நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
"சிவப்பு வெங்காய சலாட்" செய்வது எப்படி யாருக்காவது தெரியுமா? சில இடங்களில்... ஓரிரு முறை சாப்பிட்டுள்ளேன். மிக அருமையான சுவையாக இருந்தது. இப்போ... இங்கு.... சிவப்பு வெங்காயம், அறுவடை செய்யும் காலம் என்பதால்.... கடையெல்லாம்.... சிவப்பு வெங்காயம் அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளது. அதனைப் பார்த்து... ஆசையுடன்... 500 கிராம் வெங்காயம் வாங்கி வந்து விட்டேன். ஆனால்... அதனை, எப்படி செய்வது என்று தெரியவில்லை. அந்த வெங்காயம்.... வாடி, வதங்க முன்னம்... ஆராவது அதன் செய்முறையை... தாருங்களேன்.
-
- 20 replies
- 4.1k views
-
-
கனடாவில் எங்கு தேடியும் கிடைக்காமல், ஒரு மாதிரி ஊரிலிருந்து கணவாய்க் கருவாடு தருவித்து விட்டேன் (இலங்கைப் பொருட்களை புறக்கணி என்பதில் கணவாய்க் கருவாட்டுக்கு ஒரு சின்ன விலக்கு கொடுக்க கூடாதா?). சின்ன வயதில் நிறைய சாப்பிட்ட நினைவு. இதனை எப்படி கறி வைப்பது? எனக்கும் மனிசிக்கும் பொரிக்க மட்டும் தான் தெரியும்? எப்படிக் கறி வைப்பது என்று தெரிந்தால் சொல்லவும். (சத்தியாமாக மச்சாளிடம் சமைக்க கொடுக்காமல் நானே சமைத்துப் பார்ப்பன்: இது குட்டிக்கு)
-
- 48 replies
- 6.5k views
-
-
சிம்பிளான... செட்டிநாடு இறால் குழம்பு உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா? தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது) வறுத்து அரைப்பதற்கு... சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 துண்டு மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் - 2-4 குழம்பிற்கு... சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 …
-
- 2 replies
- 1.4k views
-
-
தேவையான பொருட்கள்: 1 சுண்டு உழுந்து (கோது நீக்கியது) 3 மேசைக்கரண்டி வெள்ளையரிசி 750 கிராம் சீனி செம்மஞ்சல் கலரிங் சிறிதளவு எசென்ஸ் சிறிதளவு 1 லீற்றர் எண்ணை சிறிதளவு தேசிப்புளி செய்முறை முதலில் 750 கிராம் சீனியை எடுத்து அதனுள் 3 dl தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காச்ச வேண்டும். சீனி கரைந்ததும் பாகினை 1 கிளாஸ் குளிர்தண்ணீரில் ஒரு துளியினை விட்டுப்பார்க்கும் போது பாகு அடியில் உறையும் தன்மை வரும். அப்படி பாகு உறையும் தன்மை வந்ததும் அதனுள் சிறிது கலரிங், எசென்ஸ், தேசிப்புளி என்பவற்றை சேர்த்து பாகினை உடனே இறக்கி வைக்க வேண்டும். வேறேர் பாத்திரத்தில் எண்ணையை கொதிக்க விட வேண்டும். எண்ணையை கொதிக்க விடும்போதே உழுந்தினை அரைத்துக்கொள்ளலாம். உழுந்தை 3-4 மணித்தியாலங்கள் …
-
- 1 reply
- 905 views
-
-
தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காயை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும். இன்று சர்ச்சரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி தேவையான பொருட்கள் : கோவக்காய் – 1 கப் தக்காளி – 3 தனியா தூள் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி தழை – சிறிதளவு சீரகம் – சிறிதளவு மிளகாய்த்தூள் – சிறிதளவு உப்பு – சுவைக்கேற்ப கரம் மசாலா தூள் – சிறிதளவு எண்ணெய் – 4 டீஸ்பூன் முந்திரி பருப்பு – 6 ( தண்ணீரில் ஊற வைக்கவும்) மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் …
-
- 0 replies
- 735 views
-
-
-
பேர்கர் கிங்' பேர்கரில் பிளேட் - அமெரிக்கர் அதிர்ச்சி! [sunday, 2014-06-15 21:24:36] தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் உள்ள Flagstaff என்ற நகரில் உள்ள ஒரு கடையில் தனது கணவருக்கு பெண் ஒருவர் வாங்கிய பர்கரில் பிளேடு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரிசோனா மாகாணாத்தை சேர்ந்த Jennifer Ashley என்ற பெண் Flagstaff நகரில் உள்ள பேர்கர் கிங் என்ற கடையில் பர்கர் ஒன்றை சாப்பிட்டுவிட்டு தனது கணவருக்கு ஒரு பேர்கர் பார்சல் வாங்கினார். தான் வாங்கிய பேர்கரை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதில் ஒரு பிளேடு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பர்கர் கிங் மேனேஜரை அழைத்து தான் சாப்பிடும் பர்கரில் பிளேடு இருந்ததாகவும், இந்த விஷயத்தை தான் சும்மா விடப…
-
- 0 replies
- 543 views
-
-
காலிஃப்ளவர் 65 மாலை வேளையில் பசிக்கும் போது பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு சிக்கன் 65 போன்று, காலிஃப்ளவர் 65 செய்து சாப்பிடுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி. இங்கு காலிஃப்ளவர் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 1 சிறியது (நறுக்கியது) தயிர் - 100 மி.லி இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கேசரி பவுடர் - 1…
-
- 6 replies
- 1.8k views
-
-
கொழும்பில் இருக்கும் போது அடிக்கடி Tuna மீன் பொரியல் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு இருக்கின்றேன். சிங்களத்தில் 'கெலவல்லோ' என்று அழைக்கப்படும் இந்த மீன் பொரியல் சுவையாக இருக்கும். இந்த மீனைக் கறி வைத்தால் பலருக்கு பிடிப்பதில்லை. சுனைக்கும் தன்மை இருக்கும் மீன்; ஆனால் பொரித்தால் நன்றாக இருக்கும் யாருக்காவது இதை எப்படி பொரிப்பது என்று தெரியுமா? அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?
