ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு சென்றுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகசி இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் வடமாகாண சபை செயற்படுவதற்கு அரசாங்கம் தடையாவுள்ளமை போன்ற பல்வேறு விடயங்கள் உரையாடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக உதவியளிக்க வேண்டும் என கோரவுள்ளதாகவும் மகஜர் ஒன்று கையளிக்கப்படும் என்றும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை யசூசி அகாசி யாழ்ப்பாணம் செல்வதற்கு கோரியபோதும் அரசாங்கம் அனுமதி வழங்…
-
- 4 replies
- 612 views
-
-
செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம்பகுதியில் அமைந்துள்ள பௌத்த சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் இன்று (01) கைதுசெய்துள்ளனர். கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால் வணங்கப்பட்டு வந்த புத்தர் கோவில் ஒன்றில் இருந்த புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 1.5அடி உயரம் கொண்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு உடப்பு பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய ஒருவர் கொக்குளாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். …
-
- 4 replies
- 801 views
-
-
கடந்த 2ம் திகதி இணையத்தளமொன்றில் எமது கட்சி ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவுக்கு ஆதரவாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட போகின்றது என்றும் அதற்காக இராஜபக்சவிடமிருந்து பெருந்தொகைப் பணத்தினைப் பெற்றிருப்பதாகவும் அவதூறான செய்தி ஒன்றினை திட்டமிட்டுப் பரப்பியிருக்கின்றது. இச்செய்தியினை எமது கட்சி வன்மையாக மறுப்பதுடன் இது போன்ற மக்களைக் குழப்புகின்ற செய்திகளை வெளியிடுகின்றமைக்கு நாம் எமது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். நாம் இத் தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாட்டினைத் தெளிவாக ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தோம். ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வென்றும், தமிழ் மக்களிற்கெதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள், போர்க் குற்றங்கள் என்பவற்றிற் கெதிராக விசாரணை எதுவும் நடாத்தப் போவதி…
-
- 4 replies
- 482 views
-
-
தனிச் சிங்களச் சட்டமே நாடு பிளவுபடக் காரணம் : அமைச்சர் மனுஷ நாணயக்கார! 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நமக்கு நாம் மட்டுமே என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நல்லிணக்கம் மனிதநேயத்தின் ஆரம்பம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் நோக்கத்திற்காகவும் பொருளாதார நோக்கத்திற்காகவும் இனவாதமும் மதவாதமும் …
-
- 4 replies
- 495 views
-
-
யுத்தத்தில்தான் கைவிட்டோம்; கையெழுத்தாவது போடமாட்டோமா? இதுதான் தமிழனின் தலையெழுத்தா? தமிழர்களின் போராட்டங்கள் என்பது வாயாலும், சமூகவலைத் தளங்களில் போடப்படும் பதிவுகளோடும்தான் நின்று விடுகின்றதா என்கின்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கின்றது. அன்பான தமிழ் மக்களே எங்களிடம் சிறந்த பேச்சுத்திறனும், அபூர்வமான நடிப்புத்திறனும் உண்டு அதனால் தான் நாம் எமது இனத்தினை இழந்து, கனவை சிதைத்து நிற்கின்றோம். இல்லையாயின் எங்கள் இதயத்தின் இலட்சியமான விடுதலைப் போராட்டத்தை இழந்து இன்று அரசியல் அநாதைகளாக நின்றிருக்க மாட்டோம்.வெளியிலிருந்து பேசுவதும் விமர்சனம் செய்வதும், எள்ளி நகையாடி மற்றவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்துவதிலும் நாங்கள் கில்லாடிகள். விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப்புலி…
-
- 4 replies
- 11.1k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 02 ஒக்ரோபர் 2015, 01:13.50 PM GMT ] வடமாகாணத்தின் பாரம்பரிய நிகழ்வான மாட்டு வண்டி சவாரி போட்டி மன்னார் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வில் வட மாகாணத்திலிருந்து பல போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். குறித்த நிகழ்விற்கு கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் இ.ரவிந்திரன் தலைமை தாங்குகின்றார். இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், சிறப்பு அதிதிகளாக மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சர் ரி.குருகுலராஜா, மற்றும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண அமைச்சர்களான பி.டெனிஸ்வரன், பி.சத்தியலிங்கம், பி.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்…
