Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவுடன் டீல் பேச பிரதிநிதிகளை அனுப்பிவைத்தது அரசு -ஜே.வி.பி. தாயக, இலங்கைச் செய்திகள்| 10. 03. 2013, ஞாயிற்றுக்கிழமை, தமிழீழ நேரம் 8:53 jvp_001ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் இலங்கை அதில் தோல்வியைத் தழுவும் என ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது. இலங்கை தொடர்பில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சிப்பதாக ஜே.வி.பி நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் பழங்குடி அரசாங்கங்களைப் போன்று செயற்படுகின்றது. இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கவில்லை. நவநீதம்ப…

  2. வீரகேசரி நாளேடு 3/5/2009 11:49:18 PM - பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகள், பாகிஸ்தானில் எமது கிரிக்கெட் வீரர்களைப் பணயக் கைதிகளாக வைத்து, வடக்கில் மேற்கொள்ளப் படும் தாக்குதல்களை நிறுத்த முயற்சித்திருக்கலாம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார். பாகிஸ்தானில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீதான தாக்குதலுடன் விடுதலை புலிகளுக்கு தொடர்பில்லை என உறுதியாக கூற முடியாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் …

  3. இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் எலியோட் என்கில் கோரிக்கை விடுத்துள்ளர். இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கு, எலியோட் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே அமுல்படுத்த தயக்கம் காட்டி வருவதாகவும், பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு அமெர…

    • 2 replies
    • 487 views
  4. தமிழீழம் - பலஸ்தீனம் ஒரு ஒப்பீடு தமிழீழம் - பலஸ்தீனம் ஒரு ஒப்பீடு எனும் தரவுகளை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ளது. பலஸ்தீனத்தின் மீது காட்டும் கரிசனையை சர்வதேசம் ஈழத் தமிழர்கள் விடயத்தில் காட்ட மறுக்கும் நிலையில், இந்த இரு தேசங்கள் தொடர்பான ஒரு ஒப்பீட்டு பார்வை இது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

    • 0 replies
    • 847 views
  5. சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரனுக்கு கொழும்பு மாவட்ட நீதவான் ஜெகான் பலப்பிட்டிய மூன்று மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பித்துள்ளார். தெமட்டக்கொடையில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த மாதம் 26 ஆம் நாள் தொடக்கம் தடுத்து வைக்கப்பட்டிருந்த என்.வித்தியாதரனை குற்றத்தடுப்பு காவல்துறையினர் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுப்படி வித்தியாதரன் மீது மேலும் விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறையினர் நீதிவான் ஜெகான் பலப்பிட்…

  6. பெசில் மேல் நீதிமன்றில் விடுத்த கோரிக்கை! கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2,992 மில்லியன் நிதியை செலவிட்டு திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டு உதவி வழங்கியதன் ஊடாக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க வாதி தவறிவிட்டார் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் இருந்து பிரதிவாதியின் அறிக்கையை அழைக்காமல் தன்னை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறு கோரி பெசில் ராஜபக்ஷ தனது சட்…

  7. ஈழத்தமிழர் முகாமின் அவல நிலை ஈழத்தில் போர் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர் இது இன்றைய நிலை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போல போர் கடுமையாக நடைபெற்ற போது இலங்கைத் தமிழ் மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க இயலாமல், உயிர் வாழவும் இயலாமல் ஏதிலியராகப் பலர் தமிழகத்திற்கு வந்தனர் அவர்களில் நூறு குடும்பத்தினர் விருத்தாசலம் வந்தனர். அவர்களுக்குக் கடலூர் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்குப் பின்புறமுள்ள இடத்தில் ஒரு குடும்பத்திற்கு பத்தடி நீளம் பத்தடி அகலமுள்ள தற்காலிகக் கொட்டகை அமைத்துத் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். நூறு குடும்பங்களில் ஒரு சில குடும்பங்கள் மீண்டும் நாட்டிற்கு சென்றுவிட ஒரு சிலர் …

  8. இலங்கை முஸ்லிம்கள் நீதி கோரி ஜெனிவா செல்ல முயற்சி! - ஆதாரம் திரட்டும் பணியில் புத்திஜீவிகள் தீவிரம்!! இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் சிங்கள இனவாதக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ள முஸ்லிம் இராஜதந்திரிகள் பலர், அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் நிலையில், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கமும், அரசிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில…

  9. முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது – ஏனைய சமூகங்கள் மீது திணிக்க முடியாது- மல்கம் ரஞ்சித் கருத்து முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் ஆனால் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அதனை அர்த்தப்படுத்த முடியாது எனபேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லீம் கருதக்கூடாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தனவுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளா…

