ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
சிங்களத்தின் கறுப்புத்தந்தியில் ஆழமாக மாட்டுப்பட்டிருக்கும் இந்தியா http://tamilnet.com/art.html?catid=79&artid=27430
-
- 19 replies
- 2.7k views
-
-
எங்களை அடித்து உதைத்தால் எதிர்த்துக் கேட்பதற்கு எவருமில்லையென்று சிங்களவர்கள் கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவை அடித்து நொருக்குவது போல புலம்பெயர் தமிழ் மக்களான எமது உறவுகள் எமக்காகக் குரல்கொடுப்பது எமக்குப் பெரும் ஆறுதலாக உள்ளது. இந்த குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். எங்களைத் தாக்கிய சிங்களவர்களை கண்டித்து நீங்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்கள் எமது விடுதலையை வென்றெடுப்பதற்குரிய ஆணித்தரமான போராட்டங்களாக அமைய வேண்டுமென்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் தாக்கப்பட்டமைக்கு சர்வதேசம் பூராகவும் வாழ்கின்ற தமிழ் மக்களும் தமிழ் இளையோரும் கொதித்தெழுந்துள்ளமை தங்களுக்கு மேலும் மேலும் வீரியத்தைத் தந்துள்ளதாகவும் தங்களுக்காக சர்வதேசம் பூராகவும் கண்டனப் போராட்டங்க…
-
- 1 reply
- 441 views
-
-
பயங்கரவாதப் புலனாய்வுப் காவல்துறையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் மோசமான மற்றும் ஆபத்தான சூழலை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சிறிலங்கா அரசுத்தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அரசியல் பிரச்சினைகளை அதிகாரகரம் கொண்டு நசுக்க படைஅதிகாரிகள் முனைகிறார்கள் என்றும், பொய்யான காரணங்களைக் காட்டி ஆட்களைக் கைதுசெய்கின்றனர் என்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இக்கடித்தத்தில் குற்றம்சாட்டியுள்ளனர். நாட்டின் சிறுபான்மையினரான தமிழர்களின் உணர்வுரீதியான தலைமையகமாக விளங்கும் யாழ்ப்பாணத்திலே அவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று முறையிடுவதாக யாழ். பல்கலைக்கிழக ஆசிரியர்கள் 125 கைய…
-
- 0 replies
- 845 views
-
-
உள்ளூராட்சி மன்றதேர்தல் தொகுதிவாரியாகவே நடைபெறும் : ஜனாதிபதி உள்ளூராட்சி மன்றதேர்தல் தொகுதிவாரி தேர்தல் முறைமைக்கு அமையவே நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளார். குறித்த தேர்தல் எதிர்வரும் வருடம் ஆரம்ப பகுதியில் நடைபெறும் என இதன்போது தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்கள் நேற்றிரவு இலங்கை மன்றக் கல்லூரியில் ஜனாதிபதியை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார் http://www.virakesari.lk/article/9190
-
- 0 replies
- 367 views
-
-
நேசக்கரம் கணணி பயிற்சி நிலையம் நாவற்குடாவில் திறந்துவைப்பு. தமிழ் மாணவர்களின் கணணி அறிவை மேம்படுத்தவும் தொழில் வாய்ப்புத் தேடும் இளையோருக்கான மற்றும் கணணிக்கல்வியைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பெரியவர்களுக்குமான கணணிக்கற்கையை வழங்கவும் நடராஜா ஆனந்தா வீதி , நாவற்குடா கிழக்கு , மட்டக்களப்பில் 15.12.2012அன்று கணணி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. நேசக்கரம் தகவல் தொழிற்நுட்ப ஒருங்கிணைப்பாளர் செல்வி.கம்சனா தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் இணைப்பாளர் ஜனனன் மற்றும் உதயகாந், திவாகரன் ஆகியோரோடு சிறப்பு விருந்தினர்களாக நாவற்குடா முத்துமாரியம்மன் ஜெயகிருஸ்ணா குருக்கள் , நாவற்குடா கிழக்கு இந்து ஆலயங்களின் பரிபாலன தலைவர் திரு.சிவகுமார் , கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சுரே…
-
- 3 replies
- 663 views
-
-
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களைபின்பற்றுமாறு வெளிவிவகார அமைச்சு இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்த நாடுகளில் உள்ள இலங்கைதூதுவராலயத்தில் தம்மை பதிவு செய்வது கட்டாயம் என்றும் அமைச்சுகுறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரவாததாக்குதல்களில் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்குகருத்து தெரிவித்த போதே வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேசானி கொலன்ன இதனைத்தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் போது இலங்கையர்களைஅறிவுறுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அத…
-
- 0 replies
- 458 views
-
-
இலங்கையில் திருவள்ளுர் சிலைகள் வைக்கப்படுவதற்கு குறித்து சிங்கள ஊடகம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. “தமிழக கவிஞரான திருவள்ளுவரின் 16 சிலைகளை இலங்கைக்கு கொண்டு வந்து நாடு முழுவதிலும் அவற்றை வைக்க எடுக்கும் முயற்சி பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது. கொழும்பு, மாத்தளை, ஹட்டன், நாவலப்பிட்டி, புத்தளம், சாவகச்சேரி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்ப, கட்டைப்பறிச்சான் ஆகிய நகரங்களில் இந்த சிலைகள் வைக்கப்பட உள்ளன. தமிழக கவிஞர் ஒருவரின் சிலைகள் இலங்கையில் வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எனினும் இது குறித்து மக்களினதோ மாகாணசபைகளினதோ கருத்து கோரப்படவில்லை. தமிழகத்தின் விஜிபி என்ற நிறுவனமே இந்த சிலைகளை வழங்குகின்றன. இந்த சிலைகளுக்கான ச…
