ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143622 topics in this forum
-
திங்கள் 04-06-2007 22:32 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா சமாதானச் செயலகத்திற்கு புதிய பணிப்பாளர்? சிறீலங்காவின் சமாதான செயலகத்திற்கு விரைவில் புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட இருப்பதாக, அரசை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிறீலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் ஒம்பூட்ஸ்மனும், பொதுச் செயலாளருமான சாம் விஜயசிங்கவின் புதல்வரும், சிறீலங்கா தராண்மைவாதக் கட்சியின் தலைவருமான ரஜீவ விஜயசிங்கவிற்கு இந்தப் பதவி வழங்கப்பட இருப்பதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது. தற்போதைய பணிப்பாளரான பாலித கோகன்ன, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவி பறிக்கப்படவுள்ளது. இதேவேளை, சிறீலங்கா சமாதான செயலத்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
வலி.வடக்கில் இராணுவத்தினரின் வதை முகாம் இருந்து இருக்கலாம் என சந்தேகம் கடந்த இருபத்தைந்து வருடங்களாக அதிஉயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலிகாமம் வீமன் காமம் பகுதியில் உள்ள இரு வீட்டில் , இராணுவத்தினரின் வதை முகாம்கள் இருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த பகுதி கடந்த 29ம் திகதி முதல் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதனை அடுத்து அப்பகுதிக்கு மக்கள் சென்ற போது அருகருகாக உள்ள இரு வீட்டின் உட்பகுதி கூரை பகுதி முட்கம்பிகள் கொண்டு வேயப்பட்டு காணப்பட்டது. …
-
- 6 replies
- 1.3k views
-
-
சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம் (நமது நிருபர்) சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திரு கோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல் லூரியின் அபாயா பிரச்சினைக்கு நியாய மான தீர்வைக்காண உதவுமாறுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்தக் கடிதத்தில் அமைச்சர்மேலும் குற…
-
- 9 replies
- 1.3k views
-
-
சிங்கள பௌத்த ஊடுருவல்களுக்கு இடமளித்து சிங்களப் பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணத்தை மாற்ற உதவுவதாக தெரிவித்துள்ள மாணவர்கள் கடந்த வருட பல்கலைக் கழக உள்வாங்கலில் கூட விஞ்ஞானபீடத்தில் அதிகமான சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தமிழ் மாணவர்களின் மொத்த தொகையை விட அதிகம் என்றும் இதற்கு விஞ்ஞான பீட மூத்த பேராசிரியர் ஒருவரே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர் ஆக்கிரமிப்பின் அடுத்த நகர்வு யாழ் பல்கலையிலும் “பொசன்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பொசன் விழா கொண்டாடப்படவுள்ளது. யாழ் பல்கழலக்கழக வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறானதொரு வைபவம் இடம்பெறுவதுடன் தமிழ் மக்கள் இந்துக்கள் வந்தேறு குடிகள் என்றும் விவாதங்கள் பொய்ப்பரப்புரைகள் இடம்பெற்றுக் கொண்டுள்ள வேளையில், இவ் வைகாசி வி…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றமில்லை – ரொபர்ட் பிளேக் : www.globaltamilnews.com அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படாதென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக அமெரிக்காவின் கொள்கைகளிலும் மாற்றம் ஏற்படாதென அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தத்திற்கு அரசியல் ரீதியாக தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தக் கட்சி ஆட்சிக் வந்த போதிலும் கொள்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு எட்டப்பட…
-
- 3 replies
- 1.3k views
-
-
மாங்குளத்துக்கு அண்மித்த பகுதியில் கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் "உள்ளக பாதுகாப்பு அணியினர்" நடத்திய தாக்குதலில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர் என்று சிறிலங்கா படைத்துறை சார் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
மிக மோசமான மனித உரிமை மீறல்கள் புரியப்படும்போதும் அனைத்துலக சமூகம் அமைதியே காத்து வருகின்றது: சு.ப.தமிழ்ச்செல்வன். மிக மோசமான மனித உரிமை மீறல்கள் புரியப்படும்போதும் அனைத்துலக சமூகம் அமைதியே காத்து வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனித உரிமைகள் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை: மானுட நாகரிகத்தின் முன்னோக்கிய பயணத்தில் ஒரு மைல் கல்லாக 1948 ஆம் ஆண்டு இன்றைய நாள் அமைகிறது. அன்று, அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) ஐ.நா பொதுச் சபை வெளியிட்டது. இந்நாளை நாம் இன்று அனைத்துலக மனித உர…