    • 4 replies
    • 564 views
  10. சாத்தியமில்லாது ஏன் போனது வடக்கின் பொருளாதார மத்திய நிலையங்கள் தொடர்பில் அமைச்சர் ஹரிசன் விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வட­மா­கா­ணத்தில் பொரு­ளா­தார மத்­திய நிலை­யங்­களை அமைப்­ப­தற்­கான அனைத்து ஏற் பா­டு­களும் நிறை­வு­செய்­யப்­பட்­ட­போதும் வடக்கு மாகாண சபையினருக்கும் பாரா­ளு­மன்ற பிரதிநிதிக­ளுக்கும் இடையில் நிலவும் பிரச்­சி­னை­களால் அது சாத்­தி­ய­மில்­லாது போன­தாக கிரா­மிய பொரு­ளா­தா­ர ­அ­லு­வல்கள் அமைச்சர் ஹரிசன் தெரி­வித்தார். வடக்கு மாகா­ண­ ச­பைக்கும் வட­மா­கா­ணத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் நிலவும் இழு­ப­றி­களே வடக்கின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்கு தட…

  11. தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்.! அவர்களின் ஊடக அறிக்கை பின்வருமாறு நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில் தகுந்த பொறிமுறையை இனங்கண்டு, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 8000 கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமாடன முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கரிசனை காட்டத் தொடங்கி இருக்கி…

  12. 01/04/2009, 17:23 [ தமிழ்நாடு செய்தியாளர்] தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர்களில் நால்வர் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் தமிழ்நாடு செங்கல்பட்டிலுள்ள ஈழத்தமிழர் சிறப்பு முகாமிலுள்ள 4 பேர் கடந்த 30-03-2009 முதல் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். செங்கல்பட்டில் ஈழ அகதிகள் சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. தமிழகத்தில் ஏதேனும் வழக்கில் சிக்கியிருக்கக் கூடிய ஈழ அகதிகள், வழக்கிலிருந்து ஒட்டு மொத்தமாக விடுதலை ஆனாலோ அல்லது பிணை விடுதலைப் பெற்றாலோ அவர்கள் சிறப்பு முகாம் என்ற பெயரில் உள்ள சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்கள் வெளி உலகத்தினருடன் தொடர்பு கொள்ளவோ, வெளியே செல்லவோ முடியாது. வழக்கறிஞர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே அவர்களை சந்திக்க இயல…

  13. கடற்படைத் தளபதிக்கு பல்வேறு தரப்புக்களும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள், ஊடக அமைப்புக்கள், பிராந்திய ஊடக அமைப்புக்கள் சர்வதேச ஊடக அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டிருந்தால் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் கடும் க…

  14. வணக்கம், கனடா டொரண்டோ பெரும்பாகத்தில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஆக 29,435 தானாம்! தமிழர் புள்ளிவிபரம் பற்றிய உண்மை எனும் தலைப்பில் டொரண்டோ ஸ்டார் பத்திரிகையில் ஓர் பதிவு எழுதப்பட்டு உள்ளது. இங்கு கனடா புள்ளிவிபர திணைக்கள புள்ளிவிபரம் ஆதாரமாக காட்டப்பட்டு உள்ளது. டொரண்டோ ஸ்டார் பத்திரிகை 200,000 தமிழர்கள் டொரண்டோ பெரும்பாகத்தில் வாழ்கின்றார்கள் என்று வழமையாக கூறிவருவதை கிண்டல் செய்து இப்படி ஓர் பதிவு இடப்பட்டு உள்ளது. கனடா புள்ளிவிபர திணைக்களம் எப்படி சனத்தொகை கணக்கு எடுக்கின்றது, அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்று பார்த்தால் பலவிதமான பிரச்சனைகள் இருக்கின்றது. எனினும், கனேடிய புள்ளிவிபரத் திணைக்கள ஆதாரத்தின் அடிப்படையில் நம்மவரை நலினப்படுத்த எடுக்கும் முயற்சி…

  15. 19 இலங்கையர்களை நாடு கடத்தும் முயற்சியை கைவிட்டது துபாய் விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவர்களின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ நா மன்ற அகதிகளுக்கான அமைப்பின்( யு என் எச் சி ஆர்)அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வமான தகவல் வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். புகலிடம் தேடி வருபவர்களுக்கு அகதி தஞ்சம் அளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் பாதுகாப்ப…

