Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன மத ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தீர்மானங்களை அனுமதிக்க முடியாது December 2, 2021 இனமத ரீதியில் யாரையும் புண்படுத்தும் வகையில் எந்தவிதமான தீர்மானங்களும் அமையக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்லின மக்கள் வாழுகின்ற இந்த நாட்டில் ஒவ்வொருவரும் ஏனையவர்களின் உணர்வுகளை பாதிக்காத வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்து ஆலயத்திற்கு முன்பாக கருவாடு காய வைக்கும் வாடி அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திருகோணமலை கடலூர் முருகன் ஆலயத்திற்கு முன்பாக மீன் கருவாடுகளை காய வைக்கும் வாடி அமைப்பதற்கு சம்மந…

  2. (எம்.மனோசித்ரா) இலங்கையின் வடக்கிலுள்ள 3 தீவுகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த மின் திட்டங்களை கைவிடுவதற்கு சீனா தீர்மானித்துள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/123093/china.jpg மூன்றாம் தரப்பினரால் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டமையைக் கருத்திற் கொண்டு சினோ சோர் ஹைப்ரிட் டெக்னாலஜி (Sino Soar Hybrid Technology) இந்த வேலைத்திட்டத்தை கைவிட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறு 3 வேலைத்திட்டங்களையும் கைவிட்டுள்ள சீன நிறுவனம் மாலைத்தீவில் 12 தீவுகளில் சூரிய மின்னுற்பத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக கடந்த நவம்பர் 29 ஆம்…

  3. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொருத்தமான காணிகள் அனைத்திலும் பிரதேச மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட காணிகளில் ஒரு பகுதியும், பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமான ஒரு பகுதி காணிகளிலும் விவசாய நடவடிக்கை மேற்கொள்ள முடியாமை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புக்களை தொடர்ந்து ஜனாதிபதியினால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் வாரங்களில் சுமார் 2119 ஏக்கர் காணிகள் விவசாய நடவடிக்கைகளுக்காகவும், 850 ஏக்கர் கா…

  4. (எம்.எப்.எம்.பஸீர்) கிளிநொச்சி - பளை பிரதேசத்தில் , இரவு நேர உணவகம் ஒன்றுக்குள் நுழைந்த குழுவொன்று, அவ்வுணவகத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தாக்குதல் நடத்திய குழுவில் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அடங்குவதாக அவர்கள் கேசரிக்கு தெரிவித்தனர். இந்நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரி எனக் கூறப்படும் நபர் தாக்குதல் நடாத்தும் காணொளியும் கேசரிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. கையில் தடியுடன், இந்த உணவகத்தின் காசாளர் உள்ளிட்டவர்கள் இதன்போது தாக்கப்படுகின்றமை சி.சி.ரி.வி. பதிவுகள் ஊடாக வெளிப்பட்டுள்ள நிலையில், அந்த தாக்குதலானது, கடந்த நவம்பர் 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்ய முடிந்தது. இ…

  5. சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். அனைத்து புலம்பெயர்ந்த இலங்கையர்களும் தங்கள் வருமானத்தை திருப்பி அனுப்ப சட்ட வழிகளை மட்டுமே பயன்படுத்துமாறும் மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். அதிகாரபூர்வமற்ற வழிகள் மூலம் வரும் பணப்பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும், நடைமுறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஜித் நிவார்ட் கப்ரால் கடந்த வாரம் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமான வழிகளில் பணம் பரிமாற்றம் மேற்கொள்வோருக்கான எச்சரிக்கை | Virakesari.lk

  6. ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு வேறு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை என பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகர் மத்தியில் அமைந்துள்ள ஆரிய குளம் , யாழ்.மாநகர சபையினால் புனரமைக்கப்பட்டு , குளத்தினை சூழவுள்ள பகுதிகள் அழகாக்கப்பட்டு இன்றைய தினம் வியாழக்கிழமை " ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல்" என திறந்து வைக்கப்படவுள்ளது. அந்நிலையில் , அது தொடர்பில் பேராசிரியர் குறிப்பிடும் போதே, அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரமடைந்த காலத…

  7. தொலைந்துபோன அத்திபட்டிபோல 20 வருட காலமாக மட்டக்களப்பு, வாழைச்சேனை முஸ்லிம்களின் புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டுவர பாராளுமன்ற விவாதமொன்றை உருவாக்கிய நசீர் அஹமட், ஹரீஸ் எம்.பிக்களுக்கு நன்றிகள் - வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் தாயிப் மாளிகைக்காடு நிருபர் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ச அவர்கள் வாழைச்சேனை பிரதேச செயலக விவகாரமான ஆவணங்கள் கோப்புகள் அமைச்சில் காணவில்லை. தேடியும் கிடைக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் கூறியதன் மூலம் பிரபல்யமான நகைச்சுவை காட்சியான வைகைப்புயல் வடிவேலுவின் கிணற்றை கானவில்லை என்று தேடுவது போன்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது. இதன் மூலம் வாழைச்சேனை முஸ்லிம் மக்களின் தலையெழுத்து மாறியுள்ளது உண்மைய…

