ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
ஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறுவதற்கு கூட்டமைப்பு முன்வரவேண்டும் இறுதி பஸ்ஸை கைவிட்டால் ஆபத்து என்கிறது சுதந்திரக் கட்சி (ரொபட் அன்டனி) நாட்டின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.அந்த சந்தர்ப்பத்தில் உச்சபட்ச பயனை அடையவேண்டுமானால் தமிழ் தேசியக்கூட்டமைப்பானது ஒற்றையாட்சிக்குள் பொலிஸ், காணி அதிகாரங்கள் உள்ளிட்ட முழுமையான அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு முன்வரவேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். தற்போது இனப்பிரச்சினை தீர்வ…
-
- 0 replies
- 243 views
-
-
வன்னியில் தொடரும் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 536 பேர் இன்று புதன்கிழமை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன், கப்பல் மூலம் புதுமாத்தளன் பகுதியில் இருந்து புல்மோட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். 'கிறின் ஓசன்' என்ற கப்பலின் மூலம் புல்மோட்டையில் உள்ள இந்திய இராணுவத்தின் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் மூவர் பிரயாணத்தின் போதே மரணமடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் அளவில் புதுமாத்தளனில் இருந்து புறப்பட்ட கப்பல் இரவே புல்மோட்டைப் பகுதிக்கு வந்ததாகவும், கப்பலில் வந்தவர்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களால் படகுகளில் ஏற்றப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின…
-
- 1 reply
- 373 views
-
-
திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு – சாள்ஸ் எம்.பி. அதிரடி விஜயம் மன்னார் நிருபர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று செவ்வாய்க் கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெ…
-
- 8 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச நிலை காய் நகர்த்தல் [12 - April - 2009] பீஷ்மர் இலங்கையின் இனக் குழுமப் போர் கிளிநொச்சி சம்பவத்துடன் அப்பிரச்சினையின் பின்புலம் கூட மறக்கப்பட்டு கிளிநொச்சி நிலைப்பட்ட மக்கட் பெயர்வு பிரச்சினையே இன்று மிகப் பெரிய சர்வதேச நிலை பிரச்சினையாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் அதிகாரத்திலுள்ள பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்கள் வருகின்றார்கள், வரவிரும்புகின்றனர். இதற்கான பிரதான காரணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது நடைபெறும் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலாகும். உண்மையில் விமானக் குண்டு வீச்சிலும் பார்க்க ஷெல் தாக்குதலே அதிகரித்துள்ளது. இலங்கையில் இப்பொழுது தடைசெயப்பட்டுள்ள பி.பி.ஸி.…
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ். செயலகத்திலும் சுனாமியில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 2004ம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த உறவுகளுக்கு யாழ் மாவட்ட செயலக உத்தியோ கத்தர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் மாவட்ட கேட்போர் கூடத்தில் இன்று காலை 9மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றது யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத விப் பணிப்பாளர் ச.ரவி தலைமையில் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்களும் சுனாமியால் உயிரிழந்த உறவுகளுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தனன் மற்றும் உத்தியோ கத்தர்கள் உட்பட ப…
-
- 0 replies
- 212 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக 3 ஆலயங்களில் தேங்காய் உடைப்பு தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எதிராக ஆலயங்கள் 3 இல் தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள அரசாங்கம் மக்களுக்கு இழைக்கும் தீங்குகளை நிறுத்துமாறும், அவ்வாறு முடியாவிட்டால் புதிய அரசாங்கம் உருவாக ஆசிர்வாதம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்த ஆலயங்களில் பூசை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சீனிகம, முன்னேஸ்வரம் மற்றும் நவகமுவ ஆகிய ஆலயங்களில் இந்த வேண்டுதல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசபற்றுள்ள மக்கள இயக்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/188926/அரச-ங-கத-த-க-க-எத-ர-க-…