-
- 3 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுமந்திரனை தோற்கடிப்பதென அவர் சார்ந்த தமிழரசுக்கட்சி மற்றும் பங்காளிக்கட்சிகள் தீர்க்கமான முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக ஆராயும் தமிழரசுக்கட்சியின் முக்கிய புள்ளிகள் கலந்து கொண்ட கூட்டம் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையினில் அண்மையினில் இரகசியமாக நடந்தேறியுள்ளது. தற்போது மாவை சேனாதிராசாவிற்கு ஆதரவு தேடி பிரச்சாரம் செய்து வரும் சீ.வி.கே.சிவஞானம் சந்திப்பினில் கலந்து கொண்டவர்களிற்கு தமது முயற்சிக்கு மாவையின் ஆசீர்வாதம் இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வடக்கு முதலமைச்சராக மாவையினை கொண்டுவர சீ.வி.கே.சிவஞானம் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லை. இதனை குழப்பியடித்தவர் சுமந்திரனேயென கு…
-
- 20 replies
- 1.3k views
-
-
Posted on : 2007-11-29 விபரீத விளைவுகளுக்கு சர்வதேசமும் பொறுப்பு மாவீரர் தினத்தை ஒட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய உரையும் அந்த மாவீரர் தினத்தில் வன்னி மீது இலங்கைப் படைகள் பல்வேறு முனைகளில் நடத்திய தாக்குதல்களில் 22க்கும் அதிகமான அப்பாவிகள் உயிரிழக்க, டசினிற்கும் அதிகமானோர் காயமடைந்தமையும் புலிகளின் தலைவர் பிரபாகரனை விரைவில் கொன்றொழிப்போம் என இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் அதி சக்தி வாய்ந்தவரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சூளுரைத்திருக்கின்றமை பற்றிய செய்தி வெளியாகியமையும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இலங்கைத்தீவின் நிலைமை மிக மோசமான விபரீத கட்டத்துக்குள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா பெண்களை சுற்றுலா விசாக்கள் மூலம் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் குழுக்கள் தொடர்பாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறிலங்காவின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி தப்பி வந்த பெண் ஒருவர் இதுதொடர்பாக தகவல் வழங்கியுள்ளதாக சிறிலங்காவின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக விசாரணைகளை செய்யும் பொறுப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. பெண்களை ஒன்று திரட்டி தொழில் பெற்றுத்தருவதாக கூறி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு இந்த குழுக்கள் பெண்களை கீழத்தரமான முறையில் நடத்துவதாகவும், இவ்வாறான துன்பு…
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுதலைக்கான போரில் இழப்புக்கள் ஏற்படத்தான்செய்யும்: அதனையும் தாண்டி இலட்சியத்தை அடைவோம்: கேணல் தீபன் [புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2008, 09:04 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] இலட்சியத்தை நோக்கிய எமது விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கு
-
- 3 replies
- 1.3k views
-
-
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 09:28 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொண்டதை போன்று எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள். ஜனாதிபதியின் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு பொதுஜன பெரமுனவினர் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள். பிரதமர் தினேஷ் குணவர்தன பூனை போல் செயற்படுகிறார். அமைச்சரவை உறுப்பினர்கள் முட்டாள்களை போல் உள்ளார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரப் போர் உக்கிரமடைந்துள்ள தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. ஜெனிவாத் தொடர் இன்று ஆரம்பமானாலும் இலங்கைக்கு எதிரான பிரேரணை மார்ச் மாதம் 23 ஆம் திகதியே வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரியவருகின்றது. இலங்கைக்கு எதிரான பிரேரணையை தாம் ஆதரிக்கப்போவதாக அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையிலும், தனக்கு எதிரான பிரேரணையை தோற்கடிப்பதற்கு இலங்கை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ள நிலையிலுமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவாக் கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, மெக்ஸிக்கோ, தென் ஆபிரிக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும் காலம் கனிகிறது. ஜனநாயக ரீதியான போராட்டங்களின் மூலமாக சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமத்துவமானதும், சாத்தியதுமான தீர்வுகளை நோக்கி நகரும் கட்டத்திற்கு எம்மை புடம்போட்டுக் கொள்ளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் தரிசனம் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் இரத்தின சபாபதி பிரபாகனின் தரிசனம் நூல் வெளியீட்டுவிழா பேராசிரியர் சபாஜயராஜா தலைமையில் நேற்றைய தினம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் …
