்தொழிப்பதற்காகக் கையாண்ட வழிமுறைகள் எதுவுமே இரகசியமானவையல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வரும் எமது மரபுவழித் தாயகத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் வன்கவர் செய்து எமது மக்களைத் துப்பாக்கி முனையில் அவ்வாழ்விடங்களிலிருந்து விரட்டுதல், எமது கல்வி வளங்களை அழித்தல், 1956, 1958, 1965, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் அரச ஆதரவுடன் நடந்தேறிய தமிழருக்கெதிரான தமிழினப் படுகொலைகள் மூ…
-
- 0 replies
- 1.3k views
-
-
யோஷித ராஜபக்ஷ கைது January 25, 2025 10:08 am முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை யோஷித ராஜபக்ஷ செய்ததற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, யோஷித ராஜபக்ஷ தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.…
-
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
மன்னார் பாலைக்குழி இத்திக்கண்டல் பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
தொன்மையும் நாகரீகச் சிறப்பும் மிக்க தமிழினம் இன்று தாழ்வுற்று நலிந்து கிடக்கின்றது- திருமதி பத்மினி சிதம்பரநாதன் தொன்மையும் நாகரிகச் சிறப்பும் மிக்கது எமது தமிழினம். இன்று தாழ்வுற்று நலிந்து கிடக்கின்றது. இந்நிலையில் அதனை மீளக்கட்டியெழுப்பி அதன் உச்ச ஆற்றலை வெளிக்கொணர்ந்து சிங்கள இனத்துடன் சரிநிகர் சமானமாய் இந்நாட்டில் வாழும் நிலைமையை உருவாக்கும் ஒரு பாரிய பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் குறிப்பிட்டார். பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களிற்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித…
-
- 0 replies
- 1.3k views
-