-
- 4 replies
- 548 views
-
-
மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானம் தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடு இன்று அறிவிப்பதாக தெரிவிந்திருந்த நிலையில், நேரடியாக பதிலை சொல்லாமல் மழுப்பல் நிலையினை கடைப்பிடித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், கடந்த இருநாட்களாக எழுப்பப்பட்ட பிரச்சினையை அடுத்து, இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி இன்று எஸ்.எம்.கிருஸ்ணா அறிக்கை வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்றுகாலை சபை கூடியபோது மேலவையில், திமுக உறுப்பினர் திருச்சி சிவா இந்தப் பிரச்சினையை எழுப்பினார். இதனையடுத்து இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையில் பிரபாகரன் பிறந்த பூர்வீக வீட்டுக்கு எந்த சேதமும் ஏற்பட்டுவிடாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிங்கள ராணுவம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பூர்வீக வீடு, இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை கடலோர கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்துதான் தனி ஈழப் போராட்டத்தை பிரபாகரன் தொடங்கினார். சிங்கள ராணுவத் தாக்குதலுக்கு பயந்து பெரும்பாலான மக்கள் இந்த கிராமத்தைவிட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியேறிவிட்டனர். பிரபாகரன் உறவினர்கள் உள்ளிட்ட சில குடும்பங்கள் மட்டுமே அங்கு தொடர்ந்து வசித்து வருகின்றனர். பிரபாகரனின் வீடு உள்பட வல்வெட்டித்துறை பகுதி முழுவதும் இப்போது இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் – பேராயர் by : Dhackshala மக்களின் நன்மைக் கருதி, ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு வெளிக்கொண்டுவர வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டார். நீர்க்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இவ்வேளையில், நான் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோளொன்றை முன்வைக்கிறேன். இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அரசியல் கட்சி பேதங்களைக் கடந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ…
-
- 4 replies
- 572 views
-
-
[size=5]மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது[/size] [size=4]பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி அகதிகள் முகாம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். பெருந்திரளான ஆதரவாளர்களுடன் அகதிகள் முகாமை முற்றுகையிட முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்டே வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைதினைத் தொடர்ந்து தொண்டர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சிலர் தீக்குளிக்க முயன்றதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பூந்தமல்லி கரையான் சாவடியில் அகதிகள் சிறப்பு முகாமில் செந்தூரன் என்பவர் கடந்த 6ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது விடுதலையை…
-
- 4 replies
- 822 views
-
-
யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் யாழில். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு! கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த 46வயதுடைய யோகராஜா மயூரதி என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மாலை 02மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு…
-
- 4 replies
- 404 views
- 3 followers
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு திட்டமிட்டவாறு நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடாத்தப்பட உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் சகல தலைவர்களையும் ஏனைய பிரதிநிதிகளையும் வரவேற்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உறுப்பு நாடு என்ற வகையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கிராம அபிவிருத்தி, இளைஞர் அபிவிருத்தி, சமூகப் பொருளாதார அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் கருத்துக்ளை பரிமாறிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=71650&categ…
