நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 0 replies
- 750 views
-
-
-
- 1 reply
- 683 views
-
-
-
- 22 replies
- 3.3k views
-
-
-
- 1 reply
- 911 views
-
-
-
மீனாட்சி. ஜெ பிபிசிக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், The Washington Post தோசை. தென் இந்தியர்களின் தினசரி காலை உணவாக எப்போது மாறியது என்று தெரியாது. ஆனால், காலை மட்டுமல்ல, எந்த வேலையாக இருந்தாலும் தோசையை சாப்பிடும் மக்களும் இருக்கிறார்கள். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த தோசை, சென்னை பாரிமுனையில் இருந்து, பாரிஸ் லே சேபல் வரைக்கும் மிகவும் பிரபலமான ஒரு சர்வதேச உணவாக இன்று மாறியிருக்கிறது. நெய் ஊற்றி சுட்ட தோசைக்கு மிளகாய் பொடி, நல்லெண்ணெய், சட்னி, சாம்பார் ஆகியவற்றை தொட்டு சாப்பிடுவது தென் இந்தியர்களி…
-
- 2 replies
- 709 views
-
-
இந்த காணொளியில் நாங்க யாழ்ப்பாண முறையில் இலகுவா செய்ய கூடிய 3 வகை வெங்காய சம்பல்கள் செய்வது பார்க்க போகின்றோம்.இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும் அதே நேரம் வெவ்வேறு உணவுகளுடன் மிகவும் ருசியாக இருக்கும். அதுவும் மரக்கறி உணவுகளோடையும் பிரியாணியோடையும் சேர்த்து சாப்பிடேக்க மிகவும் ருசியா இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க.
-
- 1 reply
- 666 views
-
-
3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்டலி கண்டுபிடிப்பு ! விண்வெளியில் கூட பயன்படுத்தலாம்.! தமிழர்களின் உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு தான் இட்டலி, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற உணவாக இந்த இட்டலி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பண்டங்களின் பட்டியலில் இட்டலியை சேர்த்துள்ளது. உலகம் முழுதும் இட்டலிக்கென்று தனியாகச் சிறப்புத் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பம்சம் கொண்ட இட்டலியை தினந்தோறும் செய்து சாப்பிடுவதில் சிறிது சிக்கல் உள்ளது. வீட்டில் தினமும் இதற்கான மாவு தயார் செய்து இட்டலியை தயாரிப்பது சிக்கலாக உள்ளது. அதோடு சமைத்து வைக்கப்படும் இட்டலியும் நீண்ட நேரம் க…
-
- 4 replies
- 1.3k views
-
-
துடிப்பான, துறுதுப்பான, குறும்புக்கார நடிகர் கார்த்தி. “நாக்குக்கு ருசியா இருக்கணும்... நமக்கு ஹெல்த்தியாகவும் இருக்கணும்்” என்கிற கார்த்திக்குப் பிடித்த உணவுகளை செய்து காட்டியிருக்கிறார், சென்னை ‘ப்ரியதர்ஷினி பார்க் ஹோட்டல்’ செஃப் தினகரன். உணவுகளின் பலன்களைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அனுராதா. வஞ்சிரம் மீன் கிரேவி தேவையானவை: வஞ்சிரம் மீன் - 500 கிராம், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி - தலா 200 கிராம், பெரிய வெங்காயம், பூண்டு, புளி - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மி.லி, வெந்தயம், மிளகாய்த் தூள் - தலா 50 கிராம், கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தலா 20 கிராம், தனியா - 60 கிராம், தேங்காய் - 1. …
-
- 0 replies
- 1.8k views
-
-
-
இதமான குளிர்காலம் முடிந்து... வாட்டி வதைக்கும் கோடை குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. ''உணவு முறை, உடை, பழக்கவழக்கங்களை வெயில் காலத்துக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்வதன் மூலம், அதையும் சுகானுபவ காலமாக கொண்டாடலாம்'' என்று கனிவுடன் கூறும் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், '30 வகை COOL ரெசிபி’களை இங்கே வழங்குகிறார். ''வெயிலின் கடுமையைத் தணிக்க உதவும் இளநீர், தர்பூசணி, கிர்ணிப்பழம், கம்பு, சுரைக்காய், வெந்தயம், தேங்காய்ப்பால் போன்றவற்றைக் கொண்டு விதம்விதமான ரெசிபிகளைக் கொடுத்துள்ளேன். இந்த கூல் ரெசிபிகளை, புன்னகை யுடன் பரிமாறினால்... சாப்பிடுபவரின் உடலும் உள்ளமும் டபுள் கூல்தான்!'' என்று ஆருயிர் தோழியாக, அன்புப் பெருக்குடன் கூறுகிறார் கிருஷ்ணகுமாரி. லிச்சி - கார்…
