ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவருக்கு பிணை மறுப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி, இரணைமடுச்சந்தி பகுதியில் இரண்டு கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 13ஆம் திகதிவரை நீடித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார். கிளிநொச்சிப் பொலிஸாரால் கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் கடந்த மாதம் இரண்டு கிலோகிராம் கஞ்சாவுடன் முச்சக்கரவண்டி உரிமையாளர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த குற்றச்சாட்டின் இரண்டாவது சந்தேக நபர் பிணை வ…
-
- 0 replies
- 250 views
-
-
பிரதான கட்சிகள் யாழில் வேட்புமனுத் தாக்கல் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் முக்கிய தமிழ்க் கட்சிகள் பலவும் இன்று (18) தாக்கல் செய்யதுள்ளன. இதற்கமைய யாழ். கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன யாழ். மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்தன இதே போன்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவும் தத்தமது கட்சிகளின் வேடபுமனுக்களை தாக்கல் செய்துள்ளன. …
-
- 6 replies
- 767 views
-
-
Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 10:35 AM இந்தியாவின் சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகவரமைப்பு (NIA) சிறப்பு நீதிமன்ற அழைப்பாணையொன்றை இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கடமைபுரியும் அதிகாரியொருவருக்கு அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்கத்தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றைத் தாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டே குறித்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. தற்போது இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் குறித்த அதிகாரி, ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிகாரி அமீர் சுபைர் சித்திக் (Amir Zubair Siddiqui) என அடையாளம் கா…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
தமிழர்கள் ஒரே சக்தியாக அணிதிரண்டு எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்: பா.நடேசன் [வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2008, 08:32 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ் மக்களின் எல்லாப்பலத்தினையும் ஒருங்கிணைத்து எதிரிக்கு ஒரே சக்தியாக தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போர் எழுச்சிக்குழுக்களின் சிறப்பு ஒன்றுகூடலில் சிறப்புரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: போர் எழுச்சிக்குழுக்களின் கருத்துக்கள் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தந்துள்ளது. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக் காலத்திலும் மக்களின் பலத்…
-
- 1 reply
- 907 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய , கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சி எதிர்ப்பு காட்டுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் அதிகார பூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பற்றி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இதை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்த தாகவும், இப்போது, போருக்குப் பின்னர் இதற்கான அவசியம் அதிகரித்திருப்பதாகவும் கூறினார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எல்லாக் கட்சிகளும் இதற்கு இணங்கினாலும், தமிழரசுக் கட்சி மட்டும் …
-
- 0 replies
- 533 views
-
-
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் கீரைப்பிடி 200 ரூபா மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளதால், சந்தைகளில் கீரைப்பிடியின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது. யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் பெய்த மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த கீரை வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தைகளில் கீரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கீரைப்பிடி ஒன்றின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது. கீரைப்பிடி 200 ரூபா
-
- 0 replies
- 174 views
-
-
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கு ரஸ்யா பூரண ஒத்துழைப்பு வழங்குமென தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் அலெக் சீ செடர் அரசாங்கத்திடம் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ரஸ்யா பூரண ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்தில் பயங்கரவாத்திற்கு எதிரான இலங்கையின் குரல் ஓங்குவதற்கு ரஸ்யா ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்
-
- 1 reply
- 1.4k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு ஆரம்ப சுடரினை ஏற்றும் நிகழ்வு செம்மணியில் இடம்பெற்றது முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு ஆரம்ப சுடரினை ஏற்றும் நிகழ்வு யாழ்.மாவட்டத்தில் அதிகளவானவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி பகுதியில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132080/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 340 views
-
-