    • 2 replies
    • 673 views
  8. ஒரு அரசாங்கத்தை ஊடகங்களினால் பாதுகாக்க முடியாது- மஹிந்த ஆட்சி மாற்றத்தை ஊடகங்களில் ஏற்படுத்த முடியுமே தவிர ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்களுக்கு அசிதிசி காப்புறுதி திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊடகங்களினால் அரசாங்கம் ஒன்றை உருவாக்கவும் முடியும். அதேசமயம் அரசாங்கத்தை வீழ்த்…

    • 0 replies
    • 322 views
  9. சந்திரிகா அரசாங்கத்தில் ஊடகங்களிற்கு நான் பல தகவல்களை வழங்கினேன்- பிரதமர் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை பல தகவல்களை தான் ஊடகங்களிற்கு வழங்கியதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் அரசாங்க கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது முன்னாள் ஜனாதிபதி என்னை நிருபர் என அழைப்பார் என பிரதமர்தெரிவித்துள்ளார். நான் தெரிவிக்கும் செய்திகள் ஆளும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் செம்மைப்படுத்திய பின்னர் அவற்றை வழங்கினேன் எனவும் பிரதமர்தெரிவித்துள்ளார். ஊடகங்க…

    • 0 replies
    • 235 views
  10. பாட்டலிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வாசிப்பு போலியான சாட்சிகளை உருவாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வாசிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய திலும் துசித்த குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாட்டலிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வாசிப்பு (adaderana.lk)

    • 0 replies
    • 252 views
  11. (எம்.நியூட்டன்) யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்கங்களின் சம்மேளன பிரதி நிதிகளுக்கு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவருக்குமிடையிலான சந்திப்பு யாழ். இந்திய துணைத்தூதுவராலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் அன்ன ராசா, யாழ். மாவட்ட மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் பாதிக்கப்படுகின்றார்கள். அத்துமீறிய சட்டவிரோத இந்திய மீனவர்களின் பாதிப்பு எங்களுடைய மீனவ பரம்பலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு மீனவ சமூகத்தில், மீனவர்கள் கூலி தொழிலுக்கு செல்ல வேண்டிய துர்ப்பா…

  12. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாக கட்டமைப்பில் கோரளைப்பற்று மத்தி, பிரதேச செயலகம் மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுகளில் முஸ்லிம் கிராமங்களின் எல்லைகள் விஸ்தீரணங்களில் திட்டமிட்ட முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி. நஸிர் அஹமட்டினால் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் எம்.பி. க்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யுமான சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையில் (பிள்ளையான்) தர்க்கம் ஏற்பட்டது. கோரளைப்பற்று மத்தி ப…

  13. டாக்டர் நடராஜா முகுந்தனும் அவரது குடும்பத்தினரும், இலங்கையில் சித்திரவதைகளை அனுபவித்தனர் பிரித்தானியாவில் இருந்து அவர்கள் நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டு இருந்தனர். https://www.theguardian.com/uk-news/2021/nov/30/home-office-u-turn-on-sri-lankan-scientists-asylum-claim

  14. (நா.தனுஜா) புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் திரிபு ஏனைய திரிபுகளை விடவும் வீரியம் கூடியதாக இருக்குமாயின், இலங்கையின் தற்போதைய நிலைவரம் எதிர்வருங்காலத்தில் மிகமோசமடையக்கூடும். ஆகவே மிகமோசமான நிலையைக் கையாள்வதற்கு இப்போதிருந்து தயாராகவேண்டும். அதன் ஓரங்கமாக வெளிநாடுகளிலிருந்து வருகைதருபவர்களுக்கான பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தப்படவேண்டும் என்று சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் வைத்தியநிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா 19 வைரஸின் ஒமிக்ரோன் திரிபு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதுடன் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கையாள்வதற்குத் தயாராக வேண்டியதன் அவசியம் குறித்து தனது உத்தியோகபூர்வ டுவி…

    • 2 replies
    • 352 views
  15. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜூநாத் சிங் ஆகியோருக்கான சந்திப்பு நேற்றைய தினம் இந்திய பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அச்சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தரப்பின் உயர்மட்ட ஒத்துழைப்பை மீளாய்வு செய்வது தொடர்பில் உயர்ஸ்தானிகரும், பாதுகாப்பு அமைச்சரும் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டார்கள். இலங்கை கடற்பரப்பில் நியூடய்மன் மற்றும் எக்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளானபோது தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கும், சமுத்திர பா…

  16. மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் சுவீகரிக்கும் செயற்பாட்டை கைவிட வேண்டும் - வினோ நோகராதலிங்கம் ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் மன்னார் ,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் சுவீகரிக்கின்ற செயற்பாட்டை உடனடியாக கைவிட வேண்டுமென சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாத…