-
- 3 replies
- 508 views
-
-
சிறீலங்கா அரசின் போர் நடவடிக்கையாலும் சமீபத்திய மழையாலும் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி வன்னிமக்கள் சோமாலியாவில் மக்களின் நிலைக்கு ஒத்த வகையில் வாழ்வதாக வன்னியில் இயங்கி வரும் ஒரு சில சர்வதேச உதவிநிறுவனங்களில் ஒன்றானதும் ஐநாவின் அங்கமானதுமான உலக உணவுத்திட்டத்தின் (WFP) அதிகாரி கிளிநொச்சி தர்மபுரத்தில் இருந்து பிபிசி சிங்கள சேவைக்கு தகவல் வழங்கியுள்ளார். வன்னி மக்களுக்கு உணவு கிடைக்கின்ற போதும் இதர அடிப்படை வசதிகள் சோமாலியாவுக்குரிய நிலையில் மிகக் கீழ்மட்டமாக இருப்பதாக அவர் கூறிருப்பதோடு சிறீலங்கா அரசு செய்தியாளர்களை போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்ப மறுத்து வருவதையும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது..! S Lanka's 'Somalia conditions' A UN official i…
-
- 11 replies
- 2.4k views
-
-
சிம்பாப்வே அணியைப் போன்று சிறிலங்கா துடுப்பாட்ட அணியும் அனைத்துலக போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்று கோரி அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இன்று மெல்பேர்ண் துடுப்பாட்ட மைதானத்தில் சிறிலங்கா - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே, மைதானத்துக்கு வெளியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அழுக்கைக் கழுவிக் கொள்வதற்கு இந்தத் துடுப்பாட்டப் போட்டி வாய்ப்பு வழங்குவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். “2007ம் ஆண்டில், அவுஸ்ரேலிய அணி சிம்பாப்பே பயணத்தை நிறுத்தியபோது, சிம்பாப்பேயின் சர்வாதிகாரி றொபேட் முகாபேக்கு து…
-
- 0 replies
- 316 views
-
-
கடந்த 25 வருடத்திற்கு மேலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நாம் யாவரும் அறிந்து கொண்ட, உணர்ந்து கொண்ட, கண்டறிந்த உண்மை என்னவெனில் - புலம்பெயர் நாடுகளிலும் சர்வதேச அரங்குகளிலும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் உண்மைச் சம்பவங்கள், புள்ளி விபரங்கள் அடங்கிய அறிக்கைகளுடன் தமது வேலைத் திட்டங்களை தமிழீழ மக்களை அடக்கி ஆளும் சிறிலங்கா அரசு மீது மேற்கொள்ளுகின்றனர். ஆனால், தொடர்ந்து தமிழீழ மக்களின் அடிப்படை உரிமைகளான அரசியல், பொருளாதார, சமூக கலாச்சார உரிமைகள் அடங்கிய சுயநிர்ணய உரிமையை நசுக்கி வரும் சிறிலங்கா அரசுகள், அரசு என்ற அடிப்படையில் தமது பொய்யான, நீதி நேர்மையற்ற சர்வதேச பிரச்சாரங்களை மிக இலகுவாக தமது தனிப்பட்ட நட்பு, செல்வாக்கு ஆகியவற்றுடன் பல கோடி பணத்தைச் செலவழித்து உண்மைகளை…
-
- 6 replies
- 2k views
-
-
யாழ். வடபோர்முனையான கிளாலியில் கடந்த 16ம் திகதி செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட போது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயங்களுடன் புலிகளிடம் சரணடைந்துள்ளார். சரணடைந்த படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53வது கொமாண்டோ டிவிசனில் பணியாற்றியவர் ஆவார். இவர் தான் சரணடைந்தது குறித்து கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியை இன்னும் சில மணித்துளியில் சங்கதியில் நீங்கள் பார்க்கலாம். கிளாலி மோதலின் போது 60 படையினர் வரை கொல்லப்பட்டனர்., இதில் 8 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 33 replies
- 8.6k views
-
-
இலங்கை கடற்படையினரால் நான்கு தமிழக மீனவர்கள் கைது.! நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை கடற்படையினர் இன்று காலை கைதுசெய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த வைரக்கண்ணு மகன் கணேஷ்குமார் (30), பிச்சைபாண்டி (46), முகமதுகான் (48) மற்றும் ஒருவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவார். இந்நிலையில் குறித்த மீனவர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசன் துறைமுக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே 4 மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் கைதுசெய்யப்ப…
-
- 0 replies
- 281 views
-
-
கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்! முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் மக்கள் வெளியேறும் போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் என்னிடம் கூறிய விடயங்கள் இவைதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் தெரிவித்துள்ளார். அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் இன்று இல்லை ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று, அந்த ஒரு சொல்லுத்தான் எனது அடி நெஞ்சில் இப்பொழுதும் இருக்கின்றது. இந்த உண்மையினை இன்று சொல்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார…