ஆயுத வர்த்தகம் தொடர்பில் 5 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தின் மெரையின் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்ட சுஜி குணபால என்பவரே விடுதலைப்புலிகளுக்கு சிலின் 143 ரக இலகு ரக விமானங்கள் மூன்றை பெற்றுக்கொடுத்துள்ளதாக புலனாய்வுதுறையினருக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு 18 மாதங்களில் பின்னர் கப்பல் ஒன்றின் மூலம் இந்த மூன்று விமானங்களையும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு கொண்டு சென்றததாக குணபால தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஜி குணபாலவின் தந்தை சிங்களவர் என்பதுடன் அவர் காவற்துறை சிப்பாயாக பணியாற்றினார். அவரது தாய் தமிழ் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விட…
-
- 3 replies
- 2.6k views
-
-
தற்கொலைதாரிகளுக்கு உதவிய இருவர் கைது Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 05:24 - 0 - 46 கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொதட்டுவ மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து இவர்கள் இன்று (02) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். சினமன் கிரேண்ட் ஹோட்டல் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நபருக்கு உதவிய நபர் கொதட்டுவ பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய…
-
- 0 replies
- 411 views
-
-
ஒன்றிணையாத மனித கூட்டங்கள் அவமானத்திற்கும் பரிதாபத்திற்கும் உரியவர்கள் – சி.வி விக்னேஸ்வரன் by : Benitlas ஒன்றிணையாத மனித கூட்டங்கள் அவமானத்திற்கும் பரிதாபத்திற்கும் உரியவர்கள் என வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதிலிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் ஊடங்களுக்கு அனுப்பி வைத்துள்ள பதிலில், ‘கொரோனா வைரசின் தாக்கம் மாதக் கணக்கினுள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் கூட அதனால் ஏற்படுத்தப்பட்ட உலக ரீதியான, நாடுகள் ரீதியான, மாகாணங்கள் ரீதியான, கிராமங்கள் ரீதியான, குடும்பங்கள் ரீதியான தாக்கங்கள் பல காலத்திற்கு எமக…
-
- 1 reply
- 387 views
-
-
[size=4]இந்திய அரசின் அழுத்தத்தின் பேரில் புதுடெல்லி வரவும் இல்லை, சிறிலங்கா அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்குமாறு இந்தியா எமக்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா அரசு எம்முடன் பேசி சில இணக்கப்பாடுகளை எட்டிய பின்னர், தெரிவுக்குழுவுக்கு போகலாம் என்று நாம் கூறினோம். ஆனால் சிறிலங்கா அரசு அதற்கு உடன்படவில்லை. தெரிவுக்குழுவின் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அதன்மூலம் எதுவும் கிடைக்கப் போவதில்லை. தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவது குறி…
-
- 1 reply
- 614 views
-
-
போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை - இந்திய கூட்டு நடவடிக்கை அவசியம் வடக்கில் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டு அதன் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதன் ஊடாக அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், வடக்கில், குறிப்பாக யாழ். குடாநாட்டின் கரையோரப் பகுதிகளினூடாக நம் நாட்டுக்கு தற்போது அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை தென் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதா…
-
- 0 replies
- 235 views
-
-
தமிழர்கள் உடனடியாக தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொரோனா அச்சம் காரணமாக தொடரும் ஊரடங்கு சட்டத்தினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது தொழில்களை இழந்து பாரிய பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எமது மக்களின் வாழ்வாதாரத்திற்காக எமது அரசியல் இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கம் தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட…
-
- 7 replies
- 690 views
-
-
07 Nov, 2025 | 05:13 PM தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் முகமாக வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி | Virakesari.lk
-
- 0 replies
- 82 views
-
-
தவறு இழைக்கிறார் கருணாநிதி "எமது சகோதரர்களான ஈழத் தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் ஈவிரக்கமற்ற அரக்கத்தனமான மனிதநேயமற்ற முறையில் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு இந்திய அரசு இராணுவ உதவியையும் ஆயுதங்களையும் தாராளமாக வழங்கி வருகின்றது. ""எனவே, இதற்குப் பிறகும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி மௌனம் காக்கக்கூடாது. உடனடியாகத் தனது மௌனத்தைக் கலைத்து, இலங்கைக்குப் படையை அனுப்பும் மத்திய அரசை அதற்காக எச்சரிக்க வேண்டும். ""குண்டு மழைக்கு நடுவினிலும், குருதி மழை நடுவினிலும் நின்று தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும்.'' இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர் ராமதாஸ் நேரடியாக வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார். தமிழக முதல்வரின…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்தில் இனக்கொலை ; இதயத்தில் இரத்தம் ஒளிப்படக் குறுவட்டு – வைகோ வெளியீடு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 16:46 ஈழத்தில் இனக்கொலை ; இதயத்தில் இரத்தம் ஒளிப்படக் குறுவட்டு, புத்தகம் இந்தி மொழிப்பதிப்பு வெளியீடு நவம்பர் 26 டெல்லி இடம்: இந்திய இஸ்லாமிக் கல்சுரல் சென்டர், 87-88, லோதி ரோடு, நியூடெல்லி – 110 003 தலைமை: அ.கணேசமூர்த்தி எம்.பி., வரவேற்புரை: டாக்டர் சி.கிருஷ்ணன் வெளியிடுபவர்: நீதிபதி இராஜேந்திர சச்சார் (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) முதல் படியைப் பெறுபவர்: எழுத்தாளர் குல்தீப் நய்யார் வாழ்த்துரை : யஷ்வந்த் சின்கா எம்.பி. டிசம்பர் 3 கொல்கத்தாவில் வங்கமொழிப் பதிப்பு வெளியீடு. டிசம்பர் 30 பாட்னா (இந்தி மொழிப் பதிப்பு) …
