ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு மக்களை மாற்றும் நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும்: அங்கிலிக்கன் ஆயர் சிறிலங்கா அரசாங்கம், ஒரு முகாமில் உள்ள தமிழ் மக்களை வேறொரு முகாமுக்கு மாற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என அங்கிலிக்கன் தேவாலய தலைவர் வணக்கத்துக்குரிய ஆயர் டுலிப் டி சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார். இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை உடனடியாக மீள் குடியேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கலிக்கன் திருச் சபையின் பேராயர் துலிப் டி சிக்கேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் இடம் பெயர் முகாம்களுக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளை துரிதப்படுத்தி மக்களை த…
-
- 0 replies
- 539 views
-
-
வடமாகாணத்தில் ஊழல் வாதிகளை பாதுகாக்கவே முயற்சி ; சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசுக் கட்சி முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வருவதானது ஊழல் வாதிகளை பாதுகாக்கின்ற செயற்பாடாகவே அமையும் என ஈ பி.ஆர். எல். எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சி ஊழல் அற்ற ஓர் ஆட்சியை கொண்டு வருவதனை எதிர்த்து ஊழல் வாதிகளை பாதுகாத்து முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வருவதானத…
-
- 0 replies
- 136 views
-
-
தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் பிறந்த விஞ்ஞானி இராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு கிடைத்து உள்ளது. நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் மேற்கொண்ட புதிய கண்டுபிடிப்புக்காக அவருக்கும், மேலும் இரண்டு விஞ்ஞானிகளுக்கும் கூட்டாக இந்த பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 880 views
-
-
வடமாகாண சபையின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாக அலரி மாளிகையில் தமிழ் மொழியில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார். இந்த நிகழ்வுக்கு விஷேட அதிதியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்குகொள்வார் எனவும் தெரிய வந்திருக்கின்றது. Thinakural
-
- 69 replies
- 4.6k views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது நம் தமிழ் மக்கள் கொண்ட பேரெழுச்சி மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை தேர்தலுக்காக நீங்கள் அழைத்து வந்திருக்கலாம்.ஆனால் அவரை முதலமைச்சராக்கியது நாங்கள். எனவே அவரை நீக்குகின்ற அதிகாரம் எதுவும் உங்களுக்கு கிடையாது. அவரை நீக்க நினைத்தால் நாங்கள் எப்படிப் பதிலளிப்போம் என்பதை பூரண ஹர்த்தால் மற்றும் ஆதரவுப் பேரணி மூலமாக மக்கள் தம் பேரெழுச்சியை வெளிப்படுத்தினர். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது தமிழ் மக்கள் கொண்ட பாசம் தமிழ் அரசியல்வாதிகளை மட்டுமன்றி தென்னிலங…
-
- 2 replies
- 363 views
-
-
முகாமிலுள்ள ஒரு தொகுதி விடுதலை புலி உறுப்பினர்களுக்கு, டிசெம்பர் 15 ஆம் திகதியளவில் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை தேசிய நல்லிணக்க நீரோட்டத்தில் கலப்பதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இதன் உண்மைத் தன்மை குறித்து சரியான தகவல்கள் இல்லை, புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் கே.பி, பாலகுமாரன் உட்பட, சிலரின் பெயர்கள், அரச புலனாய்வுப் பிரிவினராலேயே கசிய விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர், கோத்தபாய ராஜபக்ச, வெளிநாட்டு அமைச்சர் றோகித போகொல்லாகம போன்றோரின் அமெரிக்க விஜயத்தை அடுத்தே இத்தகவல்கள் வெளி வருகின்றது. செப்டம்பர் 21 ஆம் திகதியன்று, அமெரிக்க இராஐங்க திணைக்களம், போர்க் குற்றம் தொடர்பான விரிவான அறிக்கையயான்றினை காங்கிரஸ் சபைக்கு சமர்பிக…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்திய வீட்டுத்திட்ட வீடுகள் மண்டைதீவில் கையளிப்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க செம்பிறைச் சமாசத்தால் மண்டைதீவில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இரண்டு வீடுகள் நேற்று முன்தினம் புதன்கிழமை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட செஞ்சிலுவைச் சங்க செம்பிறைச் சமாசத்தின் ஆசியப் பகுதி பிராந்திய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜெ.வை.சாம்பபைல், இலங்கைக்கான பிரதிநிதி எச்.ஓ.டி.இகோல் ஆகியோர் வீடுகளைத் திறந்து வைத்து உரிமையாளர்களிடம் கையளித்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=254042355011822766#sthash.7bVzr8FO.dpuf
