ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
2009ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இலங்கையின் வடக்கில் முள்ளிவாய்க்கால்வரை கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூர்ந்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் வழங்கப்படும் என்று இலங்கை அரசின் புலனாய்வுத்துறையினர் வன்னியில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக் களுக்கு எந்தத் தடையும் கிடையாது என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆகுதியான உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளிலும் முள்ளிவாய்க்…
-
- 2 replies
- 447 views
-
-
சிறுபான்மை மக்களுக்கு அநீதி தேர்தலுக்கு அவசரம் வேண்டாம் எல்லை நிர்ணயக்குழு அறிக்கை தொடர்பில் மு.கா. த.மு.கூ., ஈ.பி.டி.பி., ந.ம.இ. கூட்டாக வேண்டுகோள் (ஆர்.ராம்) எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சரிடத்தில் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக வர்த்தமானி பிரசுரத்தை வெளியிட்டு புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடானது சிறுபான்மை இனத்தவருக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். அத்துடன், சிறு மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்ற வகையில் முன்னெடுக்கப்படும் ஜன…
-
- 0 replies
- 185 views
-
-
இந்தியப் புலனாய்வு வலையமைப்பின் தீவிர செயற்பாடுகள் உலகெங்கும் விரிந்து செல்கிறது. இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப் பந்தத்திற்கு அடுத்ததாகஇ இலங்கை விவகாரத்திலேயே இந்தியாவின் கரிசனை அதிகளவில் காணப்படுகிறது. இந்திய அமைதிப் படைக் காலத்தில்இ துணைக் குழுக்களோடுஇ தமிழர் கூட்டணியை இணைத்துஇ புதிய தமிழ் தலைமையொன்றினை உருவாக்கஇ “றோ’ மேற்கொண்ட சதிகளை இன்றைய நிலைவரத்தோடு ஒப்பீடு செய்யலாம். தமிழ் அரசியல் களத்திலிருந்து விடுதலைப் புலிகளின் வகிபாகம் முற்றாக அகற்றப்படும் நிலை ஏற்படப்போவதால்இ தமது அனுசரணையோடு புதிய அவதாரம் எடுத்தால்இதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் இருப்பு தக்க வைக்கப்படுமென்பதே இந்திய அரசியல் விஞ்ஞானிகளின் அறிவுரையாக இருக்கிறது. ஆனாலும்இ இந்திய இலங்கை ஒப்பந்த …
-
- 0 replies
- 758 views
-
-
நியூயார்க் : இலங்கையில் அப்பாவித் தமிழர்களின் நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாக ஐநா சபையின் நிபுணர்குழு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. ஐநா நிபுணர்கள் ஆனந்த் குரோவர், பிலிப் ஆல்ஸ்டன் உள்ளிட்டோர் இன்று நியூயார்க்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் நடைபெற்றுவரும் இனப்படுகொலை குறித்தும், அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச அளவில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அங்கு தற்போது மனிதாபிமானமற்ற போக்கு நிலவிவருவதாகவும், சண்டையில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், உண்மை நிலவரம் பற்றி இலங்கை அரசு இதுவரை எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்துவருவது கவலையளிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவி…
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்களை இனந்தெரியாத நபர்கள் உடைத்துச் சேதமாக்கி உள்ளனர். ஆலயங்களில் இருந்த மூல விக்கிரகம், நவக்கிரகங்கள் என்பவற்றை சேதப்படுத்திய இனந்தெரியாதோர் அங்கிருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றையும் அபகரித்துச் சென்றுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்தச் சம்பவங்களால் மட்டக்களப்பு நகரில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலையை நிறுவ நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இடம்பெற்ற இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை தோற்றிவித்துள்ளன. மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலயம், மாங்காடு பிள்ளையார் ஆலயம், கிரான் குளம் ஐயனார் ஆலயம், ப…
-
- 6 replies
- 653 views
-
-