-
- 14 replies
- 1.3k views
-
-
சூடானிய நாட்டுப்பற்றுள்ள விடுதலை அமைப்பு மீது நோர்வே அதிக செல்வாக்கினைச் செலுத்திவரும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அமைப்பு அழைப்பினை விடுத்திருப்பதன் அடிப்படையில் நோக்குமிடத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வரவேற்றும் வகையிலே நோர்வே செயல்படுகிறது என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் டெயிலிமிரர் ஆங்கில ஏட்டில் அதன் பத்தி எழுத்தாளர் Gomin Dayasiri எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அப்பத்தியின் முழுவிபரமாவது, "ஜேசுவும் புத்தரும் வந்திருந்தால் கூட இதுபோல ஒன்றை இலகுவில் அடைந்திருக்கமுடியாது" என 2004ம் ஆண்டு கிளிநொச்சிக்குச் சென்று தமிழ்ச்செல்வனைச் சந்தித்த பின்னர் எரிக் சொல்கெய்ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
http://naathamnews.com/?p=4371 ஐ.நா மனித உரிமைச் சபையின் நேற்றைய (13-03-2012) செவ்வாய்கிழமை அமர்வின் போது, எட்டு நாடுகளின் கருத்துவளைப்புக்களை, சிறிலங்கா எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், நோர்வே, கனடா , பெல்ஜியம், அவுஸ்றேலியா , பிரித்தானியா, அயர்லாந்து ஆகியன சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய இறுக்கமான நிலைப்பாட்டினை முன்வைத்தன. இதேவேளை சர்வதேச நீதியாளர் ஆணையம் ICJ எனும் அமைப்பும் சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. இந்த விவாதத்தில், சிறிலங்கா தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, அமர்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வள அறிஞர் குழுவின் சுற்றறிக்கையில் தெரிவிக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
உறவுகளே உங்கள் மௌனம் எதுவரைக்கும்: யாழிலிருந்து இலங்கைப்பாராளுமன்ற தேர்தல் என்றுமில்லாதவாறு வடகிழக்கு பகுதிகளில் சிறீலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் ,பேரினவாத சிந்தனையுடனும் செயற்பட்டுவருவதை தெளிவாக காணமுடிகின்றது. இதுவரைகாலமும் யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா அரசிற்கு ஒத்தூதும் ஒருசில கட்சிகளுமே போட்டியிட்டு வந்தன ஆனால் இம்முறை தமிழ் தேசியத்திற்கு எதிராக போட்டியிடக்கூடிய வலு அக்கட்சிகளுக்கு இல்லாதமையாலும் அவர்களின் செல்வாக்கு குறைவடைந்து செல்வதாலும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் பல்வேறுபட்ட பெயர்களில் ஓரளவு செல்வாக்குடைய பிரமுகர்களை பணத்துக்காக பேரம் பேசி சுயேட்சை…
-
- 7 replies
- 1.3k views
-
-
இன்றுவரைக்கும் நம் தமிழ் உறவுகள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருப்பத
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம் - மஹிந்த.! "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கைப்பற்றிவிட்டோம். கூட்டமைப்பைவிட அதிக ஆசனங்களைப் பெற்றுத் தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பிரதமராக நான்காவது தடவையாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ நேற்று முற்பகல் சுபநேரத்தில் அலரி மாளிகையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "வடக்கு, கிழக்கிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 9 ஆசனங்களை மட்…
-
- 10 replies
- 1.3k views
-
-
யாழ். கோப்பாயிலுள்ள பூதர்மடம் பகுதியில் நேற்றுக்காலை 10 மணியளவில் வயோதிப தம்பதியரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சிங்கராசா(வயது54) ரஞ்சிதமலர்(வயது 50) என்ற தம்பதியினரே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர். கணவனின் சடலம் அவர்களின் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது என்றும், மனைவியின் சடலம் கிணற்றுக்கு அருகில் தலையில் அடிகாயங்களுடன் இருந்தது என்றும் பொலிஸார் கூறியிருந்தனர். சடலங்கனைபப் பார்வையிட்ட யாழ் மாவட்ட நீதவான் இ.த. விக்னராஜா அயலவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்யும்படியும், சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கும்படியும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். நன்றி : சுடர் ஒளி