-
- 0 replies
- 312 views
-
-
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அமெரிக்க கப்பல் தரித்து நிற்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது- ஜேவிபி குற்றச்சாட்டு கெரவலப்பிட்டிய மின் நிலையம்தொடர்பில் இலங்கைசெய்துகொண்ட உடன்படிக்கை காரணமாக கொழும்பு துறைமுகத்திற்குஅருகில் அமெரிக்கா தனது கப்பலொன்றை நிறுத்திவைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிச செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கைக்கு மாத்திரமல்ல இந்து சமுத்திரம் முழுவதற்கும் ப…
-
- 0 replies
- 312 views
-
-
வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு கூட்டமைப்பு முயன்றால் பதிலடி!- பொதுபலசேனா எச்சரிக்கை [ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 02:01.55 PM GMT ] லங்காசிறீ இணைய வெளியீடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது வரவேற்கத்தக்கது. ஆனால் இவ் வெற்றியை வைத்து பிரிவினைவாதம் பேசுவது தவறு. வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்க முயன்றால் அதற்கான பதிலடியை நாம் கொடுப்போம் என பொதுபலசேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டை சீரழிக்கும் விடயத்தை யார் செய்தாலும் அதற்கு நாம் எதிர்ப்பினையே தெரிவிப்போம். கசினோ சூதாட்ட விடயத்தில் அரசாங்கத்தை கடுமையாக எச்சரிக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணத்தில் வரலாற்று வெற்றியினைப் பெற்றுள்ளமை வரவேற்க…
-
- 2 replies
- 521 views
-
-
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்கும் ஐஎஸ் இன் திட்டம் முறியடிப்பு! கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்குவதற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு போட்டிருந்த திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது. தூதரகத்தைத் தாக்குவதற்காக ஐஎஸ் அமைப்பானது கட்டுநாயக்காவிலிருந்து ஒரு விமானத்தைக் கடந்தவிருந்ததாகவும் அமெரிக்க பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் சிறீலங்காவின் பல பகுதிகளிலிருந்தும் ஐஎஸ் இயக்கத்திற்கு பலர் உதவி செய்து வருவதாகவும், அது தொடர்பான தகவல்களையும், நேரடி எச்சரிக்கைகளையும் விடுக்க அமெரிக்க பாதுகாப்புப் பிரிவின் குழுவொன்று விரைவில் கொழும்பு வரவுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ…
-
- 5 replies
- 869 views
-
-
6 இந்திய கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 இந்திய கப்பல்கள் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளன. ஐ.என்.எஸ்.மகர் & ஷர்துல் ஆகிய கப்பல்கள் கொழும்பிற்கும் ஐ.என்.எஸ்.சுஜாதா,தரங்கனி,சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகியவை திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளன. நெருங்கிய நட்புறவு மற்றும் தோழமையை வெளிக்காட்டும் மற்றொரு சந்தர்ப்பமாக இளம் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் வினைத்திறனை மேலும் விரிவாக்கும் இலக்குடன் இந்த விஜயம் அமைந்துள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது https://www.tamilmirror.lk/செய்திகள்/6-இந்திய-கப்பல்கள்-இலங்கைக்கு-விஜயம்/175-283716
-
- 2 replies
- 436 views
-
-
நீங்கள் பெரிதும் மதிக்கக் கூடிய பத்து தமிழர்களை பட்டியலிட்டால் அதில் ஒரு இடத்தை நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி முத்துக்குமாருக்கு கொடுப்பீர்களா? ஆமாம் சில நாட்களாகவே முத்துக்குமாரின் நினவுகள் ஏனோ என்னுள் அலைமோதியபடி இருந்தது. அவன் ஒரு சிறந்த லே.அவுட் ஆர்ட்டிஸ்ட். நன்கு எழுதத் தெரிந்த பத்திரிகையாளன். உலக சினிமாக்களை விரும்பிப் பார்த்து வந்த இளைஞன். நம் எல்லோரையும் போலவே அரசியல் வாதிகள் மீது கடும் விருப்பு கொண்டவன். எதுவுமே செய்ய முடியவில்லை. நாம் இறந்தாவது இந்த இனத்தைப் போராடத்துண்டுவோமா? என்று தன் உயிரை ஈந்தவன். தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் அதை தற்கொலை என்றார். ஸ்டாலின் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். ஆனால் அப்படி ஒன…
-
- 3 replies
- 2.9k views
-
-