கோதபாய கைது செய்யப்படுவாரா? முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சர்ச்சைக்குரிய மிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் நடத்தப்பட்டு வருகின்ற இந்த மிக் கொடுக்கல் வாங்கல் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த விசாரணைகள் தொடர்பில் கோதபாயவை கைது செய்வதற்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச் செயல் குறித்து கோதபாய ராஜபக்ஸவிடம் ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டி…
-
- 0 replies
- 429 views
-
-
உள்ளக பொறிமுறையென்பது இந்த நாட்டில் தோற்றுப்போயிவிட்டது – ஞா.சிறிநேசன் 23 Views உள்ளக பொறிமுறையென்பது இந்த நாட்டில் தோற்றுப்போயிவிட்டது. அதன் காரணமாக தமிழ் மக்கள் சர்வதேச ரீதியான நீதியை எதிர்பார்த்து நிற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்த போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் நடைபெற்ற போராட்டம் மௌனிக்கப்பட்டு 11ஆண…
-
- 0 replies
- 318 views
-
-
ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடா்பாக தமிழ்நாட்டு ஊடகங்களின் மௌனமும் புதுடில்லி ஆட்சியாளர்களின் தமிழ்நாட்டு மக்கள் மீதான ஏளனமும் தொடர்பாக அலசுகின்றார் தமிழ்நாட்டில் இருந்து அ.பொன்னிலா. "இராணுவச் சீருடையில் வந்த அவர்கள் மூன்றாவது பெண்ணின் உடைகளைக் களைந்தபோது நான் எனது கண்களை மூடிக்கொண்டேன். இம்மாதம் என் ஊதியத்தில் ஏதேனும் வெட்டு விழுமோ என்பதை நினைத்தபோது இறுக்க மூடிய கண்களை நான் கடைசி வரை திறக்கவே இல்லை." ஜேர்மனியின் நாஜி முகாமில் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போதோ, பாலஸ்தீனத்தில் இன்று அமெரிக்க, யூத அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவோ, ருவாண்டாவின் டுட்சிக்களுக்கு எதிரான ஹுட்டுக்களின் படுகொலைக் காலங்களின் போதோ எழுதப்பட்டதல்ல இந்தக் கவ…
-
- 0 replies
- 967 views
-
-
எதிர்க்கட்சிகளுக்கு நிமால் சிறிபாலடி சில்வா எச்சரிக்கை உறுப்பினர்களை தெரிவு செய்யாமல் எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவை அலட்சியப்படுத்துமாயின் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று சபைமுதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குவுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், இந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களை தெரிவுசெய்து அறிவிக்குமாறு, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் தரப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 19 உற…
-
- 2 replies
- 478 views
-
-
முஸ்லிம் பிரிவினை வாதிகளில் அந்த ஐவர் யார்? உயிர்த்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பங்களுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ள முஸ்லிம் பிரிவினைவாதிகள் ஐவரையும் அடையாளம் கண்டுக்கொள்வதற்கான விசாரணைகளை துரிதப்படுமாறுமாறு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா, பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு நேற்று (10) பணித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் தேடியறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆனைக்குழுவின் அம்பலப்படுத்தப்பட்ட காரணங்கள் அந்த சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் உடனடியாக விசாரணை…
-
- 0 replies
- 358 views
-
-
எண்ணப்படாத 3000க்கும் மேற்பட்ட சடலங்கள் மக்கள் செறிந்திருக்கும் வன்னிக்குள் சிதறிக்கிடக்கின்றன என்றும் ஏனைய மக்களும் இச்சடலங்களின் துர்நாற்றங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டுள்ளார்கள் என்றும் முள்ளிவாய்க்கால் தொண்டு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவமானது முள்ளிவாய்காலில் இருந்த சகல மருத்துவ வசதிகளையும் குறிவைத்து நடாத்திய தாக்குதல்களால் அழித்ததோடில்லாமல், மற்றும் இறந்துபோ அல்லது சரணடை என்ற இரண்டு தெரிவுகளைக் கொடுத்து மனிதாபிமானமற்ற கண்மூடீத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து மக்கள்மீது ஏவிவிட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட தொண்டு மருத்துவர் தான் இன்று சனிக்கிழமை காலை 100க்கும் மேலான மரணங்களை நேரில் பார்த்ததாக கூறினார். அரசு வை…
-
- 1 reply
- 852 views
- 1 follower
