Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா. உயர் அதிகாரிகள், ஜனவரியில்... இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சர்வதேச நாடுகளிடம் மண்டியிடவேண்டாம் என எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். நாம் ஒருபோதும் மண்டியிடமாட்டோம். நாட்டின் தன்மானத்தை – கௌரவத்தை பாதுகாத்துக்கொண்டுதான் வெளிவிவகாரக் கொள்கையை செயற்படுத்திவருகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையில் ஆரம்பம் முதல் இலங்கை அங்கம் வகிக்கி…

    • 4 replies
    • 330 views
  2. இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் இலங்கையின் திட்டம் வெற்றிபெறாது; பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் November 26, 2021 இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் விதமான கொள்கைகளையே இலங்கை எப்போதும் வகுத்து வந்துள்ள நிலையில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே நாடாக தாம் இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. இந்நிலையில் இந்தியாவை சமாளிக்கலாம் என நீங்கள் நினைத்து அதற்கு ஏனைய வல்லரசுகளுக்கு சில பகுதிகளையும் இந்தியாவிற்கு சில பகுதிகளையும் வழங்கலாம் எனக் கருதினால் அது ஒருபோதும் வெற்றி பெறாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு,பிராந்திய உ…

    • 23 replies
    • 1.1k views
  3. சாணக்கியன் கருத்துக்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கடும் கண்டனம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை தான் நடத்தியதாக த.தே.கூட்டமைப்பு பாராளுடன்ற உறுப்பினர் சாணக்கியன் புலம்பெயர் தேசத்தில் வைத்து தெரிவித்த கருத்துக்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த நாம் இலங்கை அரசாலும், அரச படைகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளைத் தேடி 1735 நாட்களாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்…

  4. சபையில் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார் சார்ள்ஸ் எம்.பி : யாழ் பல்கலையில் கேக் வெட்டி கொண்டாட்டம் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 67 ஆவது பிறந்த தினமான இன்றைய தினம், பாராளுமன்றத்தில் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு உள்ளிட்ட மூன்று இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தமிழினத்தின் தலைவர் மேதகு வே…

  5. உள்ளாடைகளுக்குக் கூட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) உள்ளாடைகளுக்குக் கூட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எம்.வியாழேந்திரன் சபையில் தெரிவித்ததுடன் எமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்படுத்த இம்முறை வரவு செலவு திட்டத்தினூடாக திட்டமிடப்பட்டுள்ளது என்றார். அரசி உட்பட சிறுதானியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதில் இருந்து மீளவே இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 14,021 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. நாடுக…

  6. உலக வராலற்றில் மரணித்தவர் எதிரிப்படை வீரராக இருந்தாலும் வணக்கம் செய்வதற்கு அனுமதி கொடுப்பதே ஒரு ஜனநாயக நாட்டின் பண்பு-ஜனநாயகப் போராளிகள் கட்சி உலக வராலற்றில் மரணித்தவர் எதிரிப்படை வீரராக இருந்தாலும் அவரது போராட்ட சின்னங்களை அழிக்காது, அதை வணக்கம் செய்வதற்கு அனுமதி கொடுப்பதே ஒரு ஜனநாயக நாட்டின் பண்பு. நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராகவோ, சிங்களத் தேசியத்திற்கு எதிராகவோ போராடவில்லை. எமது இனம் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான யுத்தத்திற்கு எதிராகப் போராடி இந்த மண்ணிலே வீரமரணம் அடைந்த எமது மாவீரர்களை நினைவு கூருவதற்கு சட்டரீதியாக முழு அனுமதியையும் எமக்கு வழங்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். மாவீரர் நாள் தொடர்பிலான தடையுத…

  7. மாவீரர் நாளுக்கு.... தீருவில் திடலை, வழங்க முடியாது – வல்வெட்டித்துறை நகர சபை கைவிரிப்பு! வல்வெட்டித்துறை தீருவில் திடலை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸார் கோரியதால், திடலில் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் ச. செல்வேந்திரா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், மாவீரர் நாளான எதிர்வரும் 27ஆம் திகதி தீருவில் மைதானத்தில் நிகழ்வுகளை முன்னெடுக்க நகர சபையிடம் அனுமதி கோரி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் முகமாக நகர சபை தலைவரால் , “இம்மாத இறுதி வரை தீருவில் மைதானத்தில் எந்த நிகழ்வுகளையும் நடாத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸ…