-
- 5 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளின்டன் அம்மையார், இந்தியா - பாகிஸ்தான் - இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்திய உபகண்டப் பிரதேசத்தின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான தமது பிரதிநிதியாகத் தமது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளின்டனின் பெயரைப் பிரேரித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி பராக் ஒபாமா பதவியேற்கும் சமயத்தில் புதிய வெளிவிவகார அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பார். அவர், சர்வதேச ரீதியான இராஜதந்திரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இராஜதந்திரிகள் அடங்கிய செயலணி ஒன்றை உருவாக்கி வருகின்றார் என்று கூறப்படுகின்றது.இந்திய உபகண்டப் பிரதேசம் பெரும் பதற்றத்துக்கு…
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுடைய அனைத்து கல்வி செயற்பாடுகளும் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று பல்கலைக்கழக அனைத்து பீடங்களின் மாணவர் ஒன்றிய தலைவர்கள், செயலாளர்களுடன், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்ட நிர்வாகித்தினர் நடாத்திய நீண்ட கலந்துரையாடலின் பின்னர், நாளைமுதல் அனைத்து பீடங்களினுடைய கல்வி செய்ற்பாடுகளையும் ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக தடுப்பிலுள்ள மாணவர்களும் சாதகமான சமிக்ஞை காட்டியதாகவும் அவர்களுடன் ஏனைய மாணவ தலைவர்கள் உரையாட அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் சுதந்திரமான கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாதிருந்த போதும் அவர்கள…
-
- 1 reply
- 575 views
-
-
சொத்து எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பதை வெளியிட முடியாது போன மேலும் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்கும் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. ஒருவரிடம் இருக்கும் சொத்து எப்படி வாங்கப்பட்டது என்பதை அவர் உறுதிப்படுத்த தவறினால், பணச் சலவை சட்டத்தின் கீழ் அந்த சொத்து அரசுக்கு சொந்தமாகும். அத்துடன் அவ்வாறான சொத்துக்களை கொள்வனவு செய்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன. நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடத்திய வரும் 300க்கும் மேற்பட்ட விசாரணைகளில் 100 விசாரணைகள் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பானதுடன், அவை எப்படி கொள்வனவு செய்யப்ப…
-
- 0 replies
- 431 views
-
-
ரணில் கட்சியை காப்பாற்றுவதில் மும்மூரமாக இருந்தார் - மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை! பிரபா கணேசனுக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கினை சகித்துக் கொள்ள முடியமால் அனைத்து கட்சியினரும் எனக்கு எதிராக தேவையில்லா பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட தலைமை வேட்பாளருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொழும்பில் இருந்து வந்தவன் என்ற குற்றச்சாட்டினை வைக்கின்றார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகளாக நான் வன்னியில் இருக்கின்றேன், வன்னியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கணக்கிட்டுபார்த்தால் அவர்கள் கொழும்பில் தான் அதிகம் இருந்துள்ளார்கள். வன்னி மாவட்ட மக்களின் வாக்குகளை பெற்…
-
- 0 replies
- 442 views
-
-
சிறீலங்காப் படையினை சேர்ந்த சிப்பாய் ஒருவர் புலிகளுக்கு தகவல் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் ஜன 11, 2013 புலிகளுக்கும் படையினருக்குமிடையே யுத்தம் நடைபெற்ற 2007ம் ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்காப் படையினை சேர்ந்த சிப்பாய் ஒருவர் புலிகளுக்கு தகவல் வழங்கினார் என்ற குற்றச்சாட்டினை எதிர் கொள்கின்றார். பனாகொடை படை முகாமில் கடமையாற்றிக்கொண்டிருந்த ஏ.எம்.சமன் சுஜீவ என்ற படைச் சிப்பாயே மேற்படி குற்றச்சாட்டினை எதிர் கொள்கின்றார். புலிகளின் பணத்திற்காக படையின் பல்வேறு தகவல்களையும் சிறீலங்காவின் கேந்திரங்கள் தொடர்பான தகவல்களையும் இவர் புலிகளுக்கு வழங்கியமை புலன்விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. ரயில் ஒன்றிலிருந்து வீழ்ந்து நிரந்தர அங்கவீனனாக உள்ள இவர் மீது க…
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கையர்கள் உட்பட வேறும் சில நாடுகளை சேர்ந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் பயனித்த படகு ஒன்று இந்தோனேசியாவிற்கு சொந்தமான கடல் பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகிஉள்ளதாம்.எ
