ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய அரசாங்கத்தினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மகிந்தவும் அவரது ஆதரவாளர்களும் ”எட்கா” எனப்படும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் ஊடாக, மகிந்த ராஜபக்ஷ கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=153603&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 465 views
-
-
18 JUN, 2025 | 09:49 AM யாழில் கடுமையான காற்று காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியள…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள 15ஆவது சார்க் தலைவர்கள் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநாட்டின் பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் எமது இணைய தளத்திற்கு தெரிவித்தார். சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமருக்கு 3000 இந்திய படையினர் பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும், கடல் மற்றும் வான் பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டி…
-
- 8 replies
- 1.5k views
-
-
Northern Uni இன் துணைவேந்தராக, இலங்கையின் புகழ்பூத்த உயிர் வேதியல் துறை பேராசிரியரும், கல்வியலாளருமாகிய வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். வசந்தி அரசரத்தினம், Northern Uni இன் துணைவேந்தராக நாளையதினம்(30.06.2025)முதல் பணியேற்கவுள்ளார். Northern Uni சமூகம் மற்றும் அதன் தலைவர், துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டமை குறித்து தமது மகிழ்ச்சியை அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர். சிறந்த கல்வியாளர் அந்த அறிக்கையில், ''இலங்கையின் உயர் கல்வித்துறையில் ஒரு சிறந்த கல்வியாளரும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவருமான பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் கல்விசார் சிறப்பு, அளப்பரிய நிர்வாகத்திறமை மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகிய தகைமை…
-
-
- 3 replies
- 370 views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் கோட்டத்தில் உள்ள ஜெயபுரத்தில் நேற்று சனிக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரவழி வானொலியான புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 789 views
-
-
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் இசைநிகழ்ச்சியா?... ஏ.ஆர். ரகுமானுக்கு எதிர்ப்பு ஏ.ஆர்.ரகுமான் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. 'நெஞ்சே எழு' என்ற பெயரில் சென்னை, கோவை மற்றும் மதுரை போன்ற நகரங்களில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியிருந்தார். தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 23 ம் தேதி இலங்கையில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் ஒருபக்கம் களைகட்டி வரும் நிலையில், மற்றொருபுறம் இதற்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. சென்னை முழுவதும் ஒரு அமைப்பு "தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசோடு கைகோர்ப்பது நியாயமா? என்று கேள்வி கேட்டு சென்னை முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். ம…
-
- 3 replies
- 558 views
-
-
(எம்.மனோசித்ரா) ' நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு ' தேசிய கொள்ளைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின் படி வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக நாடு முழுவதிலிருந்தும் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களின் தகவல்களையும் சேகரிக்க தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதற்காக கடந்த ஆண்டு அல்லது இவ்வாண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட வெகுசன ஊடகவியலாளர்களிடம் இருந்து மாத்திரம் தகவல்கள் திரட்டப்படவுள்ளன. இதற்காக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் www.media.gov.lk இணையதளம் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள அல்லது அமைச…
-
- 1 reply
- 317 views
-
-
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கம்? 10 July 2025 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்று நீதவானினால் பார்வையிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, புதுக்குடியிருப்பு காவல்துறையினரால், நீதிமன்றத்திற்குச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, குறித்த பதுங்கு குழியை அகழ்வு செய்வதற்கு முன்பாக, நீதவான் நேற்றைய தினம், குறித்த இடத்திற்குச் சென்று, கள ஆய்வில் ஈடுபட்டார். நீதவானின் ஆலோசனைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும…
-
- 1 reply
- 227 views
-
-
மாகாண மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் தமிழ்மக்களின் தேவைகளை நிறைவுசெய்யமுடியும் என்பதே கருணா குழுவின் தீர்வு யோசனையாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற
-
- 0 replies
- 775 views
-
-
ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் சாதாரண பயணிகள் விமானத்திலேயே சென்று வந்துள்ளதாகவும் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் புதிய கட்டடத் தொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘நிதி ஒழுக்கம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அரசியல்வாதிகளைப்போன்று அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும். வருடாந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கு வருடத்தின் ஆரம்பம் முதலே பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் நிதி ஒழுக்கமும் சிற…
-
- 0 replies
- 417 views
-
-
வவுனியாவில் கோர விபத்து: நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு! – வாகனங்களுக்கு தீ வைப்பு! வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பேருந்துக்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வானும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வான் சாரதியும் தீ வித்தில் அகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்…
-
- 14 replies
- 1.6k views
-
-
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் எதிர்ப்பு! திய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் இன்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நேற்று (17) நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்தது. குறித்த விளக்கத்தின்படி, 10 மற்றும் 11 ஆம் தரங்களில் ஐந்து பாடங்கள் கட்டாய பாடங்களாக பட்டியலிடப்பட்டுள்ளதுடன் தேர்வுப் பாட…
-
- 5 replies
- 319 views
-
-
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்-இரா.சம்பந்தன் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது தனியாகப் பிரிந்துசென்று சுயநிர்ணய அடிப்படையில் செயற்பட அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். விரிவு » http://www.tamilseythi.com/tamileelam/samp...2008-07-23.html தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் சுயநிர்ணய உரிமையை வழங்காது-சபை முதல்வர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் சுயநிர்ணய உரிமையை வழங்காது என சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால.டி.சில்வா இன்று பாராளுமன்றத்தில் ப…