  17. தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய இரு சிங்கள அமைச்சர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடிய இரு அமைச்சரவை அமைச்சர்களின் தனிப்பட்ட பணிக்குழுவை சேர்ந்த இரு செயலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சட்டம், ஒழுங்கு மற்றும் கடற்றொழில் அமைச்சர்களின் செயலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலை புலிகளினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத் தொகை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மாதம் 25 ஆம் திகதி தோண…

  18. முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளது என்கின்றது இராணுவம் அண்மையில் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத் தலைமையகம், ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் கூறியுள்ளது.இலங்கை இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்களுடன் பேசியவாறு பின்னோக்கிச் சென்றவேளை, ஊடகவியலாளர் தனது மோட்டார் சைக்கிளின் மீது மோதி, கம்பி வேலி பொருத்தப்பட்டிருந்த இடத்தில் விழுந்தார் என இராணுவம் கூறியுள்ளது.இதனை அடுத்து அங்குவ…

  19. காணி உரிமையாளர்கள் – ஆளுநர் சந்திப்பு திடீர் இரத்து December 1, 2021 வடக்கு மாகாண ஆளுநருடன் மாதகல் காணி உரிமையாளர்கள் சந்திப்பதற்கு இன்று ஏற்பாடுகள் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் திடீரென அந்த சந்திப்பை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்தால் காணி உரிமையாளர்களுக்கு இன்று மதியம் 2 மணிக்கு வடமாகாண ஆளுநர் காணி உரிமையாளர்களை சந்திக்கவிருப்பதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென அந்த சந்திப்பை ரத்து செய்யப்பட்டதாகவும் நாளை காலை 8 மணிக்கு அந்த சந்திப்பு நடைபெறும் எனவும் ஒரு சில காணி உரிமையாளர்களுக்கு பிரதேச செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நி…

  20. ‘நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ – வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம் December 1, 2021 காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் கூறியதாக வெளியான செய்தியை அடுத்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும்,காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந…

  21. தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா் மனோகணேசன் தொிவித்துள்ளாா்..”டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும் அவா் தொபிவித்துள்ளாா். இதுபற்றி கூட்டணி தலைவர் மனோ மனோகணேசன் ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது, 2015 வருடம் ஜூன் 3ம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சி தலை…

  22. யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையின் அதிபர் தாக்கியதில் மாணவர் ஒருவரின் காதின் செவிப்பறை பாதிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், காதில் ஏற்பட்ட வலி காரணமாக மாணவன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு மருத்துவ சோதனையில் மாணவனின் ஒரு காதின் செவிப்பறை …

  23. புத்தூர் பிரதேச சபை உறுப்பினர் , தனங்களப்பில் சடலமாக மீட்பு! December 1, 2021 யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தூர் வடக்கு , ஆவரங்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாலன் என்பவரே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஆவரங்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனங்களப்பு பகுதியில் தென்னம் தோட்டம் ஒன்றினை பராமரித்து வருவதுடன் தோட்டத்துடன் இணைந்த வீட்டில் வசித்தும் வந்துள்ளார். அந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரின் நடமாட்டத்தை அயலவர்…

  24. இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும்-யோ.கனகறஞ்சினி Posted on November 30, 2021 by நிலையவள் 24 0 இராணுவத்தினரையும், இலங்கை அரசையும் நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியை கேட்டு தான் போராடி கொண்டிருக்கின்றோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகறஞ்சினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் எதற்கு பயன்படுத்த போகின்றது என்பதனை அரசாங்கம் தான் அதனை ஏற்று கொள்ள வேண்டும்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இழப்பீட்டிற்காகவோ அல்லது வாழ்வாதாரத்தை கொடுப்பத…

  25. அம்மணமாய் பாடசாலைக்கு செல்லும் அவல நிலையை எடுத்துச் சொல்லுங்கள். வடமாகாண ஆளுனரே! அரசாங்க அதிபரே! மனித உரிமை ஆர்வலர்களே! தொண்டு நிறுவனங்களே! இது உங்களின் கவனத்திற்கு! பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் #இடுப்பளவு #வெள்ளநீரில் #உடைகள் #ஏதுமின்றி #நடந்து #வந்து #கரையை சேர்ந்து, A9 வீதியோரத்தில் நின்று பாடசாலைக்கு தயாராகிச் செல்கின்றனர். தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடிகாமம் J/327 கிராமசேவையாளர் பிரிவு கிராமம் தொடரும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. பல வருடங்களாக நாம் யாரை எல்லாமே கேட்டு விட்டோம் இன்னும் ஒன்றுமில்லை. கிராம மீள் எழுச்சி என்கிறார்கள், நகர அழகுபடுத்தல் என்கிறார்கள் ஆனால் நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. எந்த அரசியல்வாதிகள…

    • 3 replies
    • 586 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.