ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் தொடர்பிலும் இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றியும் விளக்குகிறார் எம். ஏ. சுமந்திரன்
-
- 3 replies
- 385 views
-
-
சர்வதேச விசாரணை தேவை என்பதை உணர்த்தும் அரசின் நடவடிக்கை – கஜேந்திரகுமார் 25 Views கோட்டாபய அரசாங்கம் தமிழ் மக்கள் கோரும் சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளை நியாயமானவை என்பதை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசாங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுக்களை உருவாக்கி நியாயமான தீர்ப்பு முறையில் நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்தியுள்ளது. இதனைத்தான் தமிழ் மக்களும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கூறுகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விச…
-
- 1 reply
- 936 views
-
-
நயினாதீவில்... தேசிய வெசாக் நிகழ்வுகள், திட்டமிட்டவாறு நடைபெறும்! தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நயினாதீவு நாக விகாரையில் இடம்பெறும் என யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதன் போது ஊடகவியலாளர் , நாக விகாரையில் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறுமா ? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேசிய வெசாக் நிகழ்வு என்பது தேசிய நிகழ்வு. அதனை நிறுத்துவது தொடர்பில் எமக்கு எந்த அறிவுறுத்தலும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அதனால் நிகழ்வு …
-
- 11 replies
- 946 views
-
-
புத்தரின் சின்னங்களைக் காட்டி நிலங்களை அபகரிக்கும் நீங்கள் பொலநறுவை, அனுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்கும் நிலம் தருவீர்களா? - கோவிந்தன் கருணாகரம் April 24, 2021 கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் அடையாளம் காட்டி நிலங்களை அபகரிக்கின்றீர்கள். இந்து மன்னர்கள், ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுர பிரதேசங்களில் இந்து தாபனம் அமைக்க நூறு ஏக்கர் காணியை தர முடியுமா என்று கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ( ஜனா) கல்முனை பிரதேச தரம் இறக்கல், போர்ட் சிற்றி பிரேரணைக்கு ஆதரவு பெறவா என்றும் பாராளுமன்றத்தில் வினவியுள்ளார்.அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்…
-
- 0 replies
- 372 views
-
-
கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த அரசாங்கமே பரவலாக கருத்துக்களை தெரிவித்தது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர். எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அதனை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. அன்றி தமிழீழத்…
-
- 14 replies
- 1k views
-
-
ஒன்றிணைந்து யாழில் கொரோனாவை தடுப்போம்! - யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அனைவரும் இணைந்து யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவோம் என மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார். இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற விசேட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நாட்டில் அதிதீவிரமாக பரவும் கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல், தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளல். வடக்கு மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டினை எவ்வா…
-
- 0 replies
- 351 views
-
-
11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர் : பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டார் பொன்சேகா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பதினொரு மாணவர் படுகொலை, அவன்கார்ட் ஊழல் வாதிகள் என முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இவர்களுக்கு உள்ளதென எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்…
-
- 13 replies
- 1.1k views
-
-
நல்லூர் கந்தனை தங்கத்தினால் அலங்காரம் செய்தவர்களில் ஒருவரான இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.அவரின் உடலம் அன்றையதினமே தகனம் செய்யப்பட்டுள்ளது. சிவசண்முகநாதன் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் ஆவார். சமகாலத்தில் தென்னிந்தியாவில் சினிமா தொழில் துறை சார்ந்த சில நிறுவனங்களுக்கு உரிமையாளராக செயற்பட்டுள்ளார். நல்லூர் கந்தனின் உற்சவமூர்த்திகளை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் நல்லூர் கந்தனின் ஆறுமுகசுவாமி பகுதியை பொன்னால் செய்த வேலைப்பாடுகளை இந்தியாவிலும் நல்லூரிலும் முன்னின்று வழி…
-
- 21 replies
- 2.2k views
-
-
