நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தேவையான பொருட்கள்: பச்சரிசி - 150 கிராம் சிறும்பருப்பு - 1 கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) வெந்தயம் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) பிரியாணி இலை - 1 கொத்தமல்லி - சிறிது புதினா - சிறிது தேங்காய் பால் - 1 கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் சீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். …
-
- 1 reply
- 634 views
-
-
கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி கேரளாவில் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இப்போது கேரளா ஸ்டைல் மீன் மொய்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வாவல் மீன்/கிங்பிஷ் - 250 கிராம் வெங்காயம் - 1 பச்சை மிளகாய - 2 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தேங்காய் பால் - 1 கப் கறிவேப்பிலை - சிறிது கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் …
-
- 1 reply
- 643 views
-
-
வாங்க இண்டைக்கு நாம கரு கருண்டு அடர்த்தியா தலைமுடி வளருறத்துக்கு ஏற்ற ஒரு சம்பலும் துவையலும் எப்படி கருவேப்பிலையில செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி நீங்க வாரத்துக்கு 2 தரமாவது செய்து உணவோட எடுத்து வந்தா கட்டாயம் உங்க தலைமுடியிலையும் வித்தியாசத்தை பாப்பிங்க. செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என. கரு கரு கூந்தலுக்கு கறிவேப்பிலை சம்பலும் துவையலும் | Curry leaves sambal & thuvaiyal | Healthy food - YouTube
-
- 1 reply
- 494 views
-
-
பச்சை சுண்டைக்காய் குழம்பு என்னென்ன தேவை? பச்சை சுண்டைக்காய் – 1 கப், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8, தனியா – 1 டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, தாளிக்க கடுகு – சிறிது, பூண்டு – 15 பற்கள், புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு, உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து. எப்படிச் செய்வது? பச்சை சுண்டைக்காயை சுத்தம் செய்து காம்பைக் கிள்ளி வைக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்து வைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்…
-
- 1 reply
- 1.4k views
-
-
இடியாப்பத்துடன் தேங்காய்ப்பால்,சர்க்கரை&தேங்காய்ப்பூ,வெஜ்&நான்வெஜ் குருமா சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். அதேபோல் புது ஈரமாவில் செய்தால்தான் பளீர் வெண்மை & softness & நல்ல சுவை கிடைக்கும்.என்றைக்கோ ஒரு நாள் செய்கிறோம்,புது மாவில் செய்துவிடுவோமே. தேவையானவை: பச்சரிசி_2 கப் தேங்காய்ப்பூ_சுமார் 10 டீஸ்பூன்கள் சர்க்கரை_தேவைக்கு உப்பு_சிறிது அரிசியைக் குறைந்தது இரண்டு மணிநேரம் ஊறவைத்து,நீரை வடிகட்டி,மிக்ஸியில் நைஸாக இடித்து இட்லிப்பானையில் வைத்து அவித்து,பிறகு மாவை உதிர்த்துவிட்டு,சிறிது உப்பு சேர்த்து,அதில் கொஞ்சங்கொஞ்சமாக warm water சேர்த்து முறுக்கு மாவைப்போல் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவேண்டும். மாவு அவிக்கும்போது நன்றாக வெந்திருக்க வேண்டு…
-
- 1 reply
- 867 views
-
-
தேவையானவை: பச்சைப் பட்டாணி – ஒரு கப், துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவர் – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவரை தனித்தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு சேர்க்கவும். எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். …
-
- 1 reply
- 1k views
-
-
பிடலை வாழவைத்த முருங்கை; அதன் பயனை உணர்வார்களா எம் மக்கள்? சாதாரணமாக ஒவ்வொருவர் வீட்டுக் கோடிகளிலும், வெறும் காணிகளிலும் முருங்கை மரத்தை நாட்டி வைத்திருப்போம். அதன் மூலம் ஆகக் கூடிய பயன்களாக நாம் முருங்கைக்காய் கறியையும், இலை வறையையும் தான் செய்து நாங்கள் சாப்பிட்டிருப்போம். ஆசியாவிலிருந்து உலகெங்கும் பயணிக்கும் முருங்கையை இலவசமாக பெறும் நம் மக்கள் அதன் பெறுமதியை உணராமை தான் வேதனையளிக்கிறது. இதனை எல்லாம் தாண்டி முருங்கை மரத்தின் சகல பகுதிகளும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன்படும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மருத்துவ பொக்கிஷத்தை எங்கள் கோடிகளில் வைத்துக் கொண்டு அதன் முழுமையான பயன்களை நாம் அறியாது இருப்பது தான் வேதனையானது. எத்தனையோ ந…