-
- 4 replies
- 803 views
-
-
கடுதாசித் துண்டொன்றில் நாட்டை ஆட்சி செய்த காலம் மீண்டும் இந் நாட்டில் உருவாக இனிமேலும் யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபம் தேட முனையும் குழுக்களை இனங்காண்பது நாட்டை நேசிக்கும் சகலரதும் பொறுப்பாகுமெனவும் மஹிந்த தெரிவித்தார். நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பில் உரையாற்றிய போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜயதாச ராஜபக்ச உட்பட இலங்கை நீதித்துறையின் 14 சட்டத்தரணிகள் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள…
-
- 4 replies
- 358 views
-
-
ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே -வாசுதேவ நாணயக்கார ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே. இதனை யாரும் மறுக்க இயலாது. எனவே வன்னியில் காணாமல் போன தமிழ்மக்களின் நிலை கண்டறியப்பட வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள் சாட்சியமளித்துள்ளனர். இதனை இராணுவத் தரப்பினர் மறுக்கின்றமை முழுப்பூசினிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் வாசுதேவ தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஸ்தாபிக்கப்பட்டு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட …
-
- 4 replies
- 616 views
-
-
குறிபார்த்து சுடுவதில் வல்லவரான சீனப்பிரஜை கொழும்பில் கைது. முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்க திட்டமா? குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீன பிரஜைஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தே கத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நி மா சி ரென் என்ற சீனரே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பிலுள்ள முன்னணி கசி னோ நிலையம் ஒன்றில் பணியாற்றியிருந்தார். முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றவே தாம் இலங்கை வந்ததாக குறிப்…
-
- 4 replies
- 356 views
-
-
கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் தீ! (படங்கள்) கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த பனாமா நாட்டுக்கு சொந்தமானதென கருதப்படும் சரக்கு கப்பலே இவ்வாறு தீ பரவலுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் கடற்படை குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததுள்ளதாக தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/18719
-
- 4 replies
- 1.6k views
-
-
செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு July 2, 2021 Share 24 Views செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு – அரச அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய அளவில் காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த செயற்பாடுகள் செல்வந்தர்களாளேயே இடம்பெறுவதாகவும் இதற்கு அரச அதிகாரிகள் உடந்தையாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வதற்கு ஒரு துண்டு காணி கூட இல்லாத சுமார் 3750 ஏழைக் குடும்பங்கள் தமக்கு வாழ்விடத்திற்கு ஒரு துண்டு காண…
-
- 4 replies
- 629 views
-
-
. வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிப்பதற்கு விசேட குழு- ஜனாதிபதி தகவல்; வீரகேசரி நாளேடு 11/27/2009 9:13:41 PM - வெள்ளை வான் கடத்தல்கள், ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். "அரசாங்கம் என்ற ரீதியில் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்பினை நான் ஏற்றுக் கொள்கின்றேன். என்னைப் பொறுத்தவரை நாட்டு மக்கள் சகலரும் ஒன்றுதான். யாருக்காவது பிரச்சினையிருந்தால் அதனை தீர்ப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்" என்றும் அவர் கூறினார். அலரி மாளிகையில் நேற்று ஊடக நிறுவனங…
-
- 4 replies
- 615 views
-
-
ஜி.எல்.பீரிஸின் அமைச்சு பதவியில் மாற்றம் – வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு வெளிநாட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், அவர் மீண்டும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1272915
-
- 4 replies
- 404 views
-
-