இராணுவ அழுத்தங்களை நீக்கி கோப்பாபுலவு மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்க - சிவசக்தி ஆனந்தன் 21 அக்டோபர் 2013 கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்ற கிராமமான கேப்பாப்புலவு மக்களின் அடிப்படை வசதிகள், பூரணப்படுத்தப்படாமல் மக்கள் அவதிப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கடந்த 27.09.2012 அன்று ஆனந்தகுமாரசாமி மற்றும் கதிர்காமர் முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட 165 குடும்பங்களும் வெளிப்பதிவினூடாக குடியேறிய 185 குடும்பங்களுமாக குடியேறியுள்ள 350 குடும்பங்களில் அனேகமானோர் தற்காலிக கொட்டகை வீடுகளிலிலே வசித்து வருகின்றனர். இவர்…
-
- 0 replies
- 351 views
-
-
வட மாகாண சபை உறுப்பினர்களின் உதவியாளர் விவரத்தை 14 நாள்களுள் வழங்க ஆணைக்குழு பணிப்பு இவை சிறப்புரிமைக்குள் உள்ளடங்காது எனவும் தெரிவிப்பு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 33 பேரினதும், முகாமைத்துவ உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்களின் விவரங்களை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்தமைக்கு எதிராக, தகவலுக்கான உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு, கோரிய தகவல்களை வழங்குமாறு வடக்கு மாகாணப் பேரவைச் செயலாளருக்கு ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது. வடக்கு மாகாண பேரவைச் செயலகத்துக்கு இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி, வடக்கு மாகாண சபை உறுப்…
-
- 1 reply
- 299 views
-
-
சீன சேதனப் பசளை விவகாரம் : விவசாய அமைச்சரை சந்திக்க கொழும்பிற்கு வந்த சீன நிறுவனம்! சீன சேதனப் பசளை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு சீன தூதுவருக்கு தெரிவிக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சீன சேதனப் பசளை நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று திங்கட்கிழமை விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளது. எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதை மேற்கோள் காட்டி அமைச்சர் மேலதிகமாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். சீனத் தூதுவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க விவசாய அமைச்சில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. மேலும் இந்த விடயம் குறித்து அமைச்சர்…
-
- 0 replies
- 278 views
-
-
3 நவம்பர், 2013 இசைப்பிரியா படுகொலைச் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை தேவை என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். 'பொதுநலவாய மகாநாட்டில் பங்கு கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ள வேளையில் சேனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப்பிரியா படுகொலை தொடர்பான ஒளிப்படக்காட்சிகள் உலக நாடுகளை மட்டுமல்லாமல் உலக நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது' என்று இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஈபிடிபியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 'சேனல் 4 தொலைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் இராணுவத்தினர் கைது ச…
-
- 22 replies
- 1.8k views
-
-
இ.சுதாகரன் “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரை அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால், பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையிலுள்ள வடமுனையில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நெளுக்கல் மலையில் விஹாரை ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார். “பொலன்னறுவை மாவட்ட சொறுவில், கறுப்பளை, முத்துக்கல், மன்னம்பிட்டி மற…
-
- 0 replies
- 349 views
-
-
பிரபாகரன் பேனர் கிழிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு! தூத்துக்குடியில் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் வரும் 27ம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டு கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் இயக்கம் சார்பில் சாரத் என்பவர் தூத்துக்குடி நகரில் பல்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் கொண்டாட உத்தேசித்துள்ளனர். இதனையொட்டி தூத்துக்குடி நகரில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரபாகரன் உருவம் பதித்த டிஜிட்டல் விளம்பர பேனர்கள் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. பிரதான சாலையில் இருந்த