-
- 0 replies
- 912 views
-
-
முன்னாள் பெண் போராளிகள் 400 பேருக்கு ஆசிரியர் நியமனம். [Friday, 2013-01-18 08:20:25] புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 400 முன்னாள் பெண் போராளிகளுக்கு பாலர் பாடசாலை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னி இறுதிப் போரின் போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட இந்தப் போராளிகளுக்கு தற்போது ஆசிரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போரின் பின்னர் இவ்வாறு ஆசிரியப் பணியில் இணைந்து கொள்ள வாய்ப்பு கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர். பயிற்சி பெற்று வரும் முன்னாள் போராளிகளுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப…
-
- 5 replies
- 670 views
-
-
வந்தார் மூன் மூன்று நாள் இலங்கை விஜயத்தினை மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கி மூன் இலங்கை வந்துள்ளார். இன்று மாலை 7.30 மணிஅளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் இவர் இன்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகவும் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து, இளைஞர் நிகழ்வொன்றில் பங்குகொள்ளும் பொருட்டு காலிக்கு சென்று இன்றைய தினம் இரவு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இராபோசனத்தில் கலந்து கொள்வார் என எதிர்பாக்கப்படுகின்றது. மேலும் அவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவை …
-
- 9 replies
- 777 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பி. நடேசன் அளித்துள்ள பேட்டியைச் சுட்டிக்காட்டி இந்திய அரசு செயல்பட வேண்டிய கடமையையும் எடுத்துக்கூறி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கையில் ஈழத் தமிழர்கள் திட்டமிட்டு சிங்கள இராணுவத் தால் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர் - விடுதலைப்புலி களை அழிக்கிறோம்; தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்கிற சாக்கில். ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையைக் காக்கப் போராடிவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்து சில நாள்களுக்கு முன் - இலங்கையின் சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இராணுவ நடவடிக்கை தீர்வா காது; அரசியல் தீர்வுதான் தேவை என்று இந்திய அரச…
-
- 0 replies
- 971 views
-
-
தேசியப் பட்டியல் விவகாரம்: துரைராஜசிங்கமே பொறுப்பு - சம்பந்தன்.! "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் நான் பதிலளிக்கமாட்டேன். இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கத்திடம் கேட்கவும். அவர்தான் இந்த விடயதானத்துக்குப் பொறுப்பு." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் அதன் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கே வழங்க வேண்டும் என்று கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. எனினும், அந்தத் தீர்மானத்தை மீறி அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ள…
-
- 3 replies
- 934 views
-
-
This is our last chance... kindly request to all for sending post mail letter to the following address. If you belongs to any registered Tamil organization ( e.g. University student organization, etc ..) then please encourage your organization to use the organization letter head like other Tamil organizations to urge EU to stop GSP+ for SL. Sending letter through organizations more weight than individual personal letters. Please see the deadline and we have to act in quick manner. Excerpt from the EU document at ==> http://trade.ec.europa.eu/doclib/docs/2008...adoc_141139.pdf எதைப் பற்றி எழுதலாம்: தனிப்பட்ட மனித உரிமைமீறல்கள் பற்றியன பத்திரிகையாள…
-
- 0 replies
- 840 views
-
-
மாவீரர் துயிலுமில்லங்களை புனித இடங்களாக பேணவேண்டும்-சாந்தினி எம்.பி கோரிக்கை மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் நிலையில் அவை புனித இடங்களாக மாற்றப்பட்டு பேணப்படவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி சிறிஸ்கந்தராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு மாவீரர் துயிலம் இல்லங்களிலும் நாங்கள் எங்கள் பிள்ளைகளை புதைக்கவில்லை விதைத்து விட்டு சென்றோம் எனவே பிள்ளைகளை விதைத்த இடங்களை புனித இடங்களாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். முல்லைத்தீவில் வன்னிவிளான்குளம் மாவீர் துயிலம் இல்லம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏனைய இடங்…
-
- 0 replies
- 236 views
-