-
- 1 reply
- 1.7k views
-
-
பனிக்கால சளி போக்கும் நண்டுக்கால் ரசம்! #செய்முறை #CrabSoupRecipe கடல் மீன் உணவுகளில் தவிர்க்க முடியாதது நண்டு. கணுக்காலிகள் எனச் சொல்லப்படும் நண்டுகள், சிப்பி இனத்தைச் சேர்ந்தவை. நண்டுகளில் பல வகை உண்டு. நண்டுகளைப் பல சுவைகளில் சமைக்கலாம். அதில் முக்கியமானது, நண்டுக்கால் ரசம். நண்டுக்கால் ரசம், சுவையானது மட்டுமல்லாமல், சளித் தொல்லை, ஜலதோஷம் போக்கும் மருந்தாகப் பயன்படுகிறது என்பதுதான் விசேஷம். நண்டு ரசத்தை எப்படித் தயார்செய்யலாம் என விளக்குகிறார், புதுக்கோட்டை சமையல்கலை நிபுணர் அஞ்சம்மாள் முத்து. தேவையான பொருள்கள்: கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15 சீரகம் - 20 கிராம் சோம்பு - 20 கிராம் மிளகு - 30 எண்ணிக்கையில் முழுப் பூண்டு - …
-
- 1 reply
- 959 views
-
-
ஆந்திர மசாலா மீன் குழம்பு என்னென்ன தேவை? மீன் - 300 கிராம் எண்ணெய் - 1/2 கப் கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை - தேவையான அளவு தக்காளி - 1 மல்லி தூள் - 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எப்படி செய்வது? ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு பொறிக்கவும். அதனுடன் சிறிது பெருங்காயம் சேர்க்கவும். வெட்டி வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு…
-
- 1 reply
- 773 views
-
-
உழுந்துமா பிடிக்கொழுக்கட்டை தேவையான பொருட்கள் வறுத்த அரிசிமா – 1 கப் வறுத்த உழுந்துமா – ½ கப் வறுத்த பாசிப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன் வெல்லம் – ¼ கப் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் – ¼ கப் உப்பு சிறிதளவு செய்முறை பாசிப் பருப்பை 20 நிமிடங்கள் நீரில் ஊறவிடுங்கள். மா வகைகளுடன், வெல்லம், தேங்காய்த் துருவல், ஊறிய பருப்பு, வெண்ணெய் கலந்து கிளறுங்கள். சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கையால் கிளறி, சேர்த்து பிடிக்கும் பதத்தில் மாவைத் தயார்படுத்துங்கள். மாவைக் கையால் அமத்தி நீள்வடிவத்தில் பிடித்து ஓரத்தில் சங்கு போல விரல்களால் அமத்தி விடுங்கள். இவ்வாறே எல்லாவற்றையும் பிடித்து வைத்துக் கௌ்ளுங்கள். ஸ்டீமர் அல்லது இட்…
-
- 1 reply
- 741 views
-
-
தேவையான பொருட்கள் ; ஏதாவது ஆற்று மீன் அல்லது கடல் மீன் - அரை கிலோ. எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் -100 கிராம், பூண்டு - 50 அல்லது 75 கிராம் (சுவைக்கு ஏற்ப) தக்காளி - 200 கிராம், மிளகாய் - 4, மல்லி கருவேப் பிலை -சிறிது, புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை ஸ்பூன், சீரகத் தூள் -அரை ஸ்பூன், மல்லித் தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை ஸ்பூன், உப்பு - தேவைக்கு. செய்முறை : வெங்காயம், தக்காளி,பூண்டு நறுக்கி எடுத்து வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
தினை லாடு (தினம் ஒரு சிறுதானியம்-17) உலகிலேயே அதிகம் பயிரிடப்படுகிற இரண்டாவது வகை தானியம் தினை. இதற்கு இறடி, ஏளல், கங்கு எனப் பல பெயர்கள் உள்ளன. நம் முன்னோர்கள், கேழ்வரகு, கம்பு, சோளம், தினை என நம் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிட்டு, உடலை திடகாத்திரமாக வைத்திருந்தனர். ஆனால், இன்றோ தவிடு நீக்கி, பாலீஷ் செய்த அரிசியை மட்டுமே சாப்பிட்டுவருவதால், உடலில் போதிய வலுவின்றி, நோய்களுக்கு ஆளாகித் தவிக்கிறோம். தெவிட்டாத தேனும் தினை மாவும் கலந்து செய்யும் இந்த லாடுவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்; ஆரோக்கியம் கூடும். பலன்கள் அதிக அளவு புரதச் சத்து கிடைக்கும். உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச்சத்துக்கள் நிறைந்தது. தினமும் குழந்த…
-
- 1 reply
- 975 views
-
-