புலிகளை மீள உருவாக்க முயன்றதாக யாழில் நால்வர் கைது! இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபர்களுடன் உரையாடல் தொடர்பு இருந்ததாகவம் புலிகளை மீள உருவாக்க முயன்றதாகவும் குற்றஞ்சாட்டி இன்று (17) அதிகாலை யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத விசாரணை பிரிவால் (ரிஐடி) நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பால் தெரிவிக்கப்படுகிறது. இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும், கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து…
-
- 27 replies
- 2.5k views
-
-
(நா.தனுஜா) புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஏனைய பிராந்திய நாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கு புலம்பெயர் சமூகத்தவர்கள் (டயஸ்போரா) எமக்குப் பெரிதும் உதவுகின்றார்கள். இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு தெற்காசிய நாடுகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம். அதேவேளை இருதரப்ப…
-
- 19 replies
- 1.8k views
-
-
உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, மீளமைக்கப்பட்டு இன்று.. திறக்கப்பட்டது! யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனங்கள் வெளிவந்திருந்தன. இந்நிலையில், கடும் அழுத்தத்தையடுத்து மீண்டும் நினைவுத் தூபியை …
-
- 3 replies
- 635 views
-
-
இலங்கையில் புதுவகையான கொரோனா வைரஸ் ? April 22, 2021 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த பதிவில் காணப்படுவதாவது, இலங்கையில் இதுவரை காணப்படாத புது வகையான கொரோனா வைரசு இனங்காணப்பட்டு கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளது. இது குறித்த விஞ்ஞான ரீதியானஆய்வு மற்றும் தகவல் மதிப்பீட்டாய்வு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், பொது மக்கள் அனைவரும் அதிக கவனம் செலுத்துதல் அவசியம். நோய்த் தடுப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுவதன…
-
- 0 replies
- 447 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில்.. மீள அமைக்கப்பட்டுள்ள, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா திறந்துவைப்பார் என பல்கலை மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி எட்டாம் திகதி இடித்தழிக்கப்பட்டது. இதையடுத்து, அதனைக் கண்டித்து மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்ததுடன், மக்களின் எழுச்சி மற்றும் பன்னாட்டு…
-
- 2 replies
- 513 views
-
-
பொது ஒழுங்கை பாதுகாக்க முப்படையினருக்கு அழைப்பு -வர்த்தமானி வெளியீடு 24 Views நாடு முழுவதும் இன்று (22) முதல் பொது ஒழுங்கை பராமரிக்க முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக dailymirro செய்தி வெளியிட்டுள்ளது. சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவு (அத்தியாயம் 40) மூலம் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி, கொழும்பு, கம்பஹா, களுத்தறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, ம…
-
- 0 replies
- 334 views
-
-
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்! – மாணவர்கள் காயம் 103 Views தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும், அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக்கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையி…
-
- 21 replies
- 2.2k views
-
-
சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இம்மாதம் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்திது சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் (adaderana.lk)
-
- 4 replies
- 512 views
-
-
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைத்தியசாலையில் அனுமதி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியினை காலை துணைவேந்தர் திறந்து வைக்கவிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது. எனினும் அதனைக் கண்டித்து எழ…
-
- 2 replies
- 663 views
-
-
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னணியில்இருந்த சூத்திரதாரி யார்? டி . பி . எஸ் . ஜெயராஜ் ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவடைந்துள்ளது , இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையையும் உலகத்தையும் உலுக்கியது. அந்த துரதி ஷ்டமான உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை காலையில், தற்கொலை குண்டுதாரிகள் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று இடங்களிலும்மூன்றுக்கும் அதிகமான ஹோட்டல்களையும் மூன்று தேவாலயங்களையும் இலக்கு வைத்தனர்; இஸ்லாமிய ஜிஹாதி சித்தாந்தத்திற்கு ஆட் சேர்த் ததாகக் கூறப்படும் ஒரு குழுவினரால் ஒருங்கிணைக்கப்பட்டவிதத்தில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள…
-
- 0 replies
- 812 views
-
-