-
- 0 replies
- 620 views
-
-
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு! கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தவிட்டுள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு ஏற்கனவே 10 பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றையதினம் மாணவ…
-
- 0 replies
- 111 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி யாக்கருப் பகுதியில் இலங்கைப் படையினர் பகலில் பயன்படுத்தும் காவலரண் ஒன்று மக்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் இக்காவலரணைத் தீயிட்டு எரித்துள்ளனர். www.tamilwin.com
-
- 4 replies
- 1.8k views
-
-
கொரோனா தொற்று அச்சுறுத்தல் – பயணிகள் கப்பல்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கப்பலின் மூலம் நாட்டிற்குள் வரவுள்ள பயணிகளை இடைநிறுத்தம் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கொழும்பு துறைமுகத்திற்கு இதுபோன்ற பல பயணிகள் கப்பல் நாட்டிற்குள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் தற்பொழுது தெற்காசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரா…
-
- 0 replies
- 653 views
-
-
ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து சுட்டுக்கொல்லும் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து இன்று சென்னையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 618 views
-
-
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போது மிகப்பெரிய ஒரு வரலாற்றுச் சாதனையைப் புரிந்த மனமகிழ்ச்சி தமிழ் மக்களிடம் இருந்தது. யுத்த வெற்றியில் திளைத்திருந்த அன்றைய அரசாங்கத்துக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை மிகச் சரியான வகையில் நிறைவேற்றிய திருப்தி தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. ஆயுதத்தால் அடக்கிய அரசாங்கததுக்கு வாக்கின் பலத்தை உணர்த்திய அலை ஓய்வதற்கிடையில் அமைச்சுப்பதவியைப் பெறுவதற்கான நுண் அரசியல் ஆரம்பமாகியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை தமிழ் அரசுக்கட்சி மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாகத் தொடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை தமிழ் அரசுக்கட்சி மறுத்தாலும் ஏனைய கட்சிகள…
-
- 0 replies
- 615 views
-
-
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 மார்ச் 08 , பி.ப. 04:28 - 0 - 4 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கவனயீர்ப்புப் போராட்டமொன்று, மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்னால் இன்று (08) முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் கூட்டமைப்பும் அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையமும் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கவனயீர்ப்பில் பெண்கள், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, “அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்”, “அரசே!, பெண்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியுள்ள அனைத்து நுண்கடன்களையும் இரத்துச் செய்” என்ற கோரிக்கைகளைப் பெண்கள் முன்வைத்தனர். ht…
-
- 0 replies
- 278 views
-
-
21 AUG, 2025 | 06:08 PM சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைத்தீவில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ். நிசாந்தன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை (20) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு அதுவும…
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
புலிகளை கருணா அழித்தது போல தமிழரசு கட்சியை அழிக்கிறார் சுமந்திரன் – மகளிர் அணி குற்றச்சாட்டு.! சுமந்திரன் இருக்கும் மட்டும் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உப தலைவர் மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருணா அழித்தது போல் தமிழரசுக் கட்சியையும் ,தமிழ் மக்களையும் அழிக்கும் வகையிலேயே சுமந்திரன் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் மேலும் தெரிவித்ததாவது… சுமந்திரன் தான்தோன்றி தனமான முடிவுகள் எடுப்பதை கட…
-
- 10 replies
- 1.7k views
-
-
துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் பலி அநுராதபுரம், திரப்பனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிதோகம வீதியில் குருவில பிரதேத்தில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் மூவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த சம்பவம், இன்று சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சடலங்கள் மூன்றும், அவ்விடத்தில் வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சி.ஏ.கே0692 என்ற இலக்கத்தகட்டைகொண்ட வாகனத்திலேயே இருந்துள்ளது என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/171070/%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AF-…
-
- 0 replies
- 294 views
-
-
கொரோனாவைக் கட்டுப்படுத்த நூரளையில் விசேட வேலைத்திட்டம் நீலமேகம் பிரசாந்த் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல், நுவரெலியா பிரதேச சபையில், நேற்று (18) நடைபெற்றது. இதன்போது நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை தெளிப்பதோடு மக்களுக்கு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுவதோடு மக்கள் நடமாட்டமுள்ள இடங்களி…
-
- 1 reply
- 347 views
-
-
Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 12:38 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பலப்பிட்டிய பிரதேசத்தில் தபாலகமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மேலும் அவர் குறிப்பிடுகையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, தேசிய வரி வருமான…
-
-
- 9 replies
- 675 views
- 1 follower
-
-
தீர்க்கமான கட்டத்தில் தேர்தல் 22.08.2008 வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணசபைகளுக்கு நாளை நடக்கப்போகும் தேர்தல், வெறும் பிரதேச மட்டப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாக்களிப்பு மட்டும் அல்ல. அதற்கும் அப்பால் தேசிய மட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அது விளங்குகின்றது. தமிழர் தாயகம் மீது தமது அரசு தொடுத்திருக்கும் கொடூரப் போருக்கு தென்னிலங்கைச் சிங்களத்திடம் அங்கீகாரம் பெறும் தேர்தலாக நாட்டினதும் அரசினதும் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலை முன்நிறுத்தியிருக்கின்றார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவோ பட்டினியில்லாத வாழ்க்கைத்தரமும் சமரசமும் நிலைநிறுத்தப்படுவதற்கு மக்களின் அனுமதியைக் க…
-
- 0 replies
- 546 views
-