  8. இலங்கைக்கான சீன தூதரை, தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பதென எடுத்த முடிவால் இந்தியா கடுமையான அதிருப்தியடைந்துள்ளது. இந்தியா தனது கடுமையான அதிருப்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நேரில் தெரிவித்ததை தமிழ்பக்கம் அறிந்தது. கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்கவல்ல இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய ஒரு பிரமுகர், தான் இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரகத்திற்கு விளக்கமளித்ததாக தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டார். எனினும், அந்த விளக்கத்தினால் இந்திய திருப்தியடையவில்லை, தனது அதிருப்தியை நேரில் தெரிவித்தது என்பதை தமிழ்பக்கம் அறிந்தது. இலங்கை அரசின் மீது இந்திய, அமெரிக்க பிடி இறுகி வரும் நிலையில், அந்த தரப்பை சமரசப்படுத்த, சீனா தொடர்…

  9. நினைவுகூரல்கள மேற்கொள்ளமுடியும்!கட்டளையைத் திருத்தி முல்லை. நீதிமன்று அனுமதி! தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் நிகழ்வை நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ளமுடியாது, எனினும், இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ளமுடியும். – என்று, முல்லைத்தீவு நீதிமன்று திருத்தி அமைத்துக் கட்டளை பிறப்பித்தது. முல்லைத்தீவு நீதிமன்றம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கடந்த 17, 23ஆகிய திகதிகளில் வழங்கிய தடைக்கட்டளையையே நேற்று திருத்தியமைத்து கட்டளை பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எழுபத்திரெண்…

  10. சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் – அரசாங்கத்தில் உள்ளவர்களை எச்சரித்தார் தயாசிறி சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்தானந்தவினால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கடந்த அரசாங்கம் இறுதி வருடத்தில் 3.7 பில்லியன் ரூபா செலவிட்டிருப்பதாகவும், ஆனால் 2020ஆம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதி 1.7 பில்லியன் ரூபா மாத்திரமே செலவினங்களுக்காக பயன்படுத்தியுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு கிராம சக்தி வேலைத்திட்டத்துக்கு மா…

  11. உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி இரசாயன உரம், பீடைக்கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் இரசாயன உரம், பீடைக்கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1251958

    • 12 replies
    • 765 views
  12. இலங்கையில்... 100 கோடி ரூபாய் பெறுமதியான, அரிய வகை இரத்தினக்கல் கண்டுபிடிப்பு இலங்கையில் மிகவும் அரிய வகையை சேர்ந்த இயற்கையான பெனகைட் இரத்தினக்கல்லொன்று (Natural Phenakite gemstone) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பெனகைட் இரத்தினக்கற்களில் இது மிகப்பெரியது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது. பேருவளை பகுதியை சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்ரீன் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த இரத்தினக்கல்லை கொள்வனவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2021/1252273

  13. டொலர் தட்டுப்பாடு காரணமாக... அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய, ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக தகவல்! உருளைக்கிழங்கு, பருப்பு, பெரிய வெங்காயம், சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லையற்ற வகையில் அதிகரித்துள்ளமைக்கு இதுவே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1252306

  14. ஊடகவியலாளர்களை தாக்கும் செயற்பாடுகள் அனுமதிக்க முடியாதவை – சிலோன் மீடியா போரம் ஊடக அடக்குமுறைகளும், ஊடகவியலாளர்களை தாக்கும் செயற்பாடுகளும் அனுமதிக்க முடியாதவை என சிலோன் மீடியா போரம் தெரிவித்துள்ளது. அண்மையில் நாட்டை உலுக்கிய கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால விபத்தையடுத்து இடம்பெற்ற போராட்டங்களின் போது செய்தி சேகரிக்க சென்ற திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் மூவர் தாக்கப்பட்டதோடு அவர்களது ஊடகக் கருவிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சிலோன் மீடியா போரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அசௌகரியங்களை தாங்கிக்கொண்டு தமது ஊடகப் பணியினை மேற்கொண்டு மக்களின…

  15. GSP+வரிச்சலுகை விவகாரம் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்திக்கின்றார் ஜி.எல். பீரிஸ் ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமையினை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்போது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் பேசப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் 42 வருடங்கள் பழமையானது எனவும், அதை முழுமையாக இரத்து செய்ய முடியாது என்பதை அவருக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த பயங்கரவாத தடைச…

  16. பா.நிரோஸ் நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என, அந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்த தாமும் கோரவில்லை என தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இந்தத் தவறை பகிரங்கமாக ஏற்றுகொள்கிறோம் எனவும் அறிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று (24) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், “வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தேர்தல் திருத்தம் வரும்வரை அல்லது அரசியலமைப்பில் திருத்தம் வரும்வரை மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது என கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. “நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படவில்லை. …

