நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
மாங்காய் சிக்கன் குழம்பு. சிக்கன் ரெசிபிக்களில் பிரபலமான ஒன்று தான் மாங்காய் சிக்கன் குழம்பு. மேலும் இது ஒரு கோவா ரெசிபி. இதில் மாங்காய் சேர்க்கப்பட்டிருப்பதால், இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் விடுமுறை நாட்களில் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைப்போர், இந்த மாங்காய் சிக்கன் குழம்பை செய்யலாம். இங்கு அந்த மாங்காய் சிக்கன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 (அரைத்தது) மாங்காய் - 1 (சிறியது மற்றும் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது) தேங்காய் - 1 கப் (துருவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய…
-
- 0 replies
- 721 views
-
-
மாங்காய் பச்சடி செய்வது எப்படி சாதம், தோசையுடன் சாப்பிட மாங்காய் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மாங்காய் - 2 உப்பு - ஒரு துளி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன் வெல்லம் - ஒரு பாதி மாங்காய் அளவு கடுகு - சிறிது பச்சை மிளகாய் - 2 நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் செய்முறை : முதலில் மாங்காயை சுத்தம் செய்து, தோலைச் சீவி, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்து கொள்ளவும். பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் மாங்காயை…
-
- 0 replies
- 658 views
-
-
தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ கிளிமூக்கு மாங்காய் - 1 (சிறிய துண்டாக நறுக்கியது) சோம்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு சாம்பார் வெங்காயம் - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 3 பச்சை மிளகாய் - 2 (கீறியது) தேங்காய் - 1/2 மூடி துருவியது சீரகம் - 1/2 டீஸ்பூன் தனியா - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 4 பல் லவங்கம் - 2 பட்டை - 2 உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப செய்முறை: மட்டனை சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை வறுத்து, ஆறியதும் விழுதாக அரைக்கவும…
-
- 10 replies
- 1.7k views
-
-
மாங்காய் ரைஸ் தேவையானவை: வடித்த சாதம் - 1 கிண்ணம், மாங்காய் (பெரியது) - 1, பேபி கார்ன் - 2, பட்டாணி (தோல் உரித்தது) - 1 கிண்ணம், கடுகு - கால் தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, புதினா - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாங்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். பேபி கார்னைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு பட்டாணி, நறுக்கிய பேபி கார்ன், உப்பு சேர்…
-
- 1 reply
- 731 views
-
-
மாங்காய் வத்தக் குழம்பு கோடையில் மாங்காய் அதிகம் கிடைக்கும். அத்தகைய மாங்காயை துண்டுகளாக்கி உப்பு போட்டு பிரட்டி, வெயிலில் நன்கு உலர்த்தி வத்தல் போன்று செய்து, அதனைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும். இங்கு மாங்கா வத்தல் குழம்பை எப்படி எளிமையான செய்முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 6 பற்கள் கத்திரிக்காய் - 1 (நறுக்கியது) மாங்கா வத்தல் - 10 துண்டுகள் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் அரிசி மாவு - 1 டேபிள…
-
- 0 replies
- 1.3k views
-
-