-
-
நூருள் ஹுதா உமர்- இனங்கள் மத்தியில் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக எப்போது பார்த்தாலும் முஸ்லிம்களை "கிண்டு"வதில்த்தான் அந்த ஆட்சி முயன்றது. முஸ்லிம்கள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன உடுக்கிறார்கள், கொத்துக்குள் கர்ப்பத்தடை, ஜட்டிக்குள் கர்ப்பத்தடை, அபாயா, முகம் மூடுதல், அரபு மதுரசா, ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் என இவற்றைத்தான் அரச ஊடகங்களும் தனியார் ஊடகங்களும் பேசின என்று உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீதினால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கடந்த 2015ல் நாட்டுக்கு நல்லதொரு ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதற்காக சில சிங்கள மக்களும் பல த…
-
- 0 replies
- 432 views
-
-
[புதன்கிழமை, 20 மே 2009, 08:43 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளதாவது: உன்னிச்சை பகுதியில் உள்ள மாவிலை ஆற்றுப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 6:30 நிமிடமளவில் 5 போராளிகளையும் சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது இரு பகுதியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். இவா்களுக்கு தமது வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். http:…
-
- 3 replies
- 1.3k views
-
-
அடுத்தத் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோ, இந்த ஆதரவோ கிடைக்கும் என்பதில் சந்தேகம் இருக்கிறது. எனவே 13ஆவது அரசமைப்பை வலுவிழக்கச் செய்வதோ, அல்லது இரத்துச் செய்வதோ தற்போதையே செய்ய முயற்சிக்க வேண்டும். எனினும். இதுவும் தற்போதைய சந்தர்ப்பத்தில் சவாலான விடயம் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=18034
-
- 1 reply
- 580 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் கேர் காகன் தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 401 views
-
-
13 ஐ ஒழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் : ஹெல உறுமய 13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். மஹரகமவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யும் தேசிய ஒருங்கிணைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கான பலத்தை நாம் பாராளு…
-
- 0 replies
- 298 views
-
-
எழுத்துமூல உத்தரவாதம் வரும்வரை போராட்டத்தினை கைவிடமாட்டோம் (காங்கேயனோடை நிருபர்) எழுத்து மூலமான உத்தரவாதம் அரசாங்கத்திடமிருந்து வரும் வரை சத்தியாக்கிரகப் போராட்டத்தினை கைவிடப் போவதில்லையென சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற் கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் ஆறாவது நாளாக நேற்றும் தொடர்ந்து இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் மட்டக்களப்பில் காந்திப்பூங்காவுக்கு முன்னால் காலவரையறையற்ற சத்தியக்கி…
-
- 0 replies
- 429 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவால் இணங்கப்பட்ட அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறினார். 13 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் 3 வருடங்களில் 116 தடவைகள் கூடிய ஆராய்ந்த பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனைத் திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. “கூடிய விரைவில் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவிருந்ததாலேயே அதனை இறுதிப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது” என அவர் தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்து பாராளுமன்ற முறையி…
-
- 0 replies
- 475 views
-
-
ஆடி அசைந்து வந்தாலும் வருவது யானையானால் அதன் கழுத்திலுள்ள மணியோசை அதன் வரவைப் பகிரங்கப்படுத்துவதுபோல தனது அடுத்தமாத இலங்கைப் பயணத்துக்கு முன்னர் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை என்ற மணியை நவிபிள்ளை ஒலிக்கவிட்டுள்ளார். நவிபிள்ளை ஒலிக்கவிட்டுள்ள இந்த மணி நிச்சயமாக கொழும்பு அதிகார மையத்துக்கு ஒரு நாராச காண்டாமணியாக ஒலித்திருப்பதை அங்கிருந்து வெளிவரும் காட்டுக்கத்தல்கள் புலப்படுத்துகின்றன. செய்தி வீச்சு... தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21319