-
- 0 replies
- 4.8k views
-
-
ம் எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளில் இடியாப்பத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அதற்காக இடியாப்பத்தையே மீண்டும் மீண்டும் செய்து பரிமாறினால், அலுப்பு தட்டிவிடும் என்பதும் உண்மைதானே! இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ, இடியாப்பத்தில் 30 வகை சுவையான ரெசிபிகளை இங்கே பரிமாறும் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா, ''பருப்பு உசிலி இடியாப்பம், பாஸந்தி இடியாப்பம், டிரைஃப்ரூட் இடியாப்பம் என்று வெரைட்டியாக கொடுத்துள்ளேன்... செய்து பரிமாறி பாராட்டுகளை அள்ளுங்கள்'' என்று உற்சாகமூட்டுகிறார். குறிப்பு: 30 ரெசிபிகளுக்கும் இடியாப்பம் தயாரிக்கும் முறை ஒன்றுதான். எனவே, முதலில் சொல்லப்பட்டிருக்கும் இனிப்பு இடியாப்ப ரெசிபியில் இருப்பது போலவே, அனைத்து ரெசிபிகளுக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி வீட்டில் பிள்ளைகள் அதிக நேரம் தங்கும் விடுமுறை சீஸன் இது. வித்தியாசமான, சுவையான உணவை எதிர்பார்த்து, ‘’இன்றைய ஸ்பெஷல் என்னம்மா..?’’ என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன செய்து கொடுத்தால் குஷி அடைவார்கள் என்று அக்கறையுடன் யோசிக்கும் இல்லத்தரசிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கிண்டர் கார்டன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் `30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி’க்களை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் அனுப்ரியா ஆனந்த். இவர் இணையத்திலும் சமையல்கலையில் அசத்தி வருபவர். நூடுல்ஸ் சூப் தேவையானவை: நூடுல்ஸ் - கால் கப், கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் - தலா ஒன்று, சோள…
-
- 2 replies
- 4k views
-
-
30 வகை கோடை உணவுகள் ‘இந்த முறை எப்படி வாட்டி எடுக்கப் போகுதோ...' கோடை தொடங்கும்போதே மக்கள் மனதில் இந்த பீதியும் தொடங்கிவிடும். ”மற்ற சீஸன்களைப் போலவே கோடையும் என்ஜாய் பண்ண வேண்டிய ஒன்றுதான். நீண்ட விடுமுறை, புது இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு, நெருங்கிய உறவினர்களைச் சந்தித்து மகிழ்தல் என கோடை பல சந்தோஷத் தருணங்களை உங்கள் வாசற்படிக்கு கொண்டுவந்து சேர்க்கும். இந்த பருவத்துக்கேற்ப நம் பழக்கவழக்கங்கள், உணவு முறையை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் போதும். அதிக சிரமமின்றி எளிதில் கடந்துவிடலாம்'' என்று கூறும் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால், உடலுக்குக் குளிர்ச்சி தரும் பொருட்களைக் கொண்டு 30 வகை கோடை உணவுகளை இங்கே வழங்குகிறார். ஹேவ் எ நைஸ் சம்மர்…
-
- 1 reply
- 5k views
-
-
30 வகை சிங்கப்பூர், மலேசியா ரெசிப்பி! மலேசியர் மட்டுமின்றி இந்தியர், சீனர் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய முக்கியமான உணவுகளின் தொகுப்பு இது. இந்தியாவில் கிடைக்காத பொருட்கள் மற்றும் முட்டைக்கு மாற்றாகச் சேர்க்கப்பட வேண்டியவை பற்றியும் குறிப்புகள் உள்ளன. அசைவம் இல்லாமலே, மலேசிய - சிங்கப்பூர் உணவுகளை வெஜிடேரியன்களும் ருசிக்கும் வகையில் ரெசிப்பிகளை அளித்திருக்கிறார் சிங்கப்பூர் சமையல் கலைஞர் அப்ஸரா ஃபரீஜ். புத்தாண்டில் புதுச் சுவை அறிவோம்! பேக்ட் குயே தேவையானவை: பாண்டன் இலை - 5, மைதா மாவு - ஒரு கப், முட்டை - ஒன்று (விரும்பாதவர்கள் கண்டன்ஸ்டு மில்க் பயன்படுத்தலாம்), சர்க்கரை - 1/2 கப், கெட்டியான தேங்காய்ப்பால் - 150 மில்லி, எண்ணெ…
-
- 2 replies
- 3.9k views
-
-