தேவையான பொருட்கள மாங்காய் வற்றல் - 8 துண்டுகள், சுண்டைக்காய் வத்தல் - 12, , சி. வெங்காயம் - 10, , பூண்டுபல் - 10, , மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி, , கொத்தமல்லிதூள் - 3 தேக்கரண்டி , தேங்காய்துருவல் - 1/4 கப், கடுகு - 1 தேக்கரண்டி, , உ. பருப்பு - 1/2 தேக்கரண்டி, , வெந்தயம் - 1/2 தேக்கரண்டி , சீரகம் - 1/2 தேக்கரண்டி, வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு, , கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு. , செய்முறை மாங்காய் வற்றல் 15 நிமிடம் சுடுதண்ணீரில் ஊறவிடவும். , தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும். சி.வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். , ஒரு வாணலியில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும் கடுகு, உ. பருப்பு வெந்தயம், சீரகம், கறி…
-
- 1 reply
- 3k views
-
-
மாங்காய்+கத்திரிக்காய்+முருங்காய் சாம்பார்.. தேவையான பொருட்கள்: மாங்காய் - 1 முருங்கைக்காய் - 1 கத்திரிக்காய் - 1/4 கிலோ. தேங்காய் - 1/2 முடி பூண்டு – 3 பல் துவரம் பருப்பு- 1 டம்ளர் மல்லி தூள் – 1 தேக்கரண்டி சாம்பார் தூள் – 1 /2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி தாளிப்பதற்குத் தேவையானவை கடலை எண்ணை - 100. நல்லெண்ணை - 100 கடுகு - 1 டீஸ்பூன் உ.பருப்பு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பில்லை - 15 இலைகள். கொத்தமல்லி - ஒரு கீற்று. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் 5 தேக்கரண்டி ஊற்றி அதில் துவரம் பருப்பை இட்டு அதில் சிறிதளவு தண்ணிர் இட்டு வேகவைத்து…
-
- 0 replies
- 6k views
-
-
தேவையான பொருட்கள்: மாசித்தூள் - 3 டீஸ்பூன் பெரிய அல்லது சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 1 மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன் கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை : காய்ந்த மாசித்துண்டை இடித்து தூளக்கவும்.வெங்காயம் தக்காளி,மிளகாய்,மல்லி இலை நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி இலை, தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தூள் செய்த மாசியை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு சிறிது தண்…
-
- 1 reply
- 799 views
-
-
அனைவருக்கும் இனிய கொத்துரொட்டி வணக்கங்கள்... எனக்கு கொத்துரொட்டி எண்டால் நல்ல விருப்பம்.. வீட்டில பக்கத்தில சாப்பாட்டு கடை ஒண்டு இருக்கிது. அதில சிலது கொத்துரொட்டி வாங்கி சாப்பிடுறது. சிலது நான் வீட்டில சொல்லிறது என்ன நான் கடையில வாங்கி சாப்பிட்டது எண்டு. சிலது சொல்லிறது இல்ல.. அப்ப என்ன எண்டால் கொத்துரொட்டி ஆசை வந்த உடன நான் கடைசியா மாட்டு கொத்து ரொட்டி பார்சல் ஒண்டு வாங்கிக்கொண்டு வந்து வீட்டில வச்சு சாப்பிட்டன். கடையில மாட்டு கொத்து மாத்திரம்தான் இருக்கிது எண்டு சொல்லிச்சீனம். சரி எண்டு அத வாங்கினன். பிறகு என்ன எண்டால்.. வீட்ட போன உடன சாப்பாட்டு பார்சலப்பாத்து அம்மா கேட்டா உது என்ன எண்டு. நான் மாட்டுகொத்துரொட்டி எண்டு சொன்னன். ஆ... எண்டு சொல்லி கத்திப்போட்ட…
-
- 52 replies
- 12.5k views
-
-
இங்கு Spice land கடையில் நல்ல கோழி வாங்கி வருவம் என்று முந்த நாள் போன போது அங்கு மான் இறைச்சி விற்பனைக்கு வைத்து இருந்தார்கள். கோழி, ஆடு, மாடு, பன்றி, காடை, வாத்து, ஒட்டகம், மரை, முயல், ஆமை, எருமை, வான்கோழி என்று நிறைய இறைச்சி வகைகளை ஒரு கை பார்த்தாச்சு, மான் இறைச்சியையும் ஏன் விடுவான் என்று நினைச்சு வாங்கி வந்தேன். வாங்கி வந்த பிறகு தான் மனிசி சொன்னார், இதை சமைக்க தனக்கு தெரியாது என்று. இணையம் இருக்க பயமேன் என்று சொல்லிவிட்டு கூகிள் ஆண்டவரிடம் மான் இறைச்சி கறி பற்றி வரம் கேட்டேன். உடனே ஆண்டவர் வீடியோ சகிதம் என் முன் தோன்றி விடை தந்தார், கீழே இருக்கும் வீடியோவில் மான் இறைச்சி எப்படி செய்வது என்று இருக்குது. அதுவும் இலங்கையில் சமைக்கும் முறையில், அதை அச்சொட்டாக…
-
- 20 replies
- 11.6k views
-
-