அரிசி முறுக்கு தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி- 200 கிராம். பச்சரிசி- 800 கிராம். உளுந்தம் பருப்பு-200 கிராம். எள்-20 கிராம் சீரகம்-30 கிராம். நெய் அல்லது டால்டா- 250 கிராம். உப்பு- தேவையான அளவு. செய்முறை: 1. புழுங்கல் அரிசியை இலேசாக வறுத்துக் கொள்ளவும். 2. வறுத்த புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு என்று மூன்றையும் சேர்த்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 3. இந்த மாவுடன் நெய் அல்லது டால்டாவைச் சேர்ந்து சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். பிசையும் போது எள், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு பிசையவும். 4. தேவையான உப்பையும் சேர்த்துக் கட்டியாக முறுக்குக் குழலில் வைத்துப் பிழியும் படியான பக்குவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
மிளகு கறிவேப்பிலை மீன் வறுவல் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: மீன் 500 கிராம் கறுப்பு மிளகு – 2 தே.க மிளகாய் தூள் 2 தே.க உப்பு –- தே.அளவு இஞ்சி – 2 தே.க பூண்டு – 2 தே.க எலுமிச்சை சாறு –3 தே.க கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு தண்ணீர் – தே.அளவு அரிசி மா/கட.பருப்பு – 2 தே.க தேங்காய் எண்ணெய் – தே.அளவு செய்முறை: முதலில் ஒரு மிக்ஸியில் அரிசி மா மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் எடுத்து ஒரு மென்மையான பேஸ்ட் போல தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் கறுப்பு மிளகு, மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். அத்துடன் சிறிது அரிசி மா…
-
- 1 reply
- 712 views
-
-
தேங்காய்ப்பால் இறால் குழம்பு செய்ய வேண்டுமா...! தேவையான பொருட்கள்: இறால் - அரை கிலோ உப்பு - தேவைக்கு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 புளிச்சாறு - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 அரைக்க தேவையான பொருட்கள்: …
-
- 1 reply
- 723 views
-
-
அருமையான வேலூர் மட்டன் பிரியாணி தம் பிரியாணியில் நிறைய வகைகள் உள்ளன. இன்று வேலூர் மட்டன் பிரியாணியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 200 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம் பச்சை மிளகாய் - 10 மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி தயிர் - 200 மிலி பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கொத்தமல்லித் …
-
- 1 reply
- 817 views
-
-
தேவையான பொருட்கள மாங்காய் வற்றல் - 8 துண்டுகள், சுண்டைக்காய் வத்தல் - 12, , சி. வெங்காயம் - 10, , பூண்டுபல் - 10, , மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி, , கொத்தமல்லிதூள் - 3 தேக்கரண்டி , தேங்காய்துருவல் - 1/4 கப், கடுகு - 1 தேக்கரண்டி, , உ. பருப்பு - 1/2 தேக்கரண்டி, , வெந்தயம் - 1/2 தேக்கரண்டி , சீரகம் - 1/2 தேக்கரண்டி, வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு, , கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு. , செய்முறை மாங்காய் வற்றல் 15 நிமிடம் சுடுதண்ணீரில் ஊறவிடவும். , தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும். சி.வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். , ஒரு வாணலியில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும் கடுகு, உ. பருப்பு வெந்தயம், சீரகம், கறி…
-
- 1 reply
- 3k views
-
-
கோழி ரசம்! தேவையானவை: எலும்புடன் சேர்ந்த கோழி இறைச்சி - 350 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு வதக்கி அரைக்க: எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - ஒன்றரை கைப்பிடி அளவு தக்காளி - ஒன்று இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு வரமிளகாய் - 3 மல்லித் தூள் - 2 தேக்கரண்டி ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி இடிக்க: மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 5 பூண்டு - 4 பல் தாளிக்க: எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சீரகம், சோம்பு - தலா அரை தேக்கரண்டி …
-
- 1 reply
- 1.7k views
-
-
முட்டை... முழுமையான தகவல்கள்! Posted Date : 17:28 (30/12/2014)Last updated : 18:17 (30/12/2014) மலிவான விலையில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒர் உணவு முட்டை. ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, இ, கே, பி5, பி12, பி2, பி6 மற்றும் கால்சியம் என இதில் இருக்கும் சத்துப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒருவர், சரியான உணவு பட்டியலை தயார் செய்யும்போது, அதில் முட்டையும் இருக்கும் பட்சத்தில் 'டயட் லிஸ்ட்' முழுமை பெறும். 1. முட்டையை வாங்கும் முன் சுத்தமாக, வெள்ளையாக உள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும். பழைய முட்டையாக இருந்தால், மைல்டான பழுப்பு நிறத்தில் தெரியும். முட்டையை வாங்கியதும் ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம். ஆனால், 3 வாரத்துக்கு மேல் வைக்கக் கூடாது…