சிறுபான்மையினரை இலக்குவைக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த கூடாது - சர்வதேச மன்னிப்புச்சபை (நா.தனுஜா) உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. எனினும் சிறுபான்மையினரை இலக்குவைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மிகவும் மோசமான பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் இடம்பெற்று இருவருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச்சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 203 views
-
-
யாழ்.நகர் மத்தியை கழுவி, மருந்து விசிறும் இராணுவத்தினர் April 22, 2021 யாழ்.நகரின் மத்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் வியாபர நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளை நீரினால் கழுவி சுத்தம் செய்து , கிருமி தொற்று நீக்கி மருந்துகளை விசிறும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். யாழ்.நகர் மத்தி பகுதியில் கடந்த மாதம் பெருமளவான கொரோனா நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அப்பகுதிகள் முடக்கப்பட்டிருந்தன அதன் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மீளதிறக்கப்பட்டு வியாபர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்போது புத்தாண்டை முன்னிட்டு பெருமளவானோர் அப்பகுதியில் கூடி உடுபுடவைகள் வாங்கியிருந்தனர். இந்நிலையில் …
-
- 2 replies
- 720 views
-
-
ஐஎஸ் அமைப்புடன் தொடர்புகொண்ட சொனிக் சொனிக் என்பவர் யார்? தாக்குதலை மேற்கொண்டவர்கள் பொஸ் என குறிப்பிட்டது யாரை? நாடாளுமன்றத்தில் மனுசநாணயக்கார கேள்வி,? அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தினார் சொனிக் சொனிக் என்பவர் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புகொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சொனிக் சொனிக் என்பவர் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புகொண்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. சொனிக்சொனிக் என்ற பெயரினால் அழைக்கப்படும் நபர் ஒருவர…
-
- 0 replies
- 269 views
-
-
கொழும்புக்கான விமான சேவைகளை வாரத்துக்கு 7 தடவைகளாக மே 3 முதல் அதிகரிக்கிறது எமிரேட்ஸ் கொழும்பை நோக்கிப் பயணிக்கும் தனது விமான சேவைகளை 6-இலிருந்து 7-ஆக அதிகரிப்பதாக எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. அதிகரிக்கப்படும் 7ஆவது விமான சேவை மே 3ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. சந்தையில் காணப்படும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காகவும் கொழும்புக்கும் கொழும்பிலிருந்தும் டுபாய் ஊடான தொடர்புகளை அதிகரிப்பதற்காகவும் இந்த மேலதிக சேவை உதவும். புதிதாகச் சேர்க்கப்பட்ட விமான சேவையானது ஒவ்வொரு திங்கட்கிழமையும் செயற்படும். EK650 என்ற இந்த எமிரேட்ஸ் விமானம் டுபாயிலிருந்து அந்நாட்டு நேரப்படி அதிகாலை 02:05க்குப் புறப்பட்டு கொழும்பை இலங்கை நேரப்படி காலை 08:00 மணிக்கு வந்தடையும். திரும்பி…
-
- 0 replies
- 258 views
-
-
“திருமலை மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்“ – துஷாந்தன் April 22, 2021 திருமலையில் இடம்பெறும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை கேட்பதற்கு எந்த தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்களும் முன்வருவதில்லை, அங்கு வாழும் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர் என நேற்று (21) இரவு திருமலை மாவட்டம் அன்புவழிபுரத்தில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் பேசும் போது அதன் உறுப்பினர் துஷாந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இங்கு இலங்கை அரசின் நில ஆக்கிரமிப்பு, கைது செய்தல், துன்புறுத்தல்கள் என்பன அதிகரித்து வருகின்றது. தினமும் காலையில் இருந்து மாலை வரை பெருமளவான பிரச்சனைகளை சந்தித்து…
-
- 0 replies
- 414 views
-
-
வடக்கில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் – ஆ. கேதீஸ்வரன் எதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் மதத் தலைவர்களுக்கும், மாகாண சுகாதார பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று அதிகரித்து நிலைமை காணப்படுகின்றது. அதிகரித்த கொரோனா தொற்றின் காரணமாக சில பகுதிகளை முடக்க வேண்டி ஏற்பட்டது. அதேவேளை, கடந்த வாரத்தில் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.…
-
- 1 reply
- 366 views
-
-
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை – இராணுவத்தளபதி! எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதை சூழலில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது மக்கள் முகமூடி அணிவது மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், வார இறுதி நாட்களில் பொதுமக்கள் அதிகம் ஒன்று கூடுவதை தவிர்ப்பது மிகவும் அவசியமானது எனவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1211538
-
- 0 replies
- 300 views
-