இலங்கையிடம் இருந்து போர் இரகசியங்களைப் பெறும் 20 நாடுகள்! [Tuesday 2014-08-12 11:00] இலங்கையிடமிருந்து போர் இரகசியங்களை 20 நாடுகள் பெற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கொடிய பயங்கரவாதிகளை இலங்கை படையினர் தோற்கடித்துள்ளனர். போர் தந்திரோபயங்கள் மற்றும் போர் இரகசியங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவத்தினர் இலங்கைக்கு விஜயம் செய்த வண்ணம் இருக்கின்றார்கள். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பிலான பாடங்களை கற்றுக்கொள்ள பல நாடுகள் விரும்புகின்றன. சர்வதேச போர்ச் சட்டங்களுக்கு புறம்பாகாத வகையில் போர்த் தந்திரோபாயங்களை படையினர் பயன்படுத்தியிருந்தனர். …
-
- 4 replies
- 502 views
-
-
சென்னையில் வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பாரிய கண்டனப் பேரணி [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 07:41 ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுலமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ம.தி.மு.க.சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சென்னை மன்றோ சிலையில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது. பேரணிக்கு தலைமை தாங்கி ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நடந்தே சென்றார். அவரை தொடர்ந்து ம.தி.மு.க.தொண்டர்கள் கையில் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கறுப்புச் சேலை அணிந்த பட…
-
- 4 replies
- 1.2k views
-
-
வட மாகாணசபைக்கே அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மாகாணசபைகளில் வட மாகாணசபைக்கே அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒப்பீட்டளவில் ஏனைய மாகாண சபைகளுக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கீடுசெய்யப்பட்;டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையின் நடவடிக்கைகளுக்கு ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபை சட்டத்தின் கீழ் முதலமைச்சருக்கு தனியாக நிதியம் ஒன்றை ஆரம்பிக்க முடியாது எனவும், இது சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial…
-
- 4 replies
- 451 views
-
-
யாழில் மீண்டும் பௌத்த தர்மப் பாடசாலைகள்! வெள்ளி, 11 பெப்ரவரி 2011 21:23 யாழ். மாவட்ட மாணவர்களுக்கு பௌத்த தர்மத்தை போதிக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக வலிகாமத்தில் நான்கு இடங்களில் பௌத்த தர்ம பாடசாலைகள் அமைக்கப்பட உள்ளன. மானிப்பாய், கைதடி, அச்சுவேலி, புத்தூர் ஆகிய இடங்களில் இப்பாடசாலைகள் நிறுவப்பட இருக்கின்றன. அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் ஊடாக அரசினால் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ். நாக விகாரையில் இந்நடவடிக்கைகள் சம்பந்தமான மந்திராலோசனைக் கூட்டம் ஒன்று பௌத்த காங்கிரஸ் தலைவர் எகத் சுமதிபால தலைமையில் இடம்பெற்று உள்ளது. இத்தகவல்களை யாழ். மாவட்ட தமிழ் - பௌத்த சங்க தலைவர் அ.ரவிக்குமார் வழங்கினார். tamilcnn
-
- 4 replies
- 665 views
-
-
ஐ.நாவுக்கு ஆதரவாக ஏன் தமிழினம் ஓரணியில் திரளக் கூடாது? வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் அநியாயமாகப் பலியாகிய பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற உண்மையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. உண்மையில் வன்னி இறுதிக் கட்டப் போரில் ஒலித்த அவலக் குரல்கள் அந்த மக்களுடன் மரணித்து விடவில்லை; சர்வதேசத்தின் மனச்சாட்சியை உசுப்பிக் கொண்டிருப்பதின் சாட்சியாகவே நிபுணர் குழு வடிவமெடுத்துள்ளது. இறுதிக் கட்டப் போரின்போது கனத்த மனதுடன் மனதுக்குள் அழுது புலம்பும் நிலையிலேயே தமிழ் மக்கள் இருந்தனர். அந்தளவுக்கு வெற்றிக் கோஷங்கள் தமிழ் மக்களை வாய் மூடி மௌனிகளாக்கியது. இன்றும்கூட அதே நிலைதான். ஆ…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
பெருமளவான புலி உறுப்பினர்கள் இன்னும் கைது செய்யப்படவுள்ளனர் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றிக் குறிப்பிடாமல் நாட்டின் பாதுகாப்புக் குறித்து பேச முடியாத நிலை இன்னும் தொடர்வதாக பிரதமர் டி.எம்.ஜயரத்தின தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விட்டு வெளிநாடு சென்றுள்ள மற்றும் இன் னும் பாதுகாப்புப் படையினரிடம் சிக்காது மறைந்து வாழ்கின்ற புலனாய்வு மற்றும் தாக்குதல் படை உறுப்பினர்கள் முன்னைய விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும்பிரேரணையில் கலந்து கொண்டு நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே…
-
- 4 replies
- 996 views
-