-
- 2 replies
- 472 views
-
-
08/06/2009, 11:01 [மட்டு செய்தியாளர் மகான்] பிள்ளையான் குழுவின் கூட்டம் இன்று – அணி பிளவுபடும் நிலை சிறீலங்கா அரசில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையினால், துணைப்படைப் பிள்ளையான் குழுவிற்குள் பிளவு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. இந்தக் குழுவிற்கு தலைமை தாங்கிய கருணா, தற்பொழுது அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியையும், கட்சியின் உப தலைவர் பதவியையும் பெற்றுள்ளார். அத்துடன், பிள்ளையானுடன் முன்னர் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கட்சியின் பெயரில் “புலிகள்” என்ற பெயரோ, அன்றி புலிச்சின்னமோ இருக்கக்கூடாது எனத் தெரிவித்த அவர், அவற்றை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் கிழக்கின் முதலமைச்சராக இருக்கும் பிள்ளையான் குழுவின் கை மேலோங்கி இருந்த காரண…
-
- 0 replies
- 1.6k views
-
-
சர்வதேச நீதிபதிகளுக்கான பரிந்துரையுடன் வருகின்றது புதிய ஜெனிவா பிரேரணை (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்னும் சில தினங்களில் பிரிட்டன் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பரிந்துரை முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கலப்பு நீதிமன்றம் தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்படாது என்றும் எனினும் சர்வதேச நீதிபதிகள் என்ற பரிந்துரை முன்வைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொடர்பாக இம்முறை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையானது …
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கையுடனான உறவுகளில் விரிசல் ஏற்படவில்லை - இந்தியா 19 ஜூலை 2013 இலங்கையுடனான உறவுகளில் விரிசல் ஏற்படவில்லை என இந்தியா அறிவித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு விவகாரப் பேச்சுவார்த்தைள் குறித்த செய்தி தொடர்பில் பதற்றமடையத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையுடன் பல்வேறு விடயங்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் மிக நெருங்கிய பிணைப்பு காணப்படு…
-
- 0 replies
- 547 views
-
-
சாணக்கியனுக்கு அறிவு இருந்திருந்தால் நாடாளுமன்றில் இவ்வாறு செயற்பட்டிருக்க மாட்டார்- கடுமையாக சாடிய கருணா! கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம். அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டுமே ஒழிய தேவையற்ற விதத்தில் ஒரு பிரச்சார நோக்கத்திற்காக இதை பயன்படுத்துவது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமரின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று செங்கலடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்பொ…
-
- 10 replies
- 1.1k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமென விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவின் தலைவர் எஸ்.பத்மநாதன் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டிலில் விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டமையை அமெரிக்கா வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான கிரேக் சுலிவான், விடுதலைப் புலிகள் சமாதான ரீதியில் தமது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்றார். “மோதல்களின் முடிவின்போது மோதல்ப் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருந்தனர். பொதுமக்களிருக்கும் பகுதிகளிலிருந்து தாக்குதல்களை நடத்திப் பொதுமக்களை ஆபத்துக்க…
-
- 8 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி போரதீவு குளத்திலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று முற்பகல் எலும்புக்கூட்டை கண்டெடுத்ததாக பிரதேசத்திற்குப் பொறுப்பான காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அந்த பிரதேசத்தில் காணாமல்போனதாகக் கூறப்படும் வயோதிபர் ஒருவரின் எலும்புக்கூடாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். http://www.sankathi24.com/news/31820/64//d,fullart.aspx
-
- 0 replies
- 377 views
-