    • 0 replies
    • 435 views
  16. சமஷ்டிக் கனவு நிறைவேறப் போவதில்லை (எம்.சி.நஜிமுதீன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதக் கொள்கையிலிருந்து இன்னும் மாற்றமடையவில்லை. அக்கொள்கையிலிருந்து கூட்டமைப்பு மாற்றமடையாத வரையில் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார். இதேவேளை சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து பல போராட்டங்களை முன்னெடுத்தது. இருந்தபோதிலும் அன்று முதல் இன்று வரை சிங்கள மக்கள் சமஷ்டியை ஏற்றுக்கொள்வதற்குத் தயாரில்லை. ஆகவே அவர்கள் எதிர்பார்ப்பது போல் சமஷ்டிக் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்றார். அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்…

  17. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தியும், உடனடி போர் நிறுத்தத்திற்கு சிறீலங்கா அரசுக்கு டென்மார்க் அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கேட்டும் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தமிழ் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடருகின்றன. நேற்றைய போராட்டத்தித்ல பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதையடுத்து, இன்றைய போராட்டத்திலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர். இன்று காலை 10:00 மணியளவில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஆரம்பித்தபோது டெனிஸ் ஊடகங்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன http://www.pathivu.com/news/1254/54//d,view.aspx

    • 5 replies
    • 769 views
  18. ஞானசாரர் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மட்டக்களப்பு விஜயம் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் மட்டக்களப்பிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று மேற்கொண்டுள்ள குறித்த விஜயத்தில் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் ஞானசாரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்தனர். அங்கு, மங்களராம விகாராதிபதியும் கிழக்கு மாகாண பிரதி பிரதம சங்கநாயக்கருமான அம்பிட்டிய சுமனரத்ண தேரருடன் பேச்சுவார்த்தை நடாத்தினர். அங்கு கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையு…

  19. முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையில் அகோர எறிகணைத் தாக்குதலை தொடங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  20. அனைத்து இந்திய மீனவர்களுக்கும் விடுதலை - அரசாங்கம் அறிவிப்பு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் கீழ் விடுதலை செய்வதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பை ஊடுறுவும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் தடுப்பு காவலில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிரியங்கள்ளிய நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தேவையான வள்ளங்கள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் வழங்கல் மற்றும் 10 இலட்சம் ரூ…

  21. 1985ம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நாட்டிலே ஏற்பட்ட புரையோடிய யுத்த சூழ் நிலைகளினால் வடகிழக்கில் முஸ்லிம்கள் எதிர் நோக்கிய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக வடகிழக்கில் முஸ்லிம்கள் இழந்துள்ள பூர்வீக நிலங்களை திருப்பி சட்டரீதியான ஆவணங்களுடன் திருப்பி கொடுக்கின்ற பட்சத்தில் அது முஸ்லிம்களுக்கு வடகிழக்கில் ஏற்படுத்தப்படுகின்ற நிரந்தர தீர்வாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்( PLOTE-DPLF) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல உயர்தர வகுப்பிற்காக தமிழ் பாட ஆசிரியருமான அமல் என அழைக்கப்படும் வியாழேந்திரன் உடனான நேர்காணலின் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் பிரிக்கப்பட்டிருக்கின்ற வடகிழக்கானது மீண்டும் இண…

    • 0 replies
    • 236 views
  22. பிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகமாக செயற்படும் தமது குடும்ப வீட்டினை மீள ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக மக்கள் முன்னேற்றக்கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிவான் இந்த உத்தரவினை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமது குடும்ப சொத்தாக பரம்பரைபரம்பரையாக தாங்கள் வசித்துவந்த வீட்டிற்குள் கடந்த 30வருடமாக தாங்கள் செல்லமுடியாத நிலையிருந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி…

    • 40 replies
    • 4.7k views
  23. சொந்த நாட்டிற்கு செல்லமுடியாமல் பல நாட்களாக அகதியை போல் கைவிடப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்கள்! By கிருசாயிதன் இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் பணிப் பெண்கள் இலங்கை திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கவனிப்பாரற்ற நிலையில் கொரோனாவினால் தொழில் வாய்ப்பை இழந்து சொந்த நாட்டிற்கு செல்லமுடியாமல் பல நாட்களாக அகதியை போல் வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்னால் காத்துக் கிடப்பதாக அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.எனினும், குவைத்திற்கான இலங்கை தூதரகம் இவர்களை கண்டுகொள்ளாது, கைவிட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய பங்காளிகளான வெளிநாட்டு வீட்டுப் பணிப் பெண்களின் இந்த நிலை…

    • 1 reply
    • 550 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.