-
- 0 replies
- 214 views
-
-
சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – இம்முறை திருகோணமலையில் திருக்கோவில் நிருபர்– படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 24 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது என கிழக்கு ஊடக ஒன்றியத்தின் தலைவர் தேவஅதிரன் தெரிவித்தார். கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களுடன் இணைந்து கிழக்கு ஊடக ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. …
-
- 1 reply
- 510 views
-
-
புலம்பெயர் நாடுகளில் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டங்களில் அந்தந்த நாட்டு அரசியலாளர்கள் பங்கேற்பதும் கருத்துக்கூறுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 325 views
-
-
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து விலகியுள்ள உறுப்பினர்களே மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண புலனாய்வுப் பிரிவுத் தலைவர் ஒருவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. அத்துடன், இவர்கள் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் பிள்ளையானின் கட்சி மீண்டும் பிளவுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கு முன்னர் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்து செயல்பட்டுவந்த…
-
- 2 replies
- 701 views
-
-
ஐ.நாவில் நெருக்கடியை ஏற்படுத்தவே வடக்கு, கிழக்கில் போராட்டம்.! - பதறுகின்றது கோட்டா அரசு ஜெனிவாவில் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தும் நோக்குடனே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றன. அதற்கமையவே எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு அந்த அமைப்புக்கள் உத்தேசித்துள்ளன." - இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளைக் கண்டித்து எதிர்வரு…
-
- 1 reply
- 869 views
-
-
27 வருடங்களாக சொந்த நிலத்தில், சொந்த வீட்டில் வாழ முடியாமல் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களுடைய நிலத்தில், எங்களுடைய வீட்டில் சிங்கள மக்கள் தங்கியிருக்கின்றார்கள் எங்களுடைய கடலில் நீராடி மகிழ்கிறார்கள் என வலி.வடக்கு மக்கள் கவலையுடன் கூறியுள்ளனர். இன்றைய தினம் ஊறணி, மயிலிட்டி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக ஊறணி பகுதியில் 400 மீற்றர் கரையோர பகுதியும், 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு வ லிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் வந்திருந்தனர். இதன்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களுடைய வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருந்து குடும்பம் குடும்பமாக கடலில் நீர…
-
- 7 replies
- 841 views
-
-
அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் மலையகம் 33 Views 1000 ரூபாயாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/33-1.jpg அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இன்று கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி, கொழும்பு, செட்டியார் தெரு வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். https://www…
-
- 0 replies
- 295 views
-
-
-
- 0 replies
- 365 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவில் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என சிறிலங்கா அரசாங்கம் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருப்பதையடுத்து சிறிலங்காவுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான இராஜதந்திரப் போர் இப்போது மேலும் தீவிரமடைந்திருக்கின்றது. முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய செய்மதி ஒளிப்படங்கள் சில ஐ.நா.வினால் வெளியிடப்பட்டதையடுத்தே இந்தக் குற்றச்சாட்டை சிறிலங்கா அரசு முன்வைத்துள்ளது. பாதுகாப்பு வலயப் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எனக் கூறி செய்மதி ஒளிப்படங்கள் சிலவற்றை ஐ.நா. சபை கடந்த வாரத்தில் கசிய விட்டதையடுத்து சிறிலங்கா அர…
-
- 0 replies
- 574 views
-
-
தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்க அரசு முன்வரவேண்டும்! - சம்பந்தன் உரை!! தமிழ் மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர். அவர்களுக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வொன்று தேவையாகவுள்ளது. எனவே, சாதகமான முறையில் நடந்து கொண்டு அரசு தீர்வை வழங்க வேண்டும். பல்லின சமூகமும் வாழும் இலங்கையில் ஜனநாயகம் என்பது முக்கியம். எனினும், ஏதோ ஓர் அடிப்படையில் தேர்தலை வெல்வதுதான் ஜனநாயகம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சட்டம், நீதி, இறைமை குறித்து பெரும்பாலானோர் இன்னும் உணரவில்லை. இது குறித்து அரசியல் தலைமைகள் விளக்கமளிக்க வேண்டும். தமிழ் மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர். அவர்களுக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வொன்று தேவையாகவுள்ளது. எனவே, சாதகமான முறையில் நடந்து கொண்டு அரசு தீர்வை வ…
-
- 1 reply
- 639 views
-
-
அமைச்சரவையிலுள்ள 7 அமைச்சர்கள் ஓரின சேர்க்கையாளர்கள்’ அமைச்சரவையிலுள்ள 7 அமைச்சர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று தெரிவித்துள்ள மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உபாலி கொடிகார, அவர்களது இந்தப் பொல்லாத குற்றங்களை ஒழித்து வைத்துக்கொள்வதற்காக, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு உதவ எத்தணிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியின், மாகாண சபை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதொன்றாக மாற்றுவதை விடுத்து, நாட்டின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமைக்கானத் தீர்வுகளைக் காணவேண்டும் என, பல வ…
-
- 0 replies
- 366 views
-
-
ஆட்சி மாறினாலும் சிங்கள இனவாதிகளின் நிகழ்ச்சி நிரல் தொடரும் - கருணா கட்சியின் செயலாளர்.! எந்த அரசாக இருந்தாலும் சிங்கள இனவாதிகளின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலிற்கான கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை செயற்படுத்துபவர்களாகவே இருப்பார்கள் என கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் செயலாளர வ. கமலதாஸ் தெரிவித்தார். கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.... தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் வடமாகாண கிளையின் சந்திப்பு இன்று (நேற்று) இடம்பெற்றது. தமிழ் மக்களின்…
-
- 3 replies
- 457 views
-
-
பாதுகாப்பு வளையத்தில் கொன்று குவிக்கும் ராணுவம் வியாழக்கிழமை, மே 7, 2009, 16:16 [iST] சென்னை: வன்னி பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர், எப்படி அப்பாவி மக்களை சரமாரியாகக் கொன்று குவித்து வருகின்றனர் என்பதை கண்ணீர் மல்க, இதயம் துடிதுடிக்க இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அகதிகள் விவரித்துள்ளனர். ஆந்திர மாநில கடற் பகுதிக்கு 9 நாட்களுக்கு முன்பு இலங்கை அகதிகள் சிலர் படகில் வந்தனர். மொத்தம் 21 பேர் படகில் வந்தனர். இவர்களில் நான்கு வயது குழந்தை உள்பட 10 பேர் நடு வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தப்பி வந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மனித உரிமை அமைப்பு ஒன்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து மருத்துவமனையில் சேர்…
-
- 0 replies
- 832 views
-
-
வடக்கில் அபிவிருத்திக்காக 1146 ஏக்கர் காட்டை அழிக்க இணக்கம்..! முதற்கட்ட கலந்துரையாடலும் நிறைவு.. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 1146 ஏக்கர் காடுகளை அபிவிருத்திக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. வனஜீவராசிகள், வனவள பரிபாலன அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப ஒதுக்கப்பட்ட காடுகள் தவிர்ந்த ஏனைய அரச காடுகளை அபிவிருத்திக்காக பயன்படுத்தும் நோக்கில் பிரதேச செயலாளர்களிடம் கையளிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான கலந்தரையாடல் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நேற்று முன்தினம் (23) மு.ப 9.30மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. சுற்றாடல், வன ஜீவராசிகள் வளங்கள் மற்றும் காடுகள் என்பவற…
-
- 1 reply
- 361 views
-
-