-
- 1 reply
- 842 views
-
-
சாதத்திற்கு அருமையான காளான் மிளகு மசாலா சாதம், தோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் மிளகு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் காளான் - 250 கிராம் பூண்டு - 4 பல் வெங்காயம் - 1 குடை மிளகாய் - பாதி மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப …
-
- 1 reply
- 934 views
-
-
சிக்கன் மஞ்சூரியன் தேவையான பொருட்கள்: கோழிக்கறி - 500 கிராம் (எலும்பு நீக்கியது) மேல் மாவுக்கு மைதா மாவு - 125 கிராம். கார்ன்ப்ளவர் - 50 கிராம் பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி முட்டை - 1 எண்ணம் உப்பு - தேவையான அளவு பிற தேவைகள் நல்லெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி வெங்காயம் - 50 கிராம் மிளகாய் - 75 கிராம் இஞ்சி - 50 கிராம் பூண்டு - 50 கிராம் குடை மிளகாய் - 25 கிராம் சோயா சாஸ் - 1 தேக்கரண்டி வினிகர் - 1/2 தேக்கரண்டி அஜினோமோட்டா - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1. மைதா, பேக்கிங் பவுடர், மிளகுத் தூள், கார்ன்ப்ளவர், முட்டை ஆகியவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி…
-
- 1 reply
- 1.7k views
-
-
அபர்ணா அல்லூரி பிபிசி செய்திகள், டெல்லி ணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ருசியான பிரியாணிக்கான பொதுவான வழிமுறை பெரும்பான்மையான சமையல் வல்லுநர்களைப் பொருத்தவரை பிரியாணி செய்வது ஒரு சவாலாகவே கருதப்படுகிறது. பெருமளவில் பிரபலமான, ஒரே பாத்திரத்தில் தயாரிக்கப்படும் (one pot meal) இது மசாலா, நேரம் மற்றும் வெப்பநிலையின் சமநிலை மாறாத கலவையில் உருவாகிறது. மிதமான மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு சமைக்கப்பட்ட அரிசி சாதமும் காரசாரமாகச் சமைக்கப்பட்ட இறைச்சியும் பிறகு ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, நன்கு வதக்கப்பட்ட வெங்காயம், குங்குமப்பூ சேர்த்த பால், புத்தம் …
-
- 1 reply
- 527 views
-
-
கத்திரிக்காய் ரைஸ் தேவையானவை: வடித்த சாதம் - 1 கிண்ணம், பிஞ்சுக் கத்திரிக்காய் - 6, வெங்காயம் - ஒன்று, கடுகு - கால் தேக்கரண்டி, கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி-பூண்டு விழுது - அரை தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதக்கியதும் இஞ்சி -பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இ…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி கோழி குழம்பை சமைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். அதில் காரைக்குடி கோழி குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு அந்த காரைக்குடி கோழி குழம்பை எப்படி சமைப்பதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காரைக்குடி கோழி குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: கோழி - 1/2 கிலோ (நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்) தக்காளி - 2 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்…
-
- 1 reply
- 576 views
-
-
தேவையானவை: துவரம் பருப்பு -2 ஸ்பூன் கடலை பருப்பு -2 ஸ்பூன் சாம்பார் பொடி -2 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 3 புளி - சிறிதளவு பூண்டு - 20 பல் இஞ்சி - 25 கிராம் வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் மஞ்சள் பொடி - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளி - சிறிதளவு செய்முறை: முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் . பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும். மூன்றையும் மையாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணைய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். 1 டம்ளர் தண்ணீர் வி…
-
- 1 reply
- 659 views
-