  17. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி! இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தடையுத்தரவுகளை பெற்றுள்ளனர். அதேவேளை கடந்த சில நாட்களாகவே யாழ்.பல்கலைக்கழக சூழலில் துப்பாக்கிகளுடன் இராணுவத்தினர், பொலிஸார் குவிக்கப்பட்டு , பல்கலை சூழல் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிரமாக்கப்பட்டு…

    • 2 replies
    • 548 views
  18. ஜெர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு! ஜெர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கொழும்பில் உள்ள தூதரகத்தில் சந்தித்துள்ளனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கே.சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், ஐநா 46/1 பிரேரணை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படல், ஜி.எஸ்.பி வரிச் சலுகைகள், தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐ.நா பிரேரணையில் பரி…

  19. அமெரிக்க அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்கவில்லை, அங்கிருக்கக் கூடிய சட்டவல்லுனர்களை சந்திப்பதற்கான தனிப்பட்ட பயணமாகவே இதனை கருத முடியும் என டெலோ அமைப்பின் உத்தியோகப்பூர்வ பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலில் தமிழர்கள் விவகாரம் அண்மைக்காலங்களில் பேசுபொருளாக மாறியிருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற அடிப்படை சிக்கல்கள் தொடர்பில் தீர்வு நோக்கிய பயணத்தில் தமிழ் தலைமைகள் தடுமாறுகின்றனரா? அல்லது தென்னிலங்கை தலைமைகள் தமிழ் தரப்புக்களை பயன்படுத்துகின்றதா? என்ற கேள்விகள் இருக்கின்றன. இந்த நிலையில் நாளைய தமிழ் சமூகம் எதை நோக்கி பயணிக்கப் போகின்றது என்பது தொடர்பான உண்மைத் தன்மைகளை விமர்சன ரீதியாக ஆர…

  20. மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுகின்றது. இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று தொடக்கம் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து செய்வதில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். அத்துடன் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச ச…

  21. கார்த்திகை பூ... தொடர்பில், இந்தியத் துணைத் தூதரகம் விளக்கம்! யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற பசுமைக் கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கார்த்திகைப் பூ சூடிய விடயம் தொடர்பில் இணையத்தளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வு என திரிபுபடுத்தப்பட்டு செய்திகள் வெளியான நிலையிலேயே இந்திய தூதரகத்தினால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மரக்கன்றுக…

    • 3 replies
    • 537 views
  22. (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தையோ, அவர்களின் விவசாய பூமியையோ வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நோக்கம் எமக்கில்லை, தமிழர் பூமியில் சிங்கள மக்களை புதிதாக குடியேற்றவோ அல்லது விகாரைகளை உருவாக்கவோ நாம் முயற்சிப்பதாக தமிழர் தரப்பு சந்தேகங்கொள்ள வேண்டாம் என தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள், கிராமிய சிற்ப கலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள் ,அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல…

  23. இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – சித்தார்த்தன்! 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “சர்வதேச நாடுகளுடன் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதில் 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் மிக முக்கியம். எந்த அரசு வந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும். அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்படக்கூடாது. அ…

  24. மிகமோசமடைந்துள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் - பிரிட்டன் தெரிவிப்பு (நா.தனுஜா) இவ்வாண்டின் முதல் ஆறுமாதகாலப்பகுதியில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகமோசமடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்படல் உள்ளடங்கலாக சிறுபான்மையினரை ஓரங்கட்டும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/34081/Britain.jpg இவ்வாண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜுன்மாதம் வரையான முதல் அரையாண்டில் மனித உரிமைகள் நிலைவரம் மிகுந்த கரிசனைக்குரிய மட்டத்திலிருக்கும் நாடுகளை உள்ளடக்கியதாக பிரிட்டனின…

    • 2 replies
    • 472 views
  25. பிரபாகரன் குறித்த, டக்ளஸின் கருத்திற்கு.. செல்வராசா கஜேந்திரன் எதிர்ப்பு! பிரபாகரனின் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாக கூறிய அமைச்சர் டக்ளஸின் கூற்றை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “போதைப்பொருளால் வடக்கு, கிழக்கில் எமது சமூகம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவது தொடர்பில் சிறிதரன் கருத்து வெளியிடுகையில், அந்த உண்மையை சகித்துக்கொள்ள முடியாத இராணுவ துணைக்குழுவின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொய்யான கருத்தை முன்வைத்தார். எங்களுடைய தேசியத் தல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.