விளம்பர டிஜிட்டல் போர்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாரன் படம் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழின உணர்வாள…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடக்கு முஸ்லிம்கள் 1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் இரு மணி நேர அவகாசத்தில் சகல வாழ்வாதாரங்களும் ,வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையும்,அதன் பின் 2003 பிரபா ரணில் புரிந்துணர்வு காலப்பகுதியிலே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்,அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் பத்திரிகையாளர் மாநாட்டிலே தாம் முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என்றும் உரிய நேரத்தில் முஸ்லிகளை மீண்டும் அவர்களின் தாயக மண்ணில் மீள்குடியேற அழைப்போம் என்றும் கூறியமையும் சர்வதேசம் அறிந்த உண்மையாகும். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் சமூகம் தேசிய தலைவன் என ஏற்றுக்கொண்ட பிரபாகனாலேயே உறுதியளிக்கப்பட்ட பின்னர் ஏன் இன்றைய தமிழ் சமூகத்தின் ஒரு சில அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் எதிர்க்கின்றனர்.…
-
- 20 replies
- 1.3k views
-
-
மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை இன்று புதன்கிழமை அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம்பெற்றது. குறித்த இறுதிக் கிரியையில் கலந்துகொண்டுவிட்டு கருத்து வெளியிடுகையிலேயே யாழ்மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனது உயிரைக் காப்பாற்றுவதற்காக …
-
- 1 reply
- 604 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது எதிர்பார்த்தளவு ஹோட்டல்களுக்கு வருமானம் கிட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்களில் அதிகளவான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குவார்கள என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், எதிர்பாத்தளவு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஹோட்டல்களில் தங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 4000 ஹோட்டல் அறைகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும், வெறும் 2000 ஹோட்டல் அறைகளே பயன்படுத்தப்பட்டதாகவும் கொழும்பு நகர ஹோட்டல் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த 10ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் முக்கிய நட்சத்திர ஹோட்டல்களின் அறைகளை 2000 பேர் மட்டுமே பயன்படுத்தியிருந்தனர் எனத…
-
- 1 reply
- 427 views
-
-
-
ஆறுமுகம் தொண்டமானுக்கு 400 மில்லியன், சந்திரசேகனுக்கு 200 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது எதிர்வரும் ஐனாபதித் தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளுக்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு 400 மில்லியன் ரூபாக்களையும், அமைச்சர் சந்திரசேகரனுக்கு 200 மில்லியன் ரூபாக்களையும் பசில் ராஜபக்ச வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேநேரம் மலையகப் பகுதிக்கான சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாக்களை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 805 views
-
-
ரவியைத் தொடர்ந்து ஐ.தே.கவின் இரண்டு அமைச்சர்கள் விசாரணை வளையத்துள் சிக்குவர் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சர்கள் இருவர் மீதும் விரைவில் ஆணைக்குழு விசாரணை நடத்தக்கூடிய அறிகுறிகள் தென்படுவதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்திருக்கும் மத்திய வங்கியின் அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் இவ்விரு அமைச்சர்களும் பிணைமுறி மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளனர் எனச் சந்தேகம் எழுந்துள்ளதால் விரைவில் அவர்களுக்கு ஆணைக்கு…
-
- 0 replies
- 192 views
-
-
இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒமிக்ரான் - சமூகப் பரவலாக மாறிவிட்டதா? 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இலங்கையில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளதென ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதான மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இறுதியாக 41 கோவிட் ஒமிக்ரான் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு அடையாளம…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-