30 வகை தீபாவளி பலகாரம்! பலகாரங்களும் பட்சணங்களும்தான் தீபாவளியின் ருசி கூட்டுபவை. இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் தித்திப்பு பன்மடங்காக, அல்வா முதல் அதிரசம் வரை பண்டிகை விருந்து படைக்க உங்களை தயார்படுத்துகிறார் சென்னையைச் சேர்ந்த புஷ்பலதா. வரகு சீப்பு சீடை தேவையானவை: வரகு அரிசி மாவு – 1 கப், உளுத்தம் மாவு – கால் கப், கடலை மாவு – கால் கப், தேங்காய்ப்பால் – கால் கப், வெண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வரகு அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும். பின்னர் தேங்காய்ப்பாலை லேசாக சூடு செய்து,…
-
- 4 replies
- 20.7k views
-
-
30 வகை பூரி சாப்பாட்டுக்கு ‘டிமிக்கி’ கொடுக்கும் குழந்தைகள்கூட, ‘இன்னிக்கி பூரி பண்ணப் போறேன்’ என்று சொன்னால், ‘ரெடியா?’ என்று உடனே பரபரப்பார்கள். அப்படி குட்டீஸ் முதல், சீனியர் சிட்டிசன்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் 30 வகை பூரி ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பாரதி முரளி, ”எண்ணெய் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதால், பூரி வகைகளை அளவோடு செய்து கொடுத்து ஆரோக்கியத்தோடு வாழுங்கள்” என்று வாழ்த்துகிறார். அத்தனை பூரியையும் அழகு மிளிர அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. பூரி தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், சர்க்கரை, ரவை – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: ரவையையும்…
-
- 16 replies
- 8.1k views
- 1 follower
-
-
30 வகை பிரியாணி எவ்வளவுதான் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் சமைத்துப் பரிமாறினாலும்... டேஸ்ட் பார்த்துவிட்டு, பல சமயங்களில் உதட்டைப் பிதுக்கும் பிள்ளைகளும், எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் சாப்பிட்டுவிட்டு கைகழுவும் பெரியவர்களும், பிரியாணி செய்துகொடுத் தால்... 'வாவ்!’ என்று வாய்பிளப்பார்கள். அந்த அள வுக்கு வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் அள்ளி அள்ளி சுவைக்க வைக்கும் பிரியாணியில் 30 வகைகளை வாரி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி. இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத இளநீர் பிரியாணி, முருங்கைக் காய் பிரியாணி, பைனாப்பிள் பிரியாணி ஆகிய வற்றுடன் உடல்நலத்துக்கு உற்ற துணையாய் கைகொடுக்கும் வேப்பம்பூ பிரியாணி, நார்த்தங்காய் பிரியாணி போன்றவையும் இதில் அடங்கும். ''அப்புறமெ…
-
- 8 replies
- 10.7k views
-
-
வாங்க இண்டைக்கு நாம நாலே நாலு பொருட்களை வைச்சு ஒரு சுவையான அதே நேரம் குறைஞ்ச நேரத்துல செய்ய கூடிய ஒரு ஆட்டிறைச்சி கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து பாருங்க, வித்தியாசமாவும் சுவையாவும் இருக்கும். செய்து பாத்து சொல்லுங்கோ என.
-
- 0 replies
- 423 views
-
-
-
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
1970 / 1980 களில்... யாழ்ப்பாணத்தில்... இருந்த, Restaurant களின் பெயர் விபரமும், விலைப் பட்டியலும். *கோட்டை முனியப்பகோயில்* தேங்காய்ச் சொட்டு. *பரணி ஹோட்டல்* அப்பம். *சிற்ரி பேக்கறி* கால், றாத்தல்... பாணும், பருப்பும்.... *சுபாஸ் கபே* ஐஸ்கிரீம். *றிக்கோ கோப்பி பார்* றோல்ஸ், கோப்பி. *மலாயன் கபே* உளுந்து வடை / போளி. *தாமோதர விலாஸ்* நெய் தோசை. *சந்திரா ஐஸ் க…
-
- 56 replies
- 8.1k views
-
-
யாழ்ப்பாணத்தில யார கேட்டாலும் கயல் மீன் தான் ரொம்ப ரொம்ப ருசியான மீன் எண்டு சொல்லுவாங்க, ஏன் மீன்களின் அரசி எண்டு கூட ஊர் பக்கங்களில சொல்லுவாங்க. வாங்க இண்டைக்கு நாம இந்த கயல் மீனை எப்பிடி கண்டு பிடிக்கிற எண்டும், அத வச்சு தெருவுக்கே கம கமக்கிற ஒரு மீன் குழம்பு வைக்கிறது எண்டும் பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 6 replies
- 1.9k views
-
-