-
- 1 reply
- 422 views
-
-
சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி ஒருவர் மீது இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கே.சி வெலகெதர என்ற இந்த அதிகாரி, கடற்படைக்கு தெரியாமல் வெளிநாட்டுக்கு சென்றமை தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். இதேவேளை வெலகெதர, கடற்படை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் கருத்துரைத்துள்ள கடற்படை தளபதி, அவரின் குடும்பத்தினர் அவரை கடற்படை தலைமையகத்தில் பார்வையிட முடியும். குற்றச்சாட்டின்படி அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். http://ww…
-
- 0 replies
- 224 views
-
-
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபா கூட இழுபறியிலேயே இருந்து வருகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்கவேண்டும்." என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். அட்டனில் இன்று (16.04.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, "பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என கொரோனா வருவதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா தாக்கத்தால் அதனை வழங்க முடியாமல் இருப்பதாக தற்போது…
-
- 5 replies
- 787 views
-
-
பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது Nov 18, 2025 - 12:02 PM சமீபத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (18) பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தத் தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவா…
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
இராணுவ உள் முரண்பாடுகள் காரணமாக கொஸ்கம பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொஸ்கம சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தில் உயர் பதவிகளை வகிக்கும் முக்கிய பொறுப்புக்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு இடையில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமையினால் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. நிவாரணங்களை வழங்குதல் தொடர்பில் உரிய திட்டமொன்று வகுக்கப்படாமையே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது. சிதறிக் கிடக்கும் ஆயுதப் பகுதிகளை அகற்றுதல் சேதமடைந்த வ…
-
- 0 replies
- 314 views
-
-
மோசமான வானிலை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு. தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.…(Full News in Athavan News) இன்று (28) காலை வரையான தகவலின்படி, மோசமான வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1454076
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
சிறீலங்கா சிங்கள பௌத்த குடியரசு என்பது மகிந்தவின் நீண்ட காலத்திட்டம். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் -மனோ கணேசன் என்ற தலைப்புச் செய்தியுடன் அக்கினீஸ்வரனின் 13ம் சீர்திருத்தச்சட்டம் வரமா சாபமா, தீபச்செல்வனின் நிலத்திற்காக போராட வேண்டிய காலம், இதயசந்திரனின் கொடுத்ததையும் பறிக்கிறதா இலங்கை இந்திய ஒப்பந்தம், சாந்தி. கே. பிள்ளையின் உலக அரசியல் சீனா வச... மா?, வன்னியில் ஊடகவெளி போன்ற தலைப்பிலான கட்டுரைகளுடன் தரிசனங்கள் என்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் யூனியர் வரணியூரானின் தமிழ் பௌத்தன் சிறுகதை, நடுத்தெரு நமசிவாயம் என்பவற்றுடன் பொன்.காந்தனின் சாமகானம் என்ற நெடுங்கவிதை பகுதியும் உள்ளடங்கி தேசத்தின் குரலின் கன்னி இதழ் வீச்சுடன் கார்த்திகை மாத புனித நினைவுகளையும் சுமந்து வெளிவந்துள்…
-
- 13 replies
- 1.5k views
-
-
இனப்படுகொலைக்கான நீதியில்தான் ஈழத் தமிழரின் இருப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்: (UNHRC இன் 32 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இலங்கை தொடர்பில் பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது பிரேரணையின் முக்கிய விடயமாக கருதப்பட்டது. இந்தப் பிர…
-
- 0 replies
- 371 views
-
-
கல்லுண்டாயில் மலக்கழிவுகளை காெட்ட முயன்ற பவுசரை மடக்கிய மக்கள் மல்லாகம் நீதிமன்றின் உத்தரவை மீறி மலக் கழிவுகளை ஏற்றி வந்து கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு முயற்சித்த தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனம் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (26) மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் – பொன்னாலை வீதி கல்லுண்டாய் வெளியில் இடம்பெற்றது. நவாலி மக்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு கல்லுண்டாயில் மலக் கழிவுகளைக் கொட்டுவதற்கு தடை விதித்து மல்லாகம் நீதிமன்றம் 2018ம் ஆண்டில் கட்டளை வழங்கியிருந்தது. அக்கட்டளையை மீறி தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கல்லுண்டாய் பகுதியில் மலக் கழிவுகளை கொட்டி வந்…
-
- 3 replies
- 925 views
-