-
- 24 replies
- 10.8k views
-
-
தேவையான பொருட்கள் : சிக்கன் – 250 கிராம், வெங்காயம் – 2 சீரகத் தூள் – 1 தேக்கரண்டி மிளகு தூள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகு – அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5, மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – சுவைக்கு கொத்தமல்லி தழை – சிறிதளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை : 1 சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும் 2.கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் 3. சிக்கனில் மஞ்சள் தூள் போட்டு நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 4.குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், மிளகு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். 5.வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன், சீரகம் தூள், மிளகு தூள…
-
- 2 replies
- 707 views
-
-
செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்காதவர்களே இல்லை. அந்த ரெசிபிக்களை வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் ஈஸி. பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (கீறியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையானஅளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூ…
-
- 0 replies
- 527 views
-
-
கோவா சிக்கன் கறி என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 3 எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்பு - சிறிது வினிகர் - 2 தேக்கரண்டி அரைப்பதற்கு... இஞ்சி - 1 தேக்கரண்டி பூண்டு - 8 பல் பட்டை - 1 மல்லி - 2 தேக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 4 கிராம்பு - 4 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு உப்பு - 1 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லவற்றையும் ஒரு ஜாரில் போட்டு நன்றாக மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன் நிறமான பின் ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
சூப்பரான செட்டிநாடு மீன் உருண்டை குழம்பு சிக்கன், மட்டன் உருண்டை குழம்பு சாப்பிட்டு இருப்பீர்கள். மீன் உருண்டை குழம்பு சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மீன் - 1/2 கிலோ (துண்டு மீன்) பச்சை மிளகாய் - 4 வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி புதினா தழை - சிறிதளவு கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் தனியா தூள் - அரை ஸ்பூன் சீரக தூள் - டீஸ்பூன் முட்டை - 1 …
-
- 3 replies
- 624 views
-
-
கள உறவு சிவரதனின் அம்மாவின் யாழ் சமையல் குறித்து சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் வந்துள்ள குறிப்பு. உங்களுக்கும், உங்கள் அம்மாவுக்கும், வாழ்த்துக்கள், சிவரதன்.... https://www.sundaytimes.lk/211226/plus/their-recipe-to-success-466461.html
-
- 19 replies
- 1.7k views
- 1 follower
-
-
அசைவ உணவுகளில் ஆட்டு ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவது கிராமங்களில் பிரசித்தம். சாப்பிடுவதற்கு ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும் என்பதால் பெரியவர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் ஆட்டு ரத்தம் – 1 கப் சின்ன வெங்காயம் -150 கிராம் வர மிளகாய் – 3 சீரகம் – 2 டீ ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – அரை கப் கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - 2 மேசைகரண்டி பொரியல் செய்முறை ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக…
-
- 1 reply
- 1.3k views
-
-
[size=4]குழந்தைகள் எப்போது தோசை, இட்லி வேண்டும் என்று கேட்பார்கள் என்பதே தெரியாது. அவ்வாறு அவர்கள் திடீரென்று கேட்கும் போது, வீட்டில் மைதா மாவு மற்றும் அரிசி மாவை வைத்து, சூப்பராக தோசை விட்டு தரலாம். இப்போது அந்த தோசையை எப்படி செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மைதா மாவு - 1 கப் அரிசி மாவு - 1 கப் மோர் - 1/4 கப் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, மோர், சீரகம், கொத்தமல்லி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.[/size] [siz…
-
- 7 replies
- 2.6k views
-
-
தேவையானவை : சிறிய வெங்காயம் 150 கிராம், தேங்காய் 1, காய்ந்த மிளகாய் 10, மல்லி 2ஸ்பூன், மஞ்சள் 25 கிராம், புளி சிறிய எலுமிச்சை அளவு, சீரகம் கால் ஸ்பூன், கடுகு கால் ஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, வெந்தயப்பொடி 1 சிட்டிகை. கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு தேவையான அளவு. செய்முறை : *வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். தேங்காயை துருவி, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். புளியை ஊறவைத்து தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். *7 காய்ந்த மிளகாய், மல்லி, மிளகு, சீரகத்தை வாசம் வரும்வரை வறுத்து, ஆறியபின் தேங்காயோடு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அம்மியில் அரைத்தால் நல்லது. *வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, க…
-
- 0 replies
- 633 views
-
-
Please subscribe to my YouTube channel to support me. Thanks
-
- 7 replies
- 1.2k views
-
-
செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 150 கிராம் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 10 முந்திரி - 10 மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன் மல்லித்தூள் - ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகு - அரை ஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் கசகசா - கால் ஸ்பூன் பட்டை, கிராம்பு - சிறிதளவு ஏலக்காய் - 2 ஜாதிக்காய்ே - 1 புதினா, மல்லி - சிறிதளவு நெய் - 4 ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன் சோயா சாஸ் - ஸ்பூன் தயிர் - 1 ஸ்பூன் பால் - 2 ஸ்பூன் எப்படிச் ச…
-
- 0 replies
- 811 views
-
-
காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை: ஆந்திரா ரெசிபி சிக்கனில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை. இந்த ரெசிபியானது ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதனை வீட்டில் கூட செய்து முயற்சிக்கலாம். இங்கு அந்த ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபியான காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 8 (அரைத்தது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு அரைப்பதற்கு... பட்டை - 2 கிராம்பு - 4 மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீ…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஊரிலிருந்து காட்டு பன்றி வத்தல் வந்திருக்கிறது .எப்படி சமைக்கிறதென யாருக்காவது ஏதும் ஐடியா இருக்கிறதா ?
-
- 14 replies
- 3.8k views
-
-
தாய்லன்ட் கார்லிக் சிக்கன் (தாய்லாந்து முறையில் உள்ளியுடனான கோழி) தேவையானப் பொருட்கள் சிக்கன் லெக்ஸ்- பத்து வெங்காயம்-இரண்டு பூண்டு-ஆறு பற்கள் காய்ந்தமிளகாய்-நான்கு லெமன் கிராஸ்- ஒன்று எண்ணெய்-கால்க்கோபை கொத்தமல்லி-ஒரு பிடி சின்னமன் பவுடர்-கால் தேக்கரண்டி சிக்கன் ஸ்டாக்-ஒன்றரை கோப்பை உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி மிளகுத்தூள்-ஒரு தேக்கரண்டி புளி பேஸ்ட்-இரண்டு தேக்கரண்டி மீன் சாஸ்-இரண்டு மேசைக்கரண்டி வறுத்த வேர்க்கடலை-கால்க்கோப்பை பீனட் பட்டர்-ஒரு மேசைக்கரண்டி செய்முறை சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும். காய்ந்தமிளகாயை சுடுதண்ணீரில் போட்டு பத்து நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும். லெமன் கிராஸ்ஸை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்…
-
- 15 replies
- 3.9k views
-
-
[size=6]ஜவ்வரிசி ஊத்தப்பம்[/size] [size=4][/size] [size=4]ஜவ்வரிசி ஊத்தப்பம் காலையில் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு டிபன். இது மிகவும் சுவையாகவும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும். இந்த ஜவ்வரிசி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]ஜவ்வரிசி - 1 கப் அரிசி - 1 கப் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 கொத்தமல்லி - சிறிது உப்பு - 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]அரைக்க :[/size] [size=4]பச்சை மிளகாய் - 4-6 இஞ்சி - 1/2 இஞ்ச் தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலில் ஜவ்வரிசி மற்றும…
-
- 0 replies
- 983 views
-
-
[size=4]வீட்டில் தினமும் சாம்பார் செய்து சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அப்போது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் கொண்டைக்கடலையை வைத்து குழம்பு போல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக அருமையாக இருக்கும். அத்தகைய கொண்டைக்கடலை குழம்பை எப்படி செய்துதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]கொண்டைக்கடலை - 150 கிராம் கத்தரிக்காய் - 1/4 கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 3 குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 லவங்கம் - 3 முந்திரி பருப்பு - 2 கசகசா - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் தேங்காய் - 1/4 மூடி (துருவியது) புளி - ச…
-
- 0 replies
- 876 views
-
-
முட்டை சப்பாத்தி தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 2 முட்டை - 2 கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பௌலில் சப்பாத்தி மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து கல்லில…
-
- 1 reply
- 1.1k views
-