-
- 1 reply
- 1.3k views
-
-
தேசியத்தலைவரின் சிறந்த வழிநடத்தலால் ஓருவருடமாக மன்னாரில் திணறும் சிங்களம்-சி.எழிலன் தேசியத்தலைவரின் சிறந்த வழிநடத்தலால் மன்னாரில் எமது போராளிகளிடம் கடந்த ஒராண்டு காலமாக சிங்கள இராணுவம் திணறிக் கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். உலகின் பல வல்லரசுகளால் ஒழுங்குபடுத்தப்பட்டும் பெரும் ஆயுதங்களை பெற்றுக்குவித்தும் போர் ஒத்திகைகள் மற்றும் புதிய நுட்பங்கள் என்றெல்லாம் தயார்படுத்தியும் களமிறங்கிய சிங்கள இராணுவம் இன்று திணறுகிறது. எமது விடுதலைப் போராட்டம் பலம் பொருந்திய நிலையில் இன்று வந்திருக்கின்றது. எமது போராளிகள் சிறிலங்கா தேசத்தின் பெருந்தொகையான படைகளுடன் மோதிக்கொண்டிருக்கின்ற…
-
- 5 replies
- 1.3k views
-
-
சுவிஸ் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழனின் குரல் ஒலிக்க உங்கள் வாக்குகளை அளித்திடுங்கள்! சுவிஸ் ஈழத்தமிழரின் வெற்றியை நாம் லுசேன் நகரில் கொண்டாடலாம், சுவிஸ் ஈழத்தமிழருக்கு ஒரு விடுதலைச்சூரியனாக இருக்கப்போகிறார் திரு.லதன் சுந்தரலிங்கம் அவர்கள், நீங்கள் அந்த வெற்றியின் பங்காளராக திகழ உங்கள் வாக்குகளை ஈழத்தமிழருக்காய் அளித்திடுங்கள். தவறவேண்டாம், மறக்கவேண்டாம். உங்கள் கைகளில் வாக்கு அட்டை இருக்கிறது. சரியாக வாக்களியுங்கள் கனடாவில் ஒரு ஈழப்பெண்மணி பாராளுமன்றம் சென்றுள்ளார். சுவிசில் ஒரு ஈழத்தமிழ் மகன் பாராளுமன்றம் செல்வார் என்பது உறுதி. அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! உங்களால் என்ன செய்யமுடியும் என நீங்கள் நினைத்திருப்பீர்கள், உங்களாலும் முடியும்…
-
- 1 reply
- 1.3k views
-
-
விமல் வீரவன்ச தலைமையில் ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் சின்னமான 'கிரீடம்' சின்னத்தை தேர்தல் திணைக்களம் ஏற்றுக்கொள்ளக்கூடாதெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்சியொன்றின் சின்னமாக கிரீடம் இருக்க முடியாதெனவும், எனவே, அந்தச் சின்னத்தை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்க ஏற்றுக்கொள்ளக் கூடாதெனவும் கோரி இலங்கையின் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தேர்தல்கள் ஆணையாளருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியொன்று பதிவுசெய்யப்படுவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனத் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பு, எனினும், கிரீடத்தை கட்சியின் சின்னமா…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியிலுள்ள களுத்துறையில் அமைந்திருக்கும் முஸ்லிம்களின் மற்றொரு மசூதியையும் இடித்துத் தகர்ப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பௌத்த பிக்ககளின் தலைமையில் சிங்களவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை களுத்துறையில் நடத்தியுள்ளார்கள். இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் களுத்துறைப் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், பெருமளவுக்கு அமைதியாகவே இடம் பெற்றதாக தெரியவருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். கடந்த மாதத்திலும் இலங்கையின் மத்திய மாகாணமான தம்புளையிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றை …
-
- 5 replies
- 1.3k views
-
-
ஈழத்தமிழர்கள் சிந்திய குருதியும், செய்த தியாகங்களும் வீண்போகாது, தமிழர்களுக்குத் தனிநாடு ஒரு நாள் உருவாகும் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி. தனி ஈழம் அமைப்பதற்கு ஐ.நா தலையீட்டுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்து, கருத்து வெளியிட்டு இரண்டு நாட்களில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “உலகெங்கும் வாழும் தமிழர்களின் காதுகளில் தனித் தமிழீழம் விடுதலைப் பாடலாக ஒலிக்கிறது. சிறிலங்காவில் தமிழர்கள் சிந்திய குருதியும் செய்த உயிர்த் தியாகங்களும் வீண் போகாது. நாளை இல்லாது போனாலும்,தமிழீழம் ஒரு நாள் உருவாகும்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். http://w…
-
- 8 replies
- 1.3k views
-