சர்வதேச சமூகத்திடம் விடுதலைப்புலிகள் சர்வதேச வழிமுறைகளில் செயற்பட கோரிக்கை கடந்த 24 மணிநேரத்திற்குள் 2000ற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வலய மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிறீலங்கா அரசாங்கம் பொதுமக்கள் மீது எறிகணை குண்டுதாக்குதல்களை நடாத்துகின்றது. இதுபோர்க்குற்றமாகும் மற்றும் அரச பயங்கரவாதம் எனவும் விடுதலைப்புலிகளின் சர்வதேச இராஜதந்திர தொடர்புகளுக்கு பொறுப்பான திரு.எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஐநா மற்றறும் சர்வதேச சமூகம் ஆபத்திற்குள் இருக்கும் பொதுமக்கi பாதுகாக்கும் தமது கடமையில் இருந்து தவறியுள்ளதால் மிகவும் மனவிரக்தியடைந்துள்ளனர். கடந்த காலங்களில் ஏனைய சர்வதேச முரண்பாடுகள் நிகழ்ந்த பகுதிகளில் ஐநா மற்றும் ச…
-
- 0 replies
- 898 views
-
-
இலங்கை: விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் பலவற்றை கடந்த வாரம் இலங்கை அரசு பறிமுதல் செய்திருக்கிறது. அவற்றை விரைவில் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை திறைசேரிக்கு வழங்க இருக்கிறது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின் இலங்கை அரசு அவர்கள் மீது எடுத்து வரும் தொடர் நடவடிக்கையில் கடந்த வாரம், விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமர் 120 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது இலங்கை அரசு. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை அனைத்தும் விரைவில் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை திறைசேரிக்கு வழங்க உள்ளதாக இலங்கை அரசின் குற்றப்புலணாய்வு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ''புலிகளுக்கு சொந்தமான நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், அச்சகங்கள், இயந்…
-
- 7 replies
- 1.4k views
-
-
அதிரடிப்படையினரை கண்டு ஓடியவர்களிடமிருந்து வாள்கள் மீட்பு உரும்பிராய் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் கடமையிலிருந்த, விசேட அதிரடிப்படையினரை கண்டு தப்பித்து ஓடிய நபர்களிடம் இருந்து வாள்கள் மிட்கப்பட்டுள்ளன. யhழ் - உரும்பிராய் பகுதியில் நேற்றிரவு விசேட அதிரடிப்படையினர் கடமையிலிருந்த சமயம் மோட்டார் வண்டி ஒன்றில் இரு வாள்கள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் அவ்வீதியில் விசேட அதிரடிப்படையினரை கண்டதும் தமது மோட்டார் வண்டியை திருப்பி தப்பிச் செல்ல முயன்றனர். இச் செயற்பாட்டால் சந்தேகமுற்ற விசேட அதிரடிப்படையினர் குறித்த இளைஞர்களை பின்தொடர்ந்து சென்றபோது இடையில் குறித்த இ…
-
- 0 replies
- 250 views
-
-
சிறிலங்காவின் மலையக பிரதேசமான வட்டவளை முருகன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலையும் கோயிலின் பாதுகாப்பு சுவர்களும் சிங்கள காடையர்களினால் நேற்று அடித்து உடைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 463 views
-
-
தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதான பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் பணியாளர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்கின்றது. தம்புள்ளை மைதானத்தின் 11 பணியாளர்கள் மைதானத்தின் பார்வையாளர் அரங்கின் கூரையின் மீது ஏறி நின்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை இவர்கள் நேற்று (07) ஆரம்பித்திருந்தனர். சுமார் 10 வருடங்களுக்கு மேலாக குறித்த மைதானத்தில் பணிபுரியும் தம்மை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை காலமும் ஒப்பந்தம் அடிப்படையிலேயே தாங்கள் பணிபுரிந்து வருவதாக இவர்கள் சுட…
-
- 0 replies
- 356 views
-
-
வீட்டுத் திட்ட நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்-அரசாங்கத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் கடிதம் 21 Views தொடங்கப்பட்டு நிறைவுக்கு எட்டாத வீட்டுத்திட்ட நிலுவைத் தொகையை வழங்குமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம் மூலம் கோரியுள்ளார். இன்று அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “முன்னாள் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் காலப்பகுதியில் மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக ஆரம்பிக்கப்பட்ட வீட…
-
- 0 replies
- 431 views
-