போன ஞாயிற்றுக் கிழமை ரொரன்டோவில் இருக்கும் Finch & Tapscot பகுதியில் உள்ள Greenland தமிழ் கடைக்கு சேவல் இறைச்சி வாங்கப் போயிருந்த போது அங்கு 'மான் வத்தல்' விற்கப்படுவதை பார்துவிட்டு வாங்கி வந்தேன்...ஆனால் எப்படி அதை சமைப்பது இங்கு ஒருவருக்கும் தெரியுது இல்லை மான் வத்தலை எப்படி சமைப்பது? கறியாக; குழம்புக் கறியாக சமைக்கு முடியுமா? தெரிந்தவர்கள் எழுதி என் வயிற்றில் மான் வார்க்கவும் நன்றி
-
- 36 replies
- 8.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அரிசியின் வெவ்வேறு வகைகள் கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 29 மார்ச் 2024, 02:21 GMT உலக அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40% இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதை விட உலகிலேயே அதிக அரிசியை உட்கொள்ளும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 90 முதல் 100 மில்லியன் மெட்ரிக் டன் உணவுகளை இந்தியர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுவும், த…
-
-
- 20 replies
- 1.6k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 661 views
-
-
மாமிச கூழ் தேவையான பொருட்கள்: ஒடியல் மா அல்லது உருளைக்கிழங்கு மா அல்லது கோதுமை மா மரக்கறி - மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய், பச்சைமிளகாய், பலாக்கொட்டை, பலாசுளை மாமிசம்: நண்டு, மீன், இறால், கணவாய் செய்முறை: முதலில் காய்கறிகளை கழுவி சிறுதுண்டுகளாக வெட்டவேண்டும். இதேபோல் நண்டு, இறால், கணவாயை சிறு துண்டுகளாக வெட்டி கழுவ வேண்டும். பின் அனைத்தையும் ஒரு பெரிய சட்டியில் போட்டு நான்கு கோப்பை தண்ணீர் விட்டு, தேவையானளவு உப்பும் இட்டு அவியவிடவேண்டும். மீன் பாவிக்க விரும்பினால் அதை சிறுதுண்டுகளாக வெட்டி கழுவியபின் இன்னொரு சட்டியில் அவிக்க வேண்டும். அவிந்த மீனை செதில், முட்களை அகற்றி சுத்தம் செய்யவேண்டும். இதன்பின் இதை மரக்கறிகள் உள்ள பாத்திரத்தில் …
-
- 16 replies
- 7.3k views
-
-
ஜ... மாம்பழம் அல்வா செய்து பாருங்கள் மாம்பழமே அதிக ருசியானதுதான். அதனை அல்வா செய்து சாப்பிட்டால்... என்ன சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறுகிறதா... செய்து பாருங்கள். எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை பழுத்த சுவையான மாம்பழம் - 2 சர்க்கரை - 1 கப் பால் - 2 கப் ஏலக்காய் - 2 நெய் - 1 தேக்கரண்டி செய்யும் முறை மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாகப் போட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். சுத்தமான வாய் அகண்ட பாத்திரத்தில் மசித்த மாம்பழத்துடன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள். கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சேர்க்கவும். ஏ…
-
- 21 replies
- 5k views
-
-
மார்கழி விசேடம்(December special) http://www.lankasri.nl/drama/samayal/part-01.htm
-
- 0 replies
- 1.9k views
-
-
மாலத்தீவு கிரு போகிபா செய்யும் முறை தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 கிராம்)... கண்டன்ஸ்டு மில்க் - அரை டின் (200 கிராம்) Unsalted பட்டர் - 25 கிராம் + ஒரு மேசைக்கரண்டி (பாத்திரத்தில் தேய்க்க) முட்டை - 1 அல்லது 2 வெனிலா எசன்ஸ் - சிறிது பேக்கிங் பவுடர் - கால் மேசைக்கரண்டி முந்திரி / நட்ஸ் வகைகள் - சிறிது செய்முறை : …
-
- 0 replies
- 1.1k views
-
-
மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் மஞ்சூரியன் மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் மஞ்சூரியன் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : பிரெட் துண்டுகள் - 8 மைதா மாவு - 2 ஸ்பூன் சோள மாவு - 1/2 ஸ்பூன் வெங்காயம் - 1/2 கப் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 குடமிளகாய் - 1 சிறியது மிளகாய் தூள் - 1 ஸ்பூன் வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது - 3 ஸ்பூன் சோயா சாஸ், தக்காளி சாஸ் - தேவைகேற்ப எண்ணெய், உப்பு - தேவைகேற்ப செய்முறை : * வெங்காயம், குடமிளகாய்…
-
- 2 replies
- 1.6k views
-
-
மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய போண்டா பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள் மாலையில் சூடாக சாப்பிட சுவையான வெங்காய போண்டா செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கடலை மாவு - 1 கப் பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - 1 ஸ்பூன் மைதா மாவு - 4 ஸ்பூன் அரிசி மாவு - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு செய்முறை : * வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள…
-
- 4 replies
- 1.7k views
-
-
மாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை வடை வேர்க்கடலையில் அருமையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று வேர்க்கடலையை வைத்து அருமையான ஸ்நாக்ஸ், வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சை வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, உப்பு, எண்ணெய் - தேவையான…
-
- 0 replies
- 1k views
-
-
மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்பெஷல் காய்கறி வடை மாலை நேரத்தில் காபி அல்லது டீயை சூடான வடையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று காய்கறிகளை வைத்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : உளுத்தம்பருப்பு - 3 சிறிய கப், கடலைப்பருப்பு - 1 சிறிய கப், பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, பச்சைமிளகாய் - 3, பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், மெல்லியதாக நறுக்கிய பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் - அனைத்தும் கலந்து 1 கப…
-
- 0 replies
- 527 views
-
-
வாங்க இண்டைக்கு நாம மாலை நேரத்தில செய்து அசத்த கூடிய ஒரு சின்ன மரக்கறி சிற்றுண்டி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், நீங்களும் இத மாதிரி செய்து அசத்துங்க.
-
- 0 replies
- 665 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க மாலை நேரத்தில் இலகுவா செய்து சாப்பிட கூடிய ஒரு மரவள்ளி செய்வம், இத செய்து பாருங்க ரொம்ப ருசியா இருக்கும். செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என. '
-
- 0 replies
- 418 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க ரொம்ப ரொம்ப இலகுவா மாலை நேரத்தில செய்ய கூடிய முட்டை கட்லெட் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பிள்ளைகளுக்கு குடுத்து பாருங்க ஒவ்வொரு நாளும் வேணும் எண்டு கேப்பாங்க அவ்வளவு ருசியா இருக்கும். செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 720 views
-
-
மிகவும் சிம்பிளான முட்டை இல்லாத கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் செய்ய மைக்ரோ ஓவன் இல்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் அடுப்பிலேயே எளிமையாக கேக் செய்யலாம். அதிலும் முட்டை சேர்க்காமல் அருமையாக கேக் செய்து சாப்பிடலாம். இங்கு அடுப்பிலேயே எப்படி எக்லெஸ் கேக் செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: மைதா - 1 கப் + 1 டேபிள் ஸ்பூன் கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப் சர்க்கரை பொடி - 1/4 கப் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன் வெண்ணெய் - 1/4 கப் + 1 டேபிள்…
-
